Monday 17 July 2017

20 நாடுகள் ஹிஜ்ரா காலண்டரை ஏற்று பெருநாளை அறிவித்துள்ளனவா

🌟🌟🌟🌟🌟🌟🌟
*20 நாடுகள் ஹிஜ்ரா காலண்டரை ஏற்று பெருநாளை அறிவித்துள்ளனவா*
🌟🌟🌟🌟🌟🌟🌟
உலகில் என்ன நடந்தாலும் அதை நமது காலண்டருக்கு சாதகமாக மாற்றவேண்டும் என்பதில் குறியாய் இருப்பார்கள் ஹிஜ்ராவினர்.
சென்ற வருடம் *ஹிஜ்ரி காலண்டர் காண்ஃபரன்ஸ்*  என்ற பெயரில் துருக்கியில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. இதை நடத்தியது துருக்கி அரசு. ஆனால் ஹிஜ்ரி எனும் பெயரில் அது நடந்ததால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்தனர் ஹிஜ்ராவினர். *எங்களது ஹிஜ்ரா காலண்டர்தான் சரி என உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது* என்று இணையதளத்தில்  பரப்பி புளங்காகிதம் அடைந்தனர். முழு விபரத்திற்கு பார்க்க. http://www.piraivasi.com/2017/01/1.html  
சவுதி அரசு 2003இல் இறுதி செய்த உம்முல் குராவின் தேதிகளை என்றுமே மாற்றியதில்லை. சென்ற ஹஜ்ஜின் போது பிறை தெரியாததால் ஒரு நாள் ஹஜ்ஜை தள்ளிப்போட்டது சவுதி அரசு. ஆனால் இதற்காக அவர்கள் காலண்டரை மாற்றவில்லை. ஆனால் ஹிஜ்ராக்களோ *ஹிஜ்ரா காலண்டரை பார்த்து தங்கள் தேதியை சவுதி அரசு ரகசியமாக மாற்றியதாக* பரப்புரை செய்தனர். பார்க்க http://www.piraivasi.com/2017/01/4.html
இம்முறையும் (2017 ரமளான்) *காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாய்* ஹிஜ்ரா காலண்டரை ஏற்றுக்கொண்டு 20 நாடுகள் பெருநாளை ஏற்கனவே அறிவித்துவிட்டதாக இவர்கள் சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இவர்களை பின்பற்றும் பாமர மக்களும் உண்மை என்னவாக இருக்கும் என்று சற்றும் சிந்திக்காமல் இவற்றை பகிர்ந்து மகிழ்ச்சியடைகின்றனர். பரப்புவதற்கு முன்னால் தங்கள் தலைவர்கள் ஆதாரமாக காட்டும் மூன் சைட்டிங் டாட் காம் இணைய தளத்தை ஒரு முறையேனும் திறந்து பார்த்து, *நம் தலைவர்கள் உண்மையை சொல்கிறார்களா? சரிபார்க்கலாமே என்று இவர்களுக்கு தோன்றவில்லை. இதுதான் தக்லீதின் உச்சக்கட்டம்.*
அவர்கள் பரப்பிய கட்டுரை:
======================================================================================================
*அஸ்தமனத்தை நோக்கி சவுதிப்பிறை..!*
*20 க்கும் மேற்பட்ட நாடுகள் ஞாயிற்றுக் கிழமை நோன்புப் பெருநாள் என அறிவிப்பு..!!*
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹிஜ்ரி 1438 இன் ரமழான் மாத இறுதிப் பிறையான *'உர்ஜூஃனில் கதீம்'* பிறையை  இன்று ரமழான் 29 வெள்ளிக்கிழமை (ஜூன் 23) ஃபஜ்ரில் பார்த்தோம். நாளை ரமழான் 30 சனிக்கிழமை (ஜூன் 24) அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் அமாவாசை எனும் புவிமைய சங்கமதினம். ரமழான் இறுதி நாள்.
*எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஜூன் 25 அன்றுதான் ஷவ்வால்-1 நோன்புப் பெருநாள் தினம்.* ஹிஜ்ரி காலண்டரின் அடிப்படையில் ரமழான் மாதத்தின் அனைத்து பிறைகளையும் துல்லியமாகக் கவனித்தும், கணக்கிட்டும் வந்ததின் அடிப்படையில் இதைக் கூறுகிறோம்.
இவ்வாண்டு எகிப்து, துனிஷியா, துருக்கி உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் பிறை கணக்கீட்டை ஏற்றுக்கொண்டு *ஜூன் 25 ஞாயிற்றுக் கிழமைதான் நோன்புப் பெருநாள்* என்று அறிவித்தும் விட்டார்கள்.
மேலும் *Australian National Imams Council, -  Fiqh Council of North America (FCNA), -  Islamic Society of North America (ISNA)*  போன்ற அமைப்புகளிலுள்ள மார்க்க அறிஞர்களும் பிறை கணக்கீட்டை சரிகண்டு ஜூன் 25 ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் ஷவ்வால்-1 நோன்புப் பெருநாள் தினம் என்று அறிவித்துள்ளனர். இன்னும் பஹ்ரைன் உட்பட சில அரபு நாடுகளிலுள்ள விண்ணியல் துறை அறிஞர்களும் இதை சரிகண்டுள்ளனர்.
தற்போதுவரை *Angola, Australia, Bosnia and Hercegovina, Canada, Croatia, Egypt, Germany, Ireland, Kosovo, Luxembourg, Macedonia, Montenegro, Poland, Serbia, Slovania, Tunisia, Turkey, USA* ஆகிய நாடுகளும் பிறைக் கணக்கீட்டின்படி ஞாயிற்றுக் கிழமைதான் பெருநாள் என்று முற்கூட்டியே அறிவித்து விட்டன. (நன்றி : Moonsighting.com)  மாறாக சவுதி அரேபியாவின் பிறை அறிவிப்புக்காக இந்நாடுகள் காத்திருக்கவில்லை.
*தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை, சவுதிதேசப்பிறை போன்ற நிலைபாடுகள் அஸ்தமனத்தை நோக்கி நகர்வதையே இது காட்டுகிறது.*
குர்ஆன் சுன்னா ஆதாரங்களை முன்வைத்து பிறைகளை கணக்கிட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ததற்காக ஹிஜ்ரி கமிட்டியினரை யூதர்கள், மஜூஸிகள், ஷியாக்கள் என்று வரம்பை மீறி விமர்சித்த நமதூர் முல்லாக்களின் கவனத்திற்கு இத்தகவலை கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்.
துல்லியமான சந்திரக் கணக்கீட்டை சரிகண்டு, ஜூன் 25 ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் ஷவ்வால்-1 நோன்புப் பெருநாள் தினம் என்று அறிவித்துள்ள மேற்படி நாடுகளிலுள்ள அறிஞர்களும், அன்று நோன்புப் பொருநாளை கொண்டாட இருக்கும் கோடான கோடி முஸ்லிம்களும் யூதர்களாகி விட்டனரா? அவர்களும் மஜூஸிகள்தானா? என்றும் கேளுங்கள். *ஹிஜ்ரி காலண்டரை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதையும் மறக்காமல் அவர்களுக்கு சொல்லி விடுங்கள்.*
Date : 29-Ramadan-1438 / 23-06-2017
======================================================================================================
இவர்கள் பட்டியலிட்ட நாடுகள் அனைத்தும் ஏற்கனவே சந்திர கணிப்பின்படிதான் நோன்பையும் பெருநாட்களையும் அறிவிக்கின்றனர். இது இவர்கள் ஆதாரமாக காட்டிய மூன் சைட்டிங் தளத்திலேயே உள்ளது பார்க்க http://www.moonsighting.com/calculation-or-sighting.html . சுருக்கமாக இதன் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளோம்
===============================================
சவுதியின் உம்முல் குறா கணக்கின்படி (அமாவாசை நடக்கும் நாளில் சூரியன் மறைவதற்கு முன்னால் அமாவாசை நடந்து சூரியன் மறைந்த பின்னால் நிலவு மறைந்தால்) பெருநாளை அறிவிக்கும் நாடுகள் = (Saudi Arabia, Afghanistan, Albania, Algeria, Armenia, Austria, Azerbaijan, Bahrain, Belgium, Bolivia, Bulgaria, Chechnia, Denmark, Finland, Georgia, Hungary, Iceland, Iraq (Sunnis Follow Saudi), Italy, Jordan, Kazakhstan, Kuwait, Kyrgizstan, Lebanon, Mauritania, Norway, Palestine, Philippines, Qatar, Romania, Russia, Spain, Sudan, Sweden, Switzerland, Syria, Taiwan, Tajikistan, Tatarstan, Turkmenistan, U.A.E., Uzbekistan,
*மற்றும் JAQH* )
துருக்கி  கணக்கின்படி (சூரியன் மறையும்போது சூரியனிலிருந்து 8 டிகிரி நிலவு விலகியிருந்து அடிவானத்திலிருந்து 5 டிகிரி உயரத்தில் இருந்தால்) பெருநாளை அறிவிக்கும் நாடுகள் = (Turkey , Angola, Bosnia and Hercegovina, Croatia, Kosovo, Macedonia, Montenegro, Serbia, Slovania, Tunisia)
இன்னபிற கணிப்பு முறைகளை பின்பற்றும் நாடுகள் = (Algeria,China, Egypt, France, Ireland, Libya Luxembourg, Maldives, Poland, Thailand)
பிறையை பார்த்து பெருநாள் கொண்டாடும் நாடுகள் = (Australia, Bangladesh, Barbados, Brunei, Chile, Fiji Islands, Guyana, India, Indonesia, Iran, Kenya, Madagascer, Malawi, Malaysia, Mauritius, Morocco, Mozambique, Namibia, Niger, Oman, Pakistan, Panama, South Africa, Sri Lanka, Tanzania, Trinidad & Tobago, Yemen, Zambia, Zimbabwe)
சவூதி காலண்டர், பிறை பார்த்தல், என பல பல குழுக்கழாக பெருநாள் நடைபெறும் நாடுகள்: Canada, USA,
===============================================
ஆக, ஏற்கனவே பல நாடுகள் காலண்டரைப் பார்த்துதான் பெருநாளை அறிவிக்கின்றன. இந்த பட்டியலில் இல்லாத மற்றொரு தகவல்:- மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, புரூனே உட்பட அனைத்து கிழகத்திய நாடுகளும் காலண்டருக்குத் தாவி பலவருடங்கள் ஆகின்றன. இம்முறை இக்கூட்டணியில் ஆஸ்திரேலிய இமாம்கள் கவுன்சிலும் இணைந்துள்ளது, இத்தனை விதமான காலண்டர்கள் உலகில் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் ஒன்றுகூட *லண்டன் நேரத்தில் அமாவாசை நடக்கும் நாளின் மறுநாள் முதல் பிறை* எனும் இவர்களின் கணிப்பை பின்பற்றவில்லை.
*பின்னர் எப்படி இந்த 20 நாடுகளும் ஹிஜ்ரா கமிட்டியின் பெருநாள் தேதியிலேயே அவர்களும் பெருநாளை அறிவித்தனர். என்று நீங்கள் வினவலாம்*
உலகில் இருக்கும் எல்லா காலண்டர்களிலும் வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் தேதிகள் ஒன்றாக வரும். உதாரணமாக இந்த (1438ம்) வருடம் தமிழ்நாட்டில் ஸஃபர், ரபியுல் அவ்வல் ஆகிய மாதங்களின் தேதிகள் ஆங்கில காலண்டரின் நவம்பர் டிசம்பர் மாத தேதிகளுடன் ஒத்துப்போயின. இதனால் கிருத்தவர்கள் இஸ்லாமிய நாட்காட்டிக்கு மாறிவிட்டதாக அர்த்தமா? சிந்திக்க வேண்டாமா சகோதரர்களே?
சூரிய நாட்காட்டியில் முதல் தேதியும் பிறை நாட்காட்டியின் முதல் தேதியும் என்றாவது ஒரு நாள் ஒத்துப்போகும்போது பல்வேறு அளவீடுகளை கொண்டிருந்தாலும் சந்திரன் என்ற அடிப்படையில் வேலைசெய்யும் நாட்காட்டிகள் ஒரு நாள் ஒத்துபோவதில் ஆச்சரியம் இல்லை. அந்த அடிப்படியில் இவ்வருட ஷவ்வால் முதல் தேதி மேற்சொன்ன பல காலண்டர்களில் ஜூன் 25ம் தேதியாக அமைந்தது. இதைதான் ஹிஜ்ராவினர் கொண்டாடுகிறார்கள்.
இதை பரப்பும் ஹிஜ்ரா சகோதரர்கள் மற்றொன்றையும் சிந்திக்கவே இல்லை. நோன்பு பெருநாள் (ஷவ்வால் 1) ஒத்துப்போனது இருக்கட்டும், உங்களைத் தவிர உலகில் யாராவது மே 26 வெள்ளிக்கிழமை நோன்பை துவங்கினார்களா? உலகிலேயே மே 26 வெள்ளிகிழமை நோன்பு நோற்ற சமூகம் நீங்கள் மட்டுமே. இந்த தகவலும் உங்கள் தலைவர்கள் ஆதாரமாக காட்டிய தளத்தில் தான் உள்ளது. பார்க்க http://www.moonsighting.com/1438rmd.html . வெள்ளிகிழமையில் நோன்பை துவங்கியதற்காக ஹிஜ்ரா பிரச்சாரகர்கள் சொன்னகாரணங்கள் எங்களுக்கு இவ்வருடம் ரமளானின் 5 வெள்ளிகிழமைகள் கிடைக்கும் உங்களுக்கு 4 தான் கிடைக்கும். எங்களுக்கு 30 நோன்புகள் கிடைக்கும், உங்களுக்கு 29தான் கிடைக்கும்.
மார்க்க அடிப்படை தெரியாமல்தான் ஹிஜ்ராவினர் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று.

ஏற்கனவே ஆளுக்காள் ஒரு காலண்டரை வைத்துள்ளனர். இதில் இவர்கள் மட்டுமே வைத்திருக்கும் அமாவாசை காலண்டருடன் ஒரு மாதத்தில் ஒரு தேதி ஒத்துப்போனதை வைத்துக்கொண்டு *உலகமே எங்கள் காலண்டரை பின்பற்றுகிறது* என்று பரப்புரை செய்கின்றனர்