இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள
உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html
QSF ஆய்வுக்குழு
QSF31. டைனோசர் பறவை பற்றி குர்ஆன் பேசுகிறதா
தப்ஸீர் குறிப்பு:- 416. ராட்சதப் பறவை
//இவ்வசனத்தில் (22:31) இணைகற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும்போது, 'பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல்' என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை. மனிதனை விடப் பன்மடங்கு பெரிதாகவும், வலிமை மிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால் தான் இது சாத்தியமாகும். இது போன்ற பறவைகளை நாம் காணாவிட்டாலும் இத்தகைய பறவைகள் இருந்துள்ளன என்பதைப் படிமங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். யானையை விடப் பெரிய அளவிலான பறவையின் எலும்புகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பறவைகளின் மரபணுக்கள் கிடைத்து விட்டால் அதைக் கொண்டு மீண்டும் அப்பறவைகளை உண்டாக்கவும் முடியும். கடந்த காலத்தில் இத்தகைய பறவை இருந்தது என்பதாலும், மரபணு கிடைத்து விட்டால் எதிர்காலத்தில் அவை மறு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதாலும் தான், 'பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்ட மனிதன் போல்' என்று இறைவன் உதாரணம் காட்டியுள்ளான்.//
எமது மறுப்பு:- ஜுராசிக் பார்க் சினிமா பார்த்துவிட்டுவந்து சூட்டோடு சூடாக எழுதப்பட்ட தஃப்ஸீர் இது. அழிந்துபோன விலங்கினங்களின் மரபணு கிடைத்தால் அவற்றை மீண்டும் உயிர்பிக்கலாம் எனும் கருத்து அறிவியாலாளர்களிடையே இருப்பது உண்மைதான். உதாரணமாக மம்மோத் எனப்படும் அழிந்துபோன யானை இனத்தை உயிர்பிக்க பல்வேறு வழிகளை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவை அனைத்திலும் இப்போதுள்ள யானையின் கருமுட்டை தேவைப்படுகிறது. மேலும் ஒரு பெண் யானையும் தேவைப்படுகிறது. அழிந்துபோன எந்த உயிரினத்தை உயிர்பிக்க வேண்டுமென்றாலும் அந்த இனத்திற்கு நெருங்கிய இனத்தில் இருக்கும் ஓர் உயிரினம் உயிரோடு வேண்டும். க்ளோனிங் செய்வதற்கு தாயின் கருவறை தேவை என்று 415ம் குறிப்பில் சொன்ன தஃப்ஸீர், இங்கே அதை மறந்துவிட்டது. ஜுராசிக் பார்க் படத்தில் வரும் டைனோசர் பறவையின் இனத்தின் எந்த நெருங்கிய இனம் இன்று உயிரோடு இருக்கிறது?
فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ
வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல்
க என்று அரபு மொழியிலும் போல என்று தமிழிலும் சொல்லப்படுவது உவமைக்காக மட்டுமே.
உவமையாக சொல்லப்பட்ட இறை வசனங்களுக்கும் ஹாலிவுட் திரைக்கதை எழுதுகிறது தஃப்ஸீர்.
ஆதாரங்கள்:-
https://en.wikipedia.org/wiki/De-extinction
https://www.fda.gov/animal-veterinary/animal-cloning/myths-about-cloning#Myth12
மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html