Friday, 12 February 2016

திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் - 2

بِسْــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم


இரண்டாம் வசனம்: உர்ஜூனில் கதீம்

ஸூறா 36 யாஸீன் 39வது வசனம்

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்zில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
ஜான் டிரஸ்ட் 36:39

இந்த வசனத்தில் ஹிஜ்ரா கமிட்டி செய்த மோசடிகளை மனாஸில் என்ற தலைப்பில் தொகுத்துள்ளோம்  பார்க்க https://www.piraivasi.com/2023/05/manazil.html

மூன்றாம் வசனம்: அஹில்லா

அல்குர்ஆன் : 2:189


يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ، قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ، وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ،  وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا، وَاتَّقُوا اللَّـهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
டாக்டர். முஹம்மது ஜான்

இதில் வரும் பிறைகள் எனும் சொல்லை ‘முதல் பிறை’ ‘இரண்டாம் பிறை’ ‘மூன்றாம் பிறை’ எனும் மாதத்தின் உள்பகுதியாக இருக்கும் பிறைநாட்களை குறிப்பதாக பலரும் மொழிபெயர்த்து அப்படியே விளங்கியும் விளக்கியும் வருகின்றனர். ஆனால் ஆங்கில மொழிப்பெயர்ப்பளர்கள் அனைவரும் இதை “தலைப்பிறைகள்” என்றே மொழிப்பெயர்துள்ளத்தைக் காணலாம்.

இங்கேயும் வார்த்தையை அப்படியே மொழிபெயர்த்து விட்டு மொழிபெயர்ப்பை வைத்து வியாக்கியானம் கொடுக்கிறது இந்தக்கூட்டம். ஒரு வார்த்தை அந்த மொழியில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று பார்க்க வேண்டும். இங்கே அஹில்லா எனும் வார்த்தை அக்காலத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று பார்க்க வேண்டும்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ، رُومَانَ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ وَاللَّهِ يَا ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ - قَالَ - قُلْتُ يَا خَالَةُ فَمَا كَانَ يُعَيِّشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ وَكَانَتْ لَهُمْ مَنَائِحُ فَكَانُوا يُرْسِلُونَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهَا فَيَسْقِينَاهُ ‏.‏ صحيح مسلم ٢٩٧٢/٣

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள். முஸ்லிம் : 5690, புகாரீ 2567 & புகாரீ 6459

இதில் அன்னை ஆயிஷா அஹில்லா எனும் அதே வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அஹில்லா என்பதை தலைப்பிறைகள் எனும் பொருளில் பயன்படுத்துகிறார்கள்.  “மனாசிலுல் கமர்” மற்றும் “அஹில்லா” இவற்றிக்கு பிறையின் படித்தரங்கள் என்ற பொருள் இல்லவே இல்லை.

இங்கு பிறைகள் எனப்படுவது முதல் பிறைகளை மட்டுமே குறிக்கும். முதல் பிறைகளை மட்டுமே அல்லாஹ் காலம் காட்டிகள் என்று கூறுகின்றான். முதல் பிறை மட்டுமே மாதத்துவக்கதை காட்டி அதன் மூலம் மாதங்களின் கணக்கை காட்டும். ஒரு பிறையை பார்த்துவிட்டு இது இரண்டாம் நாள் பிறை இது மூன்றாம் நாள் பிறை என்று யாராலும் கூற இயலாது. அப்படி கூற வேண்டுமெனில் எல்லா முதல் பிறைகளும் அளவில் ஒன்றாக இருக்கவேண்டும். எல்லா இரண்டாம் பிறைகளும் அளவில் ஒன்றாக இருக்கவேண்டும். எல்லா மாதமும் பௌர்ணமி 15ஆம் நாளில் வரவேண்டும். இது நடப்பதில்லை. இதற்கான நடைமுறை விளக்கத்தை பார்ப்போம்.

வளர்ந்து தேயும் பிறைகளும் இவர்கள் கூறுவதைப்போல் சர்வதேச தேதியை காட்டுவதில்லை என்பதை இங்கே நிறுவியுள்ளோம்.. பார்க்க  http://hafsa13.blogspot.com/2016/02/11.html 

பிறையின் அளவை அதன் வீதியை வைத்து arc second எனும் அளவையில் விஞ்ஞானிகள் அளக்கிறார்கள். ஆனால் மக்களிடம் அதிகமாக பிரபலம் ஆனது அது எத்தனை சதவிகிதம் ஒளியூட்டப்பட்டுள்ளது அன்ற அளவீடுதான். அதையே நாமும் இங்கே தந்துள்ளோம். கீழே நாட்களும் நேரமும் ஹிஜ்ரி கமிட்டி காரர்களுக்கு பிடித்த சர்வதேச நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அமாவாசை அன்றிலிருந்து இரவு ஏழுமணிக்கு ஒருவர் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பிறை பார்க்கிறார் என்று வைத்துகொள்வோம் அவர் 2015 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சந்திர மாதமும் பின்வரும் அளவிலுள்ள பிறைகளை பார்த்திருப்பார். அமாவாசை ஏற்படும் நாள், அதன் அடுத்த நாள் முதல் பிறை, அதன் அடுத்த நாள் இரண்டாம் பிறை எனும் ஹிஜ்ரி கமிட்டி கோட்பாட்டிற்கு இணங்கவே இதை உருவாக்கியுள்ளேன்.

ஜமாதில் அவ்வல் மாதத்தின் முதல் பிறை 1.04% அளவு உள்ளது
ஜமாதில் ஆகிர் மாதத்தின் முதல் பிறை 2.93% அளவு உள்ளது
ஷஅஂபான் மாதத்தின் முதல் பிறை 3.49% அளவு உள்ளது
இவை எல்லாமே முதல் பிறைதான் ஆனால் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. அல்லாஹ் பிறையின் படித்தரங்களை இப்படி மாற்றுகையில் அதை வைத்துகொண்டு பிறையின் படித்தரத்தை வைத்து பிறைநாளை எப்படி தெரிந்துகொள்ள முடியும்.

ஷஅஂபான் மாதத்தின் இரண்டாம் பிறை 8.49% அளவு உள்ளது தில் கஅதா மாதத்தின் இரண்டாம் பிறையோ 4.33%; கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அளவில் வித்தியாசம். ஒரு மாதத்தின் இரண்டாம் பிறையை விட வேறொரு மாதத்தின் இரண்டாம் பிறை இரண்டு மடங்கு அளவில் பெரிதாக உள்ளது. இப்படி இருக்கையில் பிறையின் அளவை வைத்து அது இந்த நாளை குறிக்கிறது என்று எப்படி சொல்ல இயலும்.

மாதம்
பிறை நாள்
வருடம்
மாதம்
நாள்
மணி
நிமி
பிறையின் அளவு

அமாவாசை
2015
1
20
19
0
0.25%
4. ரபி உல் ஆகிர்
முதல் பிறை
2015
1
21
19
0
2.39%

இரண்டாம் பிறை
2015
1
22
19
0
7.35%

மூன்றாம் பிறை
2015
1
23
19
0
14.77%

அமாவாசை
2015
2
18
19
0
0.16%
5. ஜமாதில் அவ்வல்
முதல் பிறை
2015
2
19
19
0
1.04%

இரண்டாம் பிறை
2015
2
20
19
0
4.90%

மூன்றாம் பிறை
2015
2
21
19
0
11.38%

அமாவாசை
2015
3
20
19
0
0.25%
6. ஜமாதில் ஆகிர்
முதல் பிறை
2015
3
21
19
0
2.93%

இரண்டாம் பிறை
2015
3
22
19
0
8.28%

மூன்றாம் பிறை
2015
3
23
19
0
15.78%

அமாவாசை
2015
4
18
19
0
0.02%
7. றஜப்
முதல் பிறை
2015
4
19
19
0
1.52%

இரண்டாம் பிறை
2015
4
20
19
0
5.64%

மூன்றாம் பிறை
2015
4
21
19
0
11.93%

அமாவாசை
2015
5
18
19
0
0.64%
8. ஷஅஂபான்
முதல் பிறை
2015
5
19
19
0
3.49%

இரண்டாம் பிறை
2015
5
20
19
0
8.49%

மூன்றாம் பிறை
2015
5
21
19
0
15.21%

அமாவாசை
2015
6
16
19
0
0.23%
9. றமதான்
முதல் பிறை
2015
6
17
19
0
1.84%

இரண்டாம் பிறை
2015
6
18
19
0
5.53%

மூன்றாம் பிறை
2015
6
19
19
0
11.00%

அமாவாசை
2015
7
16
19
0
0.69%
10. ஷவ்வால்
முதல் பிறை
2015
7
17
19
0
3.11%

இரண்டாம் பிறை
2015
7
18
19
0
7.34%

மூன்றாம் பிறை
2015
7
19
19
0
13.11%

அமாவாசை
2015
8
14
19
0
0.10%
11. தில் கஅதா
முதல் பிறை
2015
8
15
19
0
1.31%

இரண்டாம் பிறை
2015
8
16
19
0
4.33%

மூன்றாம் பிறை
2015
8
17
19
0
8.99%

அமாவாசை
2015
9
13
19
0
0.24%
12. தில் ஹிஜ்ஜா
முதல் பிறை
2015
9
14
19
0
2.06%

இரண்டாம் பிறை
2015
9
15
19
0
5.62%
மூன்றாம் பிறை
2015
9
16
19
0
10.78%

அமாவாசை
2015
10
13
19
0
0.62%
1. முஹர்ரம்
முதல் பிறை
2015
10
14
19
0
3.03%

இரண்டாம் பிறை
2015
10
15
19
0
7.20%

மூன்றாம் பிறை
2015
10
16
19
0
13.06%

அமாவாசை
2015
11
11
19
0
0.12%
2. சஃபர்
முதல் பிறை
2015
11
12
19
0
1.25%

இரண்டாம் பிறை
2015
11
13
19
0
4.35%

மூன்றாம் பிறை
2015
11
14
19
0
9.35%

அமாவாசை
2015
12
11
19
0
0.33%
3. ரபி உல் அவ்வல்
முதல் பிறை
2015
12
12
19
0
2.20%

இரண்டாம் பிறை
2015
12
13
19
0
6.24%

மூன்றாம் பிறை
2015
12
14
19
0
12.38%

இவர்கள் சொல்லும் மற்றொரு வாதம் “நாங்கள் பிறையை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லா பிறையையும் பாருங்கள் என்று தான் சொல்கிறோம். குறிப்பாக கால்பிறை பௌர்ணமி முக்கால் பிறை மற்றும் உர்ஜூனில் கதீம் ஆகியவற்றை பாருங்கள். அவைகள் சரியாக மாதத்தின் நாட்களை காட்டும்”. இதில் உர்ஜூனில் கதீமின் நிலையை ஏற்கனவே விளக்கிவிட்டோம். இனி கால், முழு மற்றும் முக்கால் பிறைகள் நாட்களை காட்டுகின்றனவா என்று பார்ப்போம்.

இவர்களின் குவாட்டர் கணக்குகளையும் துல்லியமான பிறை வடிவங்களுடன் இங்கே விளக்கி இருக்கிறோம்.. பார்க்க http://hafsa13.blogspot.com/2016/02/11.html

ஹிஜ்ராக்கள் சொல்லும் விதிகளின் படி அவர்களின் காலண்டரே இயங்கவில்லை என்பதை இதில் நிறுவியுள்ளோம் https://www.piraivasi.com/2016/06/27.html

கீழேயுள்ள அட்டவணையில் 2016ம் ஆண்டில் பிறையின் படித்தரங்களையும் அவை எந்த பிறை நாளில் ஏற்படுகிறது எந்த தகவலையும் பட்டியலிட்டுள்ளோம். ஒரு மாதம் கால்பிறை 6 வது நாளில் ஏற்பட்டால் மற்றொரு மாதம் 7ம் நாளிலும் பிறிதொரு மாதம் 8ம் நாளிலும் ஏற்படுகிறது. முழுநிலவு 14, 15 & 16 ஆகிய நாட்களில் ஏற்படுகின்றன. முக்கால் பிறையோ 21, 22 & 23 ஆகிய நாட்களில் ஏற்படுகின்றன.

மாதம்
அமாவாசை
கால்பிறை
ஏற்படும் நாள்
முழுநிலவு
ஏற்படும் நாள்
முக்கால்பிறை
ஏற்படும் நாள்
4. ரபி உல் ஆகிர்
10-Jan
16-Jan
6
24-Jan
14
01-Feb
22
5. ஜமாதில் அவ்வல்
08-Feb
15-Feb
7
22-Feb
14
01-Mar
21
6. ஜமாதில் ஆகிர்
09-Mar
15-Mar
6
23-Mar
14
31-Mar
22
7. றஜப்
07-Apr
14-Apr
7
22-Apr
15
30-Apr
23
8. ஷஅஂபான்
06-May
13-May
7
21-May
15
29-May
23
9. றமதான்
05-Jun
12-Jun
7
20-Jun
15
27-Jun
22
10. ஷவ்வால்
04-Jul
12-Jul
8
19-Jul
15
26-Jul
22
11. தில் கஅதா
02-Aug
10-Aug
8
18-Aug
16
25-Aug
23
12. தில் ஹிஜ்ஜா
01-Sep
09-Sep
8
16-Sep
15
23-Sep
22
1. முஹர்ரம்
01-Oct
09-Oct
8
16-Oct
15
22-Oct
21
2. சஃபர்
30-Oct
07-Nov
8
14-Nov
15
21-Nov
22
3. ரபி உல் அவ்வல்
29-Nov
07-Dec
8
14-Dec
15
21-Dec
 22

பிறையின் எந்த படித்தரத்தை பார்த்தும் அது இந்த நாளுக்குரிய பிறை என்று சொல்லவே இயலாது. பிறையின் படித்தரத்தை பார்த்து நாட்களை அறிந்தார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் கால வரலாற்றில் எந்த சான்றும் இல்லை. மாறாக அவர்களால் பிறைகளை பார்த்து நாட்களை அறிய முடியவில்லை என்பதற்கு முஸ்லிம் 1984 வது ஹதீஸ் சான்றாக உள்ளது. பார்க்க (http://hafsa13.blogspot.com/2015/07/19-1.html). பிறையின் படித்தரத்தை பார்த்து நபி ஸல் கணக்கிட்டார்கள் என்பது நபிகளார் மீது இட்டுக்கட்டிய பாவமாகும். குறிப்பாக உர்ஜூனில் கதீம் என்றால் கடைசி தேய்பிறை என்பதும் அதை பார்த்துவிட்டு அதன் அடுத்த நாள் கும்ம-வின் நாள் என முடிவுசெய்தார்கள் என்பது ஆதாரமற்றது.

பிறையின் படித்தரங்கள் நாட்களை காட்டும் என்பதை குர்ஆன் சொல்லவுமில்லை. பிறையின் படித்தரங்கள் நாட்களை காட்டவுமில்லை. முதல் பிறை மாத துவக்கத்தை காட்டும். ஒரு நாள் என்பதை காட்டுவது சூரியனே. முதல் பிறையிலிருந்து ஒவ்வொருநாளாக சூரிய மறைவைக்கொண்டு எண்ணிவரவேண்டும் 29வது பகல் முடிந்து வரும் இரவில் மீண்டும் பிறையை தேடவேண்டும். பிறை தெரிந்தால் அடுத்த நாள் அடுத்த மாதத்தின் முதல் நாள். இப்படிதான் சூரியனும் சந்திரனும் காலத்தை காட்டுகின்றன. ஒரு நாளையும் அதன் உட்பகுதிகளையும் காட்டுவது சூரியன். மாதத்தை காட்டுவது சந்திரன். 12மாதங்கள் ஒரு வருடம். இதுவே இஸ்லாமிய நாட்காட்டி. இப்படித்தான் நபி ஸல் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் கீழே:

நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாத(தலைப்பிறை)ங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஷஅபான் தலைப்பிறைக்கு வழங்குபவர்களாக இருந்தார்கள். பிறகு ரமலானின் பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பதாக கணக்கிட்டு பிறகு நோன்பு நோற்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் (25202)

மேலும் இவர்கள் பின்வரும் வசனங்களையும் ஆதாரமாக காட்டுகின்றனர். 17:12ஆம் வசனத்திற்கு விளக்கமாக 10:5 வசனம் உள்ளதையும் ஏற்கனவே அலசிவிட்டோம். பின்வரும் வசனங்களில் சூரியனும் சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன என்ற ஒரு கருத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவை கணக்கின்படி இயங்குவதால் நாம் கணக்கிட்டு இபாதத் செய்யலாம் என்பது அறிவுடைமையல்ல. கணக்கின் படி இயங்குகின்றன என்பது இறைவன் தன் ஆளுமையையும் தன் அதிகாரத்தையும் பறைசாற்றுவதற்குரிய வசனமாகும். தன் அத்தாட்சிகள் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்கும் சான்றுகள் ஆகும். அந்த கணக்கை நாம் படிக்க இயலுமா என்றால்! இயலும்! அந்த கணக்கை நாம் படித்தால், உண்மையை அறியும் நோக்குடன் நடுநிலைமையோடு படித்தால், கணக்கிட்டு பின்பற்றினால் ஏற்படும் விளைவுகளை இவர்கள் அறிந்துகொள்வார்கள். அல்லாஹ் இட்ட சந்திரனின் கணக்குகள் பூமிக்கு இரு வேறு சந்திர மாதங்களை வழங்குகின்றன. பூமியின் ஒரு பகுதிக்கு அது 29நாட்கள் கொண்ட மாதத்தையும் மறு பகுதிக்கு 30நாள் கொண்ட மாதத்தையும் அது வழங்குகிறது. இதுவே இறைவன் கூறும் கணக்கு. மேலும் இக்கணக்கு சந்திர மாதத்தில் ஒரு கிழமைக்கு இரண்டு தேதிகள் இருக்கும் எனும் சத்தியத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

அந்த கணக்கை பின்வரும் கட்டுரைகளில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்
1) பிறையின் விஞ்ஞானம்: பாகம்-1 >> http://hafsa13.blogspot.com/2015/03/astronomyofnewmoon2.html
2) பிறையின் விஞ்ஞானம்: பாகம்-2 >> http://hafsa13.blogspot.com/2015/02/astronomyofnewmoon.html
3) சர்வதேச பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு >> http://hafsa13.blogspot.com/2014/12/Universal-Hilail-An-Astronomical-Analysis.html

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 39:5)

இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள். (அல்குர்ஆன் : 36:37)

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். (அல்குர்ஆன் : 36:38)

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் : 36:40)

அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். (அல்குர்ஆன் : 6:96)

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (அல்குர்ஆன் : 55:5)

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 17:12)

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். (அல்குர்ஆன் : 13:2)

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 9:36)

(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் : 9:37)


குறிப்பு: ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பையும் வேறு எந்த மொழிபெயர்ப்பையும் நான் இங்கு குறை கூறவோ விமர்சனம் செய்யவோ இல்லை. குர்ஆனில் அறிவியலின் பல பிரிவுகளை பற்றி அல்லாஹ் பேசுகிறான். விண்ஞானம், புவியியல், உடலியல், கருவியல்.... மற்றும் பல.... இவை அனைத்தையும் அறிந்திருந்தால் மட்டுமே அந்த அந்த வசனத்திற்கு தக்க விளக்கம் அளிக்க முடியும். மார்க்கத்தில் நல்ல ஞானமுள்ளவர்கள் அறிவியலில் அதே அளவு ஞானம் உடையவர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே இவற்றை அவர்களது மொழிபெயர்ப்புகளில் இருக்கும் குறையாக காணாமல் அவர்களது சிறந்த பணிக்குரிய நன்மையை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு சரியான ஞானத்தை தேடுபவர்களாக பயணிப்போம்......