சந்திரகலைகள் எனப்படுபவை நிலவில் இருந்து பிரதிபலிக்கப்பட்டு நமது கண்களை வந்தடையும் ஒளி வடிவங்கள். இவை பூமி-நிலவு-சூரியன் ஆகியவை இருக்கும் கோணத்தில் ஏற்படும் மாறுதல்களால் நடப்பவை. பூமியை நிலவு சுற்றுவதால் இந்த கோணம் மாறிக்கொண்டே இருக்கும் எனவே பிசந்திரகலைகளும் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும்.
மனாஸில் என்பவை பூமியிலிருந்து பார்க்கும்போது நிலவின் பின்புலத்தில் தெரியும் விண்மீன்கள் ஆகும். நிலவு பூமியை சுற்றி வருவதால் விண்மீன்களின் பின்புலத்தில் நிலவு நகர்ந்து வருவதைப் போல் காட்சியளிக்கும். வானில் ஒரு குறிப்பிட்ட விண்மீனையோ சில விண்மீன் கூட்டங்களையோ ஒரு மன்சில் என்பர். நிலவு அந்த மன்ஸிலில் காட்சி அளிக்கும்போது “நிலவு இப்போது இந்த மன்ஸிலில்” இருக்கிறது என்பர்.
சந்திரகலைகளைப் பொறுத்தவரை அது வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டிருப்பதாகும். குறிப்பாக ஒரு நாளுக்கு ஒரு படித்தரம் என்றெல்லாம் பிறைக்கு சொல்ல இயலாது. உதிக்கும்போது இருக்கும் அதே அளவில் பிறை மறையும்போதும் இருக்காது. உதித்தது முதல் மறைவதற்குள் பிறை வளர்ந்து விடும் அல்லது தேய்ந்துவிடும். இந்த வேறுபாட்டை கண்ணாலே பார்க்கலாம். வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டிருக்கும் ஒன்றை ஒரு நாளுக்குள் எவ்வாறு அடைக்க இயலும். ஒரு நாளுக்கு ஒரு படித்தரம் என்பது பிறையிலும் நிலவிலும் இல்லாத ஒரு தத்துவமாகும்.
மனாசிலைப் பொறுத்தவரை படித்தரத்தின் அதே நிலைமைதான். எனினும் சிறிது வேறுபாடு உள்ளது. ஒரு நாளுக்கு ஒரு மன்சில் என்று மனாசிலிலும் இல்லை. மன்சில் என்பது வானில் நிலவு கடக்கும் தூரம். ஒரு மன்ஸிலில் இருந்து அடுத்த மன்சிலுக்கு நிலவு எந்த நேரத்திலும் கடக்கும். காலையில் கடக்கலாம், மாலையில் கடக்கலாம், நடு இரவிலும் கடக்கலாம். ஒரு நாள் துவங்கும்பொது ஒரு மன்ஸிலில் நிலவு நுழைந்து அடுத்த நாள் துவங்கும்போது அடுத்த மன்ஸிலில் அது நுழையாது. எனவே ஒரு நாளுக்கு ஒரு மன்சில் என்றில்லை. சில மன்சில்ககளைக் கடக்க நிலவு 36மணி நேரங்கள் (ஒன்றரை நாட்கள்) வரை எடுத்துக்கொள்ளும்.
ஒரு நாளுக்கு ஒரு படித்தரமும் நிலவில் இல்லை, ஒரு நாளுக்கு ஒரு மன்சிலிலும் நிலவு இருப்பதில்லை. மன்சிலுக்கும் படித்தரத்துக்கும் என்ன தொடர்பு?
சிலர் சந்திரகலைகளையும் மன்சில்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக நினைத்துவருகின்றனர். “இரண்டுமே பூமியை நிலவு சுற்றுவதால் ஏற்படுகின்றன” எனும் ஒரே ஒரு ஒற்றுமையை தவிர வேறந்த தொடர்பும் இவற்றிற்கு இல்லை. பிறைகளின் வளர்-தேய் நிலைகள் பூமியை நிலவு சுற்றுவதால் பூமிக்கும்-நிலவுக்கும்-சூரியனுக்கும் ஏற்படும் கோணத்தால் நிகழ்வதாகும். மன்சில்கள் என்பவை பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்கு பின்புலத்தில் தெரியும் விண்மீன்கள். இரண்டும் வெவ்வேறு காரணிகளால் ஏற்படுபவை. விளக்கமாக பார்ப்போம்.
ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரையுள்ள நாட்கள் 29.53 ஆகும். அதவாது சூரியனை அடிப்படைப் புள்ளியாகக் கொண்டு நிலவு பூமியை சுற்ற ஆரம்பித்து அந்த சுற்றை முடிப்பதற்கு 29.53 நாட்கள் தேவை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் பூமிக்கும் நிலவுக்கும் இடையே வரையப்பட்ட கோட்டை ஒரு முறை நிலவு கடந்து மீண்டும் அந்த கோட்டை கடப்பதற்கு ஆகும் நாட்கள் 29.53. இந்த விளக்கத்தை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடப்பதைதான் அமாவாசை (அ) கஞ்சங்க்ஷன் என்கிறோம். ஒரு கஞ்ஜங்க்ஷன் முதல் மறு கஞ்ஜங்க்ஷன் வரையுள்ள நாட்களைத்தான் ஒரு மாதம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நிலவு ஒரு மன்ஸிலில் அதன் சுற்றை தொடங்கி மீண்டும் அதே மன்ஸிலில் வருவதற்கு 27.32நாட்கள் எடுத்துக்கொள்ளும். இன்று நாம் நிலவை சுரையா எனும் மன்ஸிலில் பார்க்கிறோம் என்றால் மீண்டும் சுரையாவுக்கு வருவதற்கு நிலவுக்கு 27.32நாட்கள் தேவைப்படும். இப்போது படித்தரங்களிலான நிலவின் சுழற்சிக்கும் மன்சில்களிலான நிலவின் சுழற்சிக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம். இந்த இரண்டு சுழற்சிக்கும் உள்ள கால வேற்றுமையே இவற்றின் வேறுபாட்டை விளக்குவதற்கு போதுமானது. இரண்டு வெவ்வேறு கால வரையறையில் இரண்டு சுழற்சிகளும் இருப்பாதால் இந்தப் பிறை இந்த மன்சிலில்தான் இருக்கும் என்று கூறவே இயலாது.
இம்மாதம் முதல் நாள் பிறை தபறான் எனும் மன்ஸிலில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இந்த மாதம் 27ஆம் நாளிலே மன்சிலின் சுற்றி முடித்து பிறை தபரானில் வந்துவிடும். 28 ஆம் நாளின் பிறை ஹக்ஆ மன்சிலிலும், 29 ஆம் நாளின் பிறை ஹன்ஆ மன்சிலிலும் இருக்கும். எனில் அடுத்த மாதத்தின் பிறை திராஆ மன்சிலுக்கு சென்றுவிடும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பிறைகள் சென்ற மாதத்தின் பிறைகள் இருந்த அதே மன்ஸிலில் இருப்பதில்லை.
மன்சில் சுழற்சியும் படித்தரங்களின் சுழற்சியும் ஏன் ஒத்துபோவதில்லை.
பூமி B எனும் நிலையில் இருக்கும்போது நிலவு அதன் சுற்றை துவங்குகிறது. A-B எனும் கோட்டில் இருந்து அதன் சுற்று துவங்குகிறது. மேலும் அதன் சுற்றைத் துவங்கும்போது நிலவு அல்தபறான் எனும் மன்ஸிலில் இருக்கிறது. 27.32 நாட்களுக்குப்பிறகு நிலவு மீண்டும் அதே அல்தபறான் மன்சிலுக்கு வந்துவிடுகிறது. ஆனால் இன்னமும் அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான கோட்டைக் கடக்கவில்லை. இதற்கு என்ன காரணம். நிலவு சுற்றைத் தொடங்கும்போது பூமி B எனும் இடத்திலிருந்தது ஆனால் 27.3 நாட்களுக்குப்பிறகு பூமி இடம்பெயர்ந்து C எனும் இடத்திற்கு வந்துவிட்டது. இந்த இடப்பெயர்வின் காரணமாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான கோடும் A-Bஇலிருந்து இடம் மாறி A-Cஆகிவிட்டது. பூமி இடம்பெயர்ந்த தொலைவையும் சேர்த்து சுற்றிப்பிடிக்க நிலவுக்கு கூடுதலாக 2.21 நாட்கள் அதிமாக தேவைப்படுகிறது. இதுதான் மன்சில் சுழற்சியும் படித்தர சுழற்சியும் ஒத்துப்போகாமல் இருக்கக் காரணம்.
விண்மீனை அடிப்புள்ளியாகக் கொண்டு நிலவு ஒரு சுற்றை முடிக்க 27.32 நாட்களும் சூரியனை அடிப்புள்ளியாகக் கொண்டு ஒரு சுற்றை முடிக்க 29.53 நாட்களும் ஆகும். இந்த நாட்கள் வேறுபாட்டிற்கு காரணம் பூமியின் இடப்பெயர்ச்சி. இந்த வேறுபாடு இருக்கும் வரை ஒரு படித்தரத்திற்கு ஒரு மன்சில் என்ற நிலை வராது. வானியலில் அதிக ஆர்வம் உள்ளவர் இதன் ஆழமான காரணத்தை உணர்ந்துகொள்வார். “பூமியிலிருந்து ஒளியின் வேகத்தில் வெறும் 8 நிமிட தூரத்தில் சூரியன் உள்ளது. ஆனால் விண்மீன்கள் பல நூறு ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளன. 8 நிமிடம் எங்கே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் எங்கே. இந்த தூர வேறுபாடே சூரியனை அடிப்படையாக கொண்ட நிலவின் சுழற்சிக்கும் விண்மீன்களை அடிப்படையாக கொண்ட நிலவின் சுழற்சிக்கும் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன.
மன்சில்களுக்கும் நிலவின் வளர்-தேய் நிலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நிலவின் படித்தரங்களை மன்ஸில்களை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்று யாராவது கூறினால் அறியாமையிலிருக்கும் அவருக்கு இதை விளக்குங்கள். படித்தரங்களை மன்சில்களைக் கொண்டு அறியமுடியாது. மன்சில்களையும் படித்தரங்களை கொண்டு அறியமுடியாது.
தலைப்புடன் தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்.
தேதி | ஆங்கில தேதி | Right Ascension at Noon | நிலவின் மனாஸில் (மதிய வேளையில்) | ||||||
ரஜப் | 1 | 09-04-16 | 02H | 58M | 40S | Al Butayn | البطين | அல் புதைன் | |
2 | 10-04-16 | 03H | 59M | 39S | Al-Thurayia | الثريا | அஸ்ஸுரையா | ||
3 | 11-04-16 | 05H | 00M | 22S | Al-Dabaran | الدبران | அல் தபறான் | ||
4 | 12-04-16 | 05H | 59M | 54S | Al-Haqah | الهقعة | அல் ஹக்ஆ | ||
5 | 13-04-16 | 06H | 57M | 27S | Al-Hanah | الهنعة | அல் ஹன்ஆ | ||
6 | 14-04-16 | 07H | 52M | 29S | Al-Dhira | الذراع | அல் திரா | ||
7 | 15-04-16 | 08H | 44M | 51S | Al-Nathrah | النثرة | அல் நஸ்ரா | ||
8 | 16-04-16 | 09H | 34M | 42S | Al-Ttarf | الطرف | அல் தர்ஃப் | ||
9 | 17-04-16 | 10H | 22M | 26S | Al-Jabha | الجبهة | அல் ஜப்ஹா | ||
10 | 18-04-16 | 11H | 08M | 33S | Al-Zubrah | الزبرة | அல் zuப்ரா | ||
11 | 19-04-16 | 11H | 53M | 37S | Al-Sarfah | الصرفة | அல் ஸர்ஃபா | ||
12 | 20-04-16 | 12H | 38M | 11S | Al-Awwa | العواء | அல் அவாஅ | ||
13 | 21-04-16 | 13H | 22M | 48S | Al-Simak | السماك | அல் ஸிமாக் | ||
14 | 22-04-16 | 14H | 07M | 56S | Al-Ghafr | الغفر | அல் கஃப்ர் | ||
15 | 23-04-16 | 14H | 53M | 59S | Al-Zabani | الزبانان | அல் zaபானி | ||
16 | 24-04-16 | 15H | 41M | 14S | Al-Aklil | الإكليل | அல் அக்லீல் | ||
17 | 25-04-16 | 16H | 29M | 50S | Al-Qalb | القلب | அல் கல்ப் | ||
18 | 26-04-16 | 17H | 19M | 49S | Al-Shawlah | الشولة | அல் ஷவ்லா | ||
19 | 27-04-16 | 18H | 11M | 03S | Al-Naaim | النعائم | அல் நஆஇம் | ||
20 | 28-04-16 | 19H | 03M | 18S | Al-Baldah | البلدة | அல் பல்தா | ||
21 | 29-04-16 | 19H | 56M | 19S | Al-Baldah | البلدة | அல் பல்தா | ||
22 | 30-04-16 | 20H | 49M | 54S | Saad Bul'a | سعد بلع | அல் ஸஅத் புல்ஆ | ||
23 | 01-05-16 | 21H | 43M | 57S | Saad Sood | سعد السعود | அல் ஸஅத் அஸ்ஸஊத் | ||
24 | 02-05-16 | 22H | 38M | 35S | Saad Al-Akhbiya | سعد الأخبية | அல் ஸஅத் அல் அக்பியா | ||
25 | 03-05-16 | 23H | 34M | 03S | Al-Fargh Al-Awwal | الفرع المقدم | அல் ஃபர்க் அல் அவ்வல் (முகத்தம்) | ||
26 | 04-05-16 | 00H | 30M | 43S | Al-Fargh Ath-Thani | الفرع المؤجر | அல் ஃபர்க் அல் தானி (முஅஜ்ஜர்) | ||
27 | 05-05-16 | 01H | 28M | 56S | Batn Al-Hoot | بطن الحوت | அல் பதன் அல் ஹூத் | ||
28 | 06-05-16 | 02H | 28M | 54S | Al-Sharatan | الشرطان | அல் ஷரதான் | ||
29 | 07-05-16 | 03H | 30M | 26S | Al Butayn | البطين | அல் புதைன் | ||
30 | 08-05-16 | 04H | 32M | 51S | Al-Dabaran | الدبران | அஸ்ஸுரையா | ||
ஷஅபான் | 1 | 09-05-16 | 05H | 35M | 03S | Al-Haqah | الهقعة | அல் ஹக்ஆ | |
2 | 10-05-16 | 06H | 35M | 49S | Al-Hanah | الهنعة | அல் ஹன்ஆ | ||
3 | 11-05-16 | 07H | 34M | 05S | Al-Dhira | الذراع | அல் திரா | ||
4 | 12-05-16 | 08H | 29M | 18S | Al-Nathrah | النثرة | அல் நஸ்ரா | ||
5 | 13-05-16 | 09H | 21M | 25S | Al-Ttarf | الطرف | அல் தர்ஃப் | ||
6 | 14-05-16 | 10H | 10M | 46S | Al-Jabha | الجبهة | அல் ஜப்ஹா | ||
7 | 15-05-16 | 10H | 57M | 56S | Al-Zubrah | الزبرة | அல் zuப்ரா | ||
8 | 16-05-16 | 11H | 43M | 33S | Al-Sarfah | الصرفة | அல் ஸர்ஃபா | ||
9 | 17-05-16 | 12H | 28M | 20S | Al-Awwa | العواء | அல் அவாஅ | ||
10 | 18-05-16 | 13H | 12M | 55S | Al-Simak | السماك | அல் ஸிமாக் | ||
11 | 19-05-16 | 13H | 57M | 52S | Al-Ghafr | الغفر | அல் கஃப்ர் | ||
12 | 20-05-16 | 14H | 43M | 41S | Al-Zabani | الزبانان | அல் zaபானி | ||
13 | 21-05-16 | 15H | 30M | 43S | Al-Zabani | الزبانان | அல் zaபானி | ||
14 | 22-05-16 | 16H | 19M | 10S | Al-Aklil | الإكليل | அல் அக்லீல் | ||
15 | 23-05-16 | 17H | 09M | 02S | Al-Qalb | القلب | அல் கல்ப் | ||
16 | 24-05-16 | 18H | 00M | 09S | Al-Shawlah | الشولة | அல் ஷவ்லா | ||
17 | 25-05-16 | 18H | 52M | 10S | Al-Naaim | النعائم | அல் நஆஇம் | ||
18 | 26-05-16 | 19H | 44M | 42S | Al-Baldah | البلدة | அல் பல்தா | ||
19 | 27-05-16 | 20H | 37M | 26S | Saad Al-Dabih | سعد الذابح | அல் ஸஅத் அல் தாபிஹ் | ||
20 | 28-05-16 | 21H | 30M | 11S | Saad Sood | سعد السعود | அல் ஸஅத் அஸ்ஸஊத் | ||
21 | 29-05-16 | 22H | 23M | 02S | Saad Al-Akhbiya | سعد الأخبية | அல் ஸஅத் அல் அக்பியா | ||
22 | 30-05-16 | 23H | 16M | 13S | Saad Al-Akhbiya | سعد الأخبية | அல் ஸஅத் அல் அக்பியா | ||
23 | 31-05-16 | 00H | 10M | 15S | Al-Fargh Al-Awwal | الفرع المقدم | அல் ஃபர்க் அல் அவ்வல் | ||
24 | 01-06-16 | 01H | 05M | 38S | Al-Fargh Ath-Thani | الفرع المؤجر | அல் ஃபர்க் அல் தானி | ||
25 | 02-06-16 | 02H | 02M | 54S | Batn Al-Hoot | بطن الحوت | அல் பத்ன் அல் ஹூத் | ||
26 | 03-06-16 | 03H | 02M | 17S | Al Butayn | البطين | அல் புதைன் | ||
27 | 04-06-16 | 04H | 03M | 36S | Al-Thurayia | الثريا | அஸ்ஸுரையா | ||
28 | 05-06-16 | 05H | 06M | 06S | Al-Haqah | الهقعة | அல் ஹக்ஆ | ||
29 | 06-06-16 | 06H | 08M | 30S | Al-Hanah | الهنعة | அல் ஹன்ஆ | ||
07-06-16 | 07H | 09M | 24S | Al-Dhira | الذراع | அல் திரா |