Sunday, 15 October 2017

மூன்றாம் பிறை

*மூன்றாம் பிறையைப் பார்த்து முதல் பிறை எனும் முட்டாள் துலுக்கன்!*
இதுவும் கணக்கீட்டு சகோதரர்களால் தமிழக முஸ்லிம்கள் மீது வாரி இறைக்கப்படும் இழிச்சொல் ஆகும். இதை உண்மையில் சொன்னவர்கள் தமிழக இந்துக்கள். இதற்கான பின்னணியைப் பார்ப்போம்.
இந்துப் பஞ்சாங்கத்தில் அமாவாசை நாளிலிருந்து நாட்களை எண்ணுவார்கள். அமாவாசைக்கு மறுநாள் பிரதமை என்பார்கள். அதன் மறுநாளை துவிதியை என்பார்கள். அதற்கும் மறுநாளை த்ரிதியை என்பார்கள்.  இதை பஞ்சாங்கத்தில் (சிவகாசி காலண்டரில்) நம்மால் பார்க்க இயலும். இது திதி எனும் ஒருவித கணக்கு. இந்த கணக்கிற்கும் பிறை வடிவங்களுக்கும் எவ்வித தொடர்பையும் நம்மால் காண முடியவில்லை.
அமாவாசை முடிந்து முதன் முதலில் கண்ணுக்கு தெரியும் நிலவின் வடிவத்தைப் பார்ப்பதை இந்துக்கள் ஒரு புனித வழிபாடாக கொண்டுள்ளனர்.  இதை “மூன்றாம் பிறை தரிசனம்” என்று அழைக்கிறார்கள். மேலும் "சிவன் தனது தலையில் சூடி இருப்பது மூன்றாம் பிறையையே. மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால் செல்வம் பெருகும்" என்றும் நம்புக்கின்றனர்
*"அமைவாசை நாளிலும் அதன் மறு நாளும் பிறை தெரியாது. அதற்கும் மறுநாள் பிறை தெரியும் எனவே அது மூன்றாம் பிறை"* என்று இந்துக்கள் சொல்கிறார்கள். இதற்கும் மேலே சொன்ன திதி கணக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. திதி கணக்கில் அமாவாசை என்பது இறுதி திதி, பிரதமை என்பது முதல் திதி, துவிதியை என்பது இரண்டாம் திதி, த்ரிதியை என்பது மூன்றாம் திதி. ஆனால் இவர்கள் மூன்றாம் பிறை என்று சொல்லும்போது அமாவாசையை முதல் வடிவமாகவும், அதன் மறுநாளை இரண்டாம் வடிவமாகவும் அதற்கும் மறுநாளை மூன்றாம் பிறை என்றும் சொல்கிறார்கள். ஆக *"பிரதமை =1; துதியை= 2; த்ரிதியை = 3 எங்களின் திரிதியை தான் உங்களின் முதல் பிறை"* என்று அவர்கள் சொல்வது அவர்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா? சில மாதங்களில் துதியையிலும் சில மாதங்களில் த்ரிதியையிலும் இவர்கள் பிறை தரிசனம் செய்கின்றனர். அதாவது சில மாதங்களில் இரண்டாம் நாளிலும் சில மாதங்களில் மூன்றாம் நாளிலும் இவர்கள் மூன்றாம் பிறையை பார்க்கிறார்கள். முற்றிலும் முரண்பாடான செயல் இது. கண்ணுக்கு முதன் முதலில் தெரியும் வடிவத்தை மூன்றாம் பிறை என்று அழைக்கத் துவங்கியவர்கள் அதை சரியாக முதல் பிறை என்று அழைக்கும் நம்மை கேலி செய்ய தகுதியற்றவர்கள்.
இந்துக்களின் தவறான, முரண்பாடான நம்பிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு ஹிஜ்ரா கமிட்டி முஸ்லிம்களை வசைபாடுவதைப் பாருங்கள். https://youtu.be/jk7PhvBr8mo
அவர்களுடைய திதி கணக்கில்  இரண்டாவது நாளில் கண்ணுக்கு தெரியும் முதல் பிறையை மூன்றாம் பிறை என்கின்றனர். இது அவர்களிலேயே பலருக்கும் புரியாத கணக்கு. ஹிஜிரி கமிட்டிக்கு மட்டும் எப்படி புரிந்ததோ? அமாவாசை கணக்கு என்றாலே கமிட்டிக்கு அல்வா சாப்பிடுவது போலத்தானோ
முதன் முதலில் தெரிவதுதான் முதல் பிறை. அமாவாசையில் இருந்து எண்ணுவதல்ல முதல் பிறை. ஒவ்வொரு மாதமும் தெரியும் முதல் பிறைகளான அல் ஹிலால்களே காலம் காட்டி என்று அல்லாஹ் குர்ஆனில் அல்அஹில்லா மவாகீத் என்கிறான். நபி அவர்கள் மாதத்தில் தெரியும் முதல் பிறையையே அல் ஹிலால் என்றும் அதுதான் மாதத்தை துவங்கும் அளவுகோல் என்றும் நமக்கு தெளிவுபடுத்திவிட்டார்கள். நம் வழிமுறை கேலி செய்யும் இந்துக்கள், நாம் சரியாக முதல் பிறையை முதல் பிறை என்று அழைப்பதை தாங்கிக்கொள்ள இயலாமல் தங்களது தவறான மூன்றாம் பிறை நம்பிக்கையை வைத்து நம்மை *மூன்றாம் பிறையைப் பார்த்து முதல் பிறை எனும் முட்டாள் துலுக்கன்!* என்று கேலி செய்தனர்.
இந்துக்கள் நம்மை *"மூன்றாம் பிறையை முதல் பிறை எனும் முட்டாள் துலுக்கன்"* என்று சொன்னால் நமக்கு அது வேதனை அளிக்காது. ஆனால் அமாவாசைக்கு மறுநாள் முதல் பிறை எனும் கொள்கையை இந்துக்களிடமிருந்து கடன்வாங்கிய ஹிஜிரா கமிட்டி சகோதரர்கள் நம்மை முட்டாள் துலுக்கன் என்று கேலி செய்வது வேதனைக்குரியது.
எங்களின் நபிவழியில் நாங்கள் பார்க்கும் முதல்பிறை  உங்கள் கணக்குப்படி மூன்றாம் பிறைதான் என்றால் அதற்கு நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் என்ன கேலி செய்த போதும் நாங்கள் முதல் பிறையை மட்டுமே பார்ப்போம்.
ஆதாரங்கள்: