Thursday, 3 November 2022

QSF23. சிசுக்கொலையை குர்ஆன் அனுமதிக்கிறதா ?

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


QSF ஆய்வுக்குழு


QSF 23. சிசுக்கொலை கூடுமா?


பின் வரும் லிங்க்களில் இருக்கும் அனைத்து தப்சீர் குறிப்புகளையும் சேர்த்து இதில் மறுத்துள்ளோம்


👉 296-கரு-வளர்ச்சியின்-பல்வேற

👉 314-பால்குடிப்-பருவம்-எது-வர

👉 486-உயிர்கள்-இரு-வகை

👉 487-கருக்கலைப்பு-குழந்தைக்


https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2776369/

https://www.priestsforlife.org/graphic-images/index.aspx?gid=5&sid=8

https://apps.who.int/iris/bitstream/handle/10665/97415/9789241548717_eng.pdf?sequence=1



*120 நாட்கள் (fertilization age) 134 நாட்கள் (LMP age) வரையில் சிசுவை கொன்றால் அது மனித குழந்தையைக் கொன்ற குற்றத்தில் வராது* என்று நாம் கூறுகிறோம். இது சுன்னத்தான வணக்கங்கள் தொடர்பாதோ சிறு மஸ்அலா தொடர்பான விஷயமோ அல்ல. இது கொலை எனும் நிரந்தர நரகம் தொடர்பானதும் ஹலால் ஹராம் தொடர்பானதும் ஆகும். இதற்கு நமக்கு நேரடி ஆதாரங்கள் தேவை. சிறு மஸ்அலா விஷயங்களை போல பிற ஆதாரங்களில் இருந்து விளங்கி முடிவெடுக்க இயன்ற விஷயம் அல்ல. நேரடியாக 134 நாட்கள் வரை சிசுக்கொலை செய்துகொள்வது குற்றமல்ல என்று எவ்வித ஆதாரமும் குர்ஆன் ஹதீசில் இருந்து எடுத்து வைக்கப்படவில்லை என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு தொடர்வோம்.


134 நாட்கள் (LMP age) வரையில் சிசுவை கொன்றால் அது மனித குழந்தையைக் கொன்ற குற்றத்தில் வராது என்று தஃப்ஸீர் வாதிடுவதற்கான காரணங்கள்


👉 120 நாட்களுக்கு பிறகுதான் மனிதனுக்கான உயிர் ஊதப்படும் (புகாரீ 3332) அதுவரை இருப்பது வளர்ச்சிக்கான உயிர் மட்டுமே.


👉 மனிதனை தாய் சுமந்ததாக அல்லாஹ் சொல்லும் காலம் 6 மாதங்கள் மட்டுமே (46:15 - 31:14)


👉 மனிதனுக்கு முன்பிருந்ததை வேறு படைப்பு என்று அல்லாஹ் சொல்கிறான் (23:14)


👉 10 மாசம் சொமந்து பெத்தேனே (மக்கள் பேசும் உணர்ச்சிப் பூர்வ வசனம்)


👉 120 நாட்கள் வரை அது மனித வடிவை அடையாத வேறொரு ஜந்து என்று விஞ்ஞானம் சொல்கிறது (பொய்)


முதல் மூன்றும் தனித்தனி செய்திகள். இவை மூன்றையும் ஒன்று சேர்த்து அதனுடன் மனிதன் வயிற்றில் இருக்கும் காலம் 10 மாதங்கள் எனும் உணர்ச்சிப் பூர்வ வசனத்தையும் 120 நாட்கள் வரை அது மனித வடிவை அடையாது எனும் பொய்யையும் கலந்து "முதல் 4 மாதங்கள் அது மனித உயிர் இல்லாத மனித வடிவை அடையாத வேறு ஜந்து" என்கிறோம். எனவே அதை கொல்லாம் என்கிறோம்.


இவை ஐந்தும் தனித்தனி ஆதாரங்கள் கிடையாது, ஒன்று போனால் மற்றவை நிற்கும் என்று சொல்ல இயலாது. இவை ஐந்தையும் இணைத்துதான் சிசுக்கொலை சரி என்று நிலைநாட்டுகிறோம். இங்கே ஒவ்வொரு வாதத்தையும் தனித்தனியாக தவறு என்று நிறுவியுள்ளோம். ஒன்றாம் வாதத்தை தவறு என்று நிறுவிவிட்டு இரண்டாம் வாதத்திற்கு செல்லும்போது முதல் வாதத்தை சரி என்று வைத்துகொண்டே இரண்டாம் வாதத்தை தவறு என்று நிறுவியுள்ளோம். முதல் வாதத்தை தவறு என்று நாம் ஏற்கனவே நிறுவிவிட்டதை துணைக்கு அழைக்கவில்லை. இந்த 5 வாதங்களையும் தவறென்று நிறுவுவதோடு சிசுக்கொலைக்கு எதிரான ஆதாரங்களையும் தந்துள்ளோம்.


120 நாட்கள் வரை அது மனித வடிவில் இருக்காது எனும் வாதம்:


உருவ ஒற்றுமை இல்லை என்பதால் அது மனித குழந்தை இல்லை என்றாகுமா? ஒரு தக்காளி விவசாயி தக்காளி விதைக்கிறான். அந்த விதையில் இருந்து வரும் முதலிரண்டு இலைகளும் வேறு விதையில் இருந்து வரும் முதலிரண்டு இலைகளும் ஒரே மாதிரி இருக்கும். முதலிரண்டு இலைகள் தக்காளி இலை மாதிரி இல்லை என்பதால் எந்த முட்டாள் விவசாயியாவது அந்த செடிகளை பிடுங்கி எறிவானா?



https://i.pinimg.com/originals/04/c7/98/04c7987233f8a9f3f2c9fc71fb84ad10.jpg


கருவறையில் முதல் 120 நாட்களில் மனித குழந்தைக்கும் வேறு விலங்குகளின் குட்டிகளுக்கும் வித்தியாசம் இருக்காது என்கிறது தஃப்ஸீர். மேலே குரங்கின் கரு வளர்ச்சி நிலைகளை காட்டியுள்ளோம். மனிதனுடன் ஒத்த உடல் வடிவம் கொண்டது என்றால் அது குரங்கு மட்டுமே. ஆனால் குரங்கின் கைகளையும் கால்களையும் ஒருக்காலமும் மனிதனுடன் ஒப்பிட இயலாது. மேலுள்ள குரங்கு குழந்தையின் கால்களை பாருங்கள். பின்வரும் 77ம் நாள் மனித குழந்தையின் கால்களைப் பாருங்கள். 80ம் நாள் மனிதக் குழந்தையின் கைகளையும் பாருங்கள்.




இதன் பிறகும் மனிதனும் விலங்குகளும் கருவில் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல இயலுமா?



120நாட்களா 134 நாட்களா?


வயிற்றில் இருக்கும் கருவின் வயதை பொறுத்தவரையில் இரண்டு விதமாக அது கூறப்படுகிறது.


LMP age = Last Menstrual Period age = கருத்தரிக்கும் முன் கடைசியாக மாதவிடாய் ஆரம்பித்த நாளிலிருந்து எண்ணுவது.


Fertilization age = கருவுற்ற நாளிலிருந்து எண்ணுவது.


ஒரு பெண் எப்போது கருவுற்றாள் என்று அவளுக்கே தெரியாது. அவளால் சொல்ல இயன்றது இறுதியாக அவளுக்கு மாதவிடாய் ஆரம்பித்த நாளை மட்டுமே. இந்த நாளில் இருந்து கருவின் வயதை கணக்கிடுவது LMP age என்று சொல்லப்படும். இந்த கால அளவுதான் சாதாரண மக்களிடையே புழக்கத்தில் இருக்கிறது. 


ஒரு பெண் ஒரு மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே கருத்தரிக்க இயன்றவளாக இருப்பாள். அந்த ஒரு நாளில் மட்டுமே ஒரு முட்டை அவளின் அண்டகத்திலிருந்து வெளிப்பட்டு ஒரு விந்தணுவுக்காக காத்திருக்கும். இது ovulation எனப்படும். அந்த நாளில் ஒரு விந்தணு முட்டையை அடைந்து கருவுறச் செய்தால் அவள் கருவுருவாள். மற்ற எந்த நாளிலும் அவள் கருவுறவே மாட்டாள். அதாவது ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நின்று 14ம் நாளில் ovulation நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒவுலேஷன் நடக்கும்போது ஒரு விந்தணு முட்டையை அடைந்தால் மட்டுமே அது கருவுறும். ஆரோக்கியமான விந்தணு ஒரு பெண்ணின் கருவறையில் 3 நாட்கள் வரை உயிர் வாழும். ஆக 11ம் நாளில் ஒருவர் உறவு கொண்டால் அந்த விந்தணு மூன்று நாட்கள் உயிர் வாழ்ந்து 14ம் நாளில் முட்டை வெளிவரும்போது அதனை கருவுறச் செய்ய வாய்ப்புள்ளது. அதற்கு முன்னர் 10 நாட்கள் உறவு கொள்வதால் கருவுறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒவுலேஷன் நடக்கும்போது வெளிப்படும் முட்டை 24 மணி நேரத்தில் இறந்துவிடும். அதன் பிறகும் அப்பெண் கருவுற வாய்ப்பில்லை. ஆரோக்கியமான ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்க்கு 14 நாட்களுக்கு முந்தய நாள் ஒவுலேஷன் நடக்க வாய்ப்புள்ளது. சரியாக 28 நாட்களில் மாதவிடாய் ஏற்படும் பெண்ணாக இருந்தால் அவளுக்கு இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளில் இருந்து 14 ஆம் நாளில் கருத்தரித்திருப்பாள் என்று கணிக்கலாம். ஒரு பெண் எப்போது கருவுருகிறாள் என்பதை அவளை’ மருத்துவக் கண்காணிப்பில் வைத்து அறிய இயலுமே தவிர கருவுற்ற பிறகு அவள் என்று கருவுற்றாள் என்று துல்லியமாக அறிய இயலாது. இறுதி மாதவிடாய் காலத்தில் இருந்து 14 நாட்களை கழித்து கருவுற்ற நாளை கணித்து அதிலிருந்து கருவின் வயதை அளப்பது Fertilization age என்று சொல்லப்படும். இந்த கால அளவு மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் மட்டுமே புழங்கப்படுகிறது.


ஒரு ஸ்கேன் ரிப்போர்டை எடுத்துப்பார்த்தால் இந்த இரு கால அளவுகளையும் கொடுத்திருப்பார்கள். 


இந்த இரண்டுக்கும் 14 நாட்கள் வித்தியாசம் இருக்கும். அதாவது LMP வயதில் 134நாட்கள் ஆன சிசு என்றால் அது fertilization வயதில் 120 நாட்கள் ஆன சிசுவாக இருக்கும். 


பார்க்க https://en.wikipedia.org/wiki/Gestational_age


புகாரீ 3332 ம் ஹதீசும் , முஸ்லிம் 5148 ஹதீசும் மேலும் மனித படைப்பைப் பற்றி பேசும் அனைத்து குர்ஆன் வசனங்களும் ஆணின் விந்து பெண்ணின் கருவறையை அடைந்து கரு உருவானதை பற்றித்தான் பேசுகிறதே தவிர, LMP வயதை பற்றி பேசவே இல்லை. அந்த வகையில் 120 நாட்கள் வரை கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்று நாம் சட்டம் எடுத்த ஹதீஸ்கள் சொல்வது Fertilization age ஆகும். இதை சாதாரண மக்கள் புழங்கும் LMP வயதிற்கு மாற்றினால் 134 நாட்கள் ஆகும்.


ஆக, 120 நாட்கள் வரை சிசுக்கொலை செய்யலாம் எனும் ஃபத்வாவை 134 வரை சிசுக்கொலை செய்யலாம் என்று முதலில் மாற்றவேண்டும். அதாவது ஒரு பெண்ணுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளிலிருந்து 4 ½ மாதத்திற்குள் வயிற்றில் இருக்கும் குழந்தையை கொன்றால் அது கொலைக் குற்றத்தில் வராது என்றுதான் நமது ஃபத்வா அமைந்திருக்க வேண்டும்.


120 நாள் ஹதீஸ்


120 நாட்கள் எனும் எண்ணிக்கையை தஃப்ஸீர் எடுத்திருப்பது புகாரீ 3332 ம் ஹதீஸில் இருந்துதான்.


https://www.babycenter.com/fetal-development-week-by-week இந்த லிங்கில் இருக்கும் படங்கள் ஸ்கேன்களை அடிப்படையாக கொண்டு வரையப்பட்டவை. சாதாரண மனிதருக்கும் புரியும்படியாக இருக்கும். இதில் LMP கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளதால் இரு வாரங்களை கழித்துக்கொள்ளுங்கள். 10ம் வார சிசு என்று சொல்லப்பட்டிருப்பது உண்மையில் 8ம் வார சிசு ஆகும்.


https://www.ehd.org/prenatal-images-index.php இந்த லிங்கில் இருப்பவை கருவளர்ச்சியின் உண்மையான படங்கள். இந்த இணையத்தளத்தில் கருவளர்ச்சியின் நேரடி புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் 4d scan MRI போன்ற உயர்தர தொழில்நுட்பங்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் ஆகியவற்றையும் காண இயலும். இந்த லிங்கில் இருக்கும் படங்களில் 2 வாரங்கள் கழிக்கத் தேவையில்லை.


முதல் நாள்


கருவுறும் நிகழ்வு. விந்தணு கருவறையில் 40 நாட்கள் உயிர்வாழ்வதில்லை. முட்டையை அடைந்த உடனே கருவாகிவிடுகிறது.


7 நாட்களில் – (முதல் வாரம்) Blastocyst



14 நாட்களில் (இரண்டாம் வாரம்)

பார்ப்பதற்கு அலக் (عَلَقَةٍ) போல இருக்கிறது

21 நாட்களில் (மூன்றாம் வாரம்)

முள்கா (مُّضْغَةٍ) வைப் போன்று இருக்கிறது. இதயத்துடிப்பை ஸ்கேன் மூலம் அறியலாம், ஸ்கேன் கருவி மூலம் அதனைக் கேட்கவும் இயலும்.


28 நாட்களில் (நான்காம் வாரம்)


42 நாட்களில் (ஆறாம் வாரம்)


56 நாட்களில் (எட்டாம் வாரம்)

குழந்தை மனித வடிவை அடைந்துவிட்டது. ஆட்டைப் போன்றோ மாட்டைப் போன்றோ இல்லை.


விஞ்ஞானம் எனும் பெயரில் 120 நாட்கள் வரை மனித வடிவை அடையாது என்று சொன்னது பொய்யாகிறது



புகாரீ 3332


حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ ‏ "‏ إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً *مِثْلَ ذَلِكَ،* ثُمَّ يَكُونُ مُضْغَةً *مِثْلَ ذَلِكَ،* ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ مَلَكًا بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيُكْتَبُ عَمَلُهُ وَأَجَلُهُ وَرِزْقُهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، فَيَدْخُلُ الْجَنَّةَ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُ النَّارَ ‏"‏‏.‏


உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. பிறகு அதே போன்ற காலத்தில் ஒரு (அலகா) கருக் கட்டியாக மாறுகின்றது. பிறகு, அதே போன்ற காலத்தில் (முள்ஃகா) சதைப் பிண்டமாக மாறுகின்றது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகின்றான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் செயலையும், அதன் வாழ்வாதாரத்தையும்,, அதன் வாழ்நாளையும் அது துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் எழுது என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். (புகாரீ 3332)


ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّـهُ أَحْسَنُ الْخَالِقِينَ


பின்னர் (நுத்ஃபா) விந்துத் துளியை (அலகா) கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் (அலகா) கருவுற்ற சினைமுட்டையைச் (முள்ஃகா) சதைத் துண்டாக ஆக்கினோம். *(முள்ஃகா) சதைத் துண்டை (இளாமா) எலும்பாக ஆக்கி எலும்புக்கு (லஹம்)இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம்.* அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (23:14)


முதல் 40 நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்று மட்டுமே இந்த ஹதீஸ் சொல்கிறது. எதை ஒருங்கிணைக்கிறது என்று இந்த ஹதீஸ் சொல்லவில்லை. அடுத்த 40 நாட்களில் அது அலக் ஆகிறது என்று புகாரீ 3332 ஹதீஸ் சொல்வதில் இருந்தும் அலகிற்கு முந்தய நிலை நுத்ஃபா என்று குர்ஆன் வசனம் 23:14 சொல்வதில் இருந்தும் முதல் 40 நாட்களில் இருப்பது நுத்ஃபா எனும் முடிவுக்கு வர இயலும். ஆணுடைய விந்து பெண்ணின் கருப்பையில் 40 நாட்கள் இருப்பதில்லை. ஆரோக்கியமான விந்தணுவின் அதிகபட்ச வாழ்நாள் 72 மணி நேரம் மட்டுமே. 72 மணி நேரத்திற்குப் பிறகும் கருவுறாத நிலையில் ஒரு விந்தணு கருப்பையில் இருந்தால் அது இறந்துவிடும். அல்ல, “ஒருங்கிணைக்கப்படுவது” என்றால் ஆணின் விந்துவும் பெண்ணின் கரு முட்டையும் சேர்வதைக் குறிக்கும் என வாதிட்டால் அதுவும் தவறாகும். ஆணின் விந்துவும் பெண்ணின் முட்டையும் சேர்ந்த பிறகு அது நுத்ஃபா அல்ல. இதனை நாம் “QSF22. கலப்பு விந்து” ஆக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.


மேலுள்ள படங்களிலும் கொடுக்கப்பட்ட லிங்க்-களிலும் 14 நாட்களில் அலகா (ரத்தக்கட்டி) நிலையை பார்க்கிறோம் . 21 – 28 நாட்கள் வரை மெல்லப்பட்ட சதைத்துண்டு எனும் முள்ஃகா நிலையை பார்க்கிறோம். 35 நாட்களில் கை கால் முளைக்கிறது. அதன் பின்னர் அதனை முள்ஃகா என்று சொல்ல இயலாது. 42ம் நாளைப் பாருங்கள். நிச்சயமாக அதனை அலகா நிலை என்றோ முள்ஃகா நிலை என்றோ சொல்லவே இயலாது. கண் முன்னே தெரியும் உண்மைக்கு மாற்றமாக முதல் 40 நாட்கள் நுத்ஃபாவாக இருக்கும் என்றும் அடுத்த 40 நாட்கள் வரை அலகாவாக இருக்கும் என்றும் அடுத்த 40 நாட்களுக்கு முள்ஃகாவாக இருக்கும் என்றும் ஹதீஸ் சொல்வதும் உண்மைக்கு மாற்றமாகும்.


உண்மையில் நுத்ஃபாவானது 40 நாட்கள் வயிற்றில் இருக்காது. முட்டையை அடைந்த மறுகணமே அது கருவாகிவிடும். கருவுற்ற 21 நாட்களில் அலகா நிலை முடிவடைந்துவிடும். 41ம் நாள் முதல் 80ம் நாள் வரையில் அலக் என்று ஹதீஸ் சொல்வது உண்மைக்கு மாற்றமானதாகும். 21 நாட்களுக்கு பிறகு முள்ஃகா நிலைக்கு மாறும் கரு 40 நாட்களில் முள்ஃகா நிலையில் இருந்து மாறி மனித உருவத்தை அடையும். ஆனால் 81 முதல் 120 ம் நாள் வரையில் முள்ஃகா நிலை என்று ஹதீஸ் சொல்கிறது. முற்றிலும் உண்மைக்கு மாற்றமான இந்த அறிவிப்பு பேசுகிறது.


எப்படி 6 நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்பதை கிழமை வாரியாக 7 நாட்களாக மாற்றினார்களோ அதே போல குர்ஆன் வசனம் 23:14ல் காலம் சொல்லப்படாத நிலைகளுக்குக்கூட காலம் சொல்கிறது இந்த ஹதீஸ். ஆனால் ஹதீஸில் அலகா (ரத்தக்கட்டி) மற்றும் முழ்கா (மெல்லப்பட்ட சதைத்துண்டு) ஆகிய நிலைகளுடன் முடிந்துவிடுகிறது. குர்ஆன் வசனம் 23:14ல் வரும் இளாமா எனும் எலும்பின் கால அளவைப் பற்றியோ லஹம் எனும் இறைச்சி அணிவித்தல் பற்றியோ அந்த ஹதீஸ் பேசவில்லை. முழ்கா நிலை முடிந்த பிறகு விதியின் 4 அம்சங்கள் எழுதப்பட்டு பின்னர் உயிர் ஊதப்பட்டு விதி எழுதப்படுவதாக ஹதீஸ் சொல்கிறது.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَثَ اللَّهُ إِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ ‏.‏ قَالَ يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَجَلُهُ ‏.‏ فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ رِزْقُهُ ‏.‏ فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ فَلاَ يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلاَ يَنْقُصُ ‏"‏ ‏.‏


முஸ்லிம் 5147.

விந்து கருப்பைக்குச் சென்று நாற்பத்து இரண்டு இரவுகள் கழிந்ததும் அதனிடம் அல்லாஹ் வானவர் ஒருவரை அனுப்புகிறான். பிறகு அதற்கு உருவமளித்து, அதற்குச் செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான். பிறகு அந்த வானவர், "இறைவா! இது ஆணா, பெண்ணா?" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். பிறகு அவர், "இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைச் சொல்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். பிறகு அவர், "இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?" என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்துவிட்டுப் பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். (தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லை; குறைப்பதுமில்லை.


ஆனால் இந்த ஹதீஸில் 42 நாட்களிலேயே நுத்ஃபா, அலகா, முள்ஃகா, இளாம், லஹம் என குர்ஆன் சொல்லும் அனைத்து நிலைகளும் முடிந்து விடுவதாகவும், இளாம், லஹம் நிலைகள் முடிந்த பிறகே விதியின் 4 அம்சங்கள் எழுதப்படுவதாகும் வருகிறது. விதியின் 4 அம்சங்களும் எழுதப்பட்ட பிறகே உயிர் ஊதப்படும் எனில் 42 நாட்களுக்கு பிறகு சிசுக்கொலை கூடாது என்று சொல்ல வேண்டும். முஸ்லிம் 5147ம் ஹதீஸ் பார்வையில் படவில்லையா அல்லது வேண்டுமென்றே விடப்பட்டதா?


முஸ்லிம் 5147ம் ஹதீஸை எடுத்து 42நாட்கள் வரையில் சிசுக்கொலை செய்துகொள்ளலாம் என்றும் பத்வா கொடுக்க இயலாது. முஸ்லிம் 5147 ஹதீஸிலும் சிக்கல் இருக்கிறது. அதை “QSF22. கலப்பு விந்து” ஆக்கத்தில் நிறுவியுள்ளோம்.


இந்த ஹதீஸை 40 - 40 - 40 என்று பிரித்து விளங்கியதால் ஏற்பட்ட சிக்கல் இது. அனைத்து நிலைகளும் ஒரே நாற்பதில் நிகழ்வதாக புரிந்தால் சிக்கல் இல்லை. இதனை இங்கே விளக்கியுள்ளோம் https://www.facebook.com/Piraivaasi/posts/pfbid027FxntBTFtfoK13bRzK9Bw3phUKniyFfmazNMn4pjAq16VZU8MRgSTcxLJgX2r8UAl


120 நாட்களில் வேறு படைப்பாக ஆக்கப்படுகிறதா?


புகாரீ 3332 ஹதீஸ் சொல்வது...

👉 0 to 40 நாட்கள் வரை நுத்ஃபா

👉 41 to 80 நாட்கள் வரை அலகா

👉 81 to 120 நாட்கள் வரை முள்ஃகா

👉 121ம் நாளில் விதி எழுதப்பட்டு ரூஹ் ஊதப்படுகிறது


குர்ஆன் வசனம் 23:14 சொல்வது...

👉 _ _ _ _ நாட்கள் வரை நுத்ஃபா

👉 _ _ _ _ நாட்கள் வரை அலகா

👉 _ _ _ _ நாட்கள் வரை முள்ஃகா

👉 _ _ _ _ நாட்கள் வரை இளாமா

👉 _ _ _ _ நாட்கள் வரை இளாமா+லஹம்

👉 பின்னர் வேறு படைப்பு


புகாரீ 3332 சொல்வதும் குர்ஆன் வசனம் 23:14 சொல்வதும் வெவ்வேறு விஷயங்கள். புகாரீ 3332 ரூஹ் ஊதப்படுவதை பேசுகிறது குர்ஆன் வசனம் 23:14 வேறு படைப்பாக ஆக்கப்படுவதை பேசுகிறது. இந்த இரண்டையும் இணைத்து 120 நாட்கள் வரை வேறு ஜந்து என்றும் 120 நாட்களுக்குப் பிறகே அது மனிதப்படைப்பு என்றும் எப்படி முடிவுக்கு வர முடியும்? 


ஹதீஸில் முள்ஃகா நிலைக்குப் பிறகு வேறு நிலைகள் சொல்லப்படவில்லை. முள்ஃகா நிலையை அடைந்த பிறகு ரூஹ் ஊதப்படுவதாக ஹதீஸ் சொல்கிறது. குர்ஆன் வசனத்தில் முள்ஃகா நிலைக்கு பிறகு அதனை எலும்பாக ஆக்கியதாகவும் பின்னர் எலும்புக்கு இறைச்சியை அணிவித்த பிறகே வேறு படைப்பாக ஆக்கியதாகவும் வருகிறது. இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தால் எலும்பும் இறைச்சியும் படைக்கப்படும் முன்னர் இருந்த சதைப் பிண்டத்திற்குதான் உயிர் ஊதப்பட்டுள்ளது. உயிர் ஊதப்பட்ட பிறகே எலும்பும் இறைச்சியும் படைக்கப்பட்டு அதன் பின்னரே வேறு படைப்பு ஆக்கப்படுகிறது.


120 நாட்களில் வேறு படைப்பாக்கப்பட்டு உயிர் ஊதப்படுகிறது எனும் அடிப்படையற்ற வாதம் இங்கே அடிபடுகிறது. அல்லது எதை ஜந்து என்கிறோமோ அந்த ஜந்துவுக்குத்தான் மனித உயிர் ஊதப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.


ரூஹ் தொடர்பாக தஃப்ஸீர் வைக்கும் வாதம்


//இவ்வசனத்தில் (39:42) மனிதன் மரணிக்கும்போதும், உறங்கும்போதும் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து 6:60 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது.


உயிரினத்தின் இயக்கத்துக்கான உயிர் ஒரு வகை. மனிதன் என்பதற்கான உயிர் இன்னொரு வகை. மனிதன் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஒரு வகையான உயிர் மட்டுமே உள்ளது. ஆனால் மனிதனிடம் மேற்கண்ட இரண்டு வகை உயிர்களும் உள்ளன. மரணிக்கும்போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தூக்கத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பது நமக்குப் புரியவில்லை. தூக்கத்தின்போது உயிர்களைக் கைப்பற்றினால் எப்படி மூச்சுவிட முடிகின்றது? எப்படி புரண்டு படுக்க முடிகிறது? எறும்பு கடித்தால் நம்மை அறியாமல் எப்படி தட்டி விட முடிகிறது? உண்ட உணவு எப்படி ஜீரணமாகிறது? இது போல் உடலில் பல இயக்கங்கள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். இந்த வகையில் பார்க்கும்போது தூங்குபவரின் உயிர் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.


தூக்கத்தில் நாம் சிந்திப்பதில்லை. கவலைப்படுவதில்லை. திட்டமிடுவதில்லை. மனனம் செய்வதில்லை. இதுபோல் பல காரியங்கள் தூக்கத்தில் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும்போது உயிர் இல்லை என்பது போல் இருக்கிறது. இதிலிருந்து உயிர்கள் இரு வகைகளாக உள்ளன என்பது தெரிகிறது.


*உடலின் இயக்கத்துக்கான உயிர் ஒரு வகை.*

*மற்றொன்று உணர்வுகள் சம்மந்தப்பட்ட உயிர்.*


நாம் தூங்கும்போது உடலின் இயக்கத்துக்கான உயிர் நம்மை விட்டுப் பிரிவதில்லை. உணர்வுகளை இயக்குவதற்கான உயிர் நம்மை விட்டு நீங்கி விடுகிறது.// {தஃப்ஸீர்}


மனிதன் உறங்கும்போது ஒரு ரூஹ் இருக்கிறது அந்த ரூஹை நாம் கொன்றால் கொலைக் குற்றம் ஆகிவிடும் என்கிறோம். 


ஆனால் 120 நாட்கள் வரையுள்ள குழந்தையை கொன்றால் அது குற்றமில்லை


உறங்கும்போது ஒரு மனிதனுக்கு என்ன ரூஹ் இருக்கிறதோ அதே ரூஹ் 120 நாள் குழந்தைக்கும் இருக்கிறது.


https://www.ehd.org/movies-index.php ஒரு குழந்தை கருவாவதில் இருந்து ஒவ்வொரு நிலைகளும் உயர்தர நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு படமெடுக்கப்பட்டு வீடியோ காட்சிகளாக இதில் உள்ளன


மனிதனின் வயிற்றுக்குள் இருந்துகொண்டு கருவுற்ற 20ம் நாளில் இதய துடிப்பைக் கொண்ட ஜந்து >> https://www.ehd.org/mp4/1411.mp4 


8 WEEK 2 DAYS 

https://www.ehd.org/mp4/2339.mp4 

8 WEEKS 2 DAYS https://www.ehd.org/mp4/2403.mp4



பிறந்த குழந்தையின் உதட்டுக்கு அருகே கன்னத்தில் நாம் விரலை வைத்தால் உடனே விரல் இருக்கும் இடத்தை நோக்கி பால் குடிப்பதற்காக அக்குழந்தை முகத்தை திருப்பும். இதனை நாம் அனைவரும் ரசித்திருப்போம். இதனை rooting reflex என்பார்கள். 90ம் நாளில் மனிதனின் வயிற்றுக்குள் இருந்துகொண்டு rooting reflex ஐ வெளிப்படுத்தும் ஜந்து >> https://www.ehd.org/mp4/clip36.mp4


மனிதனின் வயிற்றுக்குள் இருந்துகொண்டு தொடு உணர்வுகளை பிரதிபலிக்கும் 90ம் நாள் ஜந்து >> https://www.ehd.org/mp4/clip35.mp4


மனிதனின் வயிற்றுக்குள் இருந்துகொண்டு உணவை ஜீரணம் செய்து மலத்தை வெளியேற்றும் 84ம் நாள் ஜந்து https://www.ehd.org/mp4/3201.mp4 


உறங்கும்போது மனிதனுக்கு என்ன ரூஹ் இருப்பதாக தஃப்ஸீர் வாதிடுகிறதோ அதே ரூஹ் 90ம் நாள் குழந்தையிடம் உள்ளது. 


இந்த ஜந்துவை கொல்லலாம் என்று சொல்லும் தஃப்ஸீர் இதே போன்ற உணர்வுகளை மட்டுமே கொண்ட தூங்கும் மனிதனை கொல்வதும் கொலை குற்றம் இல்லை என்று சொல்ல வேண்டும்.


விடையை எழுதிவிட்டு கேள்வியை தேடுவதால் ஏற்பட்ட விளைவு.


கோமா & மூளைச் சாவு:


ரூஹை இரு வகைகளாக பிரித்து அதில் ஒரு வகை ரூஹ் இல்லாத 120 நாள் குழந்தயை கொல்லலாம் என்று தஃப்ஸீர் வாதிடுகிறது. 120நாள் குழந்தைக்கு இருக்கும் உயிர் கூட இல்லாத கோமா நோயாளி அல்லது மூளை செத்த நோயாளி பற்றிய நமது நிலைபாடு என்ன? 120 நாள் குழந்தையை கொல்லலாம் என்றால், கொல்வதற்கு அதை விட அதிக தகுதி வாய்ந்தது கோமா மற்றும் மூளைச் சாவு நோயாளிகளே. இதைதான் கருணைக் கொலை என்கிறார்கள். இது பற்றி நம்முடைய நிலை என்ன? கொல்லலாம் என்று சொல்வோமா?


https://en.wikipedia.org/wiki/Coma  |  https://en.wikipedia.org/wiki/Brain_death


ஹதீஸ்களுக்கு இவர்களின் விளக்கம் சரியாக இருந்தால்....?


ஒரு வாதத்திற்கு (மேலுள்ள) புகாரீ 3332 & முஸ்லிம் 5147 ஹதீஸ்களுக்கு இவர்களின் விளக்கத்தையே எடுப்போம். 42ம் நாளில் அல்லது 121ம் நாளில் ரூஹ் ஊதப்படுவதாக வைப்போம். ரூஹ் உதப்படும் முன்னர் இருக்கும் அந்த உயிரினத்தை கொல்லலாம் என்பதற்கு என்ன ஆதாரம்? குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் ஊதப்படும் ரூஹுக்கு தூக்கத்தில் பிரிக்கப்படும் ரூஹ் எனும் வசனத்தை எடுத்து அது உணர்சிகள் தொடர்பான ரூஹ் எனும் வியாக்கியானங்களை தவிர்த்து நேரடி விளக்கங்கள் ஏதேனும் உள்ளதா? ரூஹைப் பற்றிய முழுமையான ஞானம் மனிதனுக்கு உள்ளதா? ரூஹின் வகைகள் எத்தனை எனும் விளக்கம் நம்மிடம் உள்ளதா?


புகாரீ 3332 & முஸ்லிம் 5147 ஹதீஸ்களை காட்டிவிட்டு அந்த காலத்திற்கு முன்புள்ள உயிரை கொல்லலாம் என்று முடிவெடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. 23:14 குர்ஆன் வசனத்தைக் காட்டியும் வேறு படைப்புக்கு முன்னிருந்த படைப்பைக் கொல்லலாம் எனும் முடிவுக்கு வர முடியாது. மனிதனாக வளர்ந்துகொண்டிருக்கும் சிசுவைக் கொல்வதும் மனிதனைக் கொல்வதும் ஒன்றே.


அந்த ஜந்துவை கொல்லலாமா?


அதை ஜந்து என்றே வைப்போம். ஆடு மாடுக்கு இருக்கும் உயிர்தான் அந்த ஜந்துவுக்கு இருக்கிறதென்று வைப்போம். அதனால் அந்த ஜந்துவைக் கொல்லலாமா?


ஜீவகாருண்யத்தை இஸ்லாம் எப்படி போதிக்கிறது என்று மேடையில் முழங்கும் நாம்தாம் 134நாட்கள் வயதுகொண்ட ஜந்துவை கருணையே இல்லாமல் கொல்லலாம் என்கிறோம்.


(கட்டுரையின் நீளம் கருதியும் பிரபலமான ஹதீஸ்கள் என்பதாலும் ஹதீஸ்களை பதியாமல் கருத்தை மட்டும் பதிகிறோம்) குர்பானி கொடுக்கும் முன் கத்தியை கூர் தீட்டிக்கொள்ளுங்கள், அதிக வலி தராத முறையில் அறுங்கள், குட்டி தாய்க்கு எங்கும் என்பதால் பால் கொடுக்கும் பிராணிகளை அறுக்காதீர்கள், தாய்ப் பறவையிடமிருந்து குஞ்சைப் பிரிக்காதீர்கள், பூனையை கட்டிவைத்து கொடுமைப் படுத்தியதற்கு நரகம், நாய்க்கு நீரூட்டியதால் பாவமன்னிப்பு, விலங்குகளை சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள், உயிரினங்களின் முகத்தில் வடுக்களை ஏற்படுத்தாதீர்கள், என்றெல்லாம் ஹதீஸ்களை மேடையில் முழங்கியவிட்டு 120 நாட்கள் ஜந்துவை கருணையின்றி கொல்லலாம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது உள்நோக்கம் இல்லாத பத்வா என்று ஏற்றுக்கொள்ளவே இயலாது.


குர்பானிப் பிராணியை கூர்மையான கத்தியை கொண்டு அதற்கு இலகுவான முறையில் அறுங்கள் என்றார்கள் நபிகள் நாயகம். ஆனால் கருவில் இருக்கும் 110 நாட்கள் வயதுள்ள குழந்தையை எப்படி வெட்டி எடுப்பார்கள் தெரியுமா உயிரோடு இருக்கும்போதே அதன் கை தனியாக கால் தனியாக வெட்டி எடுப்பார்கள். 


உயிருள்ள பிராணிகளை அம்புக்கு இலக்காக்கினால் சாபம் என்றார்கள் நபி ஸல் அவர்கள் ஆனால் நாம் வயிற்றிலுள்ள குழந்தையை உயிருடனே சிறு சிறு பாகங்களாக வெட்டி எடுக்கலாம் என்கிறோம்.


அஸ்லுக்கு உள்ள அனுமதியை சிசுக்கொலைக்கும் பயன்படுத்தலாமே


மனிதனாக வளர இருக்கும் விந்தணுவை மட்டும் கொல்லலாமா என்கிற கேள்வி எழலாம். விந்தணு மட்டும் மனிதனாக வளரப்போவதில்லை. பெண்ணின் முட்டையும் மனிதனாக வளரப்போவதில்லை. ஆகையால் இவற்றை அறிவுப்பூர்வ வாதமாக கருத இயலாது. ஆனால் இரண்டும் இணைந்த மறுகணமே அது மனிதனாகப்போகும் உயிராகிறது. மனித உயிராகிறது. அந்த கணத்திலிருந்தே அதைக் கொல்ல இயலாது.


மனிதனாக மாறும் முன்பிருந்த விந்துவும் முட்டையும் அமீபா போன்ற ஒரு செல் உயி ரினங்களே. அமீபாவை கொல்ல நமக்கு அனுமதியுள்ளது. அஸ்ல் செய்யவும் அனுமதி உள்ளது. ஆனால் கருவை கொல்லலாம் என்பதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அனுமதி ஏதுமில்லை, வியாக்கியானங்களை தவிர.


பால்குடி கணக்கு


//கர்ப்ப காலம் பத்து மாதங்கள் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும்போது, "கர்ப்ப காலம் ஆறு மாதம்'' என்று திருக்குர்ஆன் வேண்டுமென்றே தான் கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாகும்.//


//மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய காலகட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத் தன்மையும், அடையாளமும் இல்லாத இறைச்சித் துண்டாகத்தான் மனிதன் இருந்தான்.// {தஃப்ஸீர்}


“பால் குடி காலம் 24 மாதங்கள் என்று ஓரிடத்திலும் (31:14), வயிற்றில் இருக்கும் காலம் + பால் குடி காலம் இரண்டும் சேர்த்து மொத்தம் 30 மாதங்கள் என்று மற்றோரிடத்திலும் (46:15) அல்லாஹ் சொல்வதால் மனிதன் வயிற்றில் இருக்கும் காலமாக அல்லாஹ் கணக்கில் எடுப்பது வெறும் 6 மாதம் தான். ஒரு பெண் குழந்தையை வயிற்றில் சுமக்கும் மொத்த காலம் 10 மாதம் என்று நாமறிவோம். அல்லாஹ் 6 மாதங்கள் என்று சொல்வதன் மூலம் முதல் 4 மாதங்கள் அதாவது 120 நாட்கள் அது மனித படைப்பே இல்லை என்பதை விளங்கிக்கொள்ள இயலும்” என்கிறோம்.


மனிதனை வயிற்றில் சுமந்தது 6 மாதம்தான் எனில் மற்ற நாட்களில் வயிற்றில் இருந்தது என்ன? மனிதனுக்கு மனிதன் அல்லாத வேறு குழந்தை பிறக்குமா?


39:6. உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரதுஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?


இந்த வசனத்தில் இருக்கும் மூன்று இருள்களும் வயிற்றில்தானே, அதில் முதல் 4 மாதங்கள் அடங்காதா?


குர்ஆனும் ஹதீசும் பேசுவது fertilization வயதைதானே தவிர LMP வயதல்ல என்பதை நாம் முதலிலேயே பார்த்துவிட்டோம்.


பால்குடி = 24 மாதம் (31:14)


வயிற்றில் இருக்கும் காலம் + பால் குடி காலம் = 30 மாதங்கள் (46:15) 


எனவே , வயிற்றில் இருக்கும் காலம் = 30 - 24 = 6 மாதம்.


முதல் 4 மாதங்கள் வயிற்றில் இல்லை என்று சொல்கிறோம்.


குழந்தை வயிற்றில் இருக்கும் காலம் 10 மாதம் எனும் கணக்கை அடிப்படையாக தஃப்ஸீர் வாதங்கள் அமைந்துள்ளன. ஆனால் குழந்தை 10 மாதம் வயிற்றில் இருக்கும் என்று எந்த விஞ்ஞானமும் சொல்லவே இல்லை. நாமும் நம்மை சுற்றி இதைப் பார்க்கவும் இல்லை.


LMP கணக்கில் வயிற்றில் இருக்கும் தோராய காலமாக விஞ்ஞானம் சொல்வது 40 வாரங்கள். அதிலும் 37 வாரங்கள் முதல் 42 வாரங்கள் வரையில் குழந்தை பிறந்தால் அது நார்மலாகவே கருதப்படும். 37 வாரத்திற்கு முன்னரே பிறந்தால் அது குறை மாதம் என்று கருதப்படும். 42 வாரம் தாண்டினால் அது மிகை மாதம் என்று கருதப்படும்.

பார்க்க https://en.wikipedia.org/wiki/Gestational_age#Estimation_of_due_date


fertilization கணக்கில் தஃப்ஸீர் சொல்வதுபடி பார்த்தால்.


120 நாட்கள் ஒரு ஜந்து + 6 சந்திர மாதங்கள் மனித குழந்தை


6 சந்திர மாதங்களை நாட்களாக மாற்றினால் 6 x 29.53 = 177 நாட்கள்


மொத்தம், 120 + 177 = 297 நாட்கள்


இதை மனிதன் புழங்கும் LMP வயதுக்கு மாற்றினால் 297 + 14 = 311 நாட்கள். (10 ½ மாதங்கள்)


இதை வாரக் கணக்கில் மாற்றினால் = 311 ÷7 = 44 ½ வாரங்கள் ஆகின்றன.


எல்லா குழந்தைகளும் 44 ½ வாரங்கள் வயிற்றிலிருக்குமா?


விதியை அறிய இயலுமா?


7 மாதங்களில் சுகப்பிரசவம் ஆன குழந்தைகளும் உண்டு 10 மாதம் கழிந்து 11ம் மாதத்தில் சுகப்பிரவசம் ஆன குழந்தைகளும் உண்டு. தோராய கணக்கைத் தவிர ஒரு குறிப்பிட்ட கால அளவைச் சொல்லி இதுதான் குழந்தை வயிற்றில் இருக்கும் கால அளவு என்று சொல்லவே இயலாது.

https://www.theguardian.com/lifeandstyle/2010/oct/01/pregnant-for-10-months

https://www.babycenter.com/400_can-a-woman-be-pregnant-for-11-months-or-not-i-read-stories_14724589_796.bc


4 மாதங்கள் ஜந்து + 6 மாதங்கள் மனித படைப்பு + 24 மாதங்கள் பால்குடி என்றால்...


7 மாதத்தில் சுகப்பிரசவம் ஆகும் குழந்தை,

6 மாதங்கள் மனித படைப்பாகவும் வெறும் 1 மாதம் மட்டும் ஜந்துவாக இருந்ததா? அல்லது 

4 மாதங்கள் ஜந்துவாகவும் வெறும் 3 மாதங்கள் மட்டுமே மனிதப் படைப்பாக இருந்ததா?


6 மாதங்கள் மனித படைப்பு வெறும் 1 மாதம் மட்டும் ஜந்து என்றால் 4 மாத சிசுக்கொலை ஃபத்வா அடிவாங்கிவிடும்.

4 மாதங்கள் ஜந்து; வெறும் 3 மாதங்கள் மட்டுமே மனிதப் படைப்பு என்றால் குர்ஆன் வசனத்திற்கு கொடுத்த விளக்கம் தவறென்று ஆகும்.


11 மாதங்களுக்குப் பிறகு சுகப்பிரசவம் ஆகும் குழந்தை,

6 மாதங்கள் மனித படைப்பாகவும் 5 மாதங்கள் ஜந்துவாகவும் இருந்ததா? அல்லது 

4 மாதங்கள் ஜந்துவாகவும் 7 மாதங்கள் மனித படைப்பாகவும் இருந்ததா?

இதில் எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்றில் சிசுக்கொலை ஃபத்வா அடிவாங்கும் அல்லது குர்ஆன் வசனத்திற்கு கொடுத்த விளக்கம் முரண்படும்.


மேலுள்ள கேள்விகளுக்கு வியாக்கியானங்களை தவிர்த்து பதில் சொல்லவே முடியாது. தஃப்ஸீர் வைத்த கணக்குப்படி பார்த்தால் குழந்தை பிறக்கும் முன்னரே அது எத்தனை நாள் மனிதப்படைப்பாக இருந்தது எத்தனை நாள் ஜந்துவாக இருந்தது என்று தெரியாது. அவ்வாறு தெரியாத நிலையில் 120நாட்களை வரையில் கருவைக் கலைக்கலாம் என்று பத்வா கொடுப்பது விதியை அறிந்ததைப் போலாகும். (கருவறைகளில் உள்ளதை அவனே அறிகிறான்) 31:34.


120 நாட்களை கணக்கிட இயலுமா?


LMP வயது மற்றும் fertilisation வயது ஆகியவற்றை விளக்கும்போது ஒரு பெண் எப்போது கருவுற்றாள் என்பதை துல்லியமாக கணக்கிட இயலாது என்று விளக்கியிருந்தோம். குர்ஆனும் ஹதீஸ்களும் விந்தணு கருவறையை அடைந்து கருவுருதைப் பற்றி பேசுகிறதே தவிர கடைசி  மாதவிடாய் காலத்தைப் பற்றி பேசவில்லை என்பதையும் நாம் விளங்கினோம். ஆரோக்கியமாக 28 நாட்களில் மாதவிடாய் ஏற்படும் பெண்ணுக்குத்தான் அவளுக்கு மாதவிடாய் தவறிய நாளுக்கு 14 நாட்களுக்கு முன்னர் கருவுற்றிருப்பாள் என்று கணிக்க இயலுமே தவிர ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு நாட்கணக்கில் சீரற்ற மாதவிலக்கை கொண்ட பெண்கள் விஷயத்தில் இந்த கணிப்பு தவறாகி விடும். ஒரு பெண் எப்போது கருவுற்றாள் என்றே தெரியாத நிலையில் 120 நாட்கள் கணக்கை எப்படி அமுல்படுத்துவார்கள். இவர்கள் 120 நாட்கள் என்று கணக்கிட்டு அது உண்மையில் உண்மையில் ரூஹ் ஊதப்பட்ட பிறகுள்ள  125ம் நாளாக இருந்தால்?


‘வேறு படைப்பு’ எனும் வாதம்:


23:14. பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.


இங்கே வேறு படைப்பு என்று அல்லாஹ் சொல்வதால் 120 நாட்களுக்கு முன்பு வரை அது மனித படைப்பல்ல வேறு படைப்பு என்று வாதிடுகிறோம். *எலும்புக்கு இறைச்சியை அணிவித்த* நிலைக்கு பிறகு *வேறு படைப்பாக* ஆக்கினோம் என்று அல்லாஹ் சொல்கிறான். நியாயமாக பார்த்தால் வேறு படைப்பாக ஆக்கிய அந்த படைப்பைத்தான் வேறு ஜந்து என்று சொல்லவேண்டுமே தவிர அதற்கு முன்னிருந்ததை வேறு படைப்பு என்று வசனம் சொல்லவே இல்லை. ஆனால் தலை கீழாக வாதிடுகிறோம்.


இது போல வேறு வசனங்கள் இருக்கிறதா என்று பார்ப்போம்.


30:30. (முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.


இங்கே அல்லாஹ்வின் படைப்பை மாற்றி அமைக்கக் கூடாது என்று சொல்வதை நாம் எப்படி புரிந்துகொள்வோம். மனிதனை வேறு ஜந்தாக மாற்றக் கூடாது என்று புரிந்துகொள்வோமா? அல்லது அல்லாஹ் படைத்துள்ள வடிவத்தை மாற்றக்கூடாது என்று புரிவோமா?


13:5. நீர் ஆச்சரியப்பட்டால் "நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?' என்று அவர்கள் கூறுவது (இதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின் கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.


இதே கருத்தை சொல்லும் வசனங்கள் 17:49, 17:98. 32:10. இங்கே புதுப் படைப்பு என்பது மனித படைப்பா அல்லது வேறு ஜந்துவா. அல்லாஹ்வே விடை சொல்கிறான்


30:11. அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!


மேலும் பார்க்க 17:50, 51. 21:104. ஆக புதுப் படைப்பு என்பது மனித படைப்புதானே தவிர வேறு ஜந்து அல்ல.


22:5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.333 பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.


32:7. அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான். பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான். பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். (32:7-9)


மேலுள்ள வசனத்தைப் பாருங்கள் அல்லாஹ் களிமண்ணில் இருந்து படைத்ததும் மனிதப் படைப்புதான். பின்னர் விந்தில் இருந்தும், அலக்கில் இருக்கும் முழ்காவில் இருந்தும் படைத்ததும் மனிதப் படைப்புதான். இவற்றை மனிதப் படைப்பு என்று அல்லாஹ் சொல்லும்போது இவற்றை வேறு படைப்பு என்பது தகாது.


ஃஹல்கன் எனும் வார்த்தையே முழுமை பெற்ற மனிதனைக் குறிப்பதாகும். அதுவரை முழுமை பெறாத மனிதனை முழுமை பெற்ற மனிதனாக ஆக்குவதையே அல்லாஹ் அங்கே சொல்கிறான்.


39:6. உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரதுஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?


வேறு படைப்பு என்பதை மனிதன் அல்லாத வேறு படைப்பு என்று வாதிடுவதை முற்றிலுமாக மேலுள்ள வசனம் தடை செய்கிறது. 


👉 கர்ப்ப காலம் முழுவதும் மனிதன் அன்னையின் வயிற்றில்தான் இருந்தான் என்றும்

👉 அன்னையின் வயிற்றில் இருக்கும் படைப்புகள் எல்லாமே மனித படைப்புதான் என்றும் இந்த வசனம் சவுக்கடி போல சொல்கிறது


ஏற்கனவே முடிவு செய்துவிட்டு அதை நோக்கி ஆய்வுகளை செலுத்தும்போது அதற்கு மாற்றமாக இருக்கும் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் கண்ணுக்கு புலப்படாது.


கருக்கலைப்பு மனித உடலுக்கு கேடுவிளைவிக்குமா?


//ஆனால் மனிதர்கள் தனக்குக் கேடு விளைவிப்பவற்றைச் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர். உருவான குழந்தையைக் கலைப்பது பெண்ணுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள். அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்னுள்ள கருவை அழிப்பதும் தடுக்கப்பட்டதாகும். குழந்தையைக் கொல்வது என்ற அடிப்படையில் அல்ல.// {தஃப்ஸீர்}


மாத்திரைகள்:


https://en.wikipedia.org/wiki/Mifepristone

https://en.wikipedia.org/wiki/Misoprostol


மேலுள்ள (Mifepristone & Misoprostol) இரு மருந்துகள்தான் பொதுவாக கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றினால் ஏற்படும் பக்க விளைவுகளும் அங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மாதவிடாயின்போது சாதரணமாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர வேறு எந்த பக்க விளைவுகளும் இந்த மாத்திரைகள் மூலம் ஏற்படுவதில்லை.


காய்ச்சலுக்கான பாராசிடாமோல் எனப்படும் மாத்திரை கல்லீரலை பாதிக்கக்கூடியது. ஆனால் நாம் காய்ச்சல் மாத்திரையை சாதரணமாக உண்கிறோம் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். காய்ச்சல் மாத்திரை ஏற்படுத்தும் பாதிப்பு, ஏன் டீ காப்பி ஏற்படுத்தும் பாதிப்பு கூட இந்த கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படுவதில்லை.


முதல் 70 நாட்கள் (இரண்டரை மாதங்கள்) வரை மாத்திரையை கொண்டு கருவைக் கலைப்பது பாதுகாப்பானதாகவும் பக்க விளைவு இல்லாததாகவும் நிறுவப்பட்டுள்ளது.


Vaccuum aspiration (VA):


எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் எவ்வித ஆபத்தும் இல்லாமல் இம்முறையில் எளிதாக கருவைக் கலைக்க இயலும். “QSF17. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை” ஆக்கத்தில் காப்பர் டீ யை கருவறைக்குள் வைப்பதைப் பற்றி பார்த்தோம். அதே போன்ற ஒரு சிறு குழாய் மூலம் கருவறையில் இருக்கும் சிசுவை உறிஞ்சு எடுத்துவிடுவார்கள். முதல் 84 நாட்களுக்கு இம்முறையில் எளிதாக சிசுவைக் கொன்று வெளியேற்றிவிடலாம். வெறும் 15 நிமிடத்தில் குழந்தையை கொன்று வெளியேற்றிவிட்டு அந்த பெண் வீட்டுக்கு வந்துவிடலாம். காப்பர் டீ யை வைக்கும்போதும் எடுக்கும்போதும் ஏற்படும் அற்ப சிரமங்களைத் தவிர பக்க விளைவுகளோ உடலுக்கு பாதிப்புகள் என்றோ எதுவும் இம்முறையில் இல்லை.


https://en.wikipedia.org/wiki/Vacuum_aspiration


Dilation and evacuation (D&E)


மேலே சொல்லப்பட்ட VA முறையில் cervix எனப்படும் கருப்பையின் வாயில் சிறு குழாயை இயல்பான முறையில் செலுத்தி குழந்தையை கொள்கிறார்கள். ஆனால் குழந்தை பெரிதாகிவிட்டால் VA முறையில் சிறு குழாய் வழியாக உறிஞ்சு எடுக்க இயலாது. இதற்கு பெரிய குழாய்கள் வேண்டும். எனவே Dilation எனும் முறையில் கருப்பையின் வாயை இளகச் செய்து பெரிதாக்கி பின்னர் பெரிய குழாய்கள் வழியாக உயிருடன் இருக்கு குழந்தையை சிறு சிறு பாகங்களாக வெட்டி வெளியே எடுப்பார்கள். பின்னர் மீதமிருக்கும் திசுக்களையும் vaccum கொண்டு உறுஞ்சி எடுத்துவிடுவார்கள். இம்முறையில் 147 நாட்கள் வரையிலான குழந்தைகளை கொன்று வெளியேற்றலாம். இம்முறையிலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.


https://www.health.harvard.edu/medical-tests-and-procedures/abortion-termination-of-pregnancy-a-to-z


மேற்சொன்ன முறைகள் அனைத்தும் இயற்கையாக குழந்தை பிறப்பதில் இருக்கும் சிக்கல்கள் ஆபத்துகளைவிட லேசானது என்கிறார்கள்.


பார்க்க > https://en.wikipedia.org/wiki/Abortion#Safety


அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலமும் குழந்தையை கொல்கிறார்கள். இன்று நமது நாட்டில் சாதரணமாக சிசேரியன் நடக்கிறது. சிசேரியன் முறையில் கருவை கொல்வது பெண்ணுக்கு கெடுதி ஏற்படுத்தும் அதனால் கூடாது என்று வாதம் வைத்தால் அதே சிசேரியன் முறையில் குழந்தை பெறுதலும் கூடாது என்று ஃபத்வா கொடுக்க வேண்டும்.


70 நாட்களுக்குள் கருக்கலைப்பது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 112 நாட்கள் வரை குழந்தையை கொல்வதும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருக்கலைப்புக்கு அங்கீகாரம் வழங்கிவிட்டு பாதிப்பே இல்லாத விஷயத்தை பெரிதாகக் காட்டுவது உள்நோக்கம் கொண்ட ஃபத்வாவகவே பார்க்கப்படும்.


இன்று மத குருமார்களின் வலையில் விழுந்து ஏமாந்து கருவுற்ற பெண்கள் விபச்சாரத்தின் மூலம் உருவான கருவை கலைக்க விரும்பினால் நமது பத்வாவின் மூலம் அவர்களுக்கு நாம் அனுமதி வழங்குகிறோம். “உனக்கு பாதிப்பு ஏற்படும் அதனால் கலைக்காதே” என்று அறிவுரையும் சொல்கிறோம். கருக்கலைப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவள் அறிந்துகொண்டால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அவள் கருவைக் கலைப்பாள். தவறான இந்த ஃபத்வாக்கள் விபச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன.


பால்குடி காலம்


46:15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.


மேலுள்ள வசனத்தில் ஒரு குழந்தையை தாய் சுமக்கும் காலம் 6 மாதங்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த 6 மாதத்தை எப்படி விளங்குவது என்று குழப்பமாகவே இருக்கும். இந்த 6 மாதக் கணக்கை எடுத்து சிசுக்கொலையை நியாயப் படுத்த இயலாது என்று முன்னரே பார்த்தோம். எனினும் இந்த வசனத்தை விளக்காமல் விட்டாலும் இந்த ஆய்வு முற்றுப்பெறாது.


👉 மனிதனை சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

👉 40 வயதில் அவன் துஆ செய்வான்.


இங்கே 40 வயதில் தான் ஒருத்தன் இந்த துஆ வை செய்வானா? அதற்கு முன்னதாகவோ அதற்கு பின்னரோ இந்த துஆவை செய்தால் இந்த வசனத்தை மறுத்ததாக ஆகுமா? 40 வயதை அடைந்து துஆ செய்வதை குழப்பமில்லாமல் புரிந்துகொள்வதைப் போல 30 மாதங்களையும் புரிந்துகொள்ளலாம். எனினும் அறிவியல் ஆய்வுகளில் அறிவியல் விளக்கங்கள் கொடுக்காமல் போனால் நம் மனம் ஏற்றுகொள்ளாது என்பதால் அறிவியலைத் தேடுவோம்.


ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் காலம் கருவுக்கு கரு மாறுபடும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைச் சொல்லி இத்தனை மாதங்கள் ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் என்று சொல்ல இயலாது. கருகலைக்க இயன்ற முதல் 4 ½ மாதங்கள் + பின்னர் இருக்கும் 6 மாதங்கள் என்று குறிப்பிட்ட எண்ணிக்கையைச் சொல்லி தஃப்ஸீர் பிரித்ததாலே நாம் மேலே போட்டுக்காட்டிய கணக்கு விடையில்லாமல் நின்றது.


குழந்தை கருவறையில் இருக்கும் காலம் 37 வாரங்கள் முதல் 42 வாரங்கள் வரை மாறும் என்று பார்த்தும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பிறக்கும் குழந்தைகளை நார்மல் பிறப்பாகவே பார்ப்பார்கள். 37 வாரங்களுக்கு குறைவாக பிறக்கும் குழந்தைகளை குறை பிரசவம் என்பார்கள். 37 வாரங்களுக்கு குறைவாக குழந்தை பிறந்தால் அவை என்ன ஆகும்? எத்தனை வாரங்களில் குழந்தை பிறந்தால் அவை உயிர்வாழ்வதற்கான வாய்ப்புள்ளது?


இதனை மருத்துவ உலகம் fetal viability என்று அழைக்கிறது. அதாவது கருவறையில் இருந்து வெளியே வந்தாலும் ஒரு குழந்தை உயிர்வாழ வாய்ப்புள்ளது என்று சொல்ல இயன்ற கால அளவு. கருவுற்றதில் இருந்து 6 மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தால் அது வெளி உலகில் உயிர்வாழும் என்கிறது அறிவியல். அதாவது வெளி உலகில் வந்த பிறகு வாழ்வதற்கு தேவையான வளர்ச்சியை 6 மாதங்களில் ஒரு குழந்தை அடைந்து விடுகிறது. அந்த 6 மாதங்களுக்குப் பிறகு பிறந்தால் வெளி உலகில் அக்குழந்தை பிழைத்துகொள்ளும்.


பார்க்க > https://en.wikipedia.org/wiki/Fetal_viability


இப்போது 9 மாதத்தில் பிறக்கும் குழந்தை மீதி மூன்று மாதம் எங்கிருந்தது என்கிற கேள்வி எழும்?


6 மாதம் என்று அல்லாஹ் சொல்வதை நாம்தான் முரணில்லாமல் விளங்க வேண்டும். கடைசி 6 மாதத்தை எடுக்க வேண்டும் என்று சொல்கிறது தஃப்ஸீர். அப்படி எடுத்தால் குழந்தையின் (நுத்ஃபா, அலக், முள்ஃகா, இளாம், லஹ்ம் போன்ற) முக்கிய நிலைகளில் அது வயிற்றில் இல்லை என்றாகிவிடும். முதல் 6 மாதத்தை எடுத்தால், குழந்தையின் முக்கிய டெவலப்மெண்ட் நடக்கும் காலம் அதுதான். மீதமுள்ள காலம் வளர்சிக்குரியது மட்டுமே. வெளியே இருந்தாலும் அது வளரும்.


ஒவ்வொரு பெண்ணின் கற்ப காலத்தையும் எடுத்து அதனை இவ்வசனத்துடன் உரசிப்பார்க்க முடியாது. [எல்லோருக்கும் கர்ப்ப காலம் 10மாதங்கள் என்று தஃப்ஸீர் முடிவு செய்ததால் மட்டுமே அந்த கணக்கு விடையில்லாமல் முரண்பட்டு நின்றது என்பதி கவனத்தில் கொள்க]. ஒவ்வொரு கற்பமும் கால அளவில் மாறுபடும். 6 மாதம் என்பதை viability period அதாவது குழந்தை முழுமை பெற்றநிலையில் அதன் பிறகு வெளியே வந்தாலும் அது உயிர் வாழ இயன்ற காலம் என்று எடுப்பதே பொருத்தமாக இருக்கும்.


4 மாதங்கள் (ஒரு ஜந்து, எனவே கணக்கில் எடுக்கக்கூடாது ) 

+ 6 மாதங்கள் (மனிதன்) 

+ 24 மாதங்கள் பால்குடி

= 30 மாதங்கள்


இது ஏற்றுக்கொள்ள இயலாத கணக்காகும்


6 மாதங்கள் (வெளியே வந்தாலும் வாழ இயன்ற காலம்) 

+ [0 -3 ½ மாதங்கள் வரை குழந்தைக்கு குழந்தை மாறுபடும் உறுதியற்ற காலம், இதை எண்ணிக்கையில் எடுக்க இயலாது] 

+ 24 மாதங்கள் பால்குடி

= 30 மாதங்கள்


அறிவுக்கு எட்டுகிறது


முதல் 6 மாதம் உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கை. இறுதி 6 மாதம் என்பது உறுதியற்றது. அதிலும் முதல் 4 மாதம் மனிதனே இல்லை என்பது மனிதத்திற்கு எதிரானது. உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையை எடுப்பதே மார்க்கத்தின் வழிகாட்டல்.


மாதம் என்பதே இருபத்தொன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.

ஸஹீஹ் புகாரி : 1907. 


ஈலா சம்பவத்தின்போதும் மாதம் என்பதே 29 என்று அடித்து சொல்வார்கள் நபி, லைலத் கத்ர் பற்றி கேட்கும்போதும் மாதம் என்பதே 29 என்று அடித்து சொல்வார்கள் நபி. மாதம் 30 ஆகவும் இருக்கும் என்று நபி ஸல் அவர்களுக்கு தெரியுமல்லவா?


எல்லா மாதத்திலும் 29 நாட்கள் இருக்கும். 30 நாட்கள் ஆவதும் இல்லாமல் போவதும் பிறையை பொறுத்து மாதத்திற்கு மாதம் மாறுபடும். நடப்பு மாதம் எத்தனை நாட்கள் என்று கேட்டால் 29 நாட்கள் என்று சொல்லவேண்டும் என்பதே நபியின் கட்டளை. 30 நாட்கள் என்று சொல்லக்கூடாது. 30ஆ என்பது மாத இறுதியில்தான் தெரியும். அதே போல ஒரு குழந்தை கருவறையில் இருந்த காலம் அது பிறந்த பிறகே தெரியும். முதல் 6 மாதம் என்பது ஒரு குழைந்தையின் viability period. உறுதியானது. எல்லா குழந்தைகளுக்கும் முதல் 6 மாதம் உண்டு. பின்னர் அது வயிற்றில் இருக்கும் காலம் உறுதியற்றது. குழந்தைக்கு குழந்தை மாறுபடும்.


எது உறுதியோ அதையே மார்க்கம் சொல்லும்.


39:6. உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரதுஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?


👉 கர்ப்ப காலம் முழுவதும் மனிதன் அன்னையின் வயிற்றில்தான் இருந்தான் என்று இந்த வசனம் சொல்லும்போது இதற்கு முரண்படாத வகையில்தான் பால்குடி கணக்கை விளங்க வேண்டுமே தவிர மனோ இச்சையின்படி விளக்கம் கூடாது.


கருக்கலைப்பை தடை செய்த இஸ்லாம்


கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம்

*இம்லாஸ்*

இம்லாஸ் என்பது வயிற்றிலிருந்து நழுவி வருவதைக் குறிக்கும். 


حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّهُ اسْتَشَارَهُمْ فِي *إِمْلاَصِ* الْمَرْأَةِ فَقَالَ الْمُغِيرَةُ قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْغُرَّةِ عَبْدٍ أَوْ أَمَةٍ‏.‏ فَقَالَ ائْتِ مَنْ يَشْهَدُ مَعَكَ، فَشَهِدَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِهِ‏.‏


புகாரீ 6905. 6906 முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

ஒரு பெண்ணின் கருவைக் கலைத்தால் (அதற்குப் பரிகாரம்) என்ன என்பது குறித்து உமர்(ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது நான், 'நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவுக்காக (இழப்பீடாக) வழங்கிடுமாறு தீர்ப்பளித்தார்கள்' என்றேன். உமர்(ரலி) அவர்கள், '(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்' என்றார்கள். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவர்கள், அவ்வாறு நபி(ஸல) அவர்கள் தீர்ப்பளித்தபோது தாம் அங்கு இருந்ததாக சாட்சியம் அளித்தார்கள்.


*அஸ்ஸிக்த்*

*ஸிக்த் என்பது உருப்பெறாத குழந்தையையும் குறிக்கும். (60 நாட்களுக்குள்ளாக  முழு உருவத்தை பெற்றுவிடும் என்பது வேறு விஷயம்)*


حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنْ عُمَرَ، نَشَدَ النَّاسَ مَنْ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى فِي *السِّقْطِ* وَقَالَ الْمُغِيرَةُ أَنَا سَمِعْتُهُ قَضَى فِيهِ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ‏.‏ قَالَ ائْتِ مَنْ يَشْهَدُ مَعَكَ عَلَى هَذَا فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَنَا أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ هَذَا‏.‏

புகாரீ 6907. 6908 

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உமர்(ரலி) அவர்கள், (வயிற்றிலேயே கொல்லப்பட்டு) விழுந்த கரு தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைச் செவியேற்ற மக்களைச் சாட்சியம் அளிக்குமாறு கூறினார்கள். அப்போது முஃகீரா(ரலி) அவர்கள், 'இத்தகையை சிசுவிற்காக ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்குமாறு நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்க கேட்டுள்ளேன்' என்றார்கள். உமர்(ரலி) அவர்கள் 'இதற்கு உங்களுடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்' என்றார்கள். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்பளித்ததற்கு நான் சாட்சி' என்று கூறினார்கள்.


*கருக்கலைப்பு கொலையே*

*அதற்கும் தியா எனும் கொலைக்கான இழப்பீட்டு வழங்க வேண்டும்*


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ اقْتَتَلَتِ امْرَأَتَانِ مِنْ هُذَيْلٍ، فَرَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى بِحَجَرٍ قَتَلَتْهَا وَمَا فِي بَطْنِهَا، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَضَى أَنَّ دِيَةَ جَنِينِهَا غُرَّةٌ عَبْدٌ أَوْ وَلِيدَةٌ، وَقَضَى دِيَةَ الْمَرْأَةِ عَلَى عَاقِلَتِهَا‏.‏


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்தி மீது கல் எறிந்து அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்து சிசுவையும் கொன்றுவிட்டாள். எனவே, மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.  அப்போது நபி(ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஓர் ஆண் அடிமை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டும் என்றும், (கொல்லப்பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை கொலை செய்த பெண்ணின் தந்தை வழி உறவினர்களின் மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 6910.


*வயிற்றில் இருக்கும் எதை கலைத்தாலும் கொலையே*


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ الْخُزَاعِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ ضَرَبَتِ امْرَأَةٌ ضَرَّتَهَا بِعَمُودِ فُسْطَاطٍ وَهِيَ حُبْلَى فَقَتَلَتْهَا - قَالَ - وَإِحْدَاهُمَا لِحْيَانِيَّةٌ - قَالَ - فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دِيَةَ الْمَقْتُولَةِ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ وَغُرَّةً لِمَا فِي بَطْنِهَا ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنْ عَصَبَةِ الْقَاتِلَةِ أَنَغْرَمُ دِيَةَ مَنْ لاَ أَكَلَ وَلاَ شَرِبَ وَلاَ اسْتَهَلَّ فَمِثْلُ ذَلِكَ يُطَلُّ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَسَجْعٌ كَسَجْعِ الأَعْرَابِ ‏"‏ ‏.‏ قَالَ وَجَعَلَ عَلَيْهِمُ الدِّيَةَ ‏.‏


முஸ்லிம் 3475. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் கர்ப்பிணியாயிருந்த தன் சகக்கிழத்தியைக் கூடாரக் குச்சியால் தாக்கிக் கொன்றுவிட்டாள். அவர்களில் ஒருத்தி "பனூ லிஹ்யான்" கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொல்லப்பட்டவளுக்குரிய இழப்பீட்டைக் கொன்றவரின் தந்தைவழி உறவினர்கள் வழங்கவேண்டும்; அவளது வயிற்றிலிருந்த சிசுவைக் கொன்றதற்காக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்" என்று (தீர்ப்புக்) கூறினார்கள். அப்போது கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்களில் ஒருவர், "உண்ணவோ பருகவோ அழவோ இயலாத சிசுவிற்காக நாங்கள் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிராமப்புற அரபியரின் எதுகைமோனையைப் போன்ற எதுகை மோனையா?" என்று (கடிந்து) கூறினார்கள். மேலும், இழப்பீட்டை அவர்கள்தாம் வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.


*ஸிக்த் என்பது உருப்பெறாத குழந்தையையும் குறிக்கும். (60 நாட்களுக்குள்ளாக  முழு உருவத்தை பெற்றுவிடும் என்பது வேறு விஷயம்)*


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، بِإِسْنَادِهِمُ الْحَدِيثَ بِقِصَّتِهِ ‏.‏ غَيْرَ أَنَّ فِيهِ فَأَسْقَطَتْ فَرُفِعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَضَى فِيهِ بِغُرَّةٍ وَجَعَلَهُ عَلَى أَوْلِيَاءِ الْمَرْأَةِ ‏.‏ وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ دِيَةَ الْمَرْأَةِ ‏.‏


முஸ்லிம் 3476 - மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "அவள் வயிற்றிலிருந்த சிசுவை விழுகட்டியாக்கி (வீழ்த்தி)விட்டாள். இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசெல்லப்பட்டபோது, ஓர் அடிமையை இழப்பீடாக வழங்க வேண்டும்; இழப்பீட்டிற்கான பொறுப்பைக் கொலை செய்த பெண்ணின் காப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட அந்தப் பெண்ணிற்கான இழப்பீடு குறித்த குறிப்பு இல்லை.


*கொலை என்றும் கொலை காரி என்றுமே ஹதீஸ்கள் வர்ணிக்கின்றன*


حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ امْرَأَتَيْنِ، رَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى بِحَجَرٍ فَطَرَحَتْ جَنِينَهَا، فَقَضَى فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِغُرَّةٍ عَبْدٍ أَوْ وَلِيدَةٍ‏.‏ وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِي الْجَنِينِ يُقْتَلُ فِي بَطْنِ أُمِّهِ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ وَلِيدَةٍ‏.‏ فَقَالَ الَّذِي قُضِيَ عَلَيْهِ كَيْفَ أَغْرَمُ مَنْ لاَ أَكَلَ، وَلاَ شَرِبَ، وَلاَ نَطَقَ، وَلاَ اسْتَهَلَّ، وَمِثْلُ ذَلِكَ بَطَلْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّمَا هَذَا مِنْ إِخْوَانِ الْكُهَّانِ ‏"‏‏.‏


புகாரீ 5759. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

(ஹுதைல் குலத்து) இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியைக் கல்லால் அடித்து அப்பெண்ணின் கருவில் இருந்த சிசுவைக் கொன்றுவிட்டாள். நபி(ஸல்) அவர்கள் இந்த வழக்கில் உயிரீட்டுத் தொகையாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஒரு பெண் அடிமையைத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். 5760. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே கொல்லப்பட்டுவிட்ட ஒரு சிசுவின் விஷயத்தில் ஓர் ஆண்அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். எவருக்கு எதிராக இத்தீர்ப்பு அளிக்கப்பட்டதோ அவர் (அந்தப் பெண்ணின் கணவர்), 'உண்ணவோ பருகவோ மொழியவோ அழவோ முடியாத ஒன்றுக்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்படவேண்டுமல்லவா?' என்று கேட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் (வார்த்தை ஜாலத்தில்) குறிகாரர்களின் சகோதரர்களில் ஒருவர்' என்று கூறினார்கள்.


*நூறு ஒட்டகங்கள் தியா*


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ قَتِيلُ الْخَطَإِ شِبْهِ الْعَمْدِ بِالسَّوْطِ أَوِ الْعَصَا مِائَةٌ مِنَ الإِبِلِ أَرْبَعُونَ مِنْهَا فِي بُطُونِهَا أَوْلاَدُهَا ‏"‏ ‏.‏


தவறுதலான கொலைக்கு நூறு ஒட்டகங்கள் தியாவாக கொடுக்கப்பட வேண்டும் அவற்றுள் 40 ஒட்டகங்கள் வயிற்றில் குட்டியுடன் இருக்கவேண்டும்.

 

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நசாஈ 4791


أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، وَإِبْرَاهِيمُ بْنُ يُونُسَ بْنِ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا يُوسُفُ بْنُ صُهَيْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، خَذَفَتِ امْرَأَةً فَأَسْقَطَتْ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي وَلَدِهَا خَمْسِينَ شَاةً وَنَهَى يَوْمَئِذٍ عَنِ الْخَذْفِ ‏.‏ أَرْسَلَهُ أَبُو نُعَيْمٍ ‏.‏


قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ هَذَا وَهْمٌ وَيَنْبَغِي أَنْ يَكُونَ أَرَادَ مِائَةً مِنَ الْغُرِّ ‏.‏


ஒருத்தி மற்றொருத்தி மீது கல் எறிந்து அவளுடைய கருவை கலைத்து விட்டாள் கொன்றுவிட்டாள். 

நபி(ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஐம்பது ஆடுகளை வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.


அறிவிப்பாளர்: புரைதா (ரலி)

நசாஈ 4813


[இமாம் நாசாயி அவர்களும் அபூ தாவூத் அவர்களும் இந்த ஹதீஸ் தவறுதலாக புரியப்பட்டதாகவும் நூறு ஒட்டகங்கள் தியா கொடுக்க வேண்டும் என்பதே சரி என்றும் கூறியுள்ளனர்]


மேலுள்ள சம்பவத்தில் இறந்த குழந்தை முடியுடன் இருந்ததாக வேறொரு அறிவிப்பில் வருகிறது. வயதான காலத்தில் மூளை குழம்பிய அறிவிப்பாளருக்கு முதல் எடுத்துக்காட்டாக கூறப்படும் சிமாக் அவர்கள் இக்ரிமா அவர்கள் வழியாக அறிவிப்பதால் அந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்படாது.


ஸிக்த்துக்கும் ஜனாஸா தொழுகை


حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ يُونُسَ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، - وَأَحْسَبُ أَنَّ أَهْلَ، زِيَادٍ أَخْبَرُونِي أَنَّهُ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم - قَالَ ‏ "‏ الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِي يَمْشِي خَلْفَهَا وَأَمَامَهَا وَعَنْ يَمِينِهَا وَعَنْ يَسَارِهَا قَرِيبًا مِنْهَا *وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ* وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ ‏"‏ ‏.‏

صحيح (الألباني)

صحيح (الأرناؤوط)

''வாகனத்தில் ஏறி ஜனாஸாவில் கலந்து கொள்பவர் ஜனாஸாவுக்குப் பின்னே வரவேண்டும். நடந்து செல்பவர் (முன்னாலோ பின்னாலோ) விரும்பியவாறு செல்லலாம். ஸிக்த் எனும் (குறை மாத) விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தவேண்டும். அதன் பெற்றோருக்கு பாவமன்னிப்பையும் அருளையும் கோரிட வேண்டும் '' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி)

அஹ்மத் - 17715

அபூ தாவூத் -3180 


أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ زِيَادَ بْنَ جُبَيْرٍ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّهُ ذَكَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»


*அஸ்ல் செய்த பிறகும் உருவாவதை மனித உயிர் என்றே நபி ஸல் அவர்கள் சொல்கிறார்கள்*


حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ ابْنُ عَبْدَةَ أَخْبَرَنَا وَقَالَ، عُبَيْدُ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، الْخُدْرِيِّ قَالَ ذُكِرَ الْعَزْلُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ وَلِمَ يَفْعَلُ ذَلِكَ أَحَدُكُمْ - وَلَمْ يَقُلْ فَلاَ يَفْعَلْ ذَلِكَ أَحَدُكُمْ - فَإِنَّهُ لَيْسَتْ نَفْسٌ مَخْلُوقَةٌ إِلاَّ اللَّهُ خَالِقُهَا ‏"‏ ‏.‏


அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) குறித்துப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், "அதை உங்களில் ஒருவர் ஏன் செய்கிறார்?" என்று கேட்டுவிட்டு, -(கவனிக்கவும்: "உங்களில் எவரும் அவ்வாறு செய்ய வேண்டாம்"என்று அவர்கள் குறிப்பிடவில்லை)- "படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்" என்று சொன்னார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 2841.


[இங்கே படைக்கப்பட இருப்பது மனிதே உயிரே அன்றி மாட்டு உயிர் அல்ல]


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ لِي جَارِيَةً هِيَ خَادِمُنَا وَسَانِيَتُنَا وَأَنَا أَطُوفُ عَلَيْهَا وَأَنَا أَكْرَهُ أَنْ تَحْمِلَ ‏.‏ فَقَالَ ‏"‏ اعْزِلْ عَنْهَا إِنْ شِئْتَ فَإِنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا ‏"‏ ‏.‏ فَلَبِثَ الرَّجُلُ ثُمَّ أَتَاهُ فَقَالَ إِنَّ الْجَارِيَةَ قَدْ حَبِلَتْ ‏.‏ فَقَالَ ‏"‏ قَدْ أَخْبَرْتُكَ أَنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا ‏"‏.‏


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் "புணர்ச்சி இடை முறிப்பு" (அஸ்ல்) செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்" என்றார்கள். அம்மனிதர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளிடம் வந்துசேரும் என உம்மிடம் நான் ஏற்கெனவே கூறிவிட்டேனே!" என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 2843.


[இங்கே அந்த பெண்மணிக்கு உருவானது அல்லாஹ் வித்தித்த மனித உயிரா அல்லது மாட்டு உயிரா?]


மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html