சந்திரனின் அமைப்பு விதிகளைப் பொறுத்தவரையில்,
• மக்களுக்குத் தேதியை அறிவிக்கும் அதன் படித்தரம் (அல்குர்ஆன் 2:189),
• ஆண்டுகளின் கணக்கீட்டிற்கு அதன் மனாஜில் (அல்குர்ஆன் 10:5),
• சந்திரன் ஒருநிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறிச்செல்லும் நிலை (அல்குர்ஆன் 84:19),
• அதன் மனாஜிலில் இறுதியாக உர்ஜூஃனில் கதீம் என்ற படித்தரம் (அல்குர்ஆன் 36:39),
• பிறகு பிறை மறைக்கப்படும் நிலை (நபிமொழி),
• பிறகு சூரியனை பின்தொடரும் நிலை (அல்குர்ஆன் 91:2)
• அதன் பாதையில் அதன் துல்லியமான இயக்கம் (அல்குர்ஆன் 55:10, 14:33)
தங்களது தவறான காலண்டரை நிலை நிறுத்துவதற்காக சில இயக்கங்கள் கிப்லாவை மாற்ற பாடுபட்டதையும், குர்ஆனின் வசனங்களை திரித்ததையும் ஏற்கனவே நீங்கள் விளங்கி இருப்பீர்கள். மேலே மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டவை அமாவாசையை கணக்கிட்டு அதனடிப்படையில் நோன்பு பிடித்து பெருநாள் கொண்டாடிவரும் வழிகெட்ட கமிட்டியின் கொள்கை முழக்கமாகும். சந்திரனுக்கே அமைப்பு விதிகளை (பைலா) அமைத்துக் கொடுத்தவர்கள் இவர்கள்தாம். இவர்கள் சந்திரனுக்கு கொடுத்த அமைப்பு விதிகளின் உண்மை நிலையை ஏற்கனவே திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் பாகம்-1 & பாகம்-2 இல் விளக்கியிருந்தோம். அவற்றில் 2:189, 10:5 & 36:39 ஆகிய குர்ஆன் வசனங்களுக்கான விளக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த ஆக்கத்தில் 84:19 & 91:2 ஆகிய வசனங்களுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கமும் அதன் உண்மை நிலையையும் பார்ப்போம்.
84:17, 18. இரவின் மீதும், அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!
84:19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.
மேலுள்ள குர்ஆன் வசனம் சந்திரன் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதைக் குறிக்கிறதாம். இந்த வசனத்திற்கு அப்படி ஒரு பொருள் இருந்தால் நாம் அதை மறுப்பவர்களாக இல்லை. ஆனால் இந்த செயல் காலண்டரை நிலைநாட்டுவதற்காக குர்ஆனை திரித்து இவர்கள் செய்யும் கயமைகளை வெளிச்சமிடுவதால் அதை நாம் மக்களுக்கு விளக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
18 ஆம் வசனத்தில் நிலவைப்பற்றி பேசுவதால் அதன் அடுத்த வசனத்தில் இருக்கும் நீங்கள் என்பது நிலவைக் குறிப்பதாக இவர்கள் திரிக்கின்றனர். இந்த வசனத்தின் உண்மையை நிலையை சிந்திப்பதற்கு அரபி மொழி அறிவு தேவையில்லை. பொது அறிவே போதுமானது. குர்ஆனில் நீங்கள் என்று முன்னிலை, பன்மையில் சொல்லப்படும் வசனம் மனிதர்களை நோக்கி அல்லாஹ் பேசுவதாக இருக்கும். நீர் என்று முன்னிலை ஆண்பால் ஒருமையில் சொன்னால் நபியை நோக்கி பேசுவதாக இருக்கும். நீங்கள் என்பது நிலவைக் குறிக்கும் என்றால், நீங்கள் என்று சொல்லிவிட்டு முன்னேறுவீர்கள் என்று சொல்வது அல்லாஹ் நேரடியாக நிலவிடம் பேசுவதுபோலாகிறது. அல்லாஹ் நிலவிடம் இதை சொல்வானா. இது மனிதர்களுக்கு இறக்கப்பட்ட வேதம். இந்த வேதத்தில் நிலவை நோக்கி அல்லாஹ் பேசுவானா? வானத்தைப் பார்த்து விரும்பியோ விரும்பாமலோ கட்டுப் படுங்கள் என்று அல்லாஹ் பேசியது குர்ஆனில் வந்துள்ளது. அது ஏற்கனவே நடந்த ஒன்றை அல்லாஹ் செயப்பாட்டுவினையில் சொல்வதாகும். நேரடியாக அல்லாஹ் குர்ஆனில் வேறு எந்த அஃரிணையோடும் பேச மாட்டான். அவ்வாறே நிலவு முன்னேறும் என்று மனிதர்களுக்கு சொல்வதாக இருந்தால் “அது முன்னேறி செல்லும்” என்று படர்கையில் சொல்லவேண்டும். இந்த வசனம் மனிதர்களை நோக்கி பேசுகிறது. சந்திரைப் பற்றியதல்ல
அரபி இலக்கணப் படி பார்த்தாலும் லதர்கபுன்ன என்றால் முன்னிலை-ஆண்பால்-பன்மை. மனிதர்களைக் குறிப்பது. நிலவைப் பற்றி பேசுவதாக இருந்தால் “அவன் முன்னேறி செல்வான்” என்று படர்கை-ஆண்பால்-ஒருமையில் வந்திருக்கும். அரபியில் யர்கபு என்று அல்லாஹ் சொல்லியிருப்பான்.
சந்திரன் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறிச்செல்லும் என்று இதற்கு விளக்கம் கொடுப்பது வேதக்காரர்களின் செயலன்றி வேறில்லை.
91:1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! 91:2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!
இந்த வசனத்திற்கு காலண்டர் கொள்கையுடையோர் கொடுக்கும் விளக்கம் இதோ. “மாதத்தின் இறுதி நாளான மறைக்கப்பட்ட சங்கம்மா நாளில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து உதிக்கும். அதன் மறுநாளான முதல் தேதியில் சூரியன் உதித்தபின் சந்திரன் உதிக்கும். எந்த நாளில் சூரியன் உதித்த பின் சந்திரன் உதிக்கிறதோ அதுதான் மாதத்தின் முதல் நாள். இதைதான் அல்லாஹ் 91:2இல் சொல்கிறான்”. இதுவே இவர்களின் வாதம். அமாவாசையின் மறுநாள் சூரியன் உதித்த பிறகு சந்திரன் உதிக்கும் என்றுதான் இவ்வசனம் கூறுகிறதா என்று பார்க்கும் முன், உண்மையில் அமாவாசைக்கு மறுநாள் தான் மறுநாள் சூரியன் உதித்த பிறகு சந்திரன் உதிக்கிறதா என்று பார்ப்போம்.
இவர்களின் வாதப்படி எந்த நாளில் சூரியன் உதித்த பின் சந்திரன் உதிக்கிறதோ அதுதான் மாதத்தின் முதல் நாள். ஆனால் பின் வரும் மாதங்களை பாருங்கள் இவர்கள் காலண்டரில் என்று அமாவாசை என்று குறிப்பிட்டிருக்கிறார்களோ அன்றைய தினமே சூரியன் உதித்த பின் சந்திரன் உதிக்கிறது. இவர்கள் தாங்கள் வைக்கும் வாதங்களில் உண்மையாளர்களாக இருந்தால். சூரியன் உதித்தபின் நிலவு உதிக்கும் அந்த நாளில் மாதத்தை துவங்கியிருக்க வேண்டும். இல்லையேல் இவ்வாறு குர்ஆனுக்கு தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் கொடுக்கக் கூடாது. நாம் இந்த வாதத்தை எடுதுவைதபோது “அமாவாசையன்று மாதத்தை துவங்கினால் முந்தைய மாதம் 28இல் முடிந்துவிடும் எனும் வாதத்தை வைத்தனர். கீழே பாருங்கள். சூரியனுக்கு பின் நிலவு உதிக்கும் அந்த நாட்களில் இவர்கள் மாதத்தை துவங்கினால் 28 முந்தைய மாதம் முடிவதில்லை. 29இல் தான் முடிகிறது. குர்ஆனுக்கு பொய்யாக விளக்கம் கொடுத்த இவர்கள், அமாவாசையன்று மாதத்தை துவங்கி தாங்கள் வைக்கும் வாதத்தை உண்மைப்படுத்தும் திராணி உள்ளவர்களா என்று கேள்வி வைக்கிறோம்.
ஹிஜ்ரி கமிட்டி காலண்டரில் அமாவாசை | சூரிய உதயம்* | நிலவு உதயம்* | சூரியனுக்கு பின் நிலவு உதிக்கிறதா, ஆம் எனில் நேரம்? | |
13-9-2015 | 5:52 | 5:53 | 0:00:19 | 29 |
13-10-2015 | 5:43 | 5:59 | 0:16:04 | 29 |
11-11-2015 | 5:40 | 5:25 | இல்லை | |
11-12-2015 | 5:49 | 5:44 | இல்லை | |
10-1-2016 | 6:03 | 6:15 | 0:12:04 | 29 |
8-2-2016 | 6:10 | 5:50 | இல்லை | |
9-3-2016 | 6:07 | 6:21 | 0:13:52 | 29 |
7-4-2016 | 5:58 | 5:53 | இல்லை | |
6-5-2016 | 5:53 | 5:29 | இல்லை | |
5-6-2016 | 5:54 | 6:08 | 0:13:45 | 29 |
4-7-2016 | 6:00 | 5:50 | இல்லை | |
2-8-2016 | 6:02 | 5:30 | இல்லை | |
1-9-2016 | 5:56 | 5:53 | இல்லை | |
1-10-2016 | 5:46 | 6:03 | 0:17:02 | 29 |
30-10-2016 | 5:40 | 5:27 | இல்லை | |
29-11-2016 | 5:44 | 5:39 | இல்லை | |
29-12-2016 | 5:58 | 5:59 | 0:00:41 | 29 |
28-1-2017 | 6:09 | 6:23 | 0:13:47 | 29 |
26-2-2017 | 6:09 | 5:55 | இல்லை | |
28-3-2017 | 6:01 | 6:16 | 0:15:09 | 29 |
26-4-2017 | 5:54 | 5:49 | இல்லை | |
25-5-2017 | 5:53 | 5:26 | இல்லை | |
24-6-2017 | 5:58 | 6:11 | 0:12:31 | 29 |
23-7-2017 | 6:02 | 5:55 | இல்லை | |
21-8-2017 | 5:59 | 5:35 | இல்லை | |
20-9-2017 | 5:50 | 5:59 | 0:08:54 | 29 |
19-10-2017 | 5:41 | 5:26 | இல்லை | |
18-11-2017 | 5:41 | 5:38 | இல்லை | |
18-12-2017 | 5:52 | 5:55 | 0:02:55 | 29 |
17-1-2018 | 6:06 | 6:16 | 0:09:46 | 29 |
15-2-2018 | 6:10 | 5:46 | இல்லை | |
17-3-2018 | 6:05 | 6:00 | இல்லை | |
16-4-2018 | 5:56 | 6:15 | 0:18:56 | 29 |
15-5-2018 | 5:52 | 5:47 | இல்லை | |
13-6-2018 | 5:56 | 5:26 | இல்லை | |
13-7-2018 | 6:02 | 6:14 | 0:12:24 | 29 |
11-8-2018 | 6:01 | 5:57 | இல்லை | |
9-9-2018 | 5:54 | 5:35 | இல்லை | |
9-10-2018 | 5:44 | 5:59 | 0:15:24 | 29 |
7-11-2018 | 5:40 | 5:28 | இல்லை | |
7-12-2018 | 5:47 | 5:49 | 0:02:10 | 29 |
6-1-2019 | 6:02 | 6:14 | 0:12:19 | 29 |
4-2-2019 | 6:10 | 5:47 | இல்லை | |
6-3-2019 | 6:08 | 5:59 | இல்லை | |
5-4-2019 | 5:59 | 6:05 | 0:06:00 | 29 |
4-5-2019 | 5:53 | 5:29 | இல்லை | |
3-6-2019 | 5:54 | 5:50 | இல்லை | |
2-7-2019 | 6:00 | 5:30 | இல்லை | |
1-8-2019 | 6:02 | 6:16 | 0:13:12 | 29 |
*குறிப்பு: சூரிய நிலவு உதய நேரங்கள் அமாவாசை கமிட்டியின் கிப்லாவான (0°,0°) க்ரெனிச் பகுதிக்குரியவை. மேலும் அவர்களின் கொள்கையான GMT நேரத்திலேயே கணக்கிடப்பட்டுள்ளன
இந்த குர்ஆன் வசனத்தில் “பின்தொடர்ந்து வரும்” என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் மூலச்சொல் “தலாஹா” வுக்கு பின்தொடர்தல் என்ற பொருள் மட்டுமல்லாமல் “ஒன்றைப் போல பாவனை செய்தல் (Imitate)” என்ற பொருளும் உள்ளது. சூரியனைப் பிரதிபலித்து அதனைப் போல் ஒளியுள்ளதாக பாவனை செய்தல் எனும் பொருள் ஆழ்ந்த விஞ்ஞானத்தை உள்ளடக்கியதாக உள்ளது.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.