அடுத்த அவதூறு கட்டுரை: ததஜ பிறைவாசிகள் 'டபுள் அமாவாசைகளே'..!
கட்டுரையின் துவக்கத்தில் நம்மீதுள்ள வயிற்றெரிச்சலை கொட்டித் தீர்த்துள்ளனர். அதற்கெல்லாம் விடையளிக்க இயலாது
//நாம் இமாம்களின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து ஹிஜ்ரி காலண்டரை விற்கிறோமாம்? கிருஸ்தவ காலண்டரில் ததஜ லேபிள் ஒட்டி வருடந்தோரும் இவர்கள் விற்பனை செய்வதை அறிந்துள்ள பொதுமக்களிடம் இவர்களின் புழுகுமூட்டை எடுபடுமா?//
கிருத்தவ காலண்டரில் அல்லாக் காலண்டர் என லேபல் ஒட்டி இலவசமாக விற்பதுதான் தவறு., ஆங்கிலக் காலண்டரை ஆங்கிலக் காலண்டர் என்று விற்பதில் தவறேதுமில்லை.
// பிறைக்கணக்கீட்டை வலியுறுத்திய இமாம்களின் கூற்றை பதிவிடும்போது இமாம் ஸூப்கி (ரஹ்) என்பதற்கு பதிலாக 'இமாம் இமாம் ஸூப்கி (ரஹ்)' என்று 'இமாம்' என்பதை இரண்டுமுறை எழுதிவிட்டோமாம். டபுள் இமாம் பட்டம் அளித்து சுன்னத் ஜமாஅத்தினரை சுண்டி இழுக்கிறோமாம்.என்ன கிறுக்குத்தனமாக வாதம் பாருங்கள். //
இதுவே உண்மை... “உன்னுடைய கொள்கை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. பெருநாளில் மட்டும் எங்களது திடலுக்கு வந்துவிடு” என்பதே ஹிஜ்ராவின் கொள்கை. மத்ஹபை பின்பற்றுபவருக்கு மத்ஹப் ஆதாரம், குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவருக்கு குர்ஆன் ஹதீஸை திரித்து ஆதாரமாக காட்டுவது. மொத்தத்தில் உங்களுக்கு தேவை உங்கள் காலண்டரை வழிபடுவதற்கான கூட்டம். சுன்னத் ஜமாத்தினரையும் கவர்வதற்காகவே நீங்கள் இமாம்களின் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறீர்கள்.
//மீண்டும் நேற்று 26-05-2017 அன்று வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் பிறை தென்படாததால் ததஜவினருக்கு மீண்டும் ஒரு கும்மவுடைய நாள் கிடைத்துள்ளது. எனவேதான் சனிக்கிழமை அன்று ஷஃபானை 30ஆக பூர்த்தி செய்துள்ளனர். அதாவது டபுள் அமாவாசை//
அமாவாசை என்ற வார்த்தை அல்லது கும்மவுடைய நாள் (யவ்மு கும்ம) என்ற வார்த்தையை குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து காட்டுங்கள். நீங்கள் மனோ இச்சையின்படி உருவாக்கிய மறைக்கப்பட்ட நாள் பூமி முழுவதும் ஒரே நாளல்ல. நீங்கள் மறக்கப்பட்ட நாள் என்று சொல்லும் நாட்களில் பூமியும் மக்கள் பிறையைப் பார்க்கிறார்கள். நீங்கள் ஆஹா ஓகோ என்று புகழும், டாக்டர் பட்டம் பெறாதவரை டாக்டர் என்று அழைத்து பேருவகை அடையும் காலித் ஷவுகத், நீங்கள் அமாவாசை என்று சொன்ன நாளில் முஸ்லிம்கள் உலகில் பிறை பார்த்ததை பதிவு செய்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் நீங்கள் கும்மவுடைய நாள் என்ற நாளில் பிறை பார்த்துள்ளனரே அவர்களுக்கு அதற்கு முந்தய நாள் அமாவாசை நாளா?
டபுள் அமாவாசைகள் யாரென்று இப்போது தெரிகிறது 😃 😄 😁
இஸ்லாத்தில் அமாவாசை நாளுக்கோ உங்கள் பித்அத் தயாரிப்பான கும்மவுடைய நாளுக்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. பிறையை பார்த்தவர் மாதத்தை துவங்குவார். பார்க்காதவர் மாதத்தை 30ஆக முழுமைப்படுத்துவார்.