Friday, 25 August 2017

சவுதி-கேரள பொய்ப் பிறைகள் — பற்பல ஆதாரங்களுடன்

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
சவுதி-கேரள பொய்ப் பிறைகள்
பற்பல ஆதாரங்களுடன்
-----+-------+-------+------+------+
1️ “சவுதியில் பிறையைப் பார்த்துவிட்டுத்தானே பெருநாளை அறிவித்தார்கள்?”
2️ “நீங்கள் பதிந்த ஆதாரங்களில் கூட சவுதியில் பிறை பார்த்தார்கள் என்றுதானே உள்ளது”
3️ “கேரளாவில் ஒருவர் பிறை பார்த்துள்ளாரே?”
என்பன போன்ற நியாமான கேள்விகளுக்கான விடைகள்தாம் இக்கட்டுரை...
“பிறையைப் பார்த்ததிலிருந்து நாட்களை எண்ணிக்கொண்டே வந்து, 29 எண்ணிக்கை முடிந்ததும் மீண்டும் பிறை தேடவேண்டும். பிறை தெரிந்தால் அது புது மாதத்தின் 1 ஆம் பிறை. பிறை தெரியவில்லை என்றால் நடப்பு மாதத்தை 30 ஆக கணக்கிட்டுக்கொள்வது. இதுதான் நபி வழி.”
சவூதி அரசு 21-8-2017 (துல் கஅதா 1438)
மாலையில் பிறையை தேடுமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தது.
ஆகஸ்ட் 21 மாலையில் துல்ஹஜ் பிறையைத் தேடவேண்டும் என்றால், அதற்கு முந்தைய ஜூலை 23 மாலையில் துல்கஅதா பிறை 1 ஆக இருந்திருக்க வேண்டும். இதனை தொடந்து நமது கேள்விகள் எழுகின்றன
ஜூலை 23இல் துல்கஅதா பிறையை சவுதியில் பார்த்தது யார்?
இதற்கான விடை: சவுதியில் நபி வழிப்படி மாதா மாதம் பிறை பார்க்கப்படுவதில்லை. அவர்கள் உம்முல் குறா நாட்காட்டியை பின்பற்றுகிறார்கள். ரமளான், ஷவ்வால், துல்ஹிஜ்ஜா ஆகிய மாதங்களுக்கு மட்டும் பிறை தேடுமாறு அறிவிப்பு செய்கிறார்கள். இம்மூன்று மாதங்களிலும் பிறை தேடும் நாளை அவர்கள் காலண்டரை பார்த்தே முடிவு செய்கிறார்கள். அவர்களது காலண்டரில் ஷஅபான் 29 முடியும்போது ரமளானின் பிறையை தேடுமாறு அறிவிக்கிறார்கள். அதே போல அவர்களது காலண்டரில் துல் கஅதா 29 முடியும்போது துல் ஹஜ்ஜின் பிறையை தேடுமாறு அறிவிப்பு செய்கிறார்கள். இதை நாம் ஆதாரமில்லாமல் சொல்லவில்லை.
இது சவுதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
http://www.spa.gov.sa/viewfullstory.php?lang=en&newsid=1658755
// the 29th of the month of Dhul-Qa'dah 1438 H., sight-seeing the crescent of the month of Dhul-Hijjah 1438 H., "according to the Calendar of Umm Al-Qura".//
சவூதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையை, சவூதி அரசு ஊடகத்துறை வெளியிட்டுள்ளது. "உம்முல் குறாவில் 29 முடியும்போது பிறை தேடுங்கள்" என்று அவர்களே அறிக்கை விடுத்துள்ளனர்.
முந்தய மாதத்தின் பிறையை பார்த்து, எண்ணி வந்து 29 முடியும்போது பிறை தேடுவது நபி வழி. அதற்கு மாறாக காலண்டரில் 29 முடியும்போது பிறை தேடுவதென்பதே இவர்கள் நபி வழியில் இருந்து வெளியேறிவிட்டார்கள் என்பதற்கு போதுமான சான்று. எனினும் நாம் இவர்கள் மீது வைக்கும் மற்றக் குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களுடன் பார்ப்போம்.
இவர்களது காலண்டரில் 29 முடியும்போது பிறை தேடச் சொல்கிறார்கள் என்பதை ஏற்கனவே ஆதாரத்துடன் பார்த்தோம். அடுத்ததாக... இவர்கள் காலண்டரில் "நடப்பு மாதம்" 29ஆக முடிந்து மறுநாள் புது மாதத்தின் 1 ஆம் தேதியாக இருந்தால், 29ல் பிறை தேடுவதுபோல் பாவனை செய்வார்கள். பிறை தெரியாவிட்டாலும் பிறை பார்க்கப்பட்டதாக அறிவிப்பு செய்துவிடுவார்கள்.
அதே போல "நடப்பு மாதம்" 30 நாட்களைக் கொண்டதாக இவர்களின் காலண்டர் கூறினால் 29 ம் நாள் முடிந்து வரும் மாலையில் பிறை தேடும் நாடகம் நடத்தி பின்னர், பிறை தெரியவில்லை எனவே மாதத்தை 30ஆக பூர்த்தி செய்கிறோம் என்று அறிவிப்பார்கள். இது இவர்கள் மீது நாம் வைக்கும் அடுத்த குற்றச்சாட்டு. இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
காலண்டரின்படி ஒரு மாதம் 29ல் முடியும்போது பிறை தேடினால், பிறை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாளை புது மாதத்தின் 1 ஆம் பிறை என்று அறிவிப்பு செய்தே ஆக வேண்டும். ஏனெனில் மறுநாள்  1ம் பிறை என்று காலண்டரில் ஏற்கனவே குறித்துவைத்து விட்டதால் பிறை அறிவிப்பு செய்தே ஆகவேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்படுவோம். அதற்கான காரணத்தை பின்னால் விளக்கியுள்ளோம். இவர்களின் காலண்டரின்படியே பிறையை அறிவிக்கிறார்கள் என்பதற்கு இவர்களின் முந்தய பிறை அறிவிப்புகளின் பட்டியலை ஆய்வு செய்து நாம் ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளோம் பார்க்க...
தொலைநோக்கியால் கூட பிறையை பார்க்கவே முடியாத நாளில் பிறை பார்க்கப்பட்டதாக சவூதி அறிவித்த மாதங்களின் பட்டியலை ஆதாரங்களுடன் வாசித்திருப்பீர்கள். இதுதான் சவுதியில் ஒவ்வொரு முறையும் நடக்கிறது. சரி.. இந்த துல் ஹிஜ்ஜாவில் நடந்த சிறப்பான வேடிக்கைகளைப் பார்ப்போம்.
நபி வழிப்படி, பிறை தெரியவில்லை என்றால் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்வோம். பின்னர் பிறை தேடவேண்டிய தேவையே இல்லை. ஆனால் ஆகஸ்ட் 21 (துல்கஅதா 29) மாலையில் பிறை தெரியவில்லை என்று அறிவிப்பு செய்த சவூதி அரசு, “மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்கிறோம் எனவே ஆகஸ்ட் 23 முதல் துல் ஹிஜ்ஜா ஆரம்பமாகிறது” என்று அறிவிப்பு செய்திருந்தால் அது நபிவழி. ஆனால் நபிவழிக்கு மாற்றமாக மீண்டும் மறுநாள் பிறை பார்க்குமாறு சவுதி அரசு மக்களை கேட்டுக்கொண்டது. இதென்ன நாடகம்? பிறை தெரியாவிட்டால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யவேண்டியது தானே.?
பின் வரும் நாடகத்தைப் பாருங்கள்...
//it was verified that tomorrow Wednesday is the first of the month of Dhul-Hijjah according to the Calendar of Umm Al-Qura.//
சரி... 30 நாட்கள் முடிந்து 31ம் இரவிலும் பிறையை தேடினார்கள். (31ம் இரவில் பிறை தேட வேண்டிய எந்த தேவையுமில்லை. இது நபிவழியே அல்ல). பிறை பார்த்ததாக செய்தி அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் என்ன அறிவிப்பு செய்துள்ளார்கள் என்று பாருங்கள். "பிறை பார்க்கப்பட்டது உம்முல் காலண்டர் சரி தான் என்பதை உறுதி படுதியுள்ளதாம்". இந்த ஆதாரம் போதாதா, மக்களே! இவர்கள் காலண்டரைதான் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு?
இவர்கள் காலண்டரில் பிறையைத் தேடினால் காலண்டரின்படி தான் பிறையை அறிவிப்பு செய்தாக வேண்டும். ஏன்?
இவர்களது காலண்டரில் 29இல் முடியும் மாதத்தை இவர்கள் 30ஆக பூர்த்தி செய்தால் அடுத்த மாதம் இவர்களுக்கு கணக்கு இடிக்கும். அடுத்த மாதமும் 29ஆக இவர்கள் காலண்டரில் இருந்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டு மாதா மாதம் பிறை பார்க்கும் நிலைக்கும், காலண்டரை பின்பற்ற முடியாத நிலைக்கும் தள்ளப்படுவார்கள். காலண்டரின் அடிப்படையில் பிறை தேடினால் காலண்டரின் அடிப்படையில் பிறையை அறிவித்தாக வேண்டும். விளக்கமாக...
ஷஅபான் மாதம் 29 முடிந்த உடனே பிறையை தேடுகிறார்கள். அந்த ஷஅபான் இவர்களது காலண்டரில் 29 நாட்களாக உள்ளது. அன்றிரவில் பிறை உண்மையிலேயே தெரியவில்லை. இவர்களும் பிறை தெரியவில்லை என்று மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்வதாக அறிவிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவர்களது காலண்டருக்கும் இவர்களது பிறை அறிவிப்பிற்கும் ஒரு நாள் வித்தியாசம் வந்து விடும். எனில் தொடர்ந்து வரக்கூடிய அடுத்த மாதமான ரமலான், 29 ல் முடியும் போது இவர்கள் காலண்டரில் அது ரமலான் 30 ஆகவோ அல்லது ஷவ்வால் 1 ஆகவோ இருக்கும். அந்த மாதமும் 29ல் பிறை தெரியவில்லை என்றால் இவர்களது காலண்டருக்கும் பிறை அறிவிப்பிற்கும் இரண்டுநாள் வித்தியாசம் ஏற்படும். இவர்கள் துல் கஅதா பிறை தேடுவதில்லை. இந்நிலையில் துல் ஹிஜ்ஜா பிறையை காலண்டரின் அடிப்படையில் தேடும்போது ஷவ்வால் 27 நாட்கள் கொண்டதாக அல்லது 28 நாட்கள் கொண்டதாக அமைந்து விடும். இந்த காரணத்தினாலேயே இவர்கள் காலண்டரின்படி பிறையை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
சில மாதங்களில் சூரியன் மறைந்து அற்ப (1-7) நிமிடங்களில் நிலவு மறைந்தால் இவர்கள் காலண்டரை பின்பற்றுவதில்லை. அது போன்ற மாதங்களில் இவர்கள் காலண்டரை பின்பற்றாமல் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ததுண்டு. அதுவும் அடுத்த மாதம் 30நாட்களாக இருந்தால் மட்டுமே இதை செய்கிறார்கள். அடுத்த மாதமும் 29ஆக இருந்தால், மேலே சொன்ன “நாட்கள் இடிக்கும் பிரச்சனை” வந்துவிடும். இவர்களால் ஒரு நாள் தள்ளிப்போட இயலாது.
உம்முல் குறாவின் அடிப்படையிலேயே பிறை தேடியதும், உம்முல் குரா அடிப்படையிலேயே பிறையை அறிவித்ததும் இவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பையே ஆதாரமாகக் காட்டி நிறுவிவிட்டோம். எனினும் மேலும் சில நேரடி ஆதாரங்களைப் பார்ப்போம்.
அதற்கு முன்னதாக இவர்களின் காலண்டரின் அடிப்படையைப் பார்ப்போம்.
அமாவாசை நடந்த உடனே பழைய மாதம் முடிந்து புது மாதம் பிறக்கிறது என்று சவூதி அறிஞர்களும் ஆய்வாளர்களும் நம்புகிறார்கள். எனினும் இஸ்லாமிய நாள் இரவிலிருந்து துவங்குவதால் பிறை தேடும் இரவில் மக்ரிபிற்குப் பிறகு வானில் நிலவு இருந்தால் அந்த இரவு மாதத்தை துவங்குவதற்கு உகந்த இரவாகவும், பிறை தேடும் நாளில் மக்ரிபிற்குப் பிறகு வானில் நிலவு இல்லை என்றால் அந்த இரவு மாதத்தைத் துவங்குவதற்கு உகந்ததல்ல என்றும் நம்புகிறார்கள்...
சூரியன் மறைவதே மக்ரிப் நேரமாகும். சூரியன் மறையும் நேரத்தை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம். இன்று நமது மொபைல் ஃபோன்களிலேயே இதைப் பார்க்கும் வசதி வந்துவிட்டது. மக்ரிபிற்குப் பிறகு வானில் நிலவு இருக்கிறதா என்பதையும் நாம் நிலவின் உதய மறைவு நேரங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். சூரியன் மறைந்த பிறகு நிலவு மறையவில்லை என்றால் மக்ரிபிற்கு பிறகு வானில் நிலவு இருக்கிறதென்று பொருள். நிலவின் உதய மறைவும், மேலும் அமாவாசை நடக்கும் நேரத்தையும் நாம் ஃபோனிலேயே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக...
ஒரு திங்கள் கிழமை
மாலை 4 மணிக்கு உலகில் எங்கோ அமாவாசை நடக்கிறது,
மக்காவில் 6:15க்கு சூரியன் மறைகிறது மற்றும் 6:20க்கு நிலவு மறைகிறது
உலகில் எங்காவது அமாவாசை நடந்த உடனே பழைய மாதம் முடிந்ததாக சவூதி நம்புகிறது. பின்னர் அந்த இரவில் வானில் நிலவு இருக்கிறதா என்று அறிய வேண்டும். இங்கே 6:15க்கு சூரியன் மறைந்து இரவு துவங்குகிறது. 6:20க்கு தான் நிலவு மறைகிறது. அதவாது அந்த இரவில் 6:15 முதல் 6:20 வரை உள்ள 5 நிமிடங்கள் வானில் நிலவு இருந்துள்ளது. பழைய மாதம் முடிந்த பிறகு புது இரவில் 5 நிமிடங்கள் வானில் நிலவு இருந்துள்ளது. இந்த நிலவை நம்மால் பார்க்க இயலாவிட்டாலும் வானில் நிலவு இருப்பதால் மக்ரிபிலிருந்து துவங்கும் செவ்வாய்க்கிழமை புது மாதத்தின் முதல் நாள். இதுவே சவூதி உம்முல் குறாவில் ஃபார்முலா
மற்றொரு மாதம்...
திங்கட்கிழமை
மாலை 5:30 மணிக்கு  உலகில் எங்கோ அமாவாசை நடக்கிறது,
மக்காவில் 6:15க்கு சூரியன் மறைகிறது மற்றும்  6:10க்கு நிலவு மறைகிறது
இப்போது சூரியன் மறைவதற்கு முன்னரே நிலவு மறைந்து விடுகிறது. அந்த இரவில் வானில் நிலவு இல்லை. எனவே சூரியன் மறைந்த உடன் வரும்  செவ்வாய்க்கிழமை 30ஆக முழுமையடையும்.
இதுதான் உம்முல் குராவின் அளவுகோல். ஆனால் சூரியன் மறைந்து 5 நிமிடத்திலோ 20நிமிடத்திலோ மறையும் நிலவை நாம் கண்களால் பார்க்கவே முடியாது. சூரியன் மறைந்த பிறகு குறைந்தது 48 நிமிடத்திற்கு வானில் நிலவு இருக்க வேண்டும். அவ்வாறு 48நிமிடங்கள் வானில் இருக்கும் நிலவை மட்டுமே கண்களால் பார்க்க இயலும்.
 சூரியன் மறைந்த பிறகு 1 நிமிடம் முதல் 25 நிமிடங்கள் மட்டுமே வானில் நிலவு இருந்தால் அந்தப் பிறையை தொலைநோக்கியால் கூட பார்க்க இயலாது. (X-ray, Infrared கருவிகளால் படம் எடுக்க இயலும்)
 சூரியன் மறைந்த பிறகு 26நி மிடங்கள் முதல் 36 நிமிடங்கள் வரை வானில் நிலவு இருக்குமானால், அந்தப் பிறையை தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க இயலும்.
 சூரியன் மறைந்த பிறகு 36 நிமிடங்கள் முதல் 48 நிமிடங்கள் வரை வானில் நிலவு இருக்குமானால், அந்தப் பிறையை மேகங்கள் எதுவும் இல்லாத நிலையில், புழுதி இல்லாமல் வானம் மிகத் தெளிவாக இருந்தால் கண்ணால் பார்க்க இயலும். (இந்த நேர வரம்பின் ஆரம்ப நேரத்தில் இருக்கும் பகுதிகளில் பைனாகுலர் மூலம் முதலில் நிலவை அடையாளம் கண்டு கொண்ட பிறகே பிறையைப் பார்க்க இயலும்).
 சூரியன் மறைந்த பிறகு 48 நிமிடங்களுக்கு மேல் வானில் நிலவு நீடித்தால் மேகமூட்டம் இல்லாத நிலையில் அப்பிறையைக் கண்களால் காண இயலும்.
மேலே நாம் சொன்னது எல்லா மாதமும் பிறை பார்த்து வருபவர்களுக்குத் தெரியும். இது ரோபோடிக்ஸ் விஞ்ஞானமோ ராக்கட் ஸைன்ஸோ அல்ல. சாதரணமாக மனிதன் உணர்ந்து கொண்டுள்ள விஷயமாகும்.
பின் வரும் வீடியோ நமது முதன்மை ஆதாரமாகும்...
உம்முல் குறாவை சரி செய்ய சவூதி அதிகாரிகளிடம் இங்கிலாந்து முஸ்லிம்களால் கொடுக்கப்படும் வேண்டுகோள். அரபு மொழியில் இருக்கும் வீடியோவில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுத்து வடிவில் கொடுத்துள்ளனர்.
இந்த வீடியோவில் சொல்லப்படுவது சுருக்கமாக.
மனு கொடுப்பவர்: இங்கிலாந்தில் எங்களால் சில மாதங்களில் பல நாட்களுக்கு பிறை பார்க்கவே இயலாது. இந்நிலையில் நாங்கள் சவுதியின் பிறை அறிவிப்பை நாட வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் சவுதியின் பல பிறை அறிவிப்புகள் பிறை காண சாத்தியம் இல்லாத நாட்களில் அமைகின்றன. மேலும் அந்நாட்களில் சவுதிக்கு மேற்கே உள்ள நாடுகளில் பிறை தெரிவதே இல்லை. இது போன்ற தவறான பிறை சாட்சியங்களை களைந்து பிறை அறிவிப்பதில் தாங்கள் வரை முறைகளை நிர்ணயிக்க வேண்டும்
சவூதி அதிகாரியின் பதில்: அல்ஹம்துலில்லாஹ் பிறை பார்க்கும் விஷயத்தில் சவூதி முன்னேறியுள்ளது. சூரியன் மறைவதற்கு முன்னால் நிலவு மறைந்தால் பிறையைப் பார்க்க முடியாதுதான், ஆனால் சூரியன் மறைந்த பிறகு நிலவு மறையும் மாதங்களில் பிறையை பார்த்ததாக யாராவது சாட்சி சொன்னால் அந்த சாட்சியை நம்மால் நிராகரிக்க முடியாது. அவர் உண்மையாகவே பிறை பார்த்துள்ளார்.
மனு கொடுப்பவர்: சூரியன் மறைந்த பிறகு நிலவு மறைந்தாலும் பிறையை பார்க்க முடியாமல் போகிறதே. சூரியன் மறைந்து இரண்டு மூன்று நிமிடங்களில் நிலவு மறைந்தாலும் சாட்சியை ஏற்க முடியுமா?
சவூதி அதிகாரியின் பதில்: இரண்டு மூன்று நிமிடங்களில் நிலவு மறைந்தால் பிறை தெரியாது. ஆனால் 10 – 20 நிமிடங்களுக்கு பிறகு மறையும் நிலவை பார்க்கலாம்
10 – 20 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் நிலவை உலகில் யாருமே பார்த்ததில்லை. பார்க்கவும் இயலாது. இங்கே அதுவல்ல விஷயம். சூரியன் மறைந்த பிறகு நிலவு மறைந்தால் அதுவே மாதத்தை துவங்குவதற்கு போதுமான அளவுகோல் என்று சம்பந்தப்பட்ட அதிகாரியே வாக்குமூலம் அளித்துள்ளார்.
உம்முல் குறா காலண்டரில் பிறை ஒன்றாம் நாளில் பிறை பார்த்ததாக சாட்சி சொல்வதற்காகவே ஒருவர் இருக்கிறார், அப்துல்லா அல் குழைரி.. அந்த தகவல்களையும் இங்கே தந்துள்ளோம்
சவுதியில் பிறை பார்க்கப்படுவதில்லை. உம்முல் குறா காலண்டர் தான் பின்பற்றப்படுகிறது.
அடுத்ததாக உம்முல் காப்பாடு காலண்டர்...
சூரியன் மறைந்த பிறகு நிலவு மறைந்தால் மாதம் பிறந்து விட்டதாக கேரளா ஹிலால் கமிட்டி நம்புகிறது. ஆம்! அதே உம்முல் குறா ஃபார்முலா தான். எனவே இதை நாம் உம்முல் காப்பாடு காலண்டர் என்றழைக்கிறோம்
ஒவ்வொரு வருடமும் பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளில் கேரளாவில் பிறை தெரிந்ததாக தகவல் வந்தன. இதை உறுதி செய்ய திருவனந்த புரத்தை சேர்ந்த சகோ. ஷபீர், ஹிலால் கமிட்டி சேர்மனை 2 வருடங்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
உம்முல் காப்பாடு ஃபார்முலாவை கேரளா ஹிலால் கமிட்டி சேர்மேன் முஹம்மது மதனி ஒப்புக்கொண்ட ஆடியோ இங்கே...
5ம் நிமிடம் 25ம் வினாடியில் மதனி கேட்கிறார்  “22 நிமிடத்திற்கு பிறகே சந்திரன் மறைகிறது. எனில் 2 சாட்சிகள் பிறை பார்த்ததை உறுதிப்படுத்தினால் அந்த பிறையை ஏற்பதில் என்ன தப்பு?”
ஒவ்வொரு முறை கேரளா பிறை அறிவிப்பு செய்யும்போதும் “பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளில் யார் பிறை பார்த்தார்?” என்று கேரளா ஹிலால் கமிட்டியை அணுகி விசாரிக்கிறோம். ஒவ்வொரு முறையும் பிறை பார்த்த நபரின் தகவல்களை நமக்கு  தர மறுத்துவிட்டனர். சென்ற (2017) ரமளானில் பிறை அறிவிப்பு செய்யும் அந்த நபரின் பெயர் மாஸக் கோயா என்பதை நமது சகோதரர் ஒருவர் கண்டுபிடித்தார். இம்முறை எர்ணாகுளத்தை சார்ந்த ஹைத்ரூஸ் ஆதில் எனும் அந்த சகோதரரும் களியக்காவிளையை சார்ந்த கியாஸுதீன் மற்றும் ஷாஜஹான் ஆகிய சகோதரர்களும் கப்பாடு கடற்கரைக்கு சென்று உண்மையை அறிய முற்பட்டனர். அவர்களுடன் இன்னும் பிற சகோதரர்களும் இருந்தனர்.
சூரியன்  மறைவதற்கும் முன்பாகவே நம் சகோதரர்கள் கடற்கரைக்கு சென்றுவிட்டனர். மேக மூட்டத்தின் காரணத்தால் அன்று சூரியன் மறைவதைக் கூட அவர்களால் பார்க்க இயலவில்லை. நிலவு மறையும் நேரம் வரை அவர்கள் அங்கே காத்திருந்தனர். பின்னர் அருகேயுள்ள மஸ்ஜிதில் இருக்கும் காளியிடம் விசாரிக்க சென்றுள்ளனர். அவரோ ஏற்கனவே மாஸக் கோயா பிறையை பார்த்து அறிவித்துவிட்டார் என்றுள்ளார். இவர்கள் பிறை தேடியதையும் மேக மூட்டத்தைப் பற்றி சொன்னபோது, அவர்தான் பல பதினாண்டுகளாக பிறை பார்க்கிறார் என்ற தகவலை கூறியுள்ளனர். அவர்களே இவர்களை மாசக்கோயாவிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
எங்களுக்கு தெரியாத பிறை உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று வினவியபோது சாதாரண கண்களுக்கெல்லாம் தெரிந்துவிடுமா, அதற்கெல்லாம் தனி கண் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
(மலையாளத்தில் பிறையை மாசப்பிறவி என்றழைப்பார்கள். மாசப்பிறவியை அறிவிப்பதே இவர் வேலையாக இருப்பதால் மாசக் கோயா என்றழைக்கப்படுகிறார்)
புலனாய்வு  செய்யச் சென்றவர்களின் நேரடி அறிக்கையை கேளுங்கள்...
சகோ. கியாசுதீன் >>>
சகோ. ஹைதரூஸ் ஆதில் >>>
இந்த தகவல்கள் வாட்ஸ்ஆப்-ல் காட்டுத்தீ போல பரவிய உடனே
மாசக்கோயாவுடன் பிறை பார்த்ததாக சொல்லப்பட்ட இருவரில் ஒருவர் பிறையை யாருமே பார்க்கவில்லை என்று விளக்கி ஒரு ஆடியோ வெளியிட்டார். அவரை நமது சகோதரர் ஹத்ரூஸ் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ...
கோயாவுடன் இருந்த ஒருவர் பிறையை சூரியன் மறைந்த இடத்திற்கு வலது புறமாக பார்த்ததாக சொன்னாராம்.
உடனே அமர்ந்திருந்த கோயாவும் எழுந்து நின்று ஆம் பிறை தெரிகிறது என்று இடது பக்கமாக கையைக் காட்டினாராம்.
ஆனால் ஆடியோவில் பேசும் நபருக்கு பிறை கண்ணுக்குத் தெரியவே இல்லை.
இதற்கு முன்னர் காப்பாடு பிறையை பார்த்து வந்தவர் கோயாவின் தகப்பனார் எனவும், பிறையை பார்ப்பது மாசக்கோயாவின் தார்மீக உரிமையாக மாறிவிட்டதாகவும், பிறையை பார்த்ததாக மாசக்கோயா அறிவிக்கவில்லை என்றால் அவருக்கு அந்த உரிமை பறிபோய்விடும் என்றும் உடன் இருந்தவர் சொல்கிறார்.
"எவனுடைய மனைவி பத்தினியோ அவனுக்கு மட்டுமே கடவுள் கண்ணுக்கு தெரிவார்" என்று சொல்வதைப்போல கோயாவுக்கு பிறை தெரிந்தால் அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலைக்கு கேரள காளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சவுதிக்கு ஒரு அப்துல்லா அல் குழைரி.. கேரளாவுக்கு ஒரு மாஸக் கோயா...
இன்னமும் சவுதி-கேரள பிறைகளை நம்பிக்கைக் கொண்டுள்ளோர் சிந்திக்க வேண்டும்...