ஹிஜ்ராக் கமிட்டி, யூத காலண்டரைக் காப்பியடித்ததை ஏற்கனவே நிறுவியிருந்தோம், பார்க்க. http://www.piraivasi.com/2015/10/17-3.html
ஆங்கிலக் காலண்டரில் அமாவாசை நேரத்தைப் பூசி அதன் மேல் அரபு மாதங்கள் பூசப்பட்டதுதான் ஹிஜ்ராக் காலண்டர் என்பதையும் நிறுவியிருந்தோம், பார்க்க. http://www.piraivasi.com/2015/11/25.html | http://www.piraivasi.com/2015/10/17.html
இவ்வாறு யூத வலையிலும், ஒரே நாளில் கிருத்துமஸ் கொண்டாடுவதைப் போல ஒரே நாளில் பெருநாள் கொண்டாடவேண்டும் எனும் ஆங்கிலக் காலண்டர் மோகத்திலும் விழுந்த ஹிஜ்ராக் கமிட்டி, தங்கள் யூத காலண்டரை நிலைநாட்டுவதற்காக சொல்லும் மற்றொரு பொய் *“சிலுவைப் போரில் இஸ்லாமிய நாட்காட்டி அழிக்கப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் தேதிகள் மாற்றப்பட்டன”* என்பதாகும். இவற்றிற்கு கற்பனையை தவிர எந்த ஆதாரமும் இந்த ஹிஜ்ராவினரிடம் இல்லை.
ஃப்ரெட் எஸ்பினாக் பின்னே 4000 வருடத்திற்கும் முன்னே 2000 வருடத்திற்கும் அமாவாசை நேரங்களை வெளியிட்டாலும் வெளியிட்டார், ஹிஜ்ராவினர் அந்த தேதிகளுக்கு ஒப்ப வரலாற்றை மாற்ற படாத பாடுபடுகிறார்கள். ஃப்ரெட் எஸ்பினாக் கணக்குப்படி ஹிஜ்ரி முதல் வருடத்தின் முதல் நாளுக்கு முன்னர் நடந்த அமாவாசை சர்வதேச நேரப்படி கிபி 622-7-14 புதன் கிழமை. எனவே இவர்கள் கணக்குப்படி அதன் மறுநாள் 622-7-15 வியாழக்கிழமை முஹர்ரம் 1 ம் தேதியாக இருக்கவேண்டும். இதை நிறுவத்தான் இத்தனை போராட்டம். எப்படி போராடுகிறார்கள் என்று பார்ப்போம்.
page 151
page 152
ஹிஜ்ராவினர் ஆதாரம் என்று காட்டுவது மேலிருக்கும் இரண்டு படங்களைத்தான். இவை Gerhard Endress என்பார் எழுதிய Islam - An Historical Introduction புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளை இவர்கள் ஆய்வு செய்தார்களா? கண்ணை மூடி ஏற்றுக்கொள்ள இது என்ன இறைவேதமா? ஹதீஸ்களை சம்பவங்களாக மாற்றும் இந்த மார்க்க திருடர்கள் இதை எப்படி கண்மூடி நம்புகிறார்கள்? இவர்களுக்கு சாதகமாக இருந்தால் எந்த குப்பையையும் தலையில் எடுத்துவைப்பார்கள், எந்த கிறுக்கன் உளறியதையும் வேதம் என்பார்கள்.
இவர்களின் ஆதாரங்களை ஆய்வு செய்வோம்.
151 ம் பக்கத்தில்: - ஹிஜ்ரி 1 ம் வருடம் முஹர்ரம் முதல் தேதி வியாழன், கிபி 622 ஜூலை 15 என்று பைரூணி தனது புத்தகத்தில் எழுதியுள்ளாராம்.
152ம் பக்கத்தில்: - வானியல் கணக்கின்படி ஹிஜ்ரி 1 ம் வருடம் முஹர்ரம் முதல் தேதி வியாழன், கிபி 622 ஜூலை 15ம் தேதியாம். பின்னர் உதுமானிய பேரரசின் காலத்தில் இந்த தேதியை ஜூலை 16 என்று மாற்றிவிட்டார்களாம்.
முதலில் பைரூணி இவ்வாறு எழுதியுள்ளாரா என்று ஆய்வு செய்வோம்.
அல் பைரூணி அவர்கள் அரபு மொழியில் எழுதிய کتاب الآثار الباقية عن القرون الخالية எனும் புத்தகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு கீழே. இதைதான் Gerhard Endress மேற்கோள் காட்டுகிறார்.
இதன் தமிழாக்கம்:
*“நீங்கள் எங்களுக்கு தேதிகள் இடாமல் கடிதங்களை அனுப்புகிறீர்கள்” என்று அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) உமர் பின் கத்தாப் ரலி அவர்களுக்கு (கடிதம்) எழுதினார்கள். உமர் (ரலி) ஏற்கனவே பதிவுப்புத்தகங்களை ஒழுங்குபடுதியிருந்தார்கள், மேலும் வரி மற்றும் (சட்டக்) கட்டுப்பாடுகளை நிர்மானித்துவிட்டு பழைய முறைகளை போலல்லாமல் (தேதிகளைக் குறிப்பிட) ஒரு புதிய ஆண்டுமானத்தின் தேவையுடன் இருந்தார். (அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களின் கடிதம் வந்த) சம்பவத்துடனே சஹாபாக்களை கூட்டி ஆலோசனை கேட்டார்கள். அப்போது மிக ஆதாரப்பூர்வமான தேதியாக, ஐயமற்ற, தெளிவான, பிழையில்லா தேதியாக தெரிந்தது நபிகளார் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்தடைந்த திங்கள்கிழமை ரபியுல் அவ்வல் 8 மட்டுமே. அந்த வருடத்தின் முதல் நாள் வியாழனாக இருந்தது. இப்போது இதையே ஆண்டுமானமாக அவர் முடிவு செய்து, அவருடைய எல்லா தொடர்புகளிலும் தேதிகளை குறித்தார். இது ஹிஜ்ரி 17 இல் நடந்தது.*
இந்த பக்கத்தில் ஹிஜ்ரி 1.1.1 வியாழன் என்று வந்துள்ளதாக Gerhard Endress சொல்கிறார். ஆனால் அதே புத்தகத்தின் 327 & 328 ஆம் பக்கங்களை தந்துள்ளோம். ஹிஜ்ரி 1.1.1 வெள்ளி என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கீழே பார்க்க.
Page # 328
Page # 327
மேலும், இதை எப்படி கணக்கிட வேண்டும் என்று விளக்கும் பைரூணி , பக்கம் 176 இல் அதை கணக்கிட்டே காட்டியுள்ளார். அதிலும் தெளிவாக ஹிஜ்ரி 1 முஹர்ரம் 1 வெள்ளி என்று எழுதியுள்ளார். கீழே பார்க்க.
Page # 176-177
அவ்வாறெனில் புத்தகத்தின் அதிகமான இடங்களில் வெள்ளி என்றும் ஓரிடத்தில் வியாழன் என்றும் ஏன் எழுதியுள்ளார். நாம் காட்டியுள்ள மூன்று பக்கங்களிலும் ஹிஜ்ரி முதலாம் ஆண்டு முஹர்ரம் முதல் தேதி வெள்ளி என்று தெளிவாக உள்ளது. அவர்கள் காட்டிய 34 ஆம் பக்கத்தில் “அந்த வருடத்தின் முதல் நாள் வியாழன்” என்று உள்ளது. இந்த மொழிப்பண்டிதர்கள் அதை ஹிஜ்ரி முதல் வருடத்தின் முதல் நாள் என்று எண்ணி விட்டார்கள். உமர் ரலி தொடர்பான இந்த சம்பவம் நடந்தது ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில், அந்த (ஹிஜ்ரி 17ஆம்) வருடத்தின் முதல் நாள் வியாழன் என்று எழுதியுள்ளார் பைரூணி . அது உங்களுக்கு விளங்கவில்லையே ஹிஜ்ரா அறிஞர்களே. உங்கள் அரபி ஞானத்தையும் ஆங்கில மொழி அறிவையும் கண்டு உலகமே வியக்கிறது.
குறிப்பு: அரபு மூலத்தில் தெளிவாக பைரூணி இது நடந்த ஹிஜ்ரி 17 ம் ஆண்டின் முதல் நாள் வியாழன் என்று எழுதியுள்ளார். அல்பைரூணியின் அரபு கையெழுத்து பிரதியில் வாக்கியங்களைப் பிரிக்க முற்றுப்புள்ளி ஏதும் இடம்பெறவில்லை. அதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த C. Edward Sachau இடையே புள்ளிவைக்காமல் தொடர்ந்து மொழிப்பெயர்த்ததால் இந்த ஹிஜ்ராவினர் கண்களுக்கு அது ஹிஜ்ரி முதல் வருடத்தின் முதல் நாள் என்று தெரிந்துவிட்டது. மொழிப்பெயர்ப்பை நம்பி வாழும் ஹிஜ்ராவினருக்கு இது ஒரு விஷயமல்ல.
அடுத்ததாக உதுமானிய பேரரசைப் பற்றி பார்ப்போம்.
உதுமானிய பேரரசு கிபி 1300ல் உருவாகியது. கிபி 973 இல் பிறந்து கிபி 1048 இல் இறந்தவர் பைரூணி . பைரூணியின் காலகட்டத்தில்தான் பின்னோக்கி அமாவாசையை கணக்கிட்டு அதை பதிவு செய்துள்ளனர். அதற்கு முந்தய காலங்களில் பின்னோக்கி கணக்கிடும் இத்தகைய வானியல் கணக்குகள் பதிவு செய்யப்படவில்லை. ஹிஜ்ரி முதல் வருடத்தின் முதல் நாள் வெள்ளி என்று பைரூணி தெளிவாக பதிவு செய்துள்ளார். அதை யாருமே வியாழன் என்று மாற்றவில்லை. எனில் 1300இல் அது வியாழனாக இருந்தததாகவும் அதை உதுமாநியர்கள் வெள்ளியாக மாற்றினார்கள் என்பதும் அர்த்தமற்ற வாதம். வெள்ளியாக இருப்பதை மீண்டும் வெள்ளியாக மாற்றவேண்டுமா? இதை யார் சொன்னாலும் அதை மனித அறிவு ஏற்காது. ஆனால் ஹிஜ்ராவினருக்கு இத்தகைய குப்பைகளே போதும்.
அல் பைரூணியின் புத்தகத்தில் ஹிஜ்ராவினர் விளையாடியதை இதில் விளக்கியுள்ளோம் http://www.piraivasi.com/2015/11/29.html
இனி Gerhard Endress எழுதிய புத்தகத்தில் இவர்கள் செய்த இருட்டடிப்பைப் பார்ப்போம்.
151ம் பக்கத்தின் ஒரு பகுதியை காட்டிவிட்டு பின்னர் வருபவற்றை மறைத்துவிட்டனர் ஹிஜ்ரா அறிஞர்கள். நாம் மேலே காட்டியுள்ள இந்த பகுதியில் இந்த புத்தக ஆசிரியர் கூட என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறுகிறார்.
தமிழாக்கம்:
*இஸ்லாமிய வருடம் சந்திர வருடமாகும். அதன் அடிப்படை அலகு முதன் முதலில் கண்ணுக்கு தெரியும் தலைப்பிறையில் தொடங்கி அடுத்த தலைப்பிறை வரையிலுள்ள மாதம் என்பதாகும். ஆனால் இடைக்கால வானியல் ஆய்வாளர்கள் மாதத்துவக்கத்தை அமாவாசையிலிருந்து கணக்கிட்டார்கள். சூரியனும் பூமியும் சந்திரனும் நேர்கோட்டில் வரும் அந்த புவிமைய சந்திப்பை கணக்கில் எடுத்தார்கள். அப்போது பிறை கண்ணுக்கு தெரியாது. இதைபோல (அமாவாசையைக்கொண்டே) ஆண்டுமானங்களின் துவக்கத்தையும் அவர்கள் கணக்கிட்டார்கள். எனவே ஆண்டுமானங்கள் (உண்மையான நாளை விட) ஒரு நாள் முன்னதாக கணக்கிடப்பட்டது. (ஒரு சம்பவம் நடந்த) வாரநாள் தெரிந்தால் மட்டுமே இஸ்லாமிய தேதிகளை ஆங்கில காலண்டர் தேதிகளாக துல்லியமாக மாற்ற இயலும். அநேக விஷயங்களுக்கு வரலாற்று ஆய்வாளார்கள் பிறை கண்ணுக்கு தெரிந்த நாளையே கணக்கிலெடுக்கவேண்டியுள்ளது. மேலும் சூரிய மறைவிலிருந்து நாள் துவங்கி அடுத்த சூரிய மறைவில் நாள் முடிகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.*
என்று Gerhard Endress மிக தெளிவாக எழுதியுள்ளார். பின்னர் 152 ம் பக்கத்திலும் உதுமானிய பேரரசில் என்ன மாற்றப்பட்டது என்பதையும் எழுதியுள்ளார்.
```Because of a slight shift in the real phases of the moon vis-a-vis the moon calendar the starting-point of calculation was changed in the Ottoman period from the 15th to the 16th July. In cases of doubt, only information on the day of the week, as already mentioned, can provide the answer.```
தமிழாக்கம்:
*(கண்ணுக்கு தெரியும்) உண்மையான பிறைக்கும் சந்திர காலண்டரில் இருக்கும் (அமாவாசை தேதிக்கும்) இடையே சிறு வித்தியாசம் இருப்பதால், உதுமானிய பேரரசின் காலத்தில் ஆண்டுமானங்களை கணக்கிடும் தேதி (அமாவாசை தேதியான) ஜூலை 15 இலிருந்து (பிறை தேதியான) ஜூலை 16 க்கு மாற்றப்பட்டது. (தேதிகளில்) சந்தேகம் எழுந்தால் ஏற்கனவே (பக்கம் 151 இல் சொன்னது போல) (சம்பவம் நடந்த) வார நாள் தெரிந்திருந்தால் மட்டுமே தேதிகளை துல்லியமாக கணக்கிட இயலும்.*
இடைக்கால வானியல் ஆய்வாளர்கள் அமாவாசையை எடுத்து ஆண்டுமானத்தை கணக்கிட்டார்கள். இது தவறு தலைப்பிறையைத்தான் எடுக்கவேண்டும் என்று 151ம் பக்கத்தில் சொன்னார். பின்னர், உதுமானிய பேரரசில், இந்த தவறு சரிசெய்யப்பட்டு, கண்ணுக்கு பிறை தெரியும் கணக்கை எடுத்து மிகச் சரியாக ஜூலை 16 வெள்ளிதான் ஹிஜ்ரி முதல் நாள் என்று சரி செய்யப்பட்டதாக 152ம் பக்கத்தில் எழுதியுள்ளார். கணக்கீட்டில் சந்தேகம் வந்தால் சம்பவம் நடந்த வாரநாளைக் கொண்டே சரிபார்க்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
இவ்வாறு உண்மையை மறைத்து பொய்யை பரப்புபவர்களே இந்த ஹிஜ்ரா கமிட்டிக்காரர்கள். இவர்கள் பைரூணி புத்தகத்தின் உண்மையை மறைத்தனர். பின்னர் இந்த ஜெர்மன் எழுத்தாளரின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை மறைத்தனர்.
மேலே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதைப்போல் எந்த ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சியின் தேதியையும் பின்னோக்கி கணக்கிடவேண்டுமெனில் அந்த நிகழ்ச்சி நடந்த வாரநாள் (கிழமை) தெரிந்திருக்கவேண்டும். இல்லையேல் அதை சரியாக கணக்கிட இயலாது. அத்தகைய ஒரு நிகழ்வுதான் நபிகளாரின் ஹஜ். நபிகளாரின் ஹஜ் எந்த வாரநாளில் அமைந்தது என்பது ஹதீஸ்களில் ஐயமின்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த நாளின் தேதி ஹிஜ்ரி 10 துல் ஹஜ் 9 என்பதும் வெள்ளிடைமலையாய் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஹிஜ்ரி 10 துல் ஹஜ் 9 வெள்ளிகிழமையாக இருந்தால் ஹிஜ்ரா அறிஞர்களின் பித்தலாட்டங்கள் அனைத்தும் உடைந்துவிடும். எனவே வெள்ளிக் கிழமையில் அமைந்த நபிகளாரின் ஹஜ்ஜை வியாழனாக மாற்றுவதற்குஹிஜ்ரா கமிட்டி சதி செய்தது. அல்லாஹ்வின் மாபெரும் அருளால் அந்த சதி முறியடிக்கப்பட்டது பார்க்க http://www.piraivasi.com/2015/11/29.html