Thursday, 29 September 2016

பத்தொன்பது பொருத்தம்


பத்தொன்பது பொருத்தம் (Part -1)

பத்தொன்பது கூட்டத்திற்கும் காலண்டர் கூட்டத்திற்குமான ஒற்றுமையை ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
அதற்கு முன்பாக 19 கூட்டம் என்றால் யாரென்று முதலில் பார்ப்போம்.
(கம்ப்யூட்டர் மக்களிடையே புழக்கத்திற்கு வந்திருந்த நேரம் அது).
**எகிப்தில் பிறந்து அமெரிக்காவில் பணிபுரிந்த ரசாத் கலீபா என்பார் தன்னை இறைவனின் தூதர் என்றார்**
அதற்கு அவர்காட்டிய வசனம். . .
 [36:3] Most assuredly, you (Rashad) are one of the messengers.
 (36:3). (ரசாதே) நீர் தூதர்களில் ஒருவராவீர்.
**19 என்ற கட்டமைப்பில் குர்ஆன் இருக்கிறது என்றார்**
அதற்கு அவர் காட்டிய வசனம்
 [74:30] Over it is nineteen.
(74:30) அதன் மேல் பத்தொன்பது இருக்கிறது.
இந்த உண்மை தனக்கு தெரிந்ததால் தன்னை தூதர் என்றழைப்பதாகவும் கூறினார்.
 (27:82) அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.
பூமியிலிருந்து ஓர் உயிரிணம் தோன்றி வசனங்களை உண்மை படுத்தும் என்பதை படித்த ரசாத் கலீபா. , பூமிக்கு உள்ளேயிருந்து எந்த உயிரிணமும் வரமுடியாது. ஏனெனில் பூமிக்குள் கடும் வெப்பம் இருக்கிறது மேலும்,**இது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை** ஆதலால் பூமிக்குள்ளிருந்து கிடைக்கும் உலோகத்தால் செய்யப்பட்ட கம்யூட்டர்தான் அந்த உயிரிணம் என்றார்.
குர்ஆன் வார்த்தைகளை கம்ப்யூட்டருக்குள் செலுத்தி 19 என்ற கட்டமைப்பில் குர்ஆன் இருப்பதை Quranic code மூலம் நிரூபித்தாராம்.
ஸஹாபாக்களும் கேட்காத. . இன்று வரை எந்த முஸ்லிமும் கேட்காத குர்ஆனின் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் வரும் எழுத்துக்கள் (உதாரணம் : அலிப். ,லாம்,மீம்: யா. ,ஸீன் ) பற்றிய மர்மத்தை கம்ப்யூட்டர் அறிவித்ததாகவும் தெரிவித்தார்.
19 தொடர்பான செய்திகள் மேற்கு மற்றும் அரபுலகில் தாக்கம் ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் மூலம் கிடைத்த விடைகளை கொண்டு அவர் பல ஆலிம்களை ஓடவிட்டார்.
கம்ப்யூட்டர் மூலம் 5000 வருடங்களுக்கு சந்திர காலண்டர் போட்டிருக்கும் கமிட்டியை கண்டு முல்லாக்கள் ஓடுகிறார்கள் என கமிட்டி கூவுயதே அது போல.
மார்க்கம் மற்றும் கம்ப்யூட்டர் அறிந்த சமுதாயத்தின் மூலம் 19 களின் கொட்டம் முடிவுக்கு வந்தது.
மார்க்கம் மற்றும் விஞ்ஞானத்தை அறிந்த ஏக இறைவனை மட்டும் வணங்கும் மனிதர்கள் விஞ்ஞானக்காலண்டரை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை போல.
இன்ஷா அல்லாஹ் வீட்டிற்கு அனுப்புவோம்.

பத்தொன்பது பொருத்தம் (Part -2)

பத்தொன்பது கூட்டம் மற்றும் காலண்டர் கூட்டத்தின் பொருத்தங்களை பார்ப்போம்.
1966 ம் வருடம் சந்திரனின் 5000 ம் சூரிய வருடத்திற்கான கணக்கு முதன் முதலாக கம்ப்யூட்டர் மூலம் கணக்கிடப்பட்டது. (ஆனால் இது பிரபலம் அடைந்தது Mr. Eclipse என்று அழைக்கப்பட்ட Fred என்பவரின் 1986 ம் ஆண்டு கிரகணம் பற்றிய புத்தகத்தால்தான்) (இப்பதான் தெரியுது நாங்கள் 30 ஆண்டுகளாக வானத்தை பார்த்து காலண்டர் போட்டிருக்கிறோம் என்று கமிட்டி சொல்வது 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த Fred அவர்களின் புத்தகத்தை வைத்துதானா?)
1973 ம் வருடம் குர்ஆனின் 19 என்ற கட்டமைப்பு கம்ப்யூட்டர் மூலம் கணக்கிடப்பட்டது.
மேற்கூறப்படட்ட இரண்டு நிகழ்வுகளும் கம்ப்யூட்டர் மூலமே கணக்கிடப்பட்டது.
கம்ப்யூட்டர் இல்லையென்றால் இந்த இரண்டிற்கும் வேலையேயில்லை. (கமிட்டி ஆளுங்களும் காலண்டர் யாவாரத்தை தொடங்கியிருக்கவே முடியாது)
*குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் உயிரிணம் கம்ப்யூட்டர்தான்* என்ற ரசாதின் கூற்றும், கண்ணால் பார்த்தலை தவிர உம்மி பெருமானார் பிறை அறிய வேறு வாய்ப்பில்லை ஆகவே கம்ப்யூட்டர் மூலம் கணக்கிட்ட நாம் உம்மி சமுதாயம் இல்லை என்று கூறும் கமிட்டியின் கூற்றும் நன்றாகவே பொருந்துகிறது.
குர்ஆனில் இருக்கும் மொத்த அத்தியாயங்கள் 114. இவைகளை 19 ஆல் வகுத்தால் வரக்கூடிய விடை மீதியின்றி ஒரு முழு எண்ணாக இருக்கும். ரசாத் கலீபாவிற்கு கம்ப்யூட்டர் சிவகாமி கூறிய முதலாம் அற்புதம் இது.
114 ÷ 19 =6
மீதியின்றி ஆறு என்ற முழு எண் வந்துள்ளது. இது ஒரு மாபெரும் அற்புதமாம்.
சந்திரன் தன் சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் சராசரி 29. 53 நாட்கள் என்ற முழு எண் அல்லாத குறை மாத சுற்றை, லண்டன் மாநகரின் Greenwich என்ற இடத்தில் அமாவாசை இருட்டில் 29 மற்றும் 30 நாட்கள் என்று முழு நாட்களாக மாற்றும் கமிட்டியின் கம்ப்யூட்டர் மூளையும் ஒரு அற்புதமே. ஆஹா இதுவல்லவோ பொருத்தம்.
இன்னும் பொருத்தம் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்
பிறை மீரான்.

பத்தொன்பது பொருத்தம் (Part -3)

19 கூட்டத்தின் ஒரு நபர் நம்மை சந்தித்தால் குர்ஆன் 50 வது அத்தியாயம் காஃப் சூராவில் உள்ள காஃப் பற்றி கேட்பார்.
நாம் கூறுவோம். ,
அதுபற்றி பெருமானாரிடம் ஸஹாபாக்கள் கேட்கவில்லை. பெருமானாரும் கூறியதாக தெரியவில்லை.
கவிதையின் துவக்கத்தில் இதுபோன்ற வெறும் எழுத்துக்களை மட்டும் கொண்டு துவங்குவது அரபு பண்டிதர்களின் வழக்கம் என்பதை அறிந்திருந்த ஸஹாபாக்கள் அதைப் பற்றி கேட்கவில்லை.
அது ஒரு அரபு கவிதை முறை என்பதால் பெருமானாரும் அதைப் பற்றி விளக்கியிருக்கவில்லை.
அத்தியாயங்களின் துவக்கத்தில் வெறும் எழுத்துக்களுடன் துவங்குவதை வழி வழியாக வந்த சமுதாயங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டது நாமும் தொடர்கிறோம்.
**19 கூட்டத்தை தவிர**
50 வது அத்தியாயம் காஃப் சூராவில் இருக்கும் காஃப் என்ற துவக்க எழுத்து 57 இடத்தில் வருகிறது. 57 19 ஆல் வகுத்து பார்க்கின்றனர் 19 கூட்டத்தினர்.
57/19=3 மீதியின்றி வருகிறது.
50 வது அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் காஃப் என்ற ஒற்றை எழுத்தின் இரகசியத்தை கம்ப்யூட்டர் சிவகாமி கண்டுபிடுத்துவிட்டதாக 19 கள் கூவினர்.
அந்த எழுத்தில் ஏதோ இரகசியம் இருக்க வேண்டும் என்று நினைத்த விஞ்ஞான வீரர்கள் கம்ப்யூட்டர் சிவகாமியை அல்லாஹ்வின் அத்தாட்சியாக பார்த்தனர். "அல்லாஹ்வின் காலண்டர்" என பொய்யுரைக்கும் கமிட்டி பேச்சாளர்கள் போல.
அமாவாசை காலண்டரை அல்லாஹ்வின் காலண்டர் என எற்ற ஒரு ஹிஜ்ரா கமிட்டி ஆள் உங்களை சந்தித்தால் கேட்கும் முதல் கேள்வி *"சந்திரன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது"* இது உங்களுக்கு தெரியுமா? என கேட்பார்.
நீங்கள் அப்படியா என்பீர்கள்.
தொடர்ந்து. . .
"மக்ரிப் நேரத்தில், மறையும் சந்திரனைப்பார்த்து விட்டு மறுநாள் 1 வது நோன்பு "என அறிவித்த பெருமானாரின் வார்த்தை ஹதீஸில் எங்கே? என அந்த ஹிஜ்ரா கேட்பார்.
அவ்ளோதான் நீங்கள் நிலை தடுமாறுவீர்கள். அந்த இடைவெளியில் கஞ்சிசன் என்றும் சங்கம்மா என்றும் அவர் உங்களை தொடர்ந்து தாக்க தொடங்குவார்.
இதை சொல்லித்தான் ஹிஜ்ராவினர் தங்கள் காலண்டரை விநியோகம் செய்கின்றனர்.
மார்க்கத்தையும் விஞ்ஞானத்தையும் அறிந்த மக்கள் அந்த கேள்விகளின் மடத்தனத்தை அறிந்தனர். மக்களிடம் எடுத்துரைக்க தொடங்கினர்.
** *சந்திரன் கிழக்கில் உதிக்கிறது மேற்கில் மறைகிறது*
சந்திரன் வடக்கில் உதித்து தெற்கில் மறைந்தாலும் அது பற்றி நமக்கு என்ன கவலை வேண்டியிருக்கு.
நாம் பார்க்க வேண்டியது சந்திரனில் தெரியக்கூடிய தோற்றமான "பிறை"யை. சந்திரனின் உதிப்பு மறைவை அல்ல.
அமாவாசை முடிந்த பிறகு சந்திரனில் தெரியும் வெளிச்சமானது சூரியன் மறையும் போது தெரியும். அதாவது *பிறையை சூரியன் மறையும்போதுதான் பார்க்க முடியும்*
சூரியன் மேற்கில் மறையும்போது
"பிறை" வட மேற்கிலும் தெரியலாம் தென் மேற்கிலும் தெரியலாம். மேற்கில் மட்டும் தான் பிறை தேடுகிறோம் என ஹிஜ்ராவினர் உளறுகிறார்கள்.
** *மறையும் மக்ரிப் பிறை மறுநாள் 1 வது நோன்பு*
இப்படி ஒரு ஹதீஸை எந்த கிரந்தகங்களிலும் எடுக்க முடியாது. ஏனெனில் இது ஹிஜ்ராவினரின் அறை குறை அலறல்.
பிறை பார்ப்பார்கள். ஸகர் செய்வார்கள். நோன்பு பிடிப்பார்கள். சூரிய மறைவில் நோன்பு திறப்பார்கள்.
எந்த இரவில் ஸகர் செய்வதை துவங்க வேண்டும் என்பதற்காகவே பிறை பார்க்கிறோம். பிறை பார்க்கப்பட்ட இரவின் ஸகர் எதுவென தீர்மானிப்பது பிறை பார்த்தலே.
** *சூரியன் மறைவில் தெரியும் பிறை*
** *பிறை பார்த்த இரவில் ஸகர்*
இதுதான் நடைமுறை.
பெருமானாருக்கு முந்தைய சமுதாயங்களுக்கான நோன்பிற்கும் நமது நோன்பிற்குமுள்ள வேறுபாடு ஸகர் உணவு மட்டுமே.
கிழமைகளின் பெயர்கள் மாதங்களின் பெயர்கள் ஆகியவையெல்லாம் பெருமானாருக்கும் முந்தைய காலத்திலிருந்தே இருக்கும் நடைமுறையாகும்.
பிறை பார்த்து மாதங்களை துவக்குவதும் முன்னோர்களின் நடைமுறை. நமக்கு முன்பாக வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களும் வாரத்திற்கு 7 நாட்கள் என்றும் மாதங்கள் 12 என்றுமே நடைமுறைப்படுத்துகிறார்கள்.
யூதர்களின் உணவு நமக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மாதத்துவக்கத்தை யூதர்களுக்கு மட்டுமானதாக மாற்ற ஹிஜ்ராவினர் முயல்கிறார்கள்.
காஃப் என்ற எழுத்திற்கு ஆதாரம் கேட்கும் 19களுக்கும் மக்ரிப் பிறை என்ற தொடர் நடைமுறைக்கு ஆதாரம் கேட்கும் ஹிஜ்ராவினருக்கும் கொள்கை ரீதியாக எத்துனை பொருத்தமோ!!!
இன்னும் பொருத்துவோம்
இன்ஷா அல்லாஹ்
பிறை மீரான்.
சுருக்கமாக :
சூரியன் "மறையும்" போது தெரியும் சந்திர தோற்றமான "பிறை"யை பார்த்து பார்த்த இரவிலிலேயே ஸகர் செய்து நோன்பாளியாக இருப்பது தொடர்ச்சியான நடைமுறை.
இந்த நடைமுறைக்கு ஸஹாபாக்கள் கேட்காத விளக்கத்தை பெருமானார் விளக்கவுமில்லாத நடைமுறையை களங்கப்படுத்தும் ஹிஜ்ராவினர் துவக்க எழுத்துக்களுக்கு பொருள் தரும் 19 களேதான்.

பத்தொன்பது பொருத்தம் (Part -4)

19 களுக்கு பிடித்த வார்த்தை
*Submission*
ஹிஜ்ராவினருக்கு பிடித்த வார்த்தை *Conjunction*
Submission என்பதற்கு *சமர்ப்பணம்* என்று பொருள்.
Conjunction என்பதற்கு *தர்ப்பணம்* என்று பொருள்.
அதாவது அமாவாசையன்று முன்னோர்களை நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்யும் ஒரு நிகழ்வே தர்ப்பணம்.
Conjunction என்ற வார்த்தையில் அமாவாசையும். , 19 களின் சமர்ப்பணம் என்பதும் பொருந்தி வருவது பொருத்தத்திலும் பொருத்தம்.
இரண்டு கூட்டங்களின் சமர்ப்பணத்தையும் பார்ப்போம்.
குர்ஆனில் 9 வது அத்தியாயம் 128 மற்றும் 129 வது வசனங்கள் இடைச்செருகல் என்கிறது 19 கூட்டம். (9:128, 9:129)
பெருமானாரின் இறப்பிற்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு வசனங்களும் இடைச்சொருகப்பட்டதாக 19 கூட்டத்தின் சிவகாமி கம்ப்யூட்டர் கூறுகிறது.
அந்த இரண்டு வசனங்களையும் நீக்கியே ரசாத் கலீபா குர்ஆனை மொழி பெயர்த்திருக்கிறார்.
பெருமானாரின் இறப்பிற்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹிஜிரி காலண்டர் உருவாக்கப்பட்டதாக ஹிஜ்ராவினர் ஆர்ப்பரிக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் மூலம் கடந்த காலங்களுக்கும் தேதி அறிந்தனர் ஹிஜ்ராவினர்.
பெருமானாரின் இறுதி உரைக்கு கிழமை கொடுத்து மகிழ்ந்தனர் ஹிஜ்ராவினர்.
கம்யூப்ட்டர் சிவகாமி மூலம் இரண்டு வசனங்களை நீக்கி சமர்ப்பனம் செய்தனர் 19 கள்.
கம்ப்யூட்டர் மூலம் பெருமானார் இறுதி உரைக்கு கிழமையிட்டு ஹதீஸ்களில் ஏற்கனவே பதிந்திருந்த தவறான கிழமையை நீக்கித்தள்ளி ஹிஜ்ராவினர் சமர்ப்பித்தனர்.
கம்ப்யூட்டர் மூலம் ஆதாரங்களை நீக்கித்தள்ளி சமர்ப்பிப்பதில் ஹிஜ்ராவினரும் 19 களும் அற்புதமான சமர்ப்பணம் செய்பவர்கள்.
அவர்கள் சமர்ப்பனத்தை இன்னும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்
பிறை மீரான்

பத்தொன்பது பொருத்தம் (Part-5)

ஆணைப் பெண்ணாக்கி பேனை பெருச்சாளியாக்கிய கமிட்டியும் 19 களும். . .
*19 களின் உயிர் நாடியான வசனம் *
 عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
 அதன் மேல் பத்தொன்பது உள்ளது.
( 74:30)
      *  அதன்மேல் - عَلَيْهَا*
*ஹிஜ்ராவின் உயிர் நாடியான வசனம்*
       *  பிறைகள்  - الْأَهِلَّة*
(2:189)
19 களின் "அலைஹா"
74:30 வசனத்தின் படி" குர்ஆனின் மீது பத்தொன்பது இருக்கிறது" அதாவது குர்ஆன் பத்தொன்பது என்ற கட்டமைப்பில் இருக்கிறது என 19 கள் கூவுகின்றனர்.
ஆனால் இங்கு மிகப்பெரிய இலக்கண மோசடி செய்தே அவ்வாறு கூவுகின்றனர்.
அலைஹா என்ற வார்த்தையை "அதன் மேல்" என்று தான் மொழிபெயர்ப்பர்.
அரபு இலக்கணத்தின் படி அதன் பொருள் "அவள் மீது" என்பதாகும்.
குர்ஆன் என்ற அரபு வார்த்தை ஆண்பால் ஆகும். குர்ஆனின் மீது 19 என்று இருக்குமேயானால் "அலைஹு" என்றிருக்க வேண்டும்.
அதாவது "ஹா' என்பதற்கு பதிலாக "ஹு" என்று இருந்திருக்க வேண்டும்.
இந்த வசனத்தில் இருக்கும் "ஹா" என்பது பெண்பாலைக் குறிக்கும்.
74:30 வசனத்திற்கு மேலேயும் தொடர்ச்சியாகவும் நரகத்தைப் பற்றி பேசுகிறது. நரகம் ( النَّار) என்ற வார்த்தை பெண்பாலாகும். அலைஹா என்பது நரகத்தையே குறிக்கும்.
"நரகத்தின் மீது பத்தொன்பது" என்பதே அதன் பொருள்.
மறுப்போருக்கு சோதனையாகவே 19 என்ற எண்ணிக்கையை ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். நம்மை பாதுகாப்பானாக.
ஆக,நரகத்தின் மீது19 வானவர்களை ஏன் நியமித்திருக்கிறான் என்பதை அல்லாஹ்வே அறிவான்.
இவ்வாறாக வசனத்தில் இலக்கண மோசடி செய்து 19 கள் வண்டியை ஓட்டுகின்றனர்.
ஹிஜ்ராவினரின் இலக்கண மோசடியையும் பார்ப்போம்.
 *  பிறைகள்  - الْأَهِلَّة*
"அஹில்லா" என்ற இந்த வார்த்தை ஒரு பன்மைச் சொல்லாகும். அரபு மொழியில் பன்மைச் சொற்கள் பெரும்பாலும் பெண்பாலாகத்தான் அமையும்.
அஹில்லா என்ற பன்மைச் சொல்லின் ஒருமைச் சொல் "ஹிலால்" ஆகும். இது ஒரு ஆண்பால் சொல்லாகும்.
ஆக,ஹிலால் என்ற ஒருமைச் சொல் ஆண்பால். அஹில்லா என்ற பன்மைச் சொல் பெண்பால்.
அஹில்லா என்ற வார்த்தைக்குள் பல ஹிலால்கள் உள்ளன.
ஹிலால் என்பது ஒரு சந்திர மாதத்தை துவக்குவதற்காக சந்திரனில் தெரியும் முதல் காட்சியை பார்ப்பதேயாகும்.
ஒரு ஹிலால் பார்த்தால் மாதம் துவங்கிவிடும். மறு ஹிலால் பார்த்தால் பழைய மாதம் முடிந்து மறு மாதம் துவங்கிவிடும்.
மாதங்களின் எண்ணிக்கை 12 என்பதால் ஒவ்வொரு ஹிலாலும் ஒவ்வொரு மாதத்தை மக்களுக்கு காட்டும். ஒவ்வொரு மாதத்திற்கும் பெயர் உள்ளது. 12 வது ஹிலால் "துல் ஹஜ்" என்ற ஹஜ் மாதத்தை மக்களுக்கு காட்டும்.
மேலே உள்ள விஷயங்கள்தான்
2:189 வசனத்தின்படி அஹில்லாக்கள் மக்களுக்கும் ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகளாக உள்ளன என்பதன் பொருள். (அல்லாஹ் அறிந்தவன்)
 அஹில்லா என்பது தினசரி சந்திரத் தோற்றம். அதாவது தினசரி பிறைகள் என பொருள் கொடுத்தனர் ஹிஜ்ராவினர்.
பெருமானார் பார்க்கச் சொன்ன ஹிலால் என்பது இந்த தினசரி பிறைகளைத்தான் என்றனர் ஹிஜ்ராவினர்.
ஹதீஸில் உள்ள "ருஃயதிஹி" என்பதில் உள்ள "ஹி" என்பது இந்த அஹில்லாவையே குறிக்கிறது என்றனர் ஹிஜ்ராவினர்.
அஹில்லாக்களை பார்க்க சொல்லியிருந்தால் "ருஃயதிஹா" என்றிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அஹில்லா என்ற வார்த்தை பெண்பால் ஆகும்.
(முழு விபரத்திற்கு இதை கிளிக் செய்து பார்க்கவும். அஹில்லா- அவனா? அவளா? )
பெண்ணை ஆணாக்கியது 19 கள்.
ஆணைப் பெண்ணாக்கியது ஹிஜ்ராவினர்.
ஆஹா என்ன ஒரு ஜோடிப் பொருத்தம்.