بِسْــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
Parallax என்பது பிறையை பொறுத்தவரை பெரிய பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விஷயமே அல்ல. எனினும் அப்படி ஒன்றை இவர்கள் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதால் அதன் உண்மையை நாம் மக்களுக்கு கற்றுகொடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
Parallax:
உங்கள் ஆட்காட்டி விரலை உங்கள் கண்களிலிருந்து ஒன்றரை அடி தூரத்திற்கு தள்ளிப்பிடித்துகொள்ளுங்கள். இப்போ வலது கண்ணை மூடி இடது கண்ணால் விரலை பாருங்கள். அடுத்து இடது கண்ணை மூடி வலது கண்ணால் விரலை பாருங்கள். இரண்டு மூன்று முறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் விரல் இடதும் வலதுமாக நகர்வதை போல் உணர்வீர்கள். பின்புறத்தில் இருக்கும் சுவர் அங்கேஎ இருப்பதைப்போலவும் விரல் வலம் இடம் மாறுவதாகவும் உணர்வீர்கள். விரலும் அங்கேயேதான் உள்ளது சுவரும் அங்கேயேதான் இருக்கிறது எனில் இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
மேலே இருப்பது விரலுக்கு பதிலாக ஒரு பென்சிலை வைத்து parallaxஐ அறிந்து கொள்ளும் முயற்சி. வலது கண்ணால் மட்டும் பார்க்கும்போது நமக்கு அருகாமையில் இருக்கும் பென்சில் தூரத்தில் இருக்கும் இரண்டாம் வீட்டிற்கு முன் காட்சியளிக்கிறது. இடது கண்ணால் மட்டும் பார்க்கும்போது பென்சில் தூரத்தில் இருக்கும் மரத்திற்கு முன் காட்சியளிக்கிறது. இந்த காட்சி மாற்றத்திற்கு காரணம் இரண்டு கண்களுக்கு இடைப்பட்ட தூரமும், பென்சிலுக்கும் பின்புலத்தில் இருக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரமும் தான்.
ABC எனும் மூன்று நபர்கள் ஒரு மரத்தையும் அதற்கு பின்னாலிருக்கும் மின்கம்பதையும் பார்கிறார்கள். Aக்கு மரம் வலதுபுறமும் மின்கம்பம் இடதுபுறமும் தெரியும். Bக்கு மரத்தின் பின்னல் மின்கம்பம் தெரியும். Cக்கு மரத்திற்கு வலதுபுறத்தில் மின்கம்பம் தெரியும்.
இதை நாம் அன்றாடம் வாழ்க்கையில் பார்க்கலாம். நடந்து செல்லும்போது அருகில் இருக்கும் மின்கம்பத்தையும் அதற்கு பின்னால் இருக்கும் காட்சியையும் பார்த்து செல்லுங்கள். நீங்கள் நடக்க நடக்க மின்கம்பதிற்கு பின்னர் தெரியும் காட்சி மாறிக்கொண்டிருக்கும். இதுதான் parallax.
Parallax Error:
Parallax என்பது ஒரு இயற்கை நிகழ்வு. அதனால் நமக்கு ஏதும் இடையூறு ஏற்பட்டால் அது Parallax Error என்று அழைக்கப்படும். உங்கள் பள்ளி கல்லூரி காலங்களில் ஆய்வகங்களில் அம்மீட்டர், கால்வனோ மீட்டர் போன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் அதன் ஊசிக்கு கீழே ஒரு கண்ணாடியை வைத்திருப்பார். உங்கள் ஆசிரியரும் அதைப்பற்றி உங்களுக்கு விளக்கி இருப்பார். ஆம்! நாம் பார்க்கும்போதும் ஊசியும் கண்ணாடியில் அதன் பிம்பமும் ஒன்றன் மீது ஓன்று பொருந்தி இருக்க வேண்டும் இல்லையேல் ரீடிங்கில் பிழை ஏற்பட்டுவிடும் என்று சொல்லிகொடுத்திருப்பார். அந்த பிழையின் பெயர்தான் parallax error.
இந்த (வலது) படத்தில் பாருங்கள். மீட்டரை சாய்வாக பார்க்கிறார். ஊசியும் பிம்பமும் பொருந்தவில்லை. சாய்வாக பார்ப்பதால் 77என்று ரீடிங் காட்டுகிறது. அதையே பிம்பத்துடன் பொருந்தும்போது பார்த்தல் 75என்று காட்டி இருக்கும். Transmittance எனும் அளவைக்கு இப்படி தவறாக ரீடிங் எடுப்பதால் 2 unit transmittance parallax error கூடி விடுகிறது.
நீங்கள் இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர் எனில் உங்களுக்கு இடது புறம் ஒரு பயணி உக்காந்திருப்பார். நீங்கள் 100kmph வேகத்தில் செல்லும்போது உங்களுக்கு மீட்டர் 100kmph காட்டும். இடதுபுறத்திலிருந்து சாய்வாக அவர் பார்ப்பதால் அவருக்கு அது 105போல் காட்சி அளிக்கும். அதுவே நீங்கள் துபாயில் வாகனம் ஓட்டுபவர் எனில் உங்களுக்கு வலது புறத்தில் அவர் உக்காந்திருப்பார் 100kmph என்று நீங்கள் பார்க்கும்போது அவருக்கு 95போல் தெரியும். இதுவும் parallax error தான். மேலே எரிபொருளின் அளவை காட்டும் மீட்டரை சாய்வாக பார்க்கும்போது குறைவாக காட்டுவதை பார்க்கலாம்,
Parallax என்பது ஒரு இயற்கை நிகழ்வு. Parallax என்பதே பிழை ஆகிவிடாது. parallaxஇனால் உங்கள் அளவைகளில் எதாவது தவறு ஏற்படுமானால் அந்த தவறுக்கு பெயர் தான் parallax error. Parallax என்பதையே பிழை என்று கருதிவிடக்கூடாது.
Parallax க்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன தொடர்பு?
படத்தை பாருங்கள். Bஎனும் மனிதனுக்கு தலைக்கு மேலாக சந்திரன் உள்ளது (புரிவதற்காக பிறையை காட்டியுள்ளோம்). சந்திரனுக்கு பின்னால் மிக மிக அதிகமான தூரத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அது சந்திரனுக்கு பின்னால் இருப்பதால் Bஎனும் மனிதனுக்கு அதை சந்திரன் மறைத்துவிடுகிறது. அதே வேளையில் Bக்கு கிழக்கு எல்லையில் இருக்கும் A மனிதனுக்கு பிறை மேற்கு அடிவானத்தில் தெரியும். படத்தை நன்றாக பாருங்கள் அம்மனிதனுக்கு அந்த நட்சத்திரத்தையும் பிறையையும் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் அந்த நட்சத்திரம் சந்திரனிலிருந்து மிகுந்த தொலைவில் இருக்கிறது. அம்மனிதர் பிறைக்கு இடப்புறம் நட்சத்திரத்தை பார்ப்பார். Bக்கு மேற்கு எல்லையில் இருக்கும் Cமனிதனுக்கும் பிறையையும் நட்சத்திரத்தையும் பார்க்க முடியும். அவர் பிறையின் வலது புறத்தில் நட்சத்திரத்தை பார்ப்பார். இதுதான் விஞ்ஞானத்தில் Parallax.
B நட்சத்திரத்தை பார்க்காதது Parallax அல்ல Parallax பிழையுமல்ல
A நட்சத்திரத்தை பார்ப்பது Parallax அல்ல Parallax பிழையுமல்ல
C நட்சத்திரத்தை பார்ப்பதும் Parallax அல்ல Parallax பிழையுமல்ல
இங்கே ஒரு காட்சியையும் வேறொரு காட்சியையும் ஒப்பிடும்போதுதான் Parallax எனும் நிகழ்வை நாம் உணர்கிறோம். இந்த இரண்டு காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தின் காரணத்திற்கு பெயர்தான் Parallax. Parallaxஎன்னவென்பதை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். இரண்டு பொருட்கள் உள்ளன அவற்றை இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து பார்க்கும்போது காட்சியில் ஏற்படும் மாற்றத்திற்கு பெயர்தான் Parallax. எல்லா Parallax ம் parallax error அல்ல. Parallax இனால் நீங்கள் அளக்கும் அளவு பாதிக்கப்பட்டு அதனால் அளவையில் ஏற்படும் மாற்றத்திற்கு பெயர் parallax error.
விஞ்ஞானத்தில் parallax error என்பதே இல்லை. மாறாக parallax விஞ்ஞானத்தில் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் தூரங்களை கண்டுபிடிக்க பெரிதும் பயன் படுகிறது. Parallax என்பதே error-பிழை என்று எந்த விஞ்ஞானமும் சொல்லவில்லை. Parallax error எனும் வார்த்தையே நீங்கள் எந்த விஞ்ஞானி பேசியும் கேட்க மாட்டீர்கள்.
இனி ஹிஜ்ரி கமிட்டியின் குழப்பத்திற்கு வருவோம்.
தேதிகோட்டிற்கு அருகே
என்ற கேள்விக்கு ஹிஜ்ரி கமிட்டி வீடியோவில் உள்ளவாறு விளக்கம் கொடுக்கிறது
அதில் “ஆக்லாந்தில் உர்ஜூணில் கதீமுடையை பிறையை பார்த்திருக்கிறார்கள். அது முந்தைய நாளுடைய பிறை. அதை அவர்கள் parallax error இல் அடுத்தநாள் பார்த்துவிட்டார்கள்“ என்று விளக்கமளிக்கிறார்.
இன்னும் பீஜேவை விமர்சித்து இவர்கள் வெளியிட்ட 47பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.
Parallax எனும் நிகழ்வுக்கும் தேதி/கிழமைகளுக்கும் என்ன தொடர்பு? இவர்கள் ஏன் இப்படியெல்லாம் மக்களை குழப்புகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு அறிவியல் பெயரைச் சொன்னால் “மக்கள் தலையாட்டிவிட்டு போய்விடுவார்கள். இவர்கள் என்ன அறிவியல் புத்தகங்களை திறந்து பார்க்கவா போகிறார்கள்” என்று மக்களின் அறியாமை மீது இவர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையா? அல்லது இவர்களுக்கே விளங்காமல் எதாவது உளறி கொட்டுகிறார்களா? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்!!!
இது மார்ச் -8 இல் நடக்கும் சூரிய கிரகணத்தின் வரைபடம். கிரகணம் கடந்து செல்லும் பாதையை காட்டியுள்ளார்கள். இந்த கிரகணம் சர்வதேச தேதிகோட்டு பகுதியிலும் பார்க்கபப்டுகிறது. கோட்டிற்கு கிழக்கே இருப்பவர்களுக்கு செவ்வாய் கிழமை மேற்கே இருப்பவர்களுக்கு புதன் கிழமை. இருவரும் இருவருக்கும் கிரகணம் காட்சியளிக்கும். இங்கே parallax ம் இல்லை errorம் இல்லை. இவர் கிரகணத்தை பார்க்கும்போது இவருக்கு செவ்வாய்க்கிழமை அவர் கிரகணத்தை பார்க்கும்போது அவருக்கு புதன் கிழமை. உலகில் எப்போதும் இரு கிழமைகள் இருக்கும். அதே போல் கிரகணம் நடக்கும்போதும் இரு கிழமைகள் இருக்கும். கிரகணம் இரண்டு நாள் நடக்கிறது என்று யாரும் விளங்கிகொள்ளமாட்டார். கிரகணம் நடக்கும்போதும் இரண்டு கிழமைகள் பூமியில் இருக்கும், அவர் என்ன கிழமையில் இருக்கிறாரோ அந்த கிழமையில் அவர் கிரகணத்தை பார்ப்பார் என்றுதான் விளங்குவோம்.
கிரகணம் செய்வாய் கிழமையில்தான் நடக்கிறது அதை புதன் கிழமையில் பார்ப்பது parallax error என்று ஒருவர் சொன்னால் அவருக்கு விஞ்ஞானம் தெரியாது என்று சொல்வதைவிட அடிப்படை பள்ளிக்கல்வி கூட இல்லாதவர் என்று சொல்வது மிகையாகாது.. Parallax errorக்கும் கிழமைகளுக்கும் சர்வதேச தேதிகோட்டிற்கும் என்ன தொடர்பு? அறியாமையில் இருந்தால் கற்றுக்கொள்ளட்டும்.
அடுத்து பிறைகளின் காட்சி.
ஒரு நாளில் கண்ஜங்க்ஷன் UTC 23:45க்கு நடக்கிறது என்று வைத்துகொள்வோம். அந்த தேதிக்கு செவ்வாய்கிழமையாக இருக்கிறது. அந்த செவ்வாய்கிழமையை உலகில் முதன் முதலில் நியுசிலாந்து நாட்டை சார்ந்தவர் அடைவார். அவருக்கு காலை 5மணிக்கு சூரியன் உதிக்கிறது 4.15 மணிக்கு சந்திரன் உதித்துவிட்டது. அவர் பிறையை பார்க்கும்நேரம் கஞ்சங்க்ஷன் நடக்கும் நேரத்திலிருந்து 31மணி நேரம் பின்தங்கியுள்ளது. –31மணிநேரம் வயதுடைய தேய் பிறை மிக எளிதாக கண்ணுக்கு தெரியும். நியுசிலந்துகாரர் 4.3௦ மணிக்கு அந்த தேய் பிறையை புறக்கண்களால் பார்ப்பார்.
அதே போல் ஒரு மாதத்தில் கண்ஜங்க்ஷன் UTC 00:15க்கு நடக்கிறது என்று வைத்துகொள்வோம். அந்த தேதிக்கு திங்கள்கிழமையாக இருக்கிறது. அந்த திங்கள்கிழமையை உலகில் கடைசியாக அடைபவர் அமெரிக்க சமோவாகாரர். அவருக்கு அதே திங்கள்கிழமையில் 6.3௦ சூரிய மறைவு 7.15க்கு சந்திர மறைவு. சூரியன் மறையும் பொது பிறையின் வயது 30மணி நேரத்தை தாண்டி இருக்கும். 3௦மணி நேர வயதுடைய பிறையை எளிதில் அமரிக்க சமோவாகாரர் புறக்கண்ணால் பார்ப்பார்.
மேலுள்ள இரண்டு நாட்களிலும் சங்கமம் நடக்கும் அதே கிழமையில் வளர் பிறையும் தேய் பிறையும் எப்படி தெரிகின்றன என்பது மேல் சொன்ன உதாரணத்திலேயே விளங்கும். UTCயின் ஆரம்ப நேரத்தில் அமாவாசை நடக்குமெனில் ஐடிஎலுக்கு கிழக்கே உள்ள தீவுகளில் அமாவாசை நடக்கும் அதே கிழமையில் வளர்பிறை தெரியும். அதே போல் UTCயின் கடைசி நேரத்தில் அமாவாசை நடக்குமெனில் ஐடிஎலுக்கு மேற்கு உள்ள தீவுகளில் அமாவாசை நடக்கும் அதே கிழமையில் தேய்பிறை தெரியும். இதற்கு காரணம் ஐடிஎல் தான். ஐடியலை மாற்றினால் அமாவாசையன்று பிறை தெரியும் ஊர்களும் மாறும். ஐடிஎல் அட்லாண்டிக் கடலில் வரையப்பட்டிருந்தால் ஆப்பிரிக்க கண்டம் அமாவாசையன்று வளர்பிறையையும் அமெரிக்க கண்டம் அமாவாசையன்று தேய்பிறையையும் பார்த்திருக்கும்.
இந்த காரணத்தை தவிர ஐடிஎலுக்கு அருகே அமாவசையன்று வளர்பிறையும் தேய்பிறையும் தெரிவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. Parallax error என்று எதையாவது சொல்லி மக்களை திசை திருப்பாமல் உங்கள் ஓட்டை கலண்டரை கிழித்துப்போட்டுவிட்டு நபி வழியில் பிறையை பார்த்து அமல்களை செய்யுங்கள்.
பிறையின் விஞ்ஞானத்தில் PARALLAXஇன் தொடர்பு வேறொரு இடத்திலும் உள்ளது. அது டோப்போசென்றிக் கஞ்சங்க்ஷனுடன் தொடர்புடையது. அதை http://hafsa13.blogspot.com/2015/07/19.html இந்த கட்டுரையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.