Tuesday, 22 September 2015

ஒரு நாளின் பிறையைக் காணவில்லை

நாம் peaceful islam எனும் telegram குழுமத்தில் ஹிஜ்ரா காலண்டர் ஆதரவாளர்களுடன் விவாதித்து வருகிறோம். இதில் ஹிஜ்ராவினர் ஒருபுறம், தத்தம் பகுதி பிறையை பின்பற்றுவோர் மறுபுறம். ஆனால் இரண்டுக்கும் மத்தியில் சந்திரக் கணக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் ஹிஜ்ராக் கமிட்டி வெளியிட்ட ஹிஜ்ராக் காலண்டர் பிழையானது என்ற நிலைபாட்டில் இருக்கும் ஒரு சகோதரரும் இருக்கிறார். “பிறையின் படித்தரங்களும் ஹிஜ்ராக் காலண்டரும் ஒத்துப்போகும்” என்பது கமிட்டிக் கொள்கை. இவர்களின் இந்த படித்தரத் கொள்கைத் தவறு என்பதை அந்த சகோதரர் நிரூபித்தார். ஹிஜ்ராக் காலண்டரில் பிறையில் ஒரு படித்தரம் காணாமல் போனதையும் அவர் வெளிக்காட்டினார். இதை உணர்ந்தும் இவர்களின் காலண்டர் மனித ஏற்பாடான UTCயை மட்டுமே அடிப்படையாக கொண்டது என்பதை உணர்ந்தும் மற்றொரு சகோதரர் ஹிஜ்ரி கமிட்டி கொள்கையில் இருந்து வெளியேறினார். வெளியேறிய அந்த சகோதரர் ஹிஜ்ரா கமிட்டிக் கொள்கைகளை ஆணித்தரமாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியேறிய அவர் ஹிஜ்ராக் காலண்டரில் இருக்கும் பிழைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். இதனால் கோபமுற்ற ஹிஜ்ராக் கமிட்டி இந்த இரண்டு சகோதரர்களை மோசமாகச் சாடியதுடன் அவர்களை மிகக்கடுமையாக விமர்சித்துக் கட்டுரையையும் வெளியிட்டனர். mooncalendar.in/index.php/ta/ta-reviews/467-one-day-moon-phase-missing
அந்த இரண்டு சகோதரர்களும் எல்லா கணக்கீட்டர்களைப் போல ததஜவை வெறுப்பவர்கள் (அல்லது விரும்பாதவர்கள்). அவர்களுக்கும் ததஜவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிந்துகொண்டே “அவர்களைப் பின்னிற்று இயக்குவது ததஜ” என்று அந்தக் கட்டுரையில் பொய்யுரைத்துள்ளனர்.
இரண்டு தனி நபர்களை ஒரு கமிட்டியின் சார்பில் இப்படி தரம் தாழ்ந்து விமர்சிப்பதா. சீ என்று முகம் சுழிக்கும் அளவுக்கு இருக்கிறது அந்த விமர்சனம். இரண்டு மூ'மின்களை/முஸ்லிம்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த இவர்கள் எப்படி த'வா பணி செய்கிறோம் என்று மார்தட்டுகிரர்களோ.
"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவர் இவருக்கு அநீதி இழைக்கக் கூடாது. மோசடி செய்யக் கூடாது. இழிவாகக் கருதக் கூடாது. இறையச்சம் என்பது இங்கு தான்'' என்று தமது இதயத்தைச் சுட்டிக் காட்டி கூறினார்கள். (மேலும் அவர்கள் கூறியதாவது) ஒரு மனிதன் தன்னுடைய முஸ்லிமான சகோதரனை மட்டமாகக் கருதுவதே அவன் தீமையிலிருக்கிறான் என்பதற்குப் போதுமானதாகும். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
நூல் : முஸ்லிம் 4650
அவர்கள் இரண்டு பேரும் எந்த இயக்கத்திலும் இல்லை என்பதை கூறிக்கொண்டே தேவை இல்லாமல் TNTJவை உள்ளே இழுத்து விமர்சித்தும், அந்த இரண்டு சகோதரர்களுக்கும் பின்னால் TNTJஇருப்பதாகவும் எழுதி நம்மை வம்புக்கு இழுக்கிறார்கள். இங்கே அந்த கட்டுரையில் கூறியிருக்கும் பொய்களை மக்களுக்கு அம்பலப்படுத்துகிறோம். மஞ்சள் வண்ணம்பூசப்பட்ட கருப்பு எழுத்துக்கள் கமிட்டியினரின் விமர்சனம். சிவப்பு எழுத்துக்களில் இருப்பவை நமது பதில்.
அல்ஹம்துலில்லாஹ்! சர்வதேச நாள் (Universal Day) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் (UTC – Coordinated Universal Time) ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஹிஜ்ரி நாட்காட்டியும் அமைக்கப்பட்டுள்ளது என்று இவர்கள் ஒப்புக்கொண்டதற்கு பாராட்டப்பட வேண்டியவர்கள். முழுக்க முழுக்க இவர்கள் வசைபாடும் கிருத்துவர்களின் கிப்லாவை அடிப்படையாக கொண்ட சர்வதேச நேரம் மற்றும் நாசா எடுத்துகொடுத்த புவிமைய சந்திப்பின் நேரங்கள் ஆகிவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டது இவர்கள் நாட்காட்டி என்று இவர்கள் வாயாலே ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே இவர்கள் காலண்டர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று இனிமேல் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
சர்வதேச நாள் (Universal Day) என்று எதுவுமே இல்லை. சர்வதேச நேரம் என்று ஓன்று உள்ளது. அது நேரத்தை அளவிடுவதர்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஸ்டாண்டர்ட் (கட்டுப்பாடு) ஆகும், அதில் ஒரு வினாடி என்றால் என்னெவென்று வரையறுக்கப்பட்டிருக்கும். ஒரு நாள் என்றால் என்னெவென்று வரையறுக்கப்பட்டிருக்கும். இவற்றை எப்படி அளப்பது என்பதும் வரையருக்கப்படிருக்கும். இந்த அடிப்படையில் ஒரு நாளுக்கு மேல் செல்லும் காலத்தை அளக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கிரகோரியன் காலண்டரையே UTC யும் பயன்படுத்துகிறது. வாரநாட்களுக்கும் UTCக்கும் எந்த தொடர்பும் இல்லை. UTC ஏற்படுத்தப்படுவதற்கு முன்னால் UT எனும் ஸ்டாண்டர்ட் பயன்பாட்டில் இருந்தது. (இந்த இரண்டிற்கும் வித்தியாசம் கமிட்டியினருக்கு தெரியாது என்பது வேறு விஷயம்). UT என்பது பூமியின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு நேரத்தை கணக்கிடும் முறையாகும். இதன் அடிப்படையில் ஒரு தேதி இப்போது 180டிகிரியில் இருக்கும் சர்வதேச தேதிகொட்டில் இருந்து நாள் துவங்கும். ஏற்கனவே கிழமையும் அங்கிருந்து துவங்குவதால் கிருத்துவ நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு ஒரு தேதி மிகச்சரியாக பொருந்திப்போகும். கிருத்துவ நாட்காட்டியை UTCயும் தத்தெடுத்தால் UTC யிலும் கிழமைகள் பிரதிபலிக்கும். இதல்லாமல் UTCக்கும் வாரநாட்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே நிலவில் இருந்த UT1 மற்றும் TAI (INTERNATIONAL ATOMIC TIME) ஆகிய இரண்டு ஸ்டாண்டர்ட்களையும் இணைத்துதான் UTC உருவாக்கப்பட்டது. இதில் UTயின் பங்களிப்பை பார்ப்போம்.
UT சர்வதேச நேரம் எனப்படுவது மேலே உள்ள வினாடி மற்றும் நாளுக்கான க்ரெனிச் நெடுக்கையில் சூரியன் வானின் உச்சத்தில் இருக்கும் பொது உள்ள நேரத்தை அடிப்படையாக கொண்டு உலகெங்கும் நேரத்தை கணக்கிடும் முறையாகும். இதன் அடிப்படையில் முதன்மை நெடுக்கையில் (prime meridian) நண்பகலாக இருக்கும்போது (180°) சர்வதேச தேதிக்கோட்டில் நள்ளிரவாக இருக்கும். அப்போது நேரம் 00:00 (12:00 AM) என வரையறுக்கப்படுகிறது. முதன்மை நெடுக்கையில் (prime meridian) இருந்து 15° கிழக்கில் இருக்கும் ஊருக்கு 1 மணிநேரம் அதிகமாக இருக்கும் அதாவது 1:00AM அல்லது UTC +1. முதன்மை நெடுக்கையில் (prime meridian) இருந்து 82.5° கிழக்கில் இருக்கும் இந்தியாவில் அப்பொழுது 5:30AM ஆக இருக்கும் அதை UTC +5.5 என்பார்கள். இதன் பொருள் UTC யிலிருந்து ஒவ்வொரு நாடும் எத்தனை மணி நேர வித்தியாசத்தில் உள்ளது என்பதை குறிப்பதே. இதனடிப்படியில் தான் கிழக்கில் இருக்கும் சிங்கப்பூர் இந்தியாவிலிருந்து 2 ½ மணி அதிகமாகவும் மேற்க்கில் இருக்கும் துபை 1 ½ மணி குறைவாகவும் உள்ளது.
உலக நேரம் என்பது நேரத்தை கணக்கிட வடிவமைக்கப்பட்ட ஒரு STANDARD ஆகும். இதை அடிப்படையாக கொண்டு தான் நேரம் கணக்கிடப்படுகிறதே தவிர உலக நேரம் என்பது எந்த நாட்டுக்கும் உரிய நேரமண்டலம் அல்ல. இது எங்கேயும் ஒரு நேரமண்டலாமாக பயன்படுத்தப்படுவதில்லை. STANDARD என்றால் என்னவென்று இன்னும் விளக்க வேண்டுமென்றால். ISO 9001 எனப்படுவது தரக்கட்டுபாட்டிற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சர்வதேச STANDARD ஆகும். இதை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தொழிலுக்கும் தகுந்தவாறு செயல்படுதிக்கொள்ளலாம். மேலும் IEC என்பது உலகளாவிய ஒரு STANDARD ஆகும். மின்னியல் சாதனங்களை வடிவமைப்பதற்கான ஒரு STANDARD ஆகும் இதை ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது தேவைகேற்ப மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். IEC 61439 என்பது ஒரு சர்வதேச ஸ்டாண்டர்ட் அதுவே இந்தியாவிற்கு IS 61439 எனவும் சவூதிக்கு SASO 61439 எனவும் இங்கிலாந்திற்கு BS EN 61439 எனவும் மாற்றப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் என்றால் என்ன அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கே இந்த உதாரணம்.
எனினும் வசதிக்காக சில இடங்களில் சர்வதேச நேரம் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. UTC முறை சர்வதேச தகவல் தொடர்புக்கும் வியாபாரத்திற்கும் பயன்படுகிறது. இந்தியாவிலிருந்து கீவ் எனும் நகரிலுள்ள ஒரு பொருளை வாங்க வேண்டுமெனில் தகவல் பரிமாற்றங்கள் ஒரு பொதுவான நேர அடிப்படையில் நிகழ வேண்டும். “நான் 5.30க்கு உங்களை அழைப்பேன்” என்று அவரிடம் சொன்னால் அவர் அவரது ஊரில் 5:30 என்று நினைக்கக்கூடும். 5.5இந்திய நேரம் என்று சொன்னால் முதலில் அதை அவர் சர்வதேச நேரத்திற்கு மாற்றி பின்னர் அவரது நாட்டின் நேரத்திற்கு மாற்றிக்கொள்வார். மின் அஞ்சல்களில் (email) சர்வதேச தொடர்புகள் செய்யும்போது தங்களது ஊரின் நேர்த்தி UTC முறையில் குறிப்பிடுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். எடுத்துக்காட்டிற்கு துபையில் பணிபுரியும் ஒருவர் தனது மின் அஞ்சல் கையொப்பத்தில் (email signature) UTC +4 என குறிப்பிட்டிருப்பார்
உலகளாவிய நிகழ்சிகள் அனைத்தும் சர்வதேச நேரத்திலேயே குறிப்பிடப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டியின் நிகழ்சி நிரல் உலக நேரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். முக்கியமாக வானியல் நிகழ்வுகள் (கிரகணம், புவிமைய சங்கமம், விண்கற்களின் காட்சி, METEOR SHOWER) உலக நேரத்திலேயே குறிப்பிடப்படும். இப்படி உலக நேரத்தில் குறிப்பிடுவதற்கான காரணம் உலகில் எந்த பகுதியில் உள்ளவரும் அவரது உள்நாட்டு நேரத்திற்கு அதை மாற்றி பார்த்துக்கொள்ளவே. உலக நேரத்தை எங்கேயும் நேரடியாக பயன் படுத்த இயலாது ((Greenwich) க்ரெனிச் தீர்க்க ரேகையில் அமைந்துள்ள நாடுகளை தவிர). உள்நாட்டு நேரத்திற்கு மாற்றப்படுவதற்காகவே உலக நேரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்த கஞ்சங்க்ஷனை லோக்கல் நேரத்துக்கு மாற்றுவது நிரந்தர நரகத்தில் தள்ளும் பெரும்பாவனக்ளை போல் சித்தரிக்கிரர்களோ அதை கஞ்சங்ஷன் நேரங்களை இவர்களுக்கு வழங்கிய நாசாவே உலக நேரத்தை லோக்கல் நேரமாக மாற்றிகொள்ளுங்கள் என்று கூறுவதை பாருங்கள்.
சர்வதேச நாள் என்று உலகில் எதுவுமே இல்லை. இவர்கள் சர்வதேச நாள் என்று கூறுவது இவர்கள் கிப்லாவாக ஏற்றுகொண்ட (Greenwich) க்ரெனிச் தீர்க்க ரேகையில் நாள் தொடங்குவதையும் நாள் முடிவதையும் கூறுவதாகும். இவர்கள் க்ரெனிச்சைதான் கிப்லா என்கிறார்கள். அங்கு நிலவும் நாளைதான் உலக நாள் என்கிறார்கள். இதல்லாது சரவதேச நாள் என்று எதுவும் இல்லை. அது UTC யில் வரையறுக்கப்படவில்லை. UTCயை நிர்வகிக்கும் International Telecommunications Union ஆலும் சொல்லப்படவில்லை. நாசாவோ வேறு எந்த விஞ்ஞான நிறுவனங்களோ இன்று வரை இப்படி ஒரு பதத்தை பயன்படுத்தியதில்லை.
மேலும் சர்வதேச நேரத்தை அடிப்படையாக கொண்டுதான் சந்திரன் இயங்குகின்றது என்று அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லவில்லை. குறைந்த பட்சம் ஒரு விஞ்ஞானி கூட சொல்லவில்லை (இவர்கள் இயக்கத்தில் இருக்கும் விக்கிபீடியா விஞ்ஞானிகளை தவிர). சந்திரனின் இயக்கம் சர்வதேச நேரத்தில் அமைந்துள்ளது அதன் புவிமைய சந்திப்பை லோக்கல் நேரத்திற்கு மாற்றுவது ஷிர்க்கை விட பெரிய பவம் என்பதுபோல் இவர்கள் பிரச்சாரம் செய்வதெல்லாம் இவர்களின் பிழைகளால் நிறைந்து நிற்கும் நாட்காட்டியை எப்படியாவது நிலைநாட்டிவிடலாம் என்ற நப்பாசையில்தான்.
நமது எல்லா வேலைகளும் இபாதத்துகளும் லோக்கல் நேரத்தில்தான் அமைந்துள்ளன. IDLஇல் விடியும்போது உலகம் முழுவதும் பஜ்ர் தொழுவதில்லை. ஐடிஎல்லில் சூரியன் மறையும்போது உலக மக்கள் நோன்பு திறப்பதில்லை. நமக்கு விடியும்போதுதான் நமது நாள் துவங்குகிறது. அறியாமையில் இருந்தால் திருத்திகொள்ளட்டும்.
இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என ஒவ்வொரு சர்வதேச நாளுக்கும் ஒரு பிறை படித்தரத்தை அல்லாஹ் வழங்கியுள்ளதை நாம் அச்சிட்டுள்ளோம். புவிமைய சங்கமம் (New Moon – Geocentric Conjunction) முதல் கால் பகுதி நிலை (First Quarter ), முழு நிலவு நிலை (Full Moon), இறுதி கால் பகுதி நிலை (Last Quarter) என்று பிறைப் படித்தரங்கள் உலக நேரத்தில் (UT-Universal Time), உலக நாளுக்குரிய (Universal Day) தேதியில் (கிழமையில்) குறிக்கப்பட்டுள்ளன.
கிழமைக்கும் உலக நேரத்திற்கும் எந்த தொடர்பும் இலை என்று ஏற்கனவே விளக்கி விட்டோம். ஏற்கனவே கிழமையும் அங்கிருந்து துவங்குவதால் கிருத்துவ நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு ஒரு தேதி மிகச்சரியாக பொருந்திப்போகும். கிருத்துவ நாட்காட்டியை UTCயும் தத்தெடுத்தால் UTC யிலும் கிழமைகள் பிரதிபலிக்கும். இதல்லாமல் UTCக்கும் வாரநாட்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் இவர்கள் சொல்வது போன்று வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என ஒவ்வொரு சர்வதேச நாளுக்கும் ஒரு பிறை படித்தரத்தை அல்லாஹ் வழங்கவில்லை. இவர்கள் கூற்றுப்படி செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவில் என்ன பிறையின் படிதரம் தெரிகிறதோ அதே படித்தரம் அமெரிக்காவிலும் தெரிந்தாக வேண்டும். அப்படி தெரிகிறதா? கீழே படங்களை பாருங்கள். கீழே இருக்கும் பிறைகளின் படங்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதிலிருக்கும் பிறையின் வயதையும் பிறையின் அளவை குறிக்கும் % ஒளியூட்டதையும் ஏற்றுகொண்டாக வேண்டும். பிறையை துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தலாம் என்று சொல்பவர்கள் அவர்களிடம் இருக்கும் அல்காரிதத்தின்படி (ஒரு குப்பையும் அவர்களிடம் இல்லை) இவற்றை சரிபார்துக்கொள்ளட்டும்.
செவ்வாய்கிழமை இந்தோனேசியாவில் சந்திர உதயத்தின் பொது 8நாள் 2௦ மணி வயது கொண்ட 58 சதவிகித அதே சந்திரன் அமெரிக்காவில் உதிக்கும்போது 9நாள் 15 மணி நேர வயதுடைய 66 சதவிகித அளவு (படித்தரம்) கொண்ட வேறு பிறையாக உதிக்கிறது. ஒரே கிழமைக்கு அல்லாஹ் ஒரே சந்திரனின் படித்தரத்தை வழங்கவில்லை
அதிக விளக்கங்களுக்கு இக்கட்டுரைகளை வாசிக்கவும்
விதியை மீறிய சந்திரன் www.piraivasi.com/2016/06/27.html
குறிப்பாக, நாம் பார்க்கக்கூடிய இந்த சந்திரனும், சூரியனும்தான் 1400 வருடங்களுக்கு முன்னரும் இருந்தன. நபி (ஸல்) அவர்களும், உத்தம நபித்தோழர்களும் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கும் இதே சந்திரனைத்தான் அவர்களும் பார்த்தார்கள். ஹிஜ்ரி நாட்காட்டிபடி பிறைகளை கணக்கிட்டு வந்ததில், தேய்பிறை நாட்களில் ஒருநாளுக்குரிய பிறை காணாமல் போகிறது ''மிஸ்ஸிங்'' என்றால், நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் இவ்வாறு விடுபட்டிருக்க (மிஸ்ஸிங்) வேண்டும். அப்படி நடக்கவில்லையே. இவ்வாறு 'பிறை காணாமல் போய் விடுகிறது' என்பதுதான் உண்மையாக இருக்குமென்றால் ''பிறைகள் மக்களுக்கு நாட்காட்டியாக உள்ளதாகவும் (2:189)'', ''பிறைகளின் தங்குமிடங்களை (மனாஜிலை) வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் அறியலாம் (10:5)'' என்றும் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருப்பானா?. நபி (ஸல்) அவர்களும் இப்படி காணாமல் போகிற பிறைகளை வைத்துக் கொண்டு, பிறைகள் பற்றிய மேற்படி வசனங்களை ஸஹாபாக்களுக்கு போதித்திருப்பார்களா? சற்று சிந்தியுங்கள்.
அல்லாஹ் அக்பர். உள்ளங்களை புரட்டுபவன் அல்லாஹ். நேற்றுவரை 10:5 ஆம் வசனத்தில் மன்சிலுக்கு படித்தரங்கள் என்று மொழியாக்கம் செய்து வந்தவர்கள் நாம் சுட்டிக்கட்டியபின் தங்குமிடங்கள் என்று திருத்திக்கொண்டுள்ளனர். அல்லாஹ் இவர்களுக்கு முழுமையாக நேர்வழி காட்டுவானாக. சந்திர நாட்காட்டி இஸ்லாத்திலும் இல்லை, அதை அமைத்துக்கொள்ள அல்லாஹ் சந்திரனின் கணக்கிலும் வழிவகை செய்யவில்லை என்று இவர்கள் விளங்கிக்கொள்ள அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். நாம் மனாஸில் குறித்து எழுத்திய விளக்கங்கள் இங்கே piraivasi.com/2015/08/20.html
சூரியனும், சந்திரனும் திட்டமிட்ட கணக்கின் படி இயங்குகின்றன (55:5) என்று அல்லாஹ் கூறுகிறான். குர்ஆனின் கூற்றுப்படி, அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்களின் அடிப்படையில்தான் நமது ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் அமைந்துள்ளன. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்படி பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் மாதத்தின் இறுதி நாளைத்தான் நாமும் புவிமைய சங்கமதினமாக, மாதத்தின் இறுதிநாளாகக் கொண்டுள்ளோம். இந்நிலையில் ஹிஜ்ரி நாட்காட்டியில் துல்கஃதா பிறை 22-லோ அல்லது துல்கஃதா பிறை 28-லோ வானில் பிறையைக் காணவில்லை என்று விமர்சிப்பவர்கள், அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்களில் ஒன்றைக் காணவில்லை என்கிறார்கள். அல்லாஹ் விதியாக்கிவிட்தாக (10:5) சந்திரனின் மன்ஜிலில் சந்தேகம் கொள்வதாக இது அமைகிறது. சந்திரனின் ஓட்டம் துல்லியமாக இல்லை என்று மறுப்பது தெரிகிறது. தேய்பிறை நாட்களில் ஒருநாள் அது தேதியைக் காட்டவில்லை அதனால் அது மக்களுக்கு காலம்காட்டியாக இல்லை என்று வாதிப்பதாகவும் இவ்விமர்சனம் அமைகிறது. அல்லாஹ்வின் வேதத்திலும், தூதரின் வழிகாட்டலிலும் சந்தேகத்தை ஏற்படுத்தி ஈமானுக்கு உலைவைக்கும் ஷைத்தானிய ஊசலாட்டத்தை விட்டும் தவிர்ந்து, அல்லாஹ்விடம் பாதுகாப்பைத் தேடுமாறு இவ்விமர்சனம் செய்பவர்களை உபதேசிக்கிறோம்.
சந்திரன் மாதத்தில் ஒருநாள் தான் மறைக்கப்படும் அதுவும் (இல்லாத) ஒரு சர்வதேச நாளில்தான் மறைக்கபப்டும் என்று இல்லாத விஞ்ஞானத்தை பேசி வருகின்றனர். குறைந்தபட்சம் 37 ½ மணிக்கூறு முதல் அதிகபட்சம் 51 ¾ மணிக்கூறுகள் வரை பிறை மறைக்கபடும் என்ற விஞ்ஞானம் தெரியாதா? இதை ஏற்கனவே அமாவாசையன்று பிறை தெரியாதா? எனும் தனிக்கட்டுரையில் விவரித்துள்ளோம்பார்க்க piraivasi.com/2015/07/18.html. இவர்கள் “ஒரு தனித்த சர்வதேச நாளில் சங்கமம் நடை பெறும் அதை ரசூலுல்லாஹ் கும்ம-வின் தினம் என்று சொல்லி சென்றுள்ளார்கள்” என்பதற்கு இன்று வரை விஞ்ஞான ஆதாரமும் ஹதீஸ் ஆதாரமும் வழங்கவில்லை. ஒரு தனித்த சர்வதேச நாளில் சங்கமம் நடை பெறும் என்பதற்கு விஞ்ஞான் ஆதாரம் வேண்டும். புவி மைய சந்திப்பு எனும் வானியல் நிகழ்வு ஒரு வினாடி நடப்பதாகும். சர்வதேச நேரம் 1884 இல் உருவாக்கப்படும் முன் புவி மைய சந்திப்பு சர்வதேச நேரப்படி தனித்த (இல்லாத) சர்வதேச நாளில் நிகழ்ந்ததா? அதை ரசூலுல்லாஹ் கும்ம-வின் தினம் என்று சொல்லி சென்றுள்ளார்கள் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் எங்கே. உங்களுக்கு மறைக்கப்பட்டால் 3௦ ஆக எஎண்ணிகொள்ளுங்கள் என்ற வாசகத்தை உங்களால் எப்படி திரிக்க முடிகிறது. நபி ஸல் மீது இட்டுக்கட்ட உங்களுக்கு அச்சமில்லையா
இந்த விமர்சனம் மாநிலப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாட்டிற்கும் பொருந்தும்.
சந்திர மாதத்தின் இறுதிநாட்களின் தேய்பிறைகளை மஃரிபில் மேற்கில் பார்க்க இயலாது. மாதத்தின் இறுதிநாள் புவிமைய சங்கமநாள் (அமாவாசை). அந்த அமாவாசை நாளுக்கு அடுத்தநாள் புதிய மாதத்தின் முதல் நாளாகும். அந்த முதல் நாளின் வளர்பிறைதான் மஃரிபு வேளையில் காட்சி அளிக்கும். அந்தப் பிறையைக் கண்ட தகவலை உலகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் பெறுவதே சர்வதேசப்பிறை நிலைப்பாடு ஆகும். பிறை காணப்படாவிட்டால், அல்லது தகவல் கிடைக்கப் பெறாவிட்டால் நடப்பு மாதத்தில் ஒருநாளை கூட்டிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
முதல் நாளின் வளர்பிறையை தமிழக எல்கைக்குள் பார்க்க வேண்டும் என்பதே மாநிலப் பிறையினரின் நிலைப்பாடு. முதல் இரண்டு நாட்களின் பிறை தமிழக எல்லைக்குள் தெரியாமல் போக வாய்ப்புள்ளது, நாம் பார்ப்பது மூன்றாவது பிறையாக இருக்கலாம் ஆனால் அதுதான் முதல் பிறை என்று கூறுகின்றனர்.
ஆக மேற்படி இரண்டு நிலைப்பாட்டிலுள்ளவர்களுக்கும் பிறை கண்களுக்குத் தெரியாமல் போகும் வாய்ப்புள்ளது என்கின்றனர். இதற்கு மேகமூட்டம், தூசிதுகள்கள், புகை மூட்டம், பனிப்பொழிவுகள், அதிகமான வெளிச்சம், பார்வைக் கோளாறு போன்ற காரணங்களால் பிறை தெரியவில்லை என்று நம்புகிறார்கள். இதுவல்லாமல் மேற்படி இரு நிலைப்பாட்டிலுள்ளோரும் 'தங்களுக்கு பிறை காணாமல் போய் விடுகிறது' என்று இதுநாள் வரை பிரச்சாரம் செய்ததில்லை.
ஒருநாளின் துவக்கம் ஃபஜ்ருதான் என்பதை குர்ஆன் சுன்னாவின் ஒளியில் ஆதாரப்பூர்வமாக நாம் எடுத்துச் சொல்கிறோம். அதனால் ஃபஜ்ருக்கு முன்னர் தோன்றும் தேய்பிறைகளின் இறுதி பிறைகளை அந்நாளுக்கு முந்திய நாளுக்குரியதாகக் கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் வாதம் வைக்கின்றனர். இந்த வாதம் தமிழகப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாட்டிற்கும் எதிரானதே. அதாவது ஒரு நாளின் துவக்கம் மஃரிபு என்பவர்களுக்கு இந்த விதியைப் பொருத்திப் பாருங்கள். இவர்களின் தவறான சிந்தனையின்படி மஃரிபு நேரத்திற்கு முன்னர் உதிக்கும் பிறைகளை அந்நாளுக்கு முந்திய நாளுக்குரியதாகக் கொள்ள வேண்டும், அதுபோல மஃரிபுக்கு நேரத்திற்கு பின்னர் உதிக்கும் பிறைகளை நடப்பு நாளுக்குரியதாகக் கொள்ள வேண்டும்;.
அப்படியானால், மஃரிபிலிருந்து நாளைத் துவங்கும் அனைவருக்கும் ரமழான் மாதத்தில் பவுர்ணமி தினம் வரை நோன்பு நோற்க முடியாமல் போகும். காரணம் சந்திர மாதத்தின் முதல்நாள் முதல், பவுர்ணமிநாள் வரை, பிறை காலை நேரத்தில்தான் உதயமாகிறது, மஃரிபில் சூரியன் மறைந்த பின்னர் அது காட்சி அளிக்கிறது. முழுநிலவு வரையுள்ள சுமார் 13-நாட்களுக்குரிய பிறைகள் அனைத்தும் மஃரிபு நேரத்திற்கு முன்னர்தான் உதிக்கிறது. இதனால் தமிழகப்பிறை, மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாட்டிலுள்ளவர்கள் ரமழான் மாதத்தின் பாதி அளவு நோன்புகளை நோற்க முடியாமல் போகும். ஹிஜ்ரி காலண்டரில் ஒருநாளின் பிறையை காணவில்லை என்போர் இதற்கு என்ன தீர்வைச் சொல்ல போகிறார்கள்?
ஃபஜ்ரு வக்தை அளவு கோளாக வைத்ததால் ஒருநாளின் பிறையை காணவில்லையாம்! அப்படியானால் ஒரு நாளின் துவக்கமாக மஃரிபு நேரத்தைக் கருதினால் எத்தனை நாட்களுக்குரிய பிறைகள் ''மிஸ்ஸிங்'' ஆகும்? மேற்படி விமர்சனத்தைக் கிளப்புவோர் சிந்திக்க வேண்டாமா? 'பிறை காணாமல் போய் விடுகிறது' என்று ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டுள்ள ஹிஜ்ரி காலண்டரை குறைகூறுவோர், தங்களின் பிறை நிலைப்பாட்டை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும், 22-வது நாளிலோ அல்லது 28-வது நாளிலோ பிறை காணாமல் (மிஸ்ஸிங்) போகிறது என்று வாதிப்போருக்குதான் இங்கு பதிலளிக்கப்படுகிறது. 'பிறை காணாமல் போய் விடுகிறது' என்ற விமர்சனம் மாநிலப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாட்டிற்கும் பொருந்தும் என்பதால், மேற்படி விமர்சனத்தை கிளப்புபவர்கள் பிறை விஷயத்தில் எந்த நிலைப்பாட்டிற்கும் செல்லவியலாத சூழல் உள்ளது.
தேய்பிறைகளில் ஒன்று வானில் காணமல் போகிறது எனில் இவர்களின் வாதம் உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும்தான் பொருந்தும். இதில் ஹிஜ்ரி நாட்காட்டியை குறை சொல்ல என்ன இருக்கிறது? தெரியவேண்டிய பிறை வடிவத்தைக் காணவில்லை என்றால் ஹிஜ்ரி நாட்காட்டியின் பிறைப்படித்தரங்கள் அனைத்தும் மாறுபட்டுவிட வேண்டும். அப்படி மாறுபடுகிறதா, இல்லையே? ஹிஜ்ரி 1436-இன் துல்கஃதா மாதம் (13-09-2015) ஞாயிற்றுக்கிழமை புவிமைய சங்கமநாளோடு முடிவடைந்தது. அன்றுதான் அமாவாசை தினம் என்பதற்கு மற்றொரு அத்தாட்சியாக சூரியக் கிரகணத்தையும் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தினான். சந்திர மாதத்தின் இறுதிநாளில்தான் சூரியன் சந்திரன், பூமி, இம்மூன்றும் ஒரே நேர்கோட்டிற்கு வருவதால் சூரியக்கிரகணம் ஏற்படும். எனவே துல்கஃதா மாதம் (13-09-2015) ஞாயிற்றுக்கிழமை 30-நாட்களில் முடிந்தது என்பதை யாராலும் மறுக்க வியலாது. இந்நிலையில் சந்திர ஓட்டத்தை அவரவர் பகுதி நேரத்திற்கு மாற்றி அமைத்து சந்திரன் உதிக்கிறது, மறைகிறது என்று மக்களைக் குழப்பிவிடுவது ஏன்? இவர்களை பின்னின்று இயக்குபவர்கள் யார்? என்பதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
என்னை மட்டும் ஏன் அடிக்கிறாய்! இதோ இவரையும் அடி! என்பது போலுள்ளது இந்த அறிவிலிகளின் வாதம். சந்திர உதயத்திற்கும் பிறை கண்ணுக்கு தெரிவதற்குமே வித்தியாசம் தெரியாதவர்கள் என்ன விஞ்ஞான விளக்கத்தை கொடுப்பார் என்பதை மக்கள் விளங்கவேண்டும். பௌர்ணமிவரை சந்திரன் பகலில்தான் உதிக்கும் ஆனால் அது எப்போது கண்ணுக்கு தெரியும்? சூரியன் மறைந்தபின்தானே. முஸ்லிம்களுக்கு மக்ரிபில் நாள் துவங்குகிறது பிறையும் மக்ரிபில்தான் கண்ணுக்கு தெரிகிறது. இதில் என்ன பிரச்சனையை இவர் கண்டார். முதல் பிறையை மட்டும் கண்ணால் பார்த்து மாதத்தை துவங்குவது நபி வழி. அந்த முதல் பிறை மக்ரிபில் மேற்கு திசையில் கண்ணுக்கு தெரியும். இது தெளிவான நபி வழி.
“நிலவு எங்கே உதிக்கிறது” என்பது எந்த பயனுமற்ற கேள்வி. நிலவின் உதயம் நாளின் துவக்கதையோ மாதத்தின் துவக்கதையோ பாதிப்பதே இல்லை. இன்று வரை தலைப்பிறை கிழக்கில் உதித்ததை யாரும் பார்த்ததே இல்லை. இஸ்லாத்திலும் நிலவின் உதய மறைவுகள் எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒன்றாக உள்ளது. நிலவின் உதய மறைவை வைத்து நாளைதுவங்கியதாகவோ நாட்காட்டியை உருவாக்கியதாகவோ இன்று வரை எந்த சமூகமும் அறியப்படவில்லை. நிலவின் உதய மறைவை வைத்து நாளைத்துவங்கவும் இயலாது நாட்காட்டியை அமைக்கவும் இயலாது. எனவே இந்த மூடத்தனமான கேள்வியை மக்கள் அலட்சியம் செய்யவும் இந்த ஹிஜ்றா கூட்டத்தின் சதிவலையில் சிக்கி இபாதத்களை பாழாக்கிக் கொள்ளாமலும் இருக்க மக்களை அறிவுத்துகிறோம். அதிக விளக்கங்களுக்கு http://hafsa13.blogspot.com/2016/06/26.html
முஸ்லிம்களுக்கு சந்திர உதயமோ மறைவோ தேவையே இல்லை. தலைப்பிறையைப் பார்த்ததில் இருந்து 29நாட்களை எண்ணி வருவோம் 30ஆம் இரவில் பிறை தெரிந்தால் அது முதல் நாள் இரவு, மறைக்கப்பட்டால் (மேகமோ, தூசு மண்டலமோ, எது மறைத்தாலும் கவலை இல்லை) அது 30 ஆம் நாள் இரவு. இது எங்கள் நபி வழி நிலைப்பாடு. ஒரு தனி நபர் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இருந்தால் சொல்லலாம். இல்லாவிட்டால் மௌனமாக இருப்பது நல்லது. கேள்வியை கேட்டவர் கணக்கீட்டை ஆதரிப்பவர். நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்று சொல்பவர். உங்களால் அவருக்கு பதில் சொல்ல இயலாதபோது எங்களை எதற்கு உள்ளே இழுக்க வேண்டும்.
ஹிஜ்ரி காலண்டரில் சந்திரனின் உதயத்தையோ, அதன் அஸ்தமனத்தையோ நாம் குறிப்பிடுள்ளோமா? அல்லது நாம் இப்படி பிரச்சாரம்தான் செய்கிறோமா? இல்லையே!
உலக மகா பொய்யர்கள்!!! நாளின் ஆரம்பம் பிறையின் உதயத்தை ஒத்திருக்க வேண்டும் என்று இத்தனை நாளும் சொன்னவர்கள் இப்போது அந்தர் பல்டி. ஆதாரங்கள் கீழே!!
சந்திரனின் அமைப்பு விதிகளைப் பொறுத்தவரையில்,
•மக்களுக்குத் தேதியை அறிவிக்கும் அதன் படித்தரம் (அல்குர்ஆன் 2:189),
படித்தரம் என்ற வார்த்தையே இந்த வசனத்தில் இல்லை. முதல் பிறைகள் மாதத்தை காட்டும் என்கிற வசனம் இது.
•ஆண்டுகளின் கணக்கீட்டிற்கு அதன் மனாஜில் (அல்குர்ஆன் 10:5),
மன்சில்கள் ஆண்டுகளின் எண்ணிக்கயை எப்படிக் காட்டும் எனும் அறிவியல் தெரியாமல் மன்ziல் என்றால் படிதரம் எனும் பொருளிலேயே பிரச்சாரம் செய்கின்றனர்
•சந்திரன் ஒருநிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறிச்செல்லும் நிலை (அல்குர்ஆன் 84:19),
நவூதுபில்லாஹ். ஒரு வசனத்தில் ஓரிரு வார்த்தைகளைத்தான் மாற்றி வந்தனர். இப்போது மொத்த வசனத்தையே மாற்றி விட்டனர். “திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.” என்று அல்லா மறுமையை பற்றி மனிதனை நோக்கி சொன்ன வசனத்தை இவர்கள் பிறைக்கு மாற்றி விட்டனர்.
•அதன் மனாஜிலில் இறுதியாக உர்ஜூஃனில் கதீம் என்ற படித்தரம் (அல்குர்ஆன் 36:39),
உர்ஜூணில் கதீம் என்பது ஒரு உவமை. அந்த உவமை முதல் பிறையை குறிக்கிறது. “கதீம் என்றால் பழசு தானே. அப்படீனா உர்ஜூணில் கதீம்னா பழைய பிறைதானே” என்று இவர்களின் உறுப்பினர்கள் வாதம் வைக்கும் அளவுக்கு இவர்கள் அறியாமையில் உள்ளனர்.
•பிறகு பிறை மறைக்கப்படும் நிலை (நபிமொழி),
இப்படி எந்த நபி மொழியும் இல்லை பிறை கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்தால் மாதத்தை 3௦ஆக பூர்த்தி செய்ய சொன்ன நபி மொழியை இப்படி மாற்றி விட்டனர்.
•பிறகு சூரியனை பின்தொடரும் நிலை (அல்குர்ஆன் 91:2)
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக! “ எனும் இறை வசனங்களை எப்படி இவர்களால் அமாவசைக்குபின் சூரிய உதயத்திற்கு பின் சந்திரன் உதிக்கும் எனும் பொருளில் கொண்டு வர முடிந்தது. இறைவசனங்களை மாற்றும் அளவுக்கு துணிவு வந்துவிட்டது.
•அதன் பாதையில் அதன் துல்லியமான இயக்கம் (அல்குர்ஆன் 55:10, 14:33)
மேலே இவர்கள் திருத்துக்கூறிய வசனங்களின் உண்மையான விளக்கங்களை திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எனும் கட்டுரையில் விளக்கியுள்ளோம் பார்க்க
இப்படி பொருளை மாற்றியும் தங்களுக்கு தேவையான வரிசையில் அமைத்தும் இவர்கள் தங்கள் நாட்காட்டியை நிறுவ முயற்சிகின்றனர். மாற்று மதத்தவர்கள் ஒரே (சூரிய) நாளில் அவர்களது பண்டிகைகளை கொண்டாடுகின்றனர் முஸ்லிம்களால் அவ்வாறு செய்ய இயலவில்லையே எனும் மனோ இச்சையால் உருவானதே இவர்களின் நாட்காட்டி. அதே போல் மாற்று மதத்தவர்கள் அவர்களது பண்டிகைகளில் மது அருந்துகிறார்கள் நாமும் அருந்தலாமே என்ற எண்ணம் வந்தால் குர்ஆனில் படிப்படியாக தடை செய்யப்பட்ட மது அருந்துதல் தொடர்பான வசனங்களை (மேலே தங்களுக்கு விருப்பமான வரிசையில் அடுக்கியதைபோல) பின் வரிசையில் (ரிவேர்சில்) அமைத்து மதுவை ஹலால் ஆக்கி விடுவார்கள்.
இதன் அடிப்படையில் 30 நாட்கள் கொண்ட மாதத்தில் 28 சந்திர நாட்கள் + ஒரு அமாவாசை நாள் என்று கூட்டினால் 29 என்ற எண்ணிக்கைதான் வருகிறது அதனால் ஒருநாள் ''மிஸ்ஸிங்'' என்ற உறுதியான (!) முடிவுக்கு வந்துள்ளனர். இவர்கள் பெரும் கூட்டமாகவோ, ஒரு இயக்கமாகவோ, அல்லது ஜமாஅத்தாகவோ இயங்குவதாக எண்ணி விடாதீர்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள் இருந்து கொண்டுதான் இந்த வேலையைச் செய்கிறார்கள்.
இவர்களை பின்னின்று இயக்குபவர்கள் யார்? என்பதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். என்றும் எழுதிவிட்டு, அவர்கள் கணக்கீட்டை ஆதரிப்பவர்கள் என்றும் தெரிந்து கொண்டு, அவர்கள் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்று சொல்பவர்கள் என்றும் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு சத்தியம் என்று தோன்றும் விஷயங்களில் ததஜவுடன் சேர்ந்து இவர்களை எதிர்ப்பார்கள் என்னும் ஒரே ஒரு காரணத்திற்காக நேர்மையான அவர்களை நாங்கள் பின்னின்று இயக்குகிறோம் என்று இறையச்சம் இல்லாமல் பொய்யுரைக்கிறீர்களே. இது கோழைத்தனம் என்று தெரியவில்லையா?!
எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது
நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதுனுநக்லா என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது பிறையைக் கவனித்தோம்;. அக்கூட்டத்தில் சிலர் இது மூன்றாவது நாளுக்குரியது (இப்னு ஃதலாஃத்) என்றனர். மற்றும் அக்கூட்டத்தில் சிலர் இரண்டாவது நாளுக்குரியது (இப்னு லைலத்தைன்) என்றனர். அப்பொழுது நாங்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் நிச்சயமாக பிறையைக் கவனித்தோம் சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றும் கூறினோம். அதற்கவர்(இப்னு அப்பாஸ் ரழி) நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன இன்ன கிழமைகளில் கவனித்தோம் என்று விடையளித்தோம். அதற்கவர்கள்(இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள். அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 1885)
நாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமழான் பிறையைப் பார்த்தோம். அதுபற்றிய விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரழி) யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 2582).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் மேற்கண்ட முதலாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்றும், இரண்டாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அது உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.
மேற்கண்ட இவ்விரு ஹதீஸ்களிலும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பிறகே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றோ, 29-வது நாள் பின்னேரம் 30-வது இரவு என்ற ஒரு நாளில் மட்டும் பிறையை பார்க்க வேண்டும் என்றோ கூறப்படவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுகிறோம். ஒவ்வொரு கிழமைக்குரிய பிறையும் அந்தந்த கிழமையின் தேதியைக் குறிக்கும் என்பதையும், இன்று மஃரிபு வேளையில் மேற்குத்திசையில் பார்க்கும் பிறை அடுத்த நாளுக்குறியது அல்ல என்பதையும் தெளிவாக விளக்கும் முகமாகத்தான் எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இரத்தினச் சுருக்கமான வார்த்தையிலிருந்து புலனாகிறது.
அல்லது பிறைகளை ஃபஜ்ருக்கு பின்னர் பார்த்தால் இன்றைய பிறை, ஃபஜ்ருக்கு முன்னர் பார்த்தால் அது நேற்றைய பிறை என்ற நிலைப்பாட்டில் நபித்தோழர்கள் இல்லை என்பதும் புலனாகிறது. அதுபோல 'பிறை காணாமலேயே போய் விடுகிறது' என்று விமர்சித்தவர்களும் ஒரு நாளின் துவக்கம் எது? என்பதை தீர்க்கமாக சொல்ல மறுக்கின்றனர். இதிலிருந்தே இவர்களின் சூழ்ச்சமம் புரிகிறது.
மேலும் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் கும்மவுடைய நாள் என்னும் புவிமைய சங்கமதினம் - (Geocentric Conjunction Day)இருபத்து ஒன்பதாவது நாளிலோ, முப்பதாவது நாளிலோ இருப்பின் பிறை புறக்கண்களுக்குத் தெரியாத அந்த 'கும்ம'வுடைய நாளையும் மாதத்தோடு சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நினைவு படுத்தும் முகமாக நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்ற சொற்றொடர் அமைகிறது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.
இந்த ஹதீஸ் பிறையை புறக்கண்ணால் தான் பார்க்க வேண்டும், நம் கண்களுக்கு தெரியும் பிறை 40மணி நேர வயதுடைய பிறையாக இருந்தாலும் அதுதான் நமக்கு முதல் பிறை, பிறையின் படித்தரங்கள் தேதியை காட்டாது மேலும் நாளின் ஆரம்பம் மக்ரிப்தான் ஆகிய நான்கிற்கும் மிகதெளிவான சான்றாகும். அதையும் இவர்கள் எப்படி வளைக்கின்றனர் என்று பாருங்கள். இந்த ஹதீசிற்கான உண்மை விளக்கத்தை இங்கே காண்க piraivasi.com/2016/06/14.html
இதிலிருந்து, மறைக்கப்படும் நாளில் ஆஸ்திரேலியாவில் சில சமயம் பிறை தெரிகிறது என்பன போன்ற இணையதள செய்திகளை வைத்துக் கொண்டு குழம்பிக் கொள்ளாமல், உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்க வேண்டும் என்ற பாடத்தைத்தான் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ள பாடம் என்பதும் தெளிவாகிறது.
இதற்கு ஏற்கனவே அமாவாசையன்று பிறை தெரியாதா piraivasi.com/2015/07/18.html எனும் கட்டுரையில் தக்க பதில் கொடுத்துவிட்டோம். விண் ஞானமும் இல்லாமல் பொது அறிவும் இல்லாமல் கூடல் கழித்தல் கணக்கும் தெரியாமல் விக்கிபீடியாவை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டு பேசும் விஞ்ஞானிகளை அல்லாஹ் நேர்வழிப்படுத்த வேண்டும்.
முஸ்லிம் 1885-வது ஹதீஸில் இடம்பெறும் வாசகத்தை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். அதாவது ''சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றார்கள்'' என்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்தே அன்றைய ஸஹாபாக்களிடம் தலைப்பிறை குறித்த சர்ச்சைகள் ஏதும் இருக்கவில்லை. மாறாக அந்த நாளில் தென்பட்ட பிறையின் வடிவநிலைiயும், அது காட்டும் தேதியையும் குறித்துதான் கேள்வி எழுந்துள்ளது தெரிகிறது. மேலும் தலைப்பிறையைப் புறக்கண்களால் பார்த்த பின்னர் அடுத்தநாள் மாதத்தைத் துவங்கும் வழக்கம் அன்று இருக்கவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
அறியாமை! அல்லது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!!
1. சஹாபாக்கள் இவர்கள் கூறுவதைப்போல் கணக்கிட்டிருந்தால் நிச்சயமாக மூன்றாவது நாள் பிறை அளவுக்கு பிறை வளரும்வரை மாதத்தை துவங்காமல் இருந்திருப்பார்களா?
2. அவர்கள் கணக்கிட்டிருந்தால் பிறையின் அளவை பார்த்து ஏன் சர்ச்சைக்குள்ளாக வேண்டும்.
3. இவர் கூறுவதுபோல் அது மாதத்துவக்கதிற்கான பிறை அல்ல இரண்டாம் பிறையா மூன்றாம் பிறையா என்ற சந்தேகம் மட்டும் தான் என்று வைத்துகொண்டால் முதல் பிறை எதுவென்று தெரிந்தவர்களுக்கு அதற்கு அடுத்த நாள் இரண்டாம் பிறை அதர்க்கு அடுத்தநாள் மூன்றாம் பிறை என்று தெரியாதா.
4. அதுவும் இல்லை அது இரண்டாம் பிறையா மூன்றாம் பிறையா என்ற சந்தேகம் தான் என்று வைத்துகொண்டாலும் அதற்கு இப்னு அப்பாஸ் ரலி கொடுத்த தீர்ப்பில் அர்த்தமே இல்லையே. நீங்கள் எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்ற தீர்ப்பு எந்த விளக்கத்தையும் வழங்கவில்லையே. அவர்கள் எந்த நாளுக்குரியது என்று தெரியாமல் தானே அவரிடம் சென்று கேட்டனர்.
மொத்தத்தில் இவர்கள் தங்கள் நாட்காட்டியை நிலை நிறுத்த என்ன தில்லு முல்லு வேலைகளையும் செய்ய துணிவார்கள். என்பது தெளிவாகிறது அதற்கு மற்றுமோர் ஆதாரம் கீழே
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ، مُرَّةَ عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، قَالَ خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ - قَالَ - تَرَاءَيْنَا الْهِلاَلَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلاَثٍ . وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ قَالَ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلاَلَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلاَثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ . فَقَالَ أَىَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ قَالَ فَقُلْنَا لَيْلَةَ كَذَا وَكَذَا . فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةِ رَأَيْتُمُوهُ "‏‏
அந்த ஹதீஸின் மூலம் மேலே. லைல் லைல் என்று 5 முறை வந்திருக்கும் இரவு எனும் வார்த்தைக்கு இந்த விக்கிப்பீடியா மௌலவிகள் கிழமை என்று மொழியாக்கம் செய்துள்ளனர்.
பிறையை புறக்கண்களால் பார்த்த பின்னர்தான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தலைப்பிறை குறித்தே தர்க்கங்களில் ஈடுபடுவதைக் இன்று காண்கிறோம். மேலும் அவர்கள் பிறையின் வடிவநிலைகளையோ, அவை காட்டும் தேதியையோ சிறிதளவேனும் பொருட்படுத்துவதில்லை என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
அதை மாநபியும் உத்தம தோழர்களும் பொருட்படுத்தாதபோது நாங்கள் ஏன் பொருட்படுத்த வேண்டும்.
ஹிஜ்ரி நாட்காட்டியை விமர்சிக்கும் யாராக இருந்தாலும், அவர்களது கூற்றில் உண்மையாளராக இருந்தால் சரியான மாற்று நாட்காட்டியை மக்களுக்குத் தரவேண்டும்.
சிலை வணக்கத்தை நாம் எதிர்க்கிறோம். அதை அவர்களுக்கு புரியவைப்பதற்காக “உங்கள் சிலையின் மீது உக்காந்து கக்கா போகும் காக்காவை கூட அந்த சிலையால் விரட்ட முடியவில்லையே” என்று வாதம் வைக்கிறோம். அதற்கு அந்த சிலை வணங்குபவர்கள் “எங்கள் சிலையை குறை கூறும் நீ வேறொரு சிறந்த சிலையை உருவாக்கி காட்டிவிடு” என்று பதிலளித்தால் எப்படி இருக்கும். இது இவர்கள் கேள்விக்கு சிறந்த உவமை. இதை நாம் கூறியபோது அவர்களின் பதில்
“அல்லாஹ்வின் நாட்காட்டியை சிலை வணக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறும் ஆசாத்தியத் துணிச்சல் ததஜ வினருக்கு வந்துள்ளது வியப்பில்லை. காரணம் பயிற்சி அப்படி.”
நம் பதில் “உவமையை உவமையாக பார்க்கும் அடிப்படை மொழி அறிவு வேண்டும். அண்டங்காக்கை மாதிரி இருக்கிறான் என்று சொன்னால் அவனுக்கு வால் இருக்கிறதா அலகு எங்கே என்று கேட்பீர்களா. இதே போல்தான் நீங்கள் உர்ஜூணில் கதீம் எனும் உவமைக்கும் விளக்கம் கொடுத்தீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு உவமையை கூறியதால் உங்கள் கலாண்டரை சிலை வணக்கம் என்று சொல்லிவிட்டோம் என்று அர்த்தம் ஆகிவிடாது. மேலும் உங்கள் காலண்டர் அல்லாஹ்வின் காலண்டரும் இல்லை. நீங்கள் செய்வது தெளிவான நசீ’ எனும் குஃப்ரில் தள்ளும் செயல் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்த கட்டுரையில் நாம் வைத்துள்ள வாதங்களுக்கு விளக்கம் வேண்டுமெனில் அதற்கான தனித்தனி கட்டுரைகளை வாசிக்கவும்: