Wednesday, 15 June 2016

பிறை மீரான்: காலண்டர் என்றால் என்ன?

காலண்டர் என்றால் என்ன?

பிறையின் வடிவங்கள் "நாட்காட்டிகள்" அதாவது காலண்டர் என ஒரு கூட்டம் கூறிக்கொண்டிருப்பதால் முதலில் காலண்டர் என்றால் என்னவென்று பார்ப்போம்.
நம்மிடம் இருக்கும் பிறைகாலண்டர்,ஆங்கில காலண்டர்,தமிழ் காலண்டர் என அனைத்துக் காலண்டர்களையும் ஓரங்கட்டி வைப்போம்.
நாம் சற்று பின் நோக்கிச் காலண்டர் இல்லாத காலத்துக்குச் செல்வோம்.
இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.இரவு/பகல் கொண்டதை "ஒரு நாள்" என்று கூறி ஒவ்வொரு நாளையும் "கிழமை"யால் வரிசைப்படுத்தினர்.ஞாயிறு,திங்கள் என்றவரிசையில் ஏழு கிழமைகள்.ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் இது சுழன்று வரும்.
இன்றைய சூரிய உதயம் திங்கள் கிழமை என்றால் எட்டாவது சூரிய உதயம் மீண்டும் திங்கள் கிழமை.
இவ்வளவுதான் அவர்கள் அறிந்திருந்தது.
அடுத்து விவசாயம் செய்து சம்பாரிக்கத் தெரிந்த சமுதாயம் வந்தது.
அந்த மக்கள் அந்தந்த காலநிலையின் பருவத்திற்கேற்ப பயிர் செய்தனர்.
அப்போதுதான் அவர்கள் ஒன்றை அறிந்து கொண்டனர்.அதாவது ஒவ்வொரு பருவமும் ஒரு குறிப்பிட்ட சீரான இடைவெளியில் மீண்டும் மீண்டும் வருவதை அறிந்தனர்.
வெயில் காலம் ஒரு பருவம்
மழை காலம் ஒரு பருவம்
குளிர் காலம் ஒரு பருவம்
இது போல பருவங்களை அறிந்து அதற்கேற்றவாறு பயிர் செய்தனர்.
ஒரு பருவத்திலிருந்து மீண்டும் அதே பருவத்தை அடைவதை "ஒரு ஆண்டு" என்றனர்.
உதாரணமாக
ஒரு மழைக்காலத்திலிருந்து மீண்டும் அதே மழைக் காலத்தை அடைவதை ஒரு ஆண்டாக கணக்கிட்டனர்.
ஒரு பருவம் துவங்கப்போவதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர்.
ஒரு பருவம் துவங்குவதை எப்படி அறிய முடியும்?
தொடரும்

காலண்டர் என்றால் என்ன? Part 2

பருவங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் உள்ள தொடர்பை அவர்கள் அறிந்தனர்.
அதாவது மழை பொழியும் பருவம் சுமார் 30 நாட்கள் என்றால் அந்த முப்பது நாட்களும் சூரியனுக்கு அருகில் ஒரு நட்சத்திரம் இருப்பதை அறிந்தனர்.
குளிர் அடிக்கும் பருவம் சுமார் 30 நாட்கள் என்றால் அந்த முப்பது நாட்களும் சூரியனுக்கு அருகில் வேறு ஒரு நட்சத்திரம் இருப்பதை அறிந்தனர்.
ஆகவே பருவங்களை அறிந்துகொள்வதற்காக நட்சத்திரங்களை பின்பற்ற தொடங்கினர்.
வான்வெளியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்த போதிலும் பூமியின் பார்வையில் சூரியன் பயணிக்கும் பாதையில் உள்ள சில நட்சத்திரங்களை மட்டும் கணக்கில் கொண்டனர்.
மழைக்காலப் பருவத்தில் சூரிய உதயத்திற்கு முன்னால் சூரியனுக்கருகில் உதிக்கும் ஒரு நட்சத்திரம் தினமும் நான்கு நிமிடம் முன்னதாக உதித்து 30 நாட்களில் சூரியனிலிருந்து தொலைவாகச் சென்று நள்ளிரவில் உதித்து பின்னர் இன்னும் பின்னால் சென்று மக்ரிபில் உதிக்கும்.இப்படியே சென்று மீண்டும் ஒரு தடவை சூரிய உதயத்திற்கு முன்பாகவே உதிக்கும்.
அப்போது மீண்டும் மழைக்காலம் ஆரம்பமாகும்.இந்த கால அளவை "ஒரு ஆண்டு" எனக் கூறினர்.
ஆக.,ஆண்டு என்பது ஒரு நட்சத்திரத்தின் உதயத்திலிருந்து மீண்டும் அதே இடத்தில் அந்த நட்சத்திரம் உதயமாகும் கால அளவாகும்.
இதில் மாதம் என்பது என்ன?
தொடரும்

காலண்டர் என்றால் என்ன? Part 3

நட்சத்திரம் உதித்து மீண்டும் அதே இடத்தில் உதிப்பதை ஆண்டு என்றனர்.இந்த சம்பவம் நிகழ்வது சுமார் 360 நாட்களுக்கு ஒரு முறை என கணக்கிட்டனர்.சில சமுதாயங்கள் 365 நாட்கள் என்றும் வேறு சில சமுதாயங்கள் 366 நாட்கள் எனவும்,இது மாதிரி ஒவ்வொரு நாட்டினரும் ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் ஒரு ஆண்டிற்கான நாட்களை கணக்கிட்டனர்.
இந்த 365 நாட்களை இன்னும் எளிமையாக நினைவுகூற அந்த நாட்களை சிறு சிறு கூறுகளாக்கினர்.அவர்கள் கணக்கிடும் 12 நட்சத்திரங்களின் இடையே உள்ள தொலைவு சுமார் 30 நாட்கள் என்பதால் ஒரு ஆண்டை 12 கூறுகளாக்கி அதை "மாதம்" என்று அழைத்தனர்.ஒரு மாதத்திற்கு சுமார் 30 நாட்கள் என்றும் கணக்கிட்டனர்.
வானத்தில் சூரியன் ஓடும் பாதையில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்து இது என்ன பருவகாலம்.,இந்த பருவகாலம் முடிய இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்பதை பார்த்த உடனேயே அறிந்தனர்.
இந்த நிகழ்வுகளை பதிவு செய்யத் தொடங்கினர்.பதிவு செய்ததை வைத்து வரக்கூடிய மாதங்களில் நிகழ இருக்கும் பருவங்களையும் பதியத் தொடங்கினர்.அதாவது "காலண்டர்" தயாரித்தனர்.
அவர்களின் காலண்டர் படி நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியது.அதாவது அவர்கள் குறித்த அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த இடத்தில் நட்சத்திரம் இருந்தது.
இப்படியாக மனிதன் நட்சத்திரங்களை பார்த்து பருவங்களை அறிந்ததை மறந்து விட்டு காலண்டரை பார்த்து பருவங்களை அறியத்தொடங்கினான்.
காலண்டர் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பல்ல.நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வானத்தைப் பார்த்து அறிந்து வந்த ஒன்றை நமக்காக ஏட்டில் ஏற்றிவிட்டுச் சென்றது.
நாம் தற்போது பயன்படுத்தும் ஆங்கிலக் காலண்டர் அதாவது கிரிகோரியன் காலண்டர் இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்தவக் காலண்டர் என்கிறார்களே, அது உண்மையில் நம் முன்னோர்களாள் நமக்கு அளிக்கப்பட்டு நாம் பருவங்களை அறிவதற்கான அற்புதமான பருவகாலண்டர்.
தொடரும்

காலண்டர் என்றால் என்ன? Part 4

நாம் தற்போது உபயோகிக்கும் ஆங்கிலக் காலண்டர் கிறிஸ்தவக் காலண்டர் அல்ல.இது ஒரு பருவ காலண்டர்.இந்த பருவகாலண்டரில் சீஸன்கள் சீரான இடைவெளியில் வந்ததால் கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகைகளை இந்த காலண்டரின் படி மாற்றிக் கொண்டனர்.தேவாலயங்கள் அதிகாரம் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப் பட்டதால் இது கிறிஸ்தவக் காலண்டர் எனப்படுகிறது.
ஆங்கிலக் காலண்டர்க்கு முன்பாக இருந்த காலண்டரின் பெயர் "ஜூலியன் காலண்டர்".இதுவே ஐரோப்பா முழுவதும் பிரபலமாக இருந்த காலண்டர்.
ஜூலியன் காலண்டர் "கிரிகோரியன்" என்ற கிறிஸ்தவ தலைவரால் சீர் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்ட ஆண்டு 1582 ஆம் வருடம்.
ஆனால்,மேற்குலக அனைத்து நாடுகளும் உடனே ஏற்றுக்கொள்ள வில்லை.சில நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுவதை பார்த்த மற்ற நாடுகள் படிப்படியாக தங்கள் காலண்டரை மாற்றிக் கொண்டு கிரிகோரியன் காலண்டரை பின்பற்றத் தொடங்கின.
பருவ சுழற்சியை காட்டும் கிரிகோரியன் காலண்டரின் துல்லியமான தன்மையால் கவரப்பட்ட இங்கிலாந்து 1782 ம் வருடம் தன் நாட்டில் கிரிகோரியன் காலண்டரை அமுல்படுத்தியது.அது முதல் அது பிரிட்டிஸ் காலண்டர் என்றும் ஆங்கிலக் காலண்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கிலாந்து தான் ஆட்சி செய்த நாடுகளில் படிப்படியாக ஆங்கிலக் காலண்டரை நடைமுறைப்படுத்தியது.அதாவது அந்தந்த நாடுகளில் பொது விஷயங்களுக்கான காலண்டராக ஆங்கிலக் காலண்டர் மாறியது.அந்த நாடுகள் ஏற்கனவே வைத்திருந்த காலண்டரை பிராந்திய அளவில் பண்டிகைகளுக்கு மட்டும் பயன்படுத்தினர்.காலப்போக்கில் ஆங்கிலக் காலண்டரின் வெற்றிகரமான பருவசுழற்சியால் தங்களின் பண்டிகைகளையும் நிலையான பருவங்களில் வருமாறு ஆங்கிலக் காலண்டரோடு இனைத்து விட்டனர்.
இந்த வரிசையில் ஆங்கிலக் காலண்ரை 1923 ல் ஏற்றுக் கொண்ட கிரீஸ் நாடுதான் கடைசி நாடு.
இன் ஷா அல்லாஹ் தொடரும்
பிறை மீரான்