சகோ பிறை மீரான். ஹிஜ்றா கமிட்டி காலண்டரை சில
வருடம் பயன்படுத்தியவர். பின்னர் அதிலிருக்கும் பிழைகளை உணர்ந்து அதை வீசி
எறிந்தவர். காலண்டரில் அவர் கண்ட பிழைகளும், இரவு பகல் பற்றிய அவரின் விளக்கமும்
இங்கே.
இரவு
- பகல்
ஹிஜ்ரி காலண்டரால் ஈர்க்கப்பட்ட
வார்த்தைகள்.
சங்கமம்(கன்ஜங்சன்).
துல்லியமான கிரகணம்.
மறையும் பிறையை பார்க்கும் மடமை.
இன்னும் நிறைய இது போன்ற கேள்விகள்.
பிறை குறித்து விஞ்ஞானம் என்ன சொல்கிறது
என்று ஆராய ஆரம்பித்தேன்.
படித்ததரங்கள் துல்லியமான நாள்காட்டி என்றது காலண்டர்.சந்தேகத்திற்கிடமில்லாத
பிறை என்றால் அது 100% ஒளியை பிரதிபலிக்கக்கூடிய பௌர்னமி அதாவது தெளிவான
படித்தரம்.அந்த படித்தரத்திற்கு அவர்கள் இட்ட மிகத் துல்லியமான நாட்கள்
பிறை 13,14,15
மற்றும் 16.!!!
இது எப்படி தெளிவான நாட்காட்டியாகும்?
இன்னும் இருட்டு விளையாட்டை நான்
சொல்லவில்லை.Pls wait.
இரவு
- பகல் ...(தொடர்ச்சி) Part-2
அப்புறம் ஹிஜிரி கமிட்டியின்
அந்த துல்லியமான சந்திரகிரகணம்.
சந்திர கிரகணம் நடக்கும் தேதியை அவர்களுடைய
காலண்டரில் குறித்த தேதியில் நேரத்தில் நிகழ்ந்த அற்புதத்தை கண்டு வியந்தேன்.
பிறகு யோசித்தேன்,அவர்களுடையது சந்திர
காலண்டர் ஆயிற்றே,சந்திர கிரகணம் இந்த பிறையில் நிகழும் என்று கூறாமல் ஆங்கில
தேதியில் கூறுவதில் ஏதோ ஒரு இரவு - பகல் இருப்பதை உணர்ந்தேன்.
( தொடரும்)
இரவு
- பகல் .,.(தொடர்ச்சி) Part-3
பகல்தான் நாளின் துவக்கம்.
அற்புதமான வாதம் இந்த கருத்தை உடைக்க யார்
வருவார். பெருமிதம் கொண்டேன்.
பிறகு யோசித்தேன்,
சூரியனை மின் விளக்காக கற்பனை
செய்தேன்.கற்பனையில் சூரியனை ஆப் செய்தேன்.சூரியக்குடும்பம் இருண்டது.பூமி மற்றும்
நிலவில் ஒளியில்லை.இருள் சூழ்ந்திருந்தது.அதாவது இரவாயிருந்தது.
சூரியன் மற்றும் அனைத்து நட்சத்திரங்களின்
ஒளியை இனைத்துப்பார்த்தாலும் யுனிவர்சின் இருளிலில் ஒரு சதவீதம் கூட கிடையாது.
சூரியனை மீண்டும் ஆன் செய்தேன் பூமி
உருண்டையில் அரைக்கோளம் ஒளிர்ந்தது.மறு பகுதி இருளில்.ஆக ஒட்டுமொத்த பூமிக்கும்
ஒரே நேரத்தில் பகல் வரவில்லை.ஒரு பகுதி இரவு ஒரு பகுதி பகல்.
இந்த அண்டத்தில் அதிகப்பங்கு வகிப்பது இருள்
அதாவது இரவு.
இதில் பகல்தான் நாளின் ஆரம்பம் எங்கிருந்து
வந்தது???
(தொடரும்)
இரவு
- பகல் .,(தொடர்ச்சி) Part-4
பகல் நாளின் தொடக்கம்......
கற்பனையில் சூரியனை ஆப் செய்த போது ஒரு
அற்புதத்தை உணர்ந்தேன்.
பூமிக்கோளத்தின் முழுப்பகுதியும் இருளில்
மூழ்கியது.ஆமாம், பூமி முழுமைக்கும் இரவு ஆனது.
பூமி முழுவதும் இரவை அடைய வாய்ப்பு 100%.
பூமி முழுவதும் பகலை அடைய வாய்ப்பு 50%.
பகலைக் கொடுக்கும் ஒளியைப் பற்றி அறிந்த
மனிதன் இரவைக் கொடுக்கும் இருளை பற்றி அறியவில்லை.
அவன் அறிந்த பகலை முன்னால் நிறுத்தி அவன்
அறியாத இரவை பின்னால் ஆக்கிவிட்டான்.
விஞ்ஞானத்தை வாழ வைக்கும் விஞ்ஞானிகளே,
இருட்டுக்குள் நடக்கும் விளையாட்டை
பாருங்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
இரவு
- பகல் Part-5
...(தொடர்ச்சி)
நாளின் ஆரம்பம் பகல்
வெளிச்சம் என்பது ஒரு பொருள்
வெளிப்படுத்தும் ஒளி.
உதாரணம் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள்
வெளிப்படுத்தும் ஒளி.
இவைகள் நகரும்போது ஒளியும் நகரும்.
இருட்டு என்பது என்ன????
அது எங்கு ஆரம்பம் ஆகிறது?
அது எங்கு முடிகிறது?
இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாத
ஒன்று அது.
இரவைப் பற்றி நாசா அறிவிக்காதலால்
கணக்கீட்டாளர்களுக்கு அதைப் பற்றிய அறிவு இல்லை.அதனால் அவர்களுக்கு நன்கு
பரிச்சியமான பகலை முன்னெடுத்துச் செல்கின்றனர்
விஞ்ஞானத்தை வாழ வைக்கும் கணக்கீட்டு
விஞ்ஞானிகளே
பகல்தான் நாளின் தொடக்கம் என்று உங்களுக்கு
அறிவித்த. யார்???
இன்ஷா அல்லாஹ் தொடரும்
இரவு
- பகல் Part-6
...(தொடர்ச்சி)
நாளின் ஆரம்பம் பகல்
வெளிச்சம் என்பது ஒரு பொருள்
வெளிப்படுத்தும் ஒளி.
உதாரணம் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள்
வெளிப்படுத்தும் ஒளி.
இவைகள் நகரும்போது ஒளியும் நகரும்.
இருட்டு என்பது என்ன????
அது எங்கு ஆரம்பம் ஆகிறது?
அது எங்கு முடிகிறது?
இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாத
ஒன்று அது.
இரவைப் பற்றி நாசா அறிவிக்காதலால்
கணக்கீட்டாளர்களுக்கு அதைப் பற்றிய அறிவு இல்லை.அதனால் அவர்களுக்கு நன்கு
பரிச்சியமான பகலை முன்னெடுத்துச் செல்கின்றனர்
விஞ்ஞானத்தை வாழ வைக்கும் கணக்கீட்டு
விஞ்ஞானிகளே
பகல்தான் நாளின் தொடக்கம் என்று உங்களுக்கு
அறிவித்த. யார்???
இன்ஷா அல்லாஹ் தொடரும்
இரவு - பகல் ...(தொடர்ச்சி)Part 6
வெளிச்சத்தில்
இருந்து இருட்டை நோக்கி..,
என்ன வெளிச்சத்தில்
இருந்து இருட்டை நோக்கியா! !!
இருட்டில் இருந்து
வெளிச்சம் என்றுதானே இருக்க வேண்டும். இது என்ன ?
ஆமாம், வாருங்கள் நாம் போவோம்
ஒளியிலிருந்து விலகி இருளை நோக்கி...
Universe,galaxy,milkyway,cosmos...என்று பயங்கரமான பெயர்களை சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை.எளிய
வார்த்தைகளை உபயோகிப்போம்.
அண்டத்தில் சூரியன்
தன்னுடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களான பூமி,செவ்வாய்,சனி,மற்றும் நிலா உட்பட ஏனைய கோள்களை
ஈர்த்துக்கொண்டு ஒடிக்கொண்டிருக்கிறது.
நட்சத்திரங்கள் நம்
பார்வைக்கு நிலையானதாக தெரிந்தாலும் அவைகளும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.நம்
பார்வைக்கு புலப்படாத வகையில்.
அதாவது ஒளியை
உண்டாக்கும் அல்லது ஒளிவீசும் அனைத்துப் பொருட்களும் அண்டத்தில் ஓடுகின்றன.
சரி, அண்டத்தில் நிலையானது எது?
நம்பினால்
நம்புங்கள்..
இருட்டு..
இருட்டு..இருட்டு,
இருட்டு மட்டுமே
அண்டத்தில் நிலையானது.
இருட்டு மட்டுமே
அண்டத்தை ஆள்கிறது.
நாம் கானும் அனைத்து
ஒளிவீசும் பொருட்களும் அந்த மாபெரும் இருட்டுக்குள் ஓடுகின்றன.
கற்பனை செய்வோம்.
நள்ளிரவு
சென்னை To மதுரை க்கு இடைப்பட்ட ஊர்களில் மின்சாரத்தை துண்டித்து இருளில்
மூழ்கடித்து தலைக்குமேல் மிகத்தொலைவில் பத்து இலட்சம் மின்மினிப் பூச்சிகளை பறக்கவிடுவோம்.ஒன்றுக்கொன்று
மாறா இடைவெளியில் இரு நகரங்களுக்கிடையில் பறக்கும் போது மின்மினிப்பூச்சிகளின் ஒளி
எந்த உணர்வை ஏற்படுத்துமோ அது போன்ற நிகழ்வுதான் அண்டத்தில் நிகழ்கிறது.
அண்டம் 100% என்றால்
ஒளி வெறும் 1%.
மீதி 99% இருட்டுதான்.
கற்பனை செய்வோம்
நம்முடைய
முகத்திற்கு முன்னால் ஒரு மின்விளக்கை ஆன் செய்தால் என்ன நடக்கும்?
விளக்கின் பிரகாசம்
அதைச்சுற்றி உள்ள அனைத்தையும் மறைத்துவிடும்.
அது போலதான் 1% ஒளி 99%
இருட்டை மறைப்பது போல் தோன்றுகிறது.
கணக்கீட்டு
கல்விமான்களே உங்கள் கழுகுப்பார்வையை மறைக்கும் 1% ஒளியிலிருந்து
(அதாவது பகலிருந்து )
பார்வையை விலக்கி 99% இருட்டை நோக்கி (அதாவது இரவை நோக்கி) பார்வையை செலுத்துங்கள்.
வெளிச்சத்திலிருந்து
இருட்டை நோக்கி....
(இன்ஷா அல்லாஹ்
தொடரும்)
இருட்டு
விளையாடட்டு...(தொடர்ச்சி)Part 7
கோழியா?முட்டையா?
ஒரு நாள் தொடங்க
அதிக வாய்ப்பு
இரவா பகலா என்பதில் இதற்கு முன்பே
தெளிவு கண்ட நான் மேலும் சில ஆய்வுகளை செய்ய நினைத்தேன்.
Google அனைத்தையும் தேடித்தருவதாக அறிந்தேன்.
தேடினேன் நாளின்
தொடக்கம் இரவா பகலா என்று.
பெரும்பான்மையான
அறிஞர்களின் பதில் தாயம் உருட்டுவதாக இருந்தது.ஆமாம் தாயம்தான் உருட்டினார்கள் . probability நிகழ்தகவு.நாளின் தொடக்கம் இரவு அல்லது பகலாக இருக்க வாய்ப்பு 50:50
அதாவது இரவாக இருக்க
வாய்ப்பு 50%.
அல்லது பகலாக இருக்க
வாய்ப்பு 50%.
இதுவாவது பரவாயில்லை,சில அறிஞர்கள் ஆய்வில் உச்சத்திற்கு சென்று முதலில் வந்தது கோழியா?முட்டையா?
என்பது எப்படி தீர்க்கப்படாமல் உள்ளதோ
அதுமாதிரி நாள் முதலில் துவங்கியது இரவிலா அல்லது பகலிலா என்பது தீர்க்கப்படவில்லை
என்ற அதிஅற்புதமான கருத்தை பதிந்து வைத்திருந்தார்கள்.
எனக்கு பொறி
தட்டியது,
கோழியா முட்டையா என்பதை குர்ஆன்
இறங்கியபோதே கூறிவிட்டதே!
அனைத்தையும்
ஜோடிகளாக படைத்தோம் என்ற வசனத்தின் மூலம் கோழிதான் முதலில் வந்தது என்பதை ஏற்கனவே
அறிந்திருந்தேன்.
அதி நவீன
விஞ்ஞானமும் என்ன சொல்கிறதென்றால் முட்டை உருவாக
வேண்டும் என்றால் அது கோழியின் வயிற்றில்தான் உருவாக முடியும்.ஆக முட்டை
உருவாவதற்கு முன்பபே கோழி உருவாயிருக்க வேண்டும் என்று கூறி குர்ஆன் வசனத்தை
மெய்ப்பிக்கிறது.
சரி, கோழியா முட்டையா என்ற பிரச்சினையை தீர்த்தாச்சு இந்த இரவா? பகலா?
கியாமத் நாள்
வரைக்கும் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு
தீர்வு சொல்லப்பட்ட குர்ஆனிலும், குர்ஆனாகவே வாழ்ந்த
நபி வழியிலும்தான் தீர்வு.
நான் பெரும்பாலும்
குர்ஆன் வசனங்களை வாதத்தில் வைப்பதில்லை.ஏனெனன்றால் அது எல்லையற்ற அர்த்தம்
கொண்டது.
மேலும் ஒரு வசனத்தை நான் ஒரு அர்த்தத்தில்
முன்வைத்தால் எதிர் வாதிடுபவர்கள் அவர்கள் விளங்கியதின் அடிப்படையில் எதிர் பொருள்
கொண்ட வேறு ஒரு வசனத்தை முன்வைப்பார்கள்.
அல்லாஹ்வின்
வசனங்களில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுத்து பாவியாக விரும்பவில்லை.
ஹதீஸ் அது ஒரு
கடல்.எனக்கு நீந்தத் தெரியாது.
இதுவரை நான் கூறிய
நாளின் தொடக்கம் மற்றும் இரவு பகல் ஆகியவற்றைக்கொண்டே ஒரு ஆய்வு செய்துவிட்டு
மறையையும் மறையின் வழியையும்
அனுகுமாறு
வேண்டுகிறேன்.
கணக்கீட்டின்
கண்மனிகளே,மனம் திறந்த நிலையில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்னத்தில்
அல்லாஹ்வின் வசனங்களையும் நபிவழியையும் அணுகுங்கள்.
ஒரு முடிவை
எடுத்துவிட்டு அதை நியாயப்படுத்த வசனங்களை தேடாதீர்கள்.
ஏனெனில் ,
அல்லாஹ் இந்த
அர்த்தத்தில் கூறுகிறான் என நான் நினைக்கிறேன்.
தர்க்கம்
செய்வதற்காக அவனது வசனங்களை தேடுவோர்க்கு ஒன்றும் கிடைக்காது என கூறுகிறான்.
இன்ஷா அல்லாஹ்
தொடர்கிறேன்...
இரவு
- பகல் ...(தொடர்ச்சி)Part 8
கணக்கீட்டு காலண்டரில் வியந்தது...
கானும் பிறை அந்த நாளுக்குரியது.கணக்கீட்டு
காலண்டரில் பிறை அந்தந்த நாளை காட்டும்.
அசத்தலான Concept.
அற்புதமான Concept.
பெருமிதம் கொண்டேன்.நாம் சரியான காலண்டரை
கண்டுகொண்டோம் என்று.
சாலையில் நடந்து செல்லும்போது நிலவின்
பிறையை காணும்போதெல்லாம்
எனக்குள் சொல்லிக்கொள்வேன் நாம் கானும் இந்த
பிறை இன்றைக்குரியது என்று.
நேரம் கிடைக்கும் போது மட்டும்தான் பிறையை
பார்ப்பேன்.அப்பபடி பார்த்துக்கொண்டிருந்தபோது ஏதோ ஒன்று உதைத்தது.
நிலவானது கணக்கீட்டு காலண்டரின் விதிகளை
மீறுவது போலிருந்தது.
பிறகு யோசித்தேன்,
கணக்கீட்டு காலண்டரின் கட்டுப்பாடுகளுக்கு
கட்டுப்பட மறுப்பது போல் எனக்குத்
தோன்றிய நிலவின் பிறையை கண்கானிப்பது என முடிவு செய்தேன்.
ஆம்.,
கண்கானித்தேன்.
(இன்ஷாஅல்லாஹ் தொடர்கிறேன்)
இரவு
- பகல் (தொடர்ச்சி ) Part 9
நிலவின் பிறைகளை அதாவது படித்தரங்களை
இன்னும் சொல்லப்போனால் அந்தந்த நாளின் பிறையை கண்கானிப்பது என முடிவு செய்தேன்.
கணக்கீட்டுக் காலண்டரின் விதிமுறைகளை
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொண்டேன்.
ஒரு நாள் என்பது பஜ்ரில் தொடங்கி
அடுத்துவரும் பஜ்ர் வரை இருக்கும் 24
மணிநேரங்களை கொண்டது.
சரி,
பஜ்ர் To பஜ்ர் என்றால் பரவாயில்லை.,24
மணிநேரம் என்ற இடைச்செருகல் வேறு.
பஜ்ர் என்பது ஒரு நாளைக்கு 4.30 மணியில் இருந்து 5.45. வரை
வரலாம்(தோராயமாக).இதில் நிலையான எந்த மணிநேரத்திலிருந்து நாளைத் தொடங்குவது.
கணக்கீட்டாளர்களின் பழைய வீடியோ பார்த்த
ஞாபகம் வந்தது.
அதில் ஒருவர் கேட்பார் "நாள் பஜ்ரில்
தொடங்குகிறது என்றால் அது தொடங்கும் நேரம் என்ன?"
பதில்: நாள் தொடங்குவது பஜ்ர், தொடங்கும் நேரம்
நள்ளிரவு 12 மணி.
பதில் கிடைத்துவிட்டது.
பிறகு யோசித்தேன்...
பஜ்ர் To
பஜ்ர் என்றால் 24 மணி நேரம்,நள்ளிரவில் தேதியை மாற்றினால் சராசரியாக 5 மணி நேரம்
வித்தியாசப்படுமே,என்ன செய்வது.(இதுவரை எனக்கு விளங்காத கணக்கு)
முடிவு செய்தேன், கணக்கீட்டுக்
காலண்டரில் பிழையா?
இது வெளியில் தெரிந்தால் அசிங்கம்.கொண்டு வா
ஹதீஸை.
ஹதீஸ்: பிறையில் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
வாங்க,
கேள்வி கேட்பீர்கள்,இது பிறை குறித்த ஹதீஸ் அல்லவா?
பிறை என்றால் என்னவென்றால் படித்தரம்,ஒரு படித்தரம் என்பது
ஒரு நாளைக்குறிக்கும்.ஆகவே நாள் குறித்தும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
வாவ்,
என்னால் என்னையே நம்ப முடியவில்லை,எப்படி
சமாளிச்சசிட்டேன்.
பெருமிதம் பொங்க படித்தரங்களை கண்கானிக்க
ஆரம்பித்தேன்.
(இன்ஷாஅல்லாஹ் தொடர்கிறேன்)
இரவு
- பகல் ...(தொடர்ச்சி) Part 10
கானும் பிறை அந்த நாளுக்குரியது...
கணக்கீட்டுக் காலண்டரில் பிறையை,மன்னிக்கவும்
படித்ததரத்தை பார்த்தேன் பிறை 1.
பஜ்ரிலும் மஃரிபிலும் தேடினேன்ன் பிறை
தெரியவில்லை.
காலண்டரில் மறுநாள் பிறையை பார்த்தேன் பிறை 2.
அன்றும் பஜ்ரிலும் மஃரிபிலும்
பார்த்தேன்.பிறை தெரியவில்லை.
கணக்கீட்டுக் காலண்டரின் மற்றொரு விதி முதல்
இரண்டு பிறைகளை கூடுமானவரை கண்களால் பார்க்க இயலாது.
முதல் இரண்டு பிறைகளை கண்னால் பார்க்க
முடியாதலால் முடிவு செய்தேன்,
சரிதான்,
கமிட்டி காலண்டருக்கு கட்டுப்பட்டுத்தான் நிலவு பிறையை
காட்டுகிறது என்று.
காலண்டரில் பிறை 3
காலையிலும் மாலையிலும் தேடினேன் மஃரிபில்
கண்டுகொண்டேன்.அது வெறும் பிறையாக தெரியவில்லை கமிட்டிக் காலண்டரில் நான் ஏற்கனவே
பார்த்திருந்த அந்த 3ம் பிறையின் போட்டோவாக தெரிந்தது.
நெஞ்சை நிமிர்த்துக் கொண்டேன் "இது என்
காலண்டர்".
3ம் நாளான அன்றைக்கு
நான் கண்ட அந்த நாளுக்குரிய பிறை 3ம் நாளென்று பறை
சாற்றி விட்டு இரவு 8.28 மணிக்கு
மறைந்த அந்த காட்சி இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை.
பிறைகளை கண்கானிப்பதில் தீவிரமடைந்தேன்.
இன்ஷா அல்லாஹ் தொடரலாம்...
இரவு
- பகல் ...(தொடர்ச்சி) Part 11
கானும் பிறை அந்த நாளுக்குரியது...
தொடர்ந்து பிறையை கண்கானித்துக் கொண்டே 4 ம் பிறையை கண்டேன்.
அந்தப் பிறை எப்போது மறையும்?
கணக்கீட்டுக் காலண்டரை பின்பற்றுபவர்களுக்கு
தெரியும்,ஒவ்வொருபிறைக்கும்
இடைப்பட்ட மறையும் நேர வித்தியாசம் 45
அல்லது 50 நிமிடங்கள்.
ஆக,
அது 9.20 க்கு மறைந்திருக்கும்.
இப்படியே சென்று 7 ம் நாளுக்குரிய 7 ம் பிறையை கண்டேன்.
அதுவும் அந்த பிறைக்கான அந்த நாளை
காட்டிவிட்டு இரவு 11.45க்கு மறைந்தேபோனது.
கமிட்டிக் காலண்டர் பிறை 8
மிகவும் ஆவலுடன் 8 ஆம் நாளுக்குரிய 8 ஆம் பிறையை மாலை 4 மணிக்கு மேல் பார்த்தேன்.அது எட்டாவது
படித்தரமாகிய எட்டாவது நாள்.
அது மறையும் போது செய்த செயல் எனக்கு கடும்
கோபம் ஏற்படுத்தியது.கணக்கீட்டுக் காலண்டரின் விதிமுறையை மீறியது.
இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.
இரவு
- பகல் ...(தொடர்ச்சி)Part 12
கானும் பிறை அந்த நாளுக்குரியது...
மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
கணக்கீட்டு காலண்டரின் பிரகாரம்
நாள் துவங்குவது பஜ்ரில்,நாள் துவங்கும் நேரம்
நள்ளிரவு 12 மணி அதாவது 00:00
கமிட்டி காலண்டரில் பிறை -8
8 வது பிறை
அதாவது 8 ஆம் படித்தரம், 8 வது நாளை காட்டி விட்டு அன்றைய தினத்திற்குள் அதாவது நள்ளிரவு 12 மணிக்குள் மறைய வேண்டிய நிலவு
மறுநாளாகிய 9 ஆம் நாள் துவக்கத்தில் நுழைந்து 30 நிமிடம் தங்கிவிட்டு அதாவது நள்ளிரவு 00:30 ல் மறைந்தது.
இங்கு தான் பிரச்சினையே ஆரம்பமாகியது.
நள்ளிரவு பனிரண்டு மணிக்கு, நாள் அடுத்த நாளாக
மாறிவிட்டது.
கானும் பிறை அந்நாளுக்குரியது என்றால் 8 வது நாளை காட்டிய
பிறை ஏன் 9 ஆம் நாளையும்
காட்டியது?
ஆக ஒரு பிறை இரண்டு நாளை காட்டுமா?
அப்படிக் காட்டினால் எப்படி அது அன்றைய நாளை
மட்டும் காட்டிய பிறையாகும்.
அது மட்டும் இல்லாமல் 9 ஆம் நாளின்
துவக்கத்திலேயே எப்படி பிறை மறையும்?
மேலும் மறையும் 8 ஆம் பிறையைக் கொண்டு
அடுத்த 9 ஆம் நாள்
துவங்குகிறது.மறையும் பிறையைக் கொண்டு அடுத்த நாளை துவக்குவது என்பது எங்கேயோ
கேள்விப் பட்ட மாதிரி அல்லவா இருக்கு.
கணக்கீட்டுக் காலண்டரில் பிழை வருமா?
வராது.வரக்கூடாது. மீறி வந்தால்?
சமாளிக்கனும்.
எப்படி?
இப்படித்தான்.
மீண்டும் மேலே பாருங்கள்
நாள் துவங்குவது பஜ்ரில்,நாள் துவங்கும் நேரம்
நள்ளிரவு 12 மணி அதாவது 00:00
நீங்கள் கேட்பது புரிகிறது, எத்தனை தடவை அதையே
காட்டுவ என்று.
சட்டில இருந்தா அகப்பைல வராமலா
இருக்கும்.இருக்கிற நாலு விஷயங்களையே சொல்லி சொல்லி கீரல் விழுந்த
ரெக்கார்டாக மாறிடனும்.
சரி,
விஷயத்துக்கு வருவோம்,
நள்ளிரவு கான்சப்ட் காலை வாரி விட்டதால்
மீண்டும் பஜ்ரை கையிலெடுத்தேன்.
நாளின் தொடக்கம் பஜ்ர்.8ஆம் பிறை பஜ்ருக்குள்
மறைந்து விட்டதால் அது 8 ஆம் நாளையே காட்டியது என்று சமாளித்துக் கொண்டு என்னையே
வியந்தேன்.
எனது மகிழ்ச்சி சில நாட்கள் கூட
நீடிக்கவில்லை...
குறிப்பு: மேலே என்னால்
குறிக்கப்பட்டிருக்கும் பிறை மறையும் நேரங்கள் சற்று தோராயமானவை.விளங்கிக்
கொள்வதற்காக மட்டுமே.கணக்கீட்டுக் காலண்டரின் எந்த மாதத்தில் பொருத்திப்
பார்த்தாலும் ஒரு மணி நேரம் கூடலாம் அல்லது குறையலாம்.
அது ஒரு நாள் குறைவது அல்லது கூடுவது போல்
தோன்றும்.
இது எல்லாம் உங்களுக்கு புரிவதற்கு சற்று
கடினமாகத்தான் இருக்கும்.
அதி நவீனமான விஞ்ஞான வார்த்தைகளை உபயோகித்து
உங்களை பயமுறுத்த விரும்பவில்லை.
எளிய தமிழில் விளக்க முயற்சி செய்கிறேன்.
கல்வி அதிகம் உள்ளவர்களுக்கு சற்றே போரடிக்கும்.கோபித்துக்
கொள்ளாதீர்கள்.
இன்ஷா அல்லாஹ் நீடிப்பேன்.
Part 12 A(துனைப் பதிவு)
உங்களுக்கு ஒரு
சந்தேகம்
வரலாம்.
கமிட்டி சகோதரர்கள்
நாளின் துவக்கம் பஜ்ர்தான் என்று சொ ன்னார்களே
தவிர துவங்கும் நேரம் நள்ளிரவு என்று எங்கு சொன்னார்கள்?
ஆகா,மாட்டிக் கொண்டேன்.
கமிட்டி மீது அவதூறு
பரப்பிவிட்டேன் என்று சொல்வார்களே?
எனது அனைத்துப் பதி
வுகளும் பொய் என்று கூறி புறக்கனிக்க இது ஒன்றே போதுமே.
என்ன செய்ய...
பழைய வீடியோ ஒன்றை
தூசி தட்டினேன்.
2014 ல் கமிட்டி நபரால் பதிலளிக்கப்பட்ட வீடியோ அது.
கேள்வி:
ஃபஜ்ர் நாளின்
ஆரம்பம் என்றால் அதன் (TIME)
என்ன?
அதற்கு பதிலளித்த
அவர் நள்ளிரவில் தேதியை அதாவது நாட்களை மாற்றுவது குறித்து கிழி கிழி என
கிழித்தார்.அதனுடைய வரலாறு மற்றும் கேவலங்களை அழகாக எடுத்துவைத்தார்.
நான் சற்று மிரண்டே
போனேன்.
ஆனால் கடைசியில் ஒரு
அற்புதமான பதில் கூறினார்.
"நாள் துவங்குவது பஜ்ரில்.அது துவங்கும் இடம் IDL".
அது என்ன IDL?
அவர்கள் அதிகம்
பயன்படுத்துவது யாருக்கும் எளிதில் விளங்காத ஆங்கில வார்த்தைகள் என்பது எனக்கு
முன்பே விளங்கியிருந்ததால் IDL
பற்றி அறிந்து கொள்ள முயன்றேன்.
IDL என்பது சர்வதேச
தேதிக்கோடாம்.அங்குதான் தேதி அதாவது நாள் மாறுமாம்.
நாள் மாறும் அங்கு
செல்வது என முடிவு செய்தேன்.
கற்பனை செய்தேன்
ஃபிஜி மற்றும்
அமெரிக்கன் சமோவா என்ற இரண்டு தீவுகளுக்கு இடையே வரையப்படிருந்த கற்பனைக் கோட்டில்
ஸுபுகு நேரத்திற்கு முன்பாகவே இறங்கினேன்.
மன்னிக்கவும்
கமிட்டி அன்பர்களுக்கு ஸுபுகு என்ற சொல் பிடிக்காது.பஜ்ர் நேரத்திற்கு முன்பாகவே
இறங்கினேன்.
ஏன் பஜ்ர்க்கு
முன்பாக?
??
கமிட்டியின் கலக்கல்
கணக்கீட்டின்படி பஜ்ரில்தானே நாள் தொடங்குகிறது.
அடிவானத்தில் பஜ்ர் தொழுகைக்கான ஆரம்ப நேரம் தெரிந்தது.
இன்னும் நாள்
மாறவில்லை.
இன்னும்
வாய்ப்பிருக்கிறது.பஜ்ர் வக்த் முடியும் வரை.
நான் மட்டுமே பாங்கு
சொல்லி தனியாக தொழுதேன்.
எந்த முறையை
பின்பற்றி தொழுதாய் என கேட்காதீர்கள்.அதை கூறினால் வாழ்நாள் முழுவதும் தொடர் எழுத
வேண்டியிருக்கும்.
பஜ்ர் வக்தும்
முடிந்தது.நாள் மாறவில்லை.
எந்த இடத்தை
நாட்களின் தொடக்கம் என்றார்களோ அந்த IDL ல் அவர்களின்
கூற்றான பஜ்ரில் நாள் மாறுகிறது என்ற தத்துவம் வேலை செய்யவில்லை.
இதற்கு முன்னால் 00:00 பற்றி சொல்ல ஆசைபடுகி றேன்.
இது என்ன
பார்ப்பதற்கு கம்ப்யூட்டர் லாங்குவேஜ்
மாதிரி
தோன்றுகிறதா.இது ஒன்றுமே இல்லை. சொன்னால் சிரிப்பீர்க ள்.
நம்ம ஊரோட ரயில் வே
நேரம் தான் அது.
ரயில் வரும் நேரம் 7 மணி என்று கூறினால் அது காலை 7 மணியா அல்லது மாலை 7 மணியா என்ற சிக்கல்.
7 am அல்லது 7
pm என்று சொல்லும் போதும் சில சிக்கல்கள்
வந்தது.
அதனால் நண்பகல் 12.00 மணிக்கு பிறகு வரக்கூடிய 1.00 pm என்பதை 12+1
=13 என்று அதாவது 13:00 என்று ஆக்கி விட்டார்கள். இதுதான் சர்வதேச அளவிளான நேர அளவு முறையும்
கூட.
5:00 என்றால் காலை 5
மணி, 17:00 என்றால் மாலை 5
மணி.
22:00 =இரவு 10
மணி
23:00 =இரவு 11
மணி
23:30 =இரவு 11.30
மணி.
இப்போது IDL ல்
23:55
அதாவது நள்ளிரவு 11.55 pm.
ஒரே கும்மிருட்டாக
இருக்கிறது.
இன்னும் 4 நிமிடத்தில் 11.59
pm ஆகிவிடும்.
அதாவது சர்வதேச நேர
அளவில் கூறுவதானால் 23:59
மணி மற்றும்
நிமிடங்களுடன் நொடிகளை இணைக்க வேண்டுமானால்
23:59:00 என்று அமைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது IDL ல் நேரம்
23:59:30
அதாவது நள்ளிரவு 11 மணி 59
நிமிடங்கள் 30 நொடிகள்.
23:59:59
இன்னும் 1 நொடியில் அது 24:00
என்று மாறவேண்டும்.ஆனால் அப்படி
மாற்றாமல் 24
மணி நேரத்தில் நாள் முடிவடைவதாக கருதி 24:00 என்பதை ஒரு நாளின் முடிவாகவும் மற்றொரு நாளின் தொடக்கமாகவும் கருதி 00:00 என்று மாற்றிவிடுவார்கள்.இது ஆங்கிலக் காலண்டரை கணக்கிடுவதில்
பங்காற்றுகிறது.
இப்போது IDL ல்
00:00
நாள் மாறிவிட்டது.
கமிட்டிக் காலண்டர்
கூறியபடி IDL
ல் நாள் மாறிவிட்டது.அதாவது நாட்காட்டி
அடுத்த நாளாக மாறிவிட்டது.
எந்த நாட்காட்டி
மாறியது?
பிறையை அடிப்படையாக
கொண்ட சந்திர நாட்காட்டியா?
இல்லை.
சூரியனை அடிப்படையாக
கொண்ட சூரிய நாட்காட்டி.
பிறையை
அடிப்படையாகக் கொண்டு நாள் மாறுவதாக கூறிவிட்டு சூரியனை அடிப்படையாகக் கொண்டு நாள்
மாறும் இடத்தில் என்னை நாள் பூராவும் காத்திருக்க வைத்த கணக்கீட்டு கமிட்டியின்
கள்ளத்தனம் விளங்க ஆரம்பித்தது.
நள்ளிரவில் அதாவது இரவு 12.00 மணிக்கு நாளை மாற்றுவதை கழுவி கழுவி ஊற்றிய கமிட்டியினர் அதே
நள்ளிரவில் ஆனால் 00:00
மற்றும் IDL என்ற லேபிலில் நள்ளிரவின் இருட்டுக்குள் திருட்டுத்தனமாக நாட்களை
மாற்றுவதை அறிந்தேன்.
"கொட்டைப்பாக்கு என்ன விலை"
என்று கேட்டதற்கு
"பட்டுக்கோட்டை பக்கத்தில்"
என்று கூரிய கதை
தெரியுமா?
காலை உணவு
சாப்பிடும் நேரம் என்ன என்று கேடால் டைனிங்ஹால்
அதாவது உணவுஉண்னும்
இடம் என்று கூறினால் எப்படி இருக்கும்.
அது போலதான்
"நாள் துவங்கும் நேரம்"
என்ன என்று கேட
்டால் "நாள் துவங்கும் இடம்"
என்று பதிலளித்து
நேரத்தையும்
இடத்தையும்
மொட்டைத்தலைக்கும்
முழங்காலுக்கும்
முடிச்சுப் போட்ட
கமிட்டியினர்தான்
காலத்தை வென்ற
கணக்கீட்டாளர்கள்.
முக்கிய செய்தி:
இந்த பூமிப் பந்தில் நாளைப் பிரிக்கும் இடம் கற்பனை IDL அல்ல.
அல்லாஹ் இரண்டு
இடங்களை நிலையைனது என்கிறான்.
விரைவில்
இன்ஷா அல்லாஹ்
நிலைக்க வைப்பான்.
இரவு - பகல்
இரவு
- பகல் ... (தொடர்ச்சி)Part 13
கானும் பிறை அந்த நாளுக்குரியது...
மேலே கண்ட வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்?
கமிட்டியினர் மற்றும் ஆய்வாளர்களின்
ஆய்வுகளில் நான் அறிந்த வரை அதற்கு என்ன அர்த்தம் என்றால் "பிறை ஒரு நாளை
காட்டும் அல்லது ஒரு நாளை தீர்மானிக்கும்".
சரி,
மீண்டும் பழைய செய்திக்கு போகிறேன்.
பஜ்ர் நாளின் தொடக்கம் என்ற கான்சப்ட்டை
வைத்து 8. வது பிறையை அதாவது 8 வது நாள் வரை நான்
சமாளித்த அற்புதத்தை அறிந்தீர்கள்.
கமிட்டி காலண்டர் பிறை 15.
மாலை
6.45 க்கு பிறையை பார்த்தேன்.
15 ஆம் நாளுக்குரிய 15
ஆம் பிறை என்று அறிந்தேன்.
16 ஆம் நாளின் துவக்கமான பஜ்ர் வருவதற்குள் 15ஆம் பிறை மறைந்து
கமிட்டி காலண்டரின் "கானும் பிறை அந்த நாளுக்குரியது" என்ற கருத்தை
உண்மையாக்கிவிடும் என்று நினைத்துக்கொண்டே தூக்கத்தில் நுழைந்தேன்.
பஜ்ர் வக்த் ஆரம்பம் ஆனதற்கான பாங்கோசையை கேட்டு
தொழுவதற்காக எழுந்தேன்.
ஐயகோ,
எல்லாம் முடிந்து விட்டது,நிலவு சதி செய்தது.கமிட்டி காலண்டரின் விதிமுறைகளை சுத்தமாக
மதிக்கவேயில்லை.
15 ஆம் நாளை காட்டிய பிறை 16
ஆ நாளுக்குள்ளும் நுழைந்துவிட்டது.
நள்ளிரவு 00:00 வை அடுத்த நாளின் துவக்க நேரமாக கொண்டால்
என்ன பிரச்சினையோ அதே சிக்கல்தான் பஜ்ரை நாளின் துவக்கமாக கொண்டாலும் என்பதை
உணர்ந்தேன்.
பிறகு யோசித்தேன்.,
முடிவு செய்தேன்.
சந்ததிரன் பிறையை காட்டுவது கமிட்டி
காலண்டர் நிர்ணயித்த பிறகாரம்
அல்ல.
கானும் பிறை அந்த நாளை
காட்டவேண்டும்.கமிட்டி காலண்டரின் பிறை சில சமயம் அன்றைய நாளையும் பல சமயங்களில் இரண்டு நாட்களையும்
காட்டுகிறது.
கமிட்டி காலண்டரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்
என்னவென்றால்.,
:
"கானும் பிறை அந்த நாளுடையது "
அல்ல
"அந்த நாளின் பிறையை காண் ".
உங்களின் கேள்வி எனக்கு புரிகிறது.
இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்???
சொல்கிறேன்.,
கானும் பிறை அந்த நாளுக்குரியது என்பதன்
அர்த்தத்தை நாம் முன்பே விளங்கியிருக்கிறோம்.
அதாவது பிறையானது "நாள்
எத்தனையாவது" என்று காட்ட வேண்டும் அதாவது நாளைத் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் இங்கோ "நாள் எத்தனையாவது "
என்று தீர்மானிக்கப்பட்டு "அந்த நாளுக்குரிய பிறை" யை நாம் காண
கமிட்டிக் காலண்டரால்
கட்டளையிடப்பபட்டிருக்கிறோம் என்பதை அறிந்தேன். அதிர்ந்தேன்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிர்வேன்.
இரவு
- பகல் PART 14
24 மணி நேரத்தில் ஜும்ஆ அடைதல்.
இதுதான்..இதுதான்
இதுவேதான்
ஆரம்ப காலங்களில் என்னை கட்டிப்போட்ட
மந்திரச் சொற்கள்.
இந்த விஞ்ஞான உண்மையை அறியாமல் மக்கள் ஏன்
மூடர்களாக வாழ்கிறார்கள் என்று என்னையே திருப்பித்திருப்பி கேட்டுக்கொள்வேன்.
பிறகு யோசித்தேன்...
(1) 24 மணி நேரம்
(2)நாள்
(3)இரவ / பகல்
இந்த மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்பை
சிந்திக்கத் தொடங்கினேன்.
இறுதியில் முடிவு செய்தேன்
"இரவும் பகலும் கொண்டது ஒரு நாள்."
"நாள் என்பது இரவு பகல் கொண்டது."
"நாள் என்பது 24 மணி நேரங்கள் கொண்டிருக்கும்."
மூன்றையும் சேர்த்து நச்சுனு சொல்லனும்னா
இப்படி சொல்லலாம்.
""ஒரு நாள் என்பது 24
மணி நேரம் உள்ள இரவு பகல் கொண்டது"".
(இந்த பதிவு வரை இதைத்தான் விஞ்ஞானம் சொல்கிறது)
இதில் இரவு பகல் கொண்டது ஒரு நாள் என்பது
இயற்கையானது.
(கணக்கீட்டாளர்களுக்கு இரவு/பகல் என்றால் பிடிக்காது.அந்த
அன்பர்கள் மட்டும் பகல்/இரவு என்று திருத்தி வாசிக்கவும்)
24 மணி நேரங்கள் கொண்டது ஒரு நாள் என்பது மனிதன், தன் வசதிக்காக இரவும்
பகலும் கொண்ட ஒரு நாளை 24 பங்குகளாக்கி ஒவ்வொரு பங்கையும் மணி எனும் வார்த்தையால்
குறித்தான்.அதாவது 1 பங்கு என்பது 1 மணி நேரம் ஆகும்.
சரி விஷயத்துக்கு வருவோம்,
"24 மணி நேரத்தில் ஜும்ஆ அடைதல்" என்ற விஞ்ஞானம்
முன்னிருத்தப்பட்டதன் காரணம் என்னவென்றால்
"உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள்" என்ற கமிட்டியின்
லட்சியத்தை நிலைநிறுத்துவதற்காக
கூறப்பட்ட அசைக்க முடியாத வாதம் ஆகும்.
சரி,அவர்களின் கூற்றுப்படி 24
மணி நேரத்தில் ஜும்ஆ அடைவது என்பது ஒரே நாளில் ஜும்ஆ
அடைவதாகும்.
அதாவது 24
மணி
நேரம் சுழலும் அனைத்துப் பகுதிகளிலும்
பகலாகவே இருக்கும்
நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
ஒரு நாள் என்பது 24 மணி நேரம் கொண்ட இரவு
பகல் ஆயிற்றே என்பதுதானே?
24 மணி நேரமும் பகல் கொண்டது நாள் அல்ல.அது பூமி வட்டத்தைச் சுற்றி
வரும் நேர அளவு.
24 மணி நேரமும் பகல் கொண்டதை நாள் கணக்கிற்கு மாற்ற வேண்டுமானால்
அதனுடைய ஜோடியான 24 மணி நேரம் கொண்ட இரவை சேர்க்கவேண்டும்.
24+24 =48
இப்போதுதான்
இரவும் பகலும் கலந்திருக்கும் 48 மணி நேரமாக
இருக்கும்.
இனி நாள் கணக்கிற்கு மாற்றலாம்.
இரவு + பகல் =24 மணி நேரம்
இரவு + பகல் =24 மணி நேரம்
விடை : இரண்டு நாட்கள்
ஆக பூமிப் பந்து முழுவதும்
ஜும்ஆ தினத்தை அடைந்து கொள்ள 2 நாட்கள் ஆகும்.
பூமிப்பந்து முழுவதும் ஜும்ஆ வை அடையும்
நேரம் 24 மணி நேரம்.
புரிந்துவிட்டதா...
நாள் என்பதற்கும்
நேரம் என்பதற்கும்
வித்தியாசம் தெரியாமல் போட்ட முடிச்சு.மொட்டைக்கும்
முழங்காலுக்கும்.,.
இதில் உள்ள விஞ்ஞான மோசடி தெரியுமா?
இன்ஷா அல்லாஹ் தெரிய வைப்பேன்
இரவு
- பகல் PART 15
24 மணி நேரத்தில் ஜும்ஆ அடைதல்.
இங்குதான் மிகப்பெரிய அறிவியல் மோசடியே
உள்ளது.
பகல் எனும் ஒளியை வைத்து இரவு எனும் இருட்டை
மறைத்து பகலிலேயே ஆடிய இரவு - பகல் .
பூமியை நிலையாய் நிறுத்தி சூரியனைச்
சுற்றிவரச்செய்து ஆடிய குருட்டு விளையாட்டு.
பூமியின் IDL லில் சூரியன் உச்சியில் நின்று பின்னர்
பூமியை சுற்றி வந்து மீண்டும் IDL லை அடைந்தால் அது 24
மணி நேரம் ஆகும். சூரியன் சுற்றி வந்த பூமியின் பகுதிகள்
முழுவதும் பகலாகவே இருக்கும்.
இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.
பூமியை சூரியன் மற்றும் அனைத்து
கோள்களும் சுற்றி வருகின்றன என்று மூவாயிரம் வருடங்களுக்கு முன் (அதாவது கமிட்டி
காலண்டர் உருவாக்கப்பட்டபோது ) சொல்லப்பட்ட அற்புதமான தத்துவம்.(அந்த காலத்து
மக்களுக்கு அது அற்புதம் தானுங்கோ...).
GEOCENTRIC THEORY
புவிமையக் கோட்பாடு
சூப்பர்,
எனக்கும் இங்கிலீசு வரும்ல.
( geocentric conjunction அதாவது புவி மைய சங்கமம் மாதிரி).
விஞ்ஞானிகளால் தூக்கி குப்பையில் போடப்பட்ட
புவிமையக் கோட்பாடு.
ரொம்ப பழைய விஞ்ஞானம்.
பழசை மறக்காத கமிட்டியின் காலண்டர் என் கண்களுக்கு
வரலாற்று பொக்கிஷமாக தெரிந்தது.
அறிந்து கொண்டேன் இது
மனிதகுல காலண்டர்தான்.
மண்ணோடு மண்ணாக மக்கிப்போன மனிதகுலத்தின்
மகத்தான காலண்டர்.
இது தொல்பொருள் ஆய்வுத் துறையால் தோண்டப்பட
வேண்டிய காலண்டர்.
குறிப்பு: பூமி தன்னைத்தானே சுற்றிக கொண்டு
சூரியனைச் சுற்றுகிறது.
சூரியன் பூமியை சுற்றவில்லை.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தோண்டுவேன்.
இரவு
- பகல் PART 16
அண்ணனுக்கு எட்டுவது தம்பிக்கு எட்டாதா?
உங்கள் வினா எனக்கு விளங்குகிறது.
சிறு வயதில் பள்ளியில் விளையாடிய
விளையாட்டாயிற்றே இதற்கு இருட்டு விளையாட்டில் என்ன வேலை?
இதுதானே உங்கள் கேள்வி?
சொல்கிறேன்...
"சூரியன்" விஷயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட
தொழுகை நேர கணக்கீட்டு நடைமுறை
"சந்திரன்" விஷயத்தில் பிறை நாள் கணக்கீட்டு முறை என
ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்.
சூரியனுக்கு எட்டியது சந்திரனுக்கு
எட்டக்கூடாதா?
இதுதான் மேலே நான் கூறிய உதாரணம்.
இந்த விஷயத்தில் அவரவர் தத்தமது
நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பதால் எவருடைய நிலையையும் விமர்சிக்காமல் இருட்டில்
மட்டும் விளையாடப் போகிறேன்.
விளையாட்டை காண்பவர்களுக்கும் விளையாடும்
எனக்கும் கல்வியை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக.
பகல் எனும் வெளிச்சத்தில் அதன் பிரகாசம்
இருளை மறைக்கும் அதனால் இருட்டுக்குள் நுழைந்து அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களின்
வெளிச்சத்தில் விளையாடுவோம்.
விளையாட சொப்புச் சாமான்கள்
கேட்டது யாரு?
ஹலோ,
என்ன நக்கலா
நாம இப்ப மிதந்து கொண்டு இருப்பது
அண்டத்தில்.ஆனால் நாம் மிதப்பதை உணரமாட்டோம்.
சூரியனின் ஈர்ப்பில் தன்னையே மறந்து வருடா
வருடம் சூரியனையே சுற்றி சுற்றி வரும்போது தன்னையும் சுழற்றிக்கொள்ளும் பூமியின்
மீது அமர்ந்து கொண்டு இருக்கும் நாம்
சூரியனையும் சந்திரனையும் சொப்புச்சாமானாக
அதாவது விளையாட்டுச் சாமானாக மாற்றுவோம்.
(ஆற்றல்களும் அற்புதங்களும் அல்லாஹ்விடத்தில் மட்டுமே).
நம்மிடமுள்ள விளையாட்டுச் சாமான்கள்...
(1)பூமி
(2)சூரியன்
(3)சந்திரன்
பூமிக்கு என்ன வேலை?
நம்மை அரவணைக்க வேண்டும்.
நாம் உண்ண, உடுத்த,
உறங்க அனுதிக்க வேண்டும்.அது மட்டும் இல்லாமல் நாம் தொழுக, நோன்பு நோற்க, ஸகாத் கணக்கிட, ஹஜ் நிறைவேற்ற
தேவையான நேரம் மற்றும் காலங்களை கணக்கிட நமக்கு உதவ வேண்டும்.
**தொழுகை
இதற்கு நேரம் மட்டுமே தேவை.
** நோன்பு
** ஸகாத்
** ஹஜ்
ஆகிய மூன்றையும் கணக்கிட மாதம் மற்றும்
நாட்களை அறிந்திட வேண்டும்.
சூரியனுக்கு என்ன வேலை?
பூமிக்கு ஒளி காட்ட வேண்டும்.
மற்றும் சந்திரனுக்கும் ஒளி காட்ட வேண்டும்.
**பூமிக்கு இரவு பகல் அளிப்பது சூரியனா?
பூமிக்கு ஒளி காட்டுவது மட்டுமே சூரியனின்
வேலை.
சூரிய ஒளி பூமி உருண்டையில் பட்டவுடன்
பூமியின் ஒரு அரைக்கோளம் வெளிச்சமாக மாறும்.வெளிச்சம் படும் பூமியின் அந்த பகுதியில்
இருப்பவர்கள் தாங்கள் பகல் பொழுதில் இருப்பதாக உணர்வார்கள்.
சூரிய ஒளி பட முடியாத மறு அரைக்கோளம்
இருட்டாக இருக்கும்.அந்த பகுதியில் இருப்பவர்கள் தாங்கள் இரவுப் பொழுதில்
இருப்பதாக உணர்வார்கள்.
பூமியின் இரண்டு அரைக்கோளங்களிலும் அருகருகே அமைந்திருக்கும்
இரவும் பகலும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும்.பூமிப்பபந்தை
பொருத்தவரை இரவும் பகலும் நகராமல்
நிலையாய் இருக்கும்.
ஏன் அடிக்க வரீங்க .,
இரவும் பகலும் நகராமல் நிலையாய் நின்றால்
பின்னர் எப்படி பூமியில் இரவு பகல் மாறி மாறி வருகிறது?
பூ.. இதுக்குத்தான் அடிக்க வரீங்களா.
சொல்கிறேன்,
இன்ஷா அல்லாஹ் சொல்கிறேன்.,.
இரவு - பகல் PART 17
அண்ணனுக்கு எட்டியது
தம்பிக்கு எட்டாதா?
(தொடர்ச்சி)
பூமிப்பந்தின் மீது
நிலையாக ஒளியும் இருளும் அதாவது இரவும் பகலும் ஒன்றை ஒன்று தடுத்துக் கொண்டிருக்க
பூமியில் இரவும் பகலும் எப்படி மாறி மாறி வருகிறது
என்று நான்
விளக்கவில்லை என்றால் என்னை அடிக்க வருவீர்கள் .ஆகவே நான்
இருட்டுக்குள் நுழைகிறேன்.
(ஆற்றல்களும்
அற்புதங்களும் அல்லாஹ்விடம் மட்டுமே)
கற்பனை செய்தேன்...
பூமிக்கு இரவு பகல்
வருவதற்கு அண்டத்தில் சூரியனின் ஓட்டம்(SOLAR APEX) தேவையில்லை.சூரியனை ஆணி அடித்தாற்போல் ஒரே இடத்தில் நிறுத்தினேன்.
இரவு பகல் மாறி
வருவதற்கு
பூமி சூரியனைத்
துரத்திக்கொண்டு ஓடும் வருட ஓட்டம் தேவையில்லை.அதனுடைய சுற்றுவட்டப்பட்ட பாதையின்
ஒரு இடத்தில் அதை நிறுத்தினேன்.இப்போது சுழல்கிறது ஆனால் ஓடவில்லை.
சினிமா தியேட்டரில்
படம் பார்ப்பதற்கு உதவும் திரை (ஸ்கிரீன்)
போல பூமியை
பார்க்கும் அளவிற்கு வசதியான இடத்தை நோக்கி வானில் பிரயானித்தேன்.அந்த வசதியான
இடத்தில் நின்று பூமியை பார்த்தேன்.(வானத்தில் நிற்க முடியாது...மிதந்து கொண்டு)
அங்கே ஒரு
பிரச்சினை...
பகலிலே மேல் நோக்கி
பிரயாணித்தால் வளிமண்டலத்தை தான்டி சூரிய வெப்பம் கடுமையாக இருக்கும் என்பதால்
இரவிலே
மேல்நோக்கி பிரயாணம்
செய்து அந்த வசதியான இடத்தில் இருந்து பூமியை பார்த்த போது பூமியின் அந்த பகுதி
முழுவதும் ஒரு "இருட்டு தோசையாக" எனக்கு தெரிந்தது.
இருட்டு தோசையா?என்ன அது?
*தோசையின் வடிவம்
"வட்டம்"
*ஆப்பிளின் வடிவம்
உருண்டை
அதாவது "கோளம்"
*ஆப்பிளின் மேல்புற
காம்பு பகுதியின் மையத்தில் இரு துண்டுகளாக
வெட்டினால் கிடைக்கும் ஒரு துண்டின் பெயர் பாதி உருண்டை அதாவது "அரைக்
கோளம்"
கால்பந்து
விளையாட்டு பந்தை சற்று தொலைவில் வைத்து பார்த்தால்
அது வட்டமாக அதாவது தோசையாக தெரியும்.
இதனால்தான்
உருண்டையான பூமிப்பந்து என் பார்வைக்கு தோசையாகியது.அந்த பகுதியில்
இரவாயிருந்ததால்தான் "இருட்டு தோசையாக" தெரிந்தது.
அதானால் என்னுடைய
இருப்பிட கோணத்தை மாற்றி பூமியின் மேற்பரப்பின் உச்சிப் பகுதியில் (NORTH) வெளிச்சத்தையும் இருட்டையும் சமமாக பிரிக்கும் இடத்தை காண்பதுபோல
அமைத்துக் கொண்டேன்.
பூமியின் மீது
இரவும் பகலும் ஒன்றை ஒன்று முந்திக்கொள்ளாமலும், தடுத்துக் கொண்டும் நிலையாய் நின்றன.
பூமி சுழலும்1000 மைல் வேகத்தில் என்ன நடக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆதலால் பூமியின்
மீது சில அடையாளங்களை இட்டு நடப்பதை விளங்க முயற்சித்தேன்.
சுழலும் பூமியில்
இந்தியாவை தேடினேன்.
இந்தியா ஏன்?
அதுதானே பூமியில்
நான் வாழும் பகுதி.
சுழழும் பூமியில்
இந்தியாவை கண்டேன்.இந்தியப் பகுதி சூரியனை நேருக்கு நேராய் சந்தித்த விநாடியில்
பூமியின் இந்தியப் பகுதி மீது பச்சை நிறத்தில் புள்ளியிட்டேன்.இதன் நேர் பின்
பகுதி அமெரிக்காவாக இருந்தது.அமெரிக்கா மீது நீல நிறத்தில் புள்ளியிட்டேன்.
இந்தியா சூரியனுக்கு
நேராக நின்ற போது ஒன்றை கவனித்தேன்.இந்தியாவிற்கு அப்போது நன்பகல் 12:00 மணி.இந்தியாவின் வான் பகுதி பிரகாசமாயிருந்தது.அந்த பிரகாசம்
பூமிப்பந்தின் மீது ஏற்படுத்திய அரைவட்டமமும், அரைவவட்டத்தின்
இருவிளிம்புகளும் வில்லினுடைய வளைவின் உச்சியில் இந்தியா இருப்பது
போலிருந்தது.அதன் இருபக்க சரிவு வளைவுகளின் இறுதிப் பகுதிகளில் பிரகாசம் குறைந்து
இரு வளைவுகளிலும் சிகப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களை பிசைந்து நான் விரும்பி உண்ணும்
கலர் கேசரி போலிருந்தது.
(வானம் நீலமாக
சிகப்பாக மற்ற நிறங்களாக தெரிவது வளிமண்டலம் சூரிய ஒளியை சிதறடிப்பதால்- அதனுடைய
செய்தி இங்கு தேவையில்லை)
பூமி - சூரியன் என்ற
கோணத்தில் பார்த்தால்
இந்தியாவின்
இடப்புறம் ஒரு கேசரி பூசிய பகுதி.
இந்தியாவின்
வலப்புறம் ஒரு கேசரி பூசிய பகுதி.
இந்தியாவின் இடப்புற
வளைவில் இருக்கும் கேசரி பூசிய பகுதி "மேற்கு".
இந்தியாவின் வலப்புற
வளைவில் இருக்கும் கேசரி பூசிய பகுதி " கிழக்கு".
(மேலே உள்ள செய்திகளை
மீண்டும் மீண்டும் படித்தால் எளிதில் விளங்கும்.இன்ஷா அல்லாஹ்)
இந்தியா -பச்சை,
நேரம் நன்பகல் 12 மணி.
அமெரிக்கா -நீலம், நேரம் நள்ளிரவு 12 மணி.
இப்போது பூமி
சுழல்கிறது.பச்சைப் புள்ளி இடப்புறத்தை நோக்கியும்
(மேற்கை நோக்கி),
நீலப் புள்ளி
வலப்புறத்தை நோக்கியும் (கிழக்கை நோக்கி)அதாவது இட வல சுழற்சியை பூமி
மேற்கொள்கிறது.
பச்சை: நேரம்
-மதியம் 2
மணி
நீலம் : நேரம் -அதிகாலை 2 மணி
பச்சை:நேரம் - மாலை 4 மணி
நீலம் :நேரம் - அதிகாலை 4 மணி
பச்சை:நேரம் - மாலை 5.30 மணி
நீலம் : நேரம் - அதிகாலை 5.30 மணி
பச்சைப் புள்ளி
பகுதி அதாவது இந்தியா இப்போது இடது பக்க கேசரி பூசப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததால்
அதன் வான் பரப்பு சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறமாகியது.இது
சாயங்காலமாகும்.இருட்டுவதற்கு முந்தைய நிலை.
நீலப் புள்ளி பகுதி
அதாவது அமெரிக்கா இப்போது வலது பக்க கேசரி பூசப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததால் அதன்
பரப்பும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறமாகியது.இது பொழுது விடிவதற்கு முந்தைய நிலை.
பூமி சுழன்று
கொண்டேயிருக்கிறது.
இந்தியா -5.45 அந்திசாயும் நேரம்.
இன்னும் சில
நிமிடங்களில் இருள் சூழ்ந்துவிடும்.
அமெரிக்கா - 5.45 அதிகாலை.
இன்னும் சில
நிமிடங்களில் பொழுது விடிந்துவிடும்.
பூமியின் மீது நான்
இட்ட புள்ளிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் அந்த
அதிசயம் நடந்தது.
ஆம்
இந்தியாவில் இரவு 6 மணி
அமெரிக்காவில் பகல் 6 மணி
இந்தியாவின் பகல்
பகுதி இரவுக்குள் நுழைந்தது.
அமெரிக்காவின்
இரவுப் பகுதி பகலுக்குள் நுழைந்தது.
பூமியின் மீது
நிலையாய் நின்று கொண்டிருக்கும் இரவுக்குள்ளும் பகலுக்குள்ளும் பூமி சுழன்று
பூமிக்கு இரவு பகலை மாறி மாறி வரச்செய்வதை அறிந்தேன்.
(பூமியை சூரியன்
சுற்றினாலும் பூமியில் இரவு பகல் ஏற்படும்.இரவும் பகலும் பூமியில் ஒன்றன் பின்
ஒன்றாக வரும்.
ஆனால்பூமியின் இரவு
பகலுக்குள் நுழையாது பூமியின் பகல் இரவுக்குள் நுழையாது.)
இரவுக்குள் பகலை
நுழைக்கிறோம்
பகலுக்குள் இரவை
நுழைக்கிறோம்
என்ற குர்ஆன்
வசனத்தை ஓதியதன் அர்த்தத்தை உணர்ந்தேன்.
********பூமி சுற்றுகிறது எனக் கூறும் வசனம் குர்ஆனில் இருக்கிறதா என்று கேட்டது யார்?*********
பூமியின் மீது
மேலும் நான் கண்ட காட்சிகள்...
இந்தியா இரவுக்குள்
நுழைந்தபோது அதன் பகல் எனும் ஆடையை உரித்து இரவு எனும் போர்வையால்
போத்திக்கொண்டது.
அமெரிக்கா
பகலுக்குள் நுழைந்தபோது அதன் இரவு உதிர்ந்தது.அங்கே ஒரு அதிசயம் நடந்தது.இரவு
பின்வாங்கியது.அமெரிக்காவின் அதிகாலை இருட்டு அதற்கு மேல் முன்னேற முடியாமல்
பகலால் தடுக்கப்பட்டு இரவு பின்வாங்கி
அதாவது இரவு
பின்னோக்கி சென்றது.
இந்த காட்சிகளை
கண்டபோது என் உள்ளத்தில் குர்ஆனின் பல வசனங்கள் எழுத்துக்களாய் ஓடியது.
இந்த
வசனங்களுக்கெல்லாம் நானாக பொருள் கொண்டு தர்கித்து பெருமையடித்து பேசியது என்
நெஞ்சில் ஏற்படுத்திய வலியில் அல்லாஹ்வின்பால் ஸஜ்தாவில் விழுந்தேன்.
ரப்பீ ஸித்னீ யில்மா
என் இறைவா எனக்கு
கல்வியை அதிகமாக்கு.
ரப்பனா ஸித்னா
யில்மா
எங்கள் இறைவா
எங்களுக்கு கல்வியை அதிகமாக்கு.
இன்ஷா அல்லாஹ்
அதிகமாக்குவான்.
இரவு
- பகல் PART 18
அண்ணனுக்கு எட்டுவது தம்பிக்கு எட்டாதா? (தொடர்ச்சி)
நிலையாய் நிற்கும் இரவுக்குள்ளும்
பகலுக்குள்ளும் பூமி சுழல்வதால் இரவு பகல் மாறி மாறி வருவதை அறிந்து கொண்டேன்.
இரவு பகலை ஏற்படுத்துவது சூரியன் அல்ல
என்பதையும் பூமியானது சூரியனை பார்த்துக் கொண்டே தன் மீது நிலையாய் படர்ந்துள்ள
இரவுக்குள்ளும் பகலுக்குள்ளும் சுற்றி சுற்றி வருவதால் இரவு பகல் பூமிக்கு
ஏற்படுகிறது என்பதை அறிந்தேன்.
இரவு பகல் ஏற்படுவது பூமியின்
சுழற்சியால்தான்.
சரி ,மனிதர்கள் தொழகை நேரத்தை அறிய பூமி எப்படி உதவுகிறது?
(ஆற்றல்களும் அற்புதங்களும் அல்லாஹ்விடம் மட்டுமே).
நான் இன்னும் அந்த வசதியான இடத்திலேயே
நிற்கிறேன். ஸாரி, மிதக்கிறேன்.
பூமி சுழன்று கொண்டிருக்கிறது.பூமியின் மீது
நான் குறித்த இரண்டு புள்ளிகளும் சுழன்று கொண்டிருக்கிது.
பூமிப்பந்து சுழன்று இந்தியப் பகுதி சூரியனை
நேராக பார்த்து சற்று விலகிய போது இந்தியாவில் நன்பகல்.அதாவது 12:05
**லுஹர் தொழுது கொண்டிருந்தார்கள்.**
அதற்கு நேர் பின்னால் இருந்த அமெரிக்காவில்
நள்ளிரவு.அதாவது 00:05
**இஷாவின் வக்து முடிந்து தஹஜ்ஜத் தொழுது கொண்டிருந்தார்கள்.**
இந்தியாவின் இடப்புறம் கேசரி பூசப்பட்ட
மேற்கில் இருந்த பிஜி தீவில் மாலைப்பொழுது.அதாவது 18:05
**மஃரிப் தொழுது கொண்டிருந்தார்கள்.**
இந்தியாவின் வலப்புறம் கேசரி பூசப்பட்ட
கிழக்கில் இருந்த லண்டனில் விடியற்காலை.அதாவது 6:05
**பஜ்ர் தொழுது கொண்டிருந்தார்கள்.**
இதை பார்த்த எனக்கு ஒன்று விளங்கியது.அதாவது
பூமியில் நேரம் என்பது ஒருவருக்கொருவர் வேறுபட்டது.அவரவர் இருக்கும் பகுதிக்கேற்ப
நேரம் மாறுபடும்.ஒரு பகுதியினரின் நேரம் வேறு பகுதியினருக்கு பொருந்தாது என
அறிந்தேன்.
நேரத்தை அறிவதன் மூலம் மட்டுமே தொழுகை
நிறைவேற்றப்படுகிறது.ஆக தொழுகையை நிறைவேற்ற நேரத்தை தவிர்த்து வேறு எதுவும்
தேவையிலை.
அதாவது சூரியன் மற்றும் பூமியின் சுழற்சி
ஆகிய இந்த இரண்டைத் தவிர வேறு எந்த ஒன்றும் தொழுகைக்கு தேவையில்லை.
அதெல்லாம் சரி, பூமிக்கு மேலே
நிற்கும் நான் எந்த நேரத் தொழுகையை நிறைவேற்றுவது?
அறிந்துகொண்டேன்,
மனிதர்கள் தொழுகையை பூமியில் இருந்து
மட்டுமே நிறைவேற்ற முடியும்.பூமி சுழல்வதால் பூமியில் மாறும் நேர மாற்றங்களை
கொண்டு தாங்கள் எந்த தொழுகைக்கு உரிய நேரத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து
தொழுகையை நிறைவேற்ற முடியும்.
தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள பூமியைத்
தாண்டி மேலே செல்ல வேண்டிய அவசியமில்லையோ எனத் தோன்றியது.
பூமியில் இருந்து பார்க்கும் போது பூமியின் சுழற்சியால்
அவரவர் வான்பரப்பில் நிகழும்
*சூரிய உதயம்
*சூரிய உச்சம்
*சூரிய மறைவு
*நட்சத்திரம் தெளிவாகத் தெரிதல்
ஆகிய இவற்றைக் கண்டு கொண்டு தங்களுடைய
தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள முடியும்.
இப்போது எனக்கு ஒரு சந்தேகம்,
ஒருவேளை பார்ப்பவர்களின் பார்வையை மேகம்
அல்லது வேறு ஏதாவது இயற்கை காரணிகள் மறைத்து அதனால் தொழுகை நேரங்களை அறிய
முடியாமல் போனால் என்ன செய்வார்கள்?
யோசித்தேன் ஒரு முடிவுக்கு வந்தேன், தினமும் தொழகையை
தவறாமல் பேனுபவரால் ஒரு தொழுகைக்கும் மற்றொரு தொழுகைக்கும் இடையே உள்ள நேரத்தை
உணர்வால் அறிந்து கொள்ள முடியும்.அவர் அதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மட்டுமே
வானத்தை பார்த்து முடிவு செய்து கொள்கிறார்.தொழுகை நேரம் வந்து கொண்டிருக்கிறதா என
வானத்தை பார்த்துக்கொண்டே இருக்க மாட்டார் என முடிவு செய்தேன்.
அவர் உணர்ந்து கொள்ளும் தொழுகை நேரத்தை
உறுதி செய்ய வானத்தைப் பார்க்கும்போது மேகம் மறைத்தால்,அவர் உணரும்
நெருக்கமான நேரத்தில் தொழுது கொள்ள முடியும்.ஏனென்றால், அல்லாஹ் எவரையும்
சக்திக்கு மீறி துன்புறுத்துவதில்லை.
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...
ஒரு தடவை நான் மதியம் சாப்பிட்ட பின்னர்
கடிகாரத்தை பார்த்தேன். 3 மணி.
சரி,
அசர் தொழுகைக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே என்று
நினைத்து சற்று கண்ணயர்ந்தேன்.
திடீர் என முழித்துப் பார்த்தேன் மணி 3.10.தொழுகை நேரம் இன்னும்
வரவில்லை. மீண்டும் தூங்கினேன்.பிறகு தூக்கம் கலைந்து அசர் தொழுகைக்கு
நேரமாகிவிட்டதோ என நினைத்து கடிகாரத்தை பார்த்தேன் மணி அதே 3.10. வெளியில் வந்து
பார்த்தேன்.மஃரிபுக்கான பாங்கோசை கேட்டது.பிறகுதான் பார்த்தேன் கடிகாரத்தில்
பேட்டரி பொங்கியிருந்தது.உடனே அசரையும் மஃரிபையும் நிறைவேற்றினேன்.பிழை பொருக்க
அல்லாஹ் போதுமானவன்.
இந்த சம்பவத்தை சேர்த்து பார்க்கும்போது ஒரு
முடிவுக்கு வரமுடிகிறது.
நவீன விஷயங்களிலும் பிழை நிகழ வாய்ப்பு
உள்ளது.
விஞ்ஞானத்தின் உறுதியால் நாம் வழிபாட்டு
விஷயங்களில் அலட்சியமாக இருப்பதைவிட விஞ்ஞானம் இல்லாமல் எச்சரிக்கை உணர்வோடு
வானத்தைப் பார்ப்பதே வழிபாட்டு விஷயங்களுக்கு உகந்தது என உறுதியோடு மொழிந்தேன்.
(நேரம் என்பதை வரையறுத்த நாம் நாள் என்பதையும் வரையறுப்போம்)
இன்ஷா அல்லாஹ் இன்னும் மொழிவேன்.
இரவு
- பகல் PART 19
அண்ணனுக்கு எட்டியது தம்பிக்கு எட்டாதா? (தொடர்ச்சி)
இதுவரை பூமியின் நேரம் என்பதைப் பற்றி
அறிந்தது என்னவென்றால்,
பூமியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே
நேரம் கிடையாது.அவரவர் இருக்கும் பகுதியில் இருக்கும் தொலைவின் வித்தியாசம், நேரத்தை வேறு வேறாக
காட்டுகிறது. ஒரு பகுதியில் பார்க்கப்படும் சூரிய உதயம் மற்றொரு பகுதியை
கட்டுப்படுத்தாது என்பதை அறிந்து கொண்டேன்.
நாள் என்றால் என்ன?
பூமிப்பந்தில் ஒரு புள்ளி இட்டு அந்த
புள்ளியில் சுற்றை துவங்கி மீண்டும் அந்த புள்ளியிலேயே சுற்றை முடிப்பது பூமியின்
ஒரு நாள் என நான் அறிந்து வைத்திருந்தேன்.
ஆகவே ஏற்கனவே நான் இட்டு வைத்திருக்கும்
புள்ளியை வைத்து இதை உணர்ந்துகொள்ள முயல்கிறேன்.
(ஆற்றல்களும் அற்புதங்களும் அல்லாஹ்விடம் மட்டுமே)
நான் இன்னும் அந்த வசதியான இடத்திலேயே
நின்று (மிதந்து)
கொண்டிருக்கிறேன்.
சூரியன் ஆணி அடிக்கப்பட்ட மாதிரியும் பூமி
சூரியனை பார்த்துக் கொண்டே தன்னை சுழற்றிக் கொண்டும் உள்ளது.
பூமிப்பந்தின் மேற்பரப்பில் பூமத்திய
ரேகைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் இந்தியாவிலும் அதற்கு நேர் பின்னால்
அமைந்திருக்கும் அமெரிக்காவிலும்
நான் இட்ட பச்சை மற்றும் நீலம் ஆகிய இரு
புள்ளிகளும் இட வல சுழற்சியில் இருந்தன.
இந்தியாவின் மீது நான் இட்ட பச்சைப் புள்ளி
சூரியனை நேருக்கு நேராய் சந்தித்த அந்த வினாடியில் இருந்து இடது புறமாக சுழன்று
மேற்கிலும் கிழக்கிலும் நுழைந்துவெளியேறி மீண்டும் சூரியனை நேருக்கு நேராய்
சந்தித்தபோது பூமியின் நேரக்கணக்கில் 24
மணிநேரம் ஆனது.(24h.
+30 or -30 sec)
அமெரிக்காவின் மீது நான் இட்ட நீலப்
புள்ளியை தேடினேன். அதுவும் சுழன்று வந்து சூரியனை நேருக்கு நேராய் சந்தித்து பின்னரும்
சுழன்று மீண்டும் சூரியனை பார்த்தபோது பூமியின் நேரக்கணக்கில் அதே 24 மணி நேரம்.
********பூமியின் மீது வரையப்பட்ட புள்ளி சூரியனை துவக்கமாக கொண்டு
வட்டமடித்து மீண்டும் சூரியனில் முடித்தால் அது பூமியின் நேரக்கணக்கில் 24 மணி நேரமாக
கருதப்படும்.*******
மேலும்,இரு புள்ளிகளும் சுழன்று கொண்டிருந்தபோது ஒரு நிகழ்வை
கண்டேன்.பச்சைப்புள்ளி சூரியனைப் பார்த்ததற்கு பிறகு சரியாக 12 மணி நேரம் கழித்தே
நீலப் புள்ளி சூரியனை சந்தித்தது.ஆகவே முடிவு சய்தேன்...
**********பூமிப்பந்தின் மேற்பரப்பில் வரையப்பட்ட இரு நிலைப்
புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு மாறாததால் அவற்றிற்க்கு இடையே உள்ள நேரமும்
மாறாதது*************
அதாவது இரு நாடுகளுக்கு இடையே உள்ள மாறாத
தூரத்தைப் பொருத்து அவற்றிற்கு இடையேயான நேரமும் மாறாமல் இருக்கும்.
இப்போது பூமி சுழல்கிறது...
நாள் என்பதை துவங்க வேண்டும்.
எதைக்கொண்டு ஒரு நாளை துவங்குவது?
பூமியின் பெரும்பாலான வான் பரப்பில் நான்கு
விதமான. நிலையான நிகழ்வுகள் நிகழ்கின்றன.
*சூரிய உச்சம்
*சூரிய உதயம்
*சூரிய மறைவு
*நள்ளிரவு
இந்த நான்கு நிகழ்வுகளில் எதைக்கொண்டு
வேண்டுமானாலும்
ஒரு நாளைத் துவங்க முடியும்.பூமிப்பந்தின் ஒரு நிலைப்புள்ளி இந்த நான்கில் எந்த
ஒன்றைக்கொண்டு நாளைத் துவங்கி சுழன்று மீண்டும் துவங்கியதில் சுற்றை முடித்தால்
அது பூமி நேரத்தில் 24 மணி நேரம் என்று அர்த்தம்.
***நடைமுறையில் நள்ளிரவில் நாள் துவங்குகிறது.சில சர்ச்சைகளும்
இதில் உள்ளது.
***மிகப் பழைய காலமாக பெரும்பகுதியினருக்கு சூரிய மறைவில் அதாவது
மஃரிபில் நாள் துவங்குகிறது.
***சமீப காலமாக சிலர் சூரிய உதயத்தை அதாவது பகலை நாளின்
துவக்கமாக்க முயற்சிக்கின்றனர்.
மேலே உள்ள மூன்றிலும் சர்ச்சை கூடுதல்
குறைதல் இருப்பதால்
நான் சூரிய உச்சத்தைக் கொண்டு நாளைத் துவங்க
முடிவு செய்தேன்.
இந்தியா சூரியனை நேருக்கு நேராக பார்த்துக்
கொண்டிருக்கிறது.அந்த வினாடியை குறித்துக் கொண்டேன்.எனக்குத் தெரியும் இந்தியா
மீண்டும் அது துவங்கிய இடத்திற்கே திரும்பினால் அது இந்தியாவிற்கு 24 மணி நேரம்.
இந்தியா இடப்புறமாக சுழல்கிறது...
மணி 12.15
மதியம்
இந்தியாவில் இருப்பவர்கள் லுஹர்
தொழுகிறார்கள்.
மணி 6.05
மாலை
(இரவையும் பகலையும் பிரிப்பது போல் இருக்கும் கேசரி பூசப்பட்ட
வான் பரப்பில் புகுந்த இந்தியா தன் மக்களுக்கு மஃரிப் வக்தை செந்நிறமாக
காட்டிக்கொண்டே இரவு எனும் போர்வைக்குள் நுழைந்தது)
இந்தியாவில் இருப்பவர்கள் மஃரிப் தொழுகிறார்கள்.
மணி 8.30
இரவு
இந்தியாவில் இருப்பவர்கள் இஷா
தொழுகிறார்கள்.
மணி 12.05
நள்ளிரவு
இந்தியாவில் இருப்பவர்கள் தஹஜ்ஜத் நேரத்தை
அறிகிறார்கள்.
மணி 4.40
அதிகாலை
(கேசரி பூசப்பட்ட பகுதியின் துவக்கத்தில் நுழைந்தவுடன்
இந்தியாவின் வான்பரப்பு கறுப்பு கயிறிலிருந்து வெள்ளை கயிராக மாறத் தொடங்கியது)
பஜ்ர் தொழுகையின் நேரம் துவங்கியது.
மணி 6.00
காலை
(இந்தியாவின் இரவு
உரிக்கப்பட்டு
வைகரையால் தடுக்கப்பட்டு பகலை முந்திச் செல்ல முடியாமல் இரவு
பின்வாங்கியது)
இந்தியாவில் பொழுது விடிந்தது.
அதாவது பகலாகியது.
மணி 11.50
காலை
இன்னும்10
நிமிடத்தில் சூரியனை நேருக்கு நேராய் சந்தித்த அதே இடத்திற்கு
இந்தியா வந்துவிடும்.
மணி 12.00
நன்பகல்
ஆம்.,24
மணிநேரத்தில் இந்தியா சூரியனை நேருக்கு நேராய் சந்தித்த அதே
இடத்தில் தன்னுடைய ஒரு நாள் சுற்றை முடித்துக்கொண்டு அடுத்த நாள் சுற்றுக்காக
இடப்புறமாக சுழலத் தொடங்கியது.
அந்த சமயத்தில் நான் ஒரு ஆச்சர்யத்தை
அடைதேன்...
பூமி இந்தியாவிற்கு மட்டுமே ஒரு நாள் சுற்றை
முடித்துக்கொடுத்திருக்கிறது.
இந்தியாவிற்கு நேர் பின்னால் இருந்த நீலப்
புள்ளி அதாவது அமெரிக்கா.,இந்தியா தன்னுடைய நாள் சுற்றை தொடங்கிய 12 மணிநேரம் கழித்தே
சூரியனை நேருக்கு நேராய் சந்தித்து அதன் நாள் சுற்றை தொடங்கியது.
ஆக இந்தியாவினுடைய 24 மணிநேர நாள் சுற்று
முடிந்ததற்கு பிறகு மேலும் 12 மணி நேரம் கழித்தே அமெரிக்காவினுடைய நாள் சுற்று முடிகிறது.
ஒரு முடிவுக்கு வந்தேன்
பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து
நாடுகளும் ஒரு பொதுவான இலக்கை நேருக்கு நேராய் நோக்கி தங்களுடைய நாள் சுற்றை
ஆரம்பித்து பின்னர் ஆரம்பத்தில் தொடங்கிய அதேநிலைக்கு மீண்டும் வந்து சுற்றை
முடிக்க 47 மணி நேரம் 59 நிமிடம் 59 வினாடி ஆகும்.அதாவது 48 மணி நேரம் ஆகும்.
(பொது இலக்காக சூரிய உதயம்,சூரிய உச்சம்.,சூரிய மறைவு மற்றும் நள்ளிரவு ஆகிய இந்த நான்கில் எதைக்கொண்டும்
நாளை தொடங்கலாம்)
பூமி சுழல்வதை அடிப்படையாகக் கொண்டு
கணக்கிடப்படும், பூமியின் அனைத்து நாடுகளின் ஒரு நாளை 24 மணிநேரத்தில்
அடைப்பது என்பது
"ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும்" என்பதைப் போன்றது.
ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்த நிகழ்வு
எப்படி என்று தெரியுமா உங்களுக்கு?