بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
mooncalendar.in/index.php/ta/ta-articles/310-2015-06-20-09-43-23 இந்த கட்டுரை மற்றும் இவர்கள் யூடியூப் இணையதளத்தில் பரப்பும் சில தகவல்களுக்கு மறுப்பும் அவற்றின் உண்மை நிலையை ஆய்வு செய்யும் கட்டுரை இது. பிறையின் அடிப்படை விஞ்ஞானம் உங்களுக்கு தெரியாதெனில் பின்வரும் கட்டுரைகள் படித்தபின் இக்கட்டுரையை தொடர்வது விளங்குவதை எளிமையாக்கும்.
3) சர்வதேச பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு >> www.piraivasi.com/2014/12/Universal-Hilail-An-Astronomical-Analysis.html
இக்கட்டுரையின் நோக்கம் அமாவாசை அன்று பிறை தெரியும் என்று நிரூபிப்பது மட்டும் அல்ல. இக்கட்டுரையின் நோக்கங்கள்.
1. இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் அமாவாசை அன்று பிறை தெரியும் என்று நிரூபிப்பது அல்ல. கமிட்டியினர் அறியாமையினால் பேசும் சில விஷயங்களை மக்களுக்கு மத்தியில் தெளிவு படுத்த!
2. அமாவாசை அன்று பிறை தெரியும் என்று நிறுவுவதால் அந்த பிறையை வைத்து இபாதத் செய்ய சொல்கிறோம் என்று எண்ணி விடாதீர்கள். கமிட்டின் அறியாமையை விளக்குவது மட்டுமே நோக்கம்.
3. “அமாவாசை என்பது ஒரு வினாடி நிகழ்வுதான் எனினும் அதை நாம் ஒரு முழுநாளாக கொள்ளவேண்டும்” எனும் கமிட்டி கொள்கை தவறானது என்பதை நிறுவ.
4. “ரசூலுல்லாஹ் மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளிபூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படும்” என்று சொன்னதாக தவறான பிரச்சாரம் செய்யும் கமிட்டியின் அறியாமையை வெளிப்படுத்த.
5. “புவிமைய சங்கமம்தான் அமாவாசை, அது ஒரு தனித்த நாளில் நிகழும்” எனும் தவறான கொள்கையை தெளிவுபடுத்திட.
6. “மறைக்கப்பட்ட நாள் என்பது ஒரு நாள் தான்” எனும் அறியாமை பிரசாரத்தை தெளிவுபடுத்திட.
அமாவாசை முடிந்து வரும் முதல் பிறை கண்ணுக்கு தெரிய வேண்டும் எனில் அது கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரவேண்டும்.
§. சூரியன் மறையும்போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (விலகல் கோணம்) (Elongation)
§. சூரியன் மறையும்போது, பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (எழுச்சிக்கோணம்) (Moon Altitude)
§. குறைந்த பட்சம் சந்திரன் 1% ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும். (Illumination)
அமாவாசைக்கு முன் இருக்கும் பழையபிறை கண்ணுக்கு தெரிய வேண்டும் எனில் அதற்கும் இதே நிபந்தனைகள்தாம்
§. சூரியன் உதிக்கும்போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (விலகல் கோணம்) (Elongation)
§. சூரியன் உதிக்கும்போது, பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (எழுச்சிக்கோணம்) (Moon Altitude)
§. குறைந்த பட்சம் சந்திரன் 1% ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும். (Illumination)
மேலிருப்பவை புறக்கண்ணால் பிறையை பார்க்க தேவையான அளவுகோல்கள் ஆகும். இந்த வரையறைகள் உலகில் எல்லா விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் காலம் காலமாக பிறை பார்ப்பவர்களால் சரிபார்க்கப்பட்டதும் நிரூபிக்கப்பட்டதும் ஆகும். இந்த அளவுகோலுக்கு உட்பட்டு பிறை இருந்தால் அது நிச்சயம் புறக்கணுக்கு தெரியும் மேகம் மறைக்காமலிருந்தால். மேலும் இது ஹிஜ்ர கமிட்டியின் தலைமை பொறுப்பாளராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பார்க்க https://www.youtube.com/watch?v=-BrRcVYSC-Q இப்போது ஒரு சில மாதங்களை உதாரணத்திற்காக எடுத்து அமாவாசையன்று பிறை தெரிய வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்வோம்.
இவர்கள் அமாவாசை என்பது ஒரு முழு நாள், மற்றும் அது ஒரு தனித்த சர்வதேச நாள், அன்று பிறை புறக்கண்ணுக்கு தெரியாது என்று பிரச்சாரம் செய்கின்றனர். சர்வதேச நாள் என்று ஓன்று இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இவர்கள் வாதப்படியே சர்வதேச நேரப்படி என்று அமாவாசை நிகழ்கிறதோ அன்றய தினம் பிறை புறக்கண்ணுக்கு தெரிய வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம். இவர்கள் வாதப்படியே சர்வதேச நேரத்தை லோக்கல் நேரமாக மாற்றாமலேயே இவர்கள் கூறும் சர்வதேச நாளில் அமாவாசை தெரிகிறதா என்று ஆய்வு செய்வோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிறையின் அளவிகள் Mobile Observatory எனும் மென்பொருளில் மூலம் கணக்கிடப்பட்டது. மேலும் Alcyone lunar calculator கணக்கீடுகளுடன் சரிபார்க்கப்பட்டுள்ளது.
முஹர்ரம் 1, 1437 இன் பிறப்பை அடையாளப்படுத்தும் அமாவாசை அக்டோபர் 13, 2015 அன்று சர்வதேச நேரப்படி 00:06க்கு நடக்கும். இன் ஷா அல்லா. அன்று செவ்வாய்க்கிழமை அன்றைய தேதியில் பிறை தெரிய வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம்.
இடம்: அமெரிக்க சமோவா, பாகோ பாகோ:
சூரிய மறைவு: 18:21
சந்திர மறைவு: 19:15
எழுச்சி: 11.7°
விலகல் கோணம்: 13.6°
ஒளியூட்டம்: 1.4%
அதே தினம் பிட்கன் தீவில்.
சூரிய மறைவு: 18:45
சந்திர மறைவு: 19:36
எழுச்சி: 10.2°
விலகல் கோணம்: 12.4°
ஒளியூட்டம்: 1.2%
பிட்கன் தீவு முதல் மேற்கே 180° நெடுக்கை வரையுள்ள எல்லா தீவுகளிலும் இன் ஷா அல்லா நிச்சயமாக பிறை தெரியும் மேகம் மறைக்காமல் இருந்தால். இந்த ஒரு தினத்திற்கு மட்டும் இரண்டு இடங்களை எடுத்துக்காட்டுகிறோம். இனி பிறை தெரியும் வாய்ப்பு அதிகம் உள்ள மேற்கு அல்லது கிழக்கு எல்லையை மட்டுமே எடுப்போம்.
*****************************************
தேதி: ஜனவரி 10, 2016
அமாவாசை நிகழும் நேரம்: Sunday, January 10, 2016; 01:30
பிறக்கப்போகும் இஸ்லாமிய மாதம்: ربيع الثاني, 1437
இடம்: லாஸ் ஏஞ்சல்ஸ்
சூரிய மறைவு: 17:02
சந்திர மறைவு: 18:06
எழுச்சி: 10.5°
விலகல் கோணம்: 13.1°
ஒளியூட்டம்: 1.3%
லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் மேற்கே 180° நெடுக்கை வரையுள்ள எல்லா இடங்களிலும் இன் ஷா அல்லா அமாவாசை தினம் நிச்சயமாக வளர் பிறை தெரியும் மேகம் மறைக்காமல் இருந்தால்.
*****************************************
தேதி: மார்ச் 9, 2016
அமாவாசை நிகழும் நேரம்: Wednesday, March 9, 2016; 01:54
பிறக்கப்போகும் இஸ்லாமிய மாதம்: , جمادى الثانية, 1437
இடம்: நியு ஆர்லியன்ஸ்
சூரிய மறைவு: 18:05
சந்திர மறைவு: 19:02
எழுச்சி: 11.9°
விலகல் கோணம்: 12.9°
ஒளியூட்டம்: 1.3%
நியு ஆர்லியன்ஸ் முதல் மேற்கே 180° நெடுக்கை வரையுள்ள எல்லா இடங்களிலும் இன் ஷா அல்லா அமாவாசை தினம் நிச்சயமாக வளர் பிறை தெரியும் மேகம் மறைக்காமல் இருந்தால்.
*****************************************
தேதி: மே 6, 2016
அமாவாசை நிகழும் நேரம்: Friday, May 6, 2016, 19:30
பிறக்கப்போகும் இஸ்லாமிய மாதம்: شعبان, 1437
இடம்: சிட்னி ஆஸ்திரேலியா
சூரிய உதயம்: 06:34
சந்திர உதயம்: 05:25
எழுச்சி: 12.3°
விலகல் கோணம்: 14°
ஒளியூட்டம்: 1.5%
சிட்னி முதல் கிழக்கே 180° நெடுக்கை வரையுள்ள எல்லா இடங்களிலும் இன் ஷா அல்லா அமாவாசை தினம் நிச்சயமாக தேய் பிறை தெரியும் மேகம் மறைக்காமல் இருந்தால்.
*****************************************
தேதி: ஜூன் 5, 2016
அமாவாசை நிகழும் நேரம்: Sunday, June 5, 2016; 03:00
பிறக்கப்போகும் இஸ்லாமிய மாதம்: رمضان, 1437
இடம்: லிமா; பெரு
சூரிய மறைவு: 17:50
சந்திர மறைவு: 18:42
எழுச்சி: 10.5°
விலகல் கோணம்: 12.4°
ஒளியூட்டம்: 1.2%
லிமா முதல் மேற்கே 180° நெடுக்கை வரையுள்ள எல்லா இடங்களிலும் இன் ஷா அல்லா அமாவாசை தினம் நிச்சயமாக வளர் பிறை தெரியும் மேகம் மறைக்காமல் இருந்தால்.
*****************************************
தேதி: ஆகஸ்ட் 2, 2016
அமாவாசை நிகழும் நேரம்: Tuesday, August 2, 2016: 20:45
பிறக்கப்போகும் இஸ்லாமிய மாதம்: ذو القعدة, 1437
இடம்: தவோ; பிலிப்பைன்ஸ்
சூரிய உதயம்: 05:31
சந்திர உதயம்: 04:41
எழுச்சி: 10.7°
விலகல் கோணம்: 12.7°
ஒளியூட்டம்: 1.2%
தவோ முதல் கிழக்கே 180° நெடுக்கை வரையுள்ள எல்லா இடங்களிலும் இன் ஷா அல்லா அமாவாசை தினம் நிச்சயமாக தேய் பிறை தெரியும் மேகம் மறைக்காமல் இருந்தால்.
*****************************************
தேதி: அக்டோபர் 1, 2016
அமாவாசை நிகழும் நேரம்: Saturday, October 1, 2016; 00:12
பிறக்கப்போகும் இஸ்லாமிய மாதம்: محرم, 1438
இடம்: பிட்கன் தீவு
சூரிய மறைவு: 18:02
சந்திர மறைவு: 19:31
எழுச்சி: 18.7°
விலகல் கோணம்: 12.3°
ஒளியூட்டம்: 1.2%
பிட்கன் தீவு முதல் மேற்கே 180° நெடுக்கை வரையுள்ள எல்லா இடங்களிலும் இன் ஷா அல்லா அமாவாசை தினம் நிச்சயமாக வளர் பிறை தெரியும் மேகம் மறைக்காமல் இருந்தால்.
*****************************************
தேதி: ஜனவரி 28, 2017
அமாவாசை நிகழும் நேரம்: Saturday, January 28, 2017; 00:07
பிறக்கப்போகும் இஸ்லாமிய மாதம்: جمادى الأولى, 1438
இடம்: லாஸ் ஏஞ்சல்ஸ்
சூரிய மறைவு: 17:20
சந்திர மறைவு: 18:20
எழுச்சி: 10.3°
விலகல் கோணம்: 12.6°
ஒளியூட்டம்: 1.2%
லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் மேற்கே 180° நெடுக்கை வரையுள்ள எல்லா இடங்களிலும் இன் ஷா அல்லா அமாவாசை தினம் நிச்சயமாக வளர் பிறை தெரியும் மேகம் மறைக்காமல் இருந்தால்.
*****************************************
இப்படி ஒவ்வொரு மாதமும் எடுத்து கணக்கிட்டால் இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். புரிந்து கொள்வதற்கு இந்த 8 எடுத்துக்காட்டுகள் போதுமானது. மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் நாம் தெரிந்து கொள்பவை
1. ஒரு மாதம் விடுத்து ஒரு மாதம் உலகில் எங்காவது ஓரிடத்தில் அமாவாசை அன்று பிறை தெரியத்தான் செய்கிறது.
2. வருடத்திற்கு குறைந்தது 6 மாதங்களில் அமாவாசை நாளில் ஒன்றில் வளர்பிறை அல்லது தேய் பிறை உலகில் தெரியத்தான் செய்கிறது.
இந்த அளவிகளில் பிறை இருக்கும் எனில் அது நிச்சயமாக புறக்கண்ணுக்கு தெரியும். அடர்ந்த மழை மேகங்களை தவிர நகரும் வெண்மேகங்கள் கூட இந்த பிறையை மறைக்காது.
இப்போது இந்தியா/இலங்கையில் வாழும் சவுதி குடிமக்கள் ஒரு கேள்வியை கேட்கலாம் “எல்லா மாதமும் இப்படி எங்காவது தெரியும் பிறையை நாம் ஏன் பின்பற்ற கூடாது?”. அட அறிவாளிகளா மேற்கத்திய நாடுகளில் பிறை தெரியும்போது உங்கள் ஊர்களில் சூரியன் சுட்டெரிக்குமே அப்போது நோன்பு வைப்பீர்களா? அல்லது பெருநாள் கொண்டாடுவீர்களா?. நீங்கள் எப்போதும் போல் சவுதி அரசு தங்கள் காலண்டரை பார்த்து பிறை அறிவிக்கும் நள்ளிரவு வரை காத்திருங்கள். கேரளாவில் பிறை பார்த்த தகவல் வந்தாலும்.
நாம் தெரிந்து கொள்ளவேண்டிய மற்றொரு விஷயம்... மறைக்கப்பட்ட நாளின் நீளமென்ன. பிறை புறக்கண்ணுக்கு தெரியாமல் ஒரு நாள் (24மணி நேரம்) தான் மறைக்கப்படுகிறதா.
இதை தெரிந்து கொள்வது மிகவும் எளிதானது. மேலே நாம் கூறிய வரைமுறைகளை தாண்டி சந்திரன் சென்று விட்டால் அது புறக்கண்களுக்கு மறைக்கப்பட்டுவிடும். அதிலிருந்து மீண்டும் அது புறக்கங்களுக்கு எப்போது தெரியவருகிறது என்று நாம் கணக்கிட்டால் மறைப்பட்ட நாளின் நீளத்தை அளந்து விடலாம். அதாவது பிறை எத்தனை நாட்கள் மறைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
கடந்த ரமலான் மாதத்தின் தேய்பிறை உலகநேரப்படி 15-07-15 3:37க்கு கடைசியாக பார்க்கப்படுகிறது. அதாவது சந்திரன் மேலுள்ள வரையறைகளை தாண்டுவதற்கு சற்று முன்புள்ள நேரம்.
மீண்டும் ஷவ்வாலின் முதல் பிறை உலகநேரபப்டி 17-07-15 0:06 பார்க்கப்படுகிறது. அதாவது சந்திரன் மேலுள்ள வரையறைகளுக்குள் மீண்டும் வரும் நேரம்.
இவற்றுக்கிடையேயான நேர வித்தியாசம் 44 ½ மணிக்கூறுகள் ஆகும். இதை ஒரு நிரந்தர அளவுகோலாக எடுத்துகொள்ள முடியாது. காரணம், சந்திர மாதத்தின் நீளம் மாதத்திற்கு மாதம் மாறிக்கொண்டிருக்கும். எனவே இந்த பத்தாண்டின் மிக குறைந்த நீளமுள்ள மாதத்தையும் மிக அதிக நீளமுள்ள மாதத்தையும் ஆய்வு செய்வோம்.
இப்பத்தாண்டின் குறைந்த நீளமுள்ள மாதத்தின்
தேய்பிறை கடைசியாக தெரியும் நேரம்: 23-06-17 8:17
வளர்பிறை உலகில் முதன்முதாலக தெரியும் நேரம்: 24-06-17 21:47
மறைக்கப்பட்ட நாளின் நீளம்: 37 ½
இப்பத்தாண்டின் அதிக நீளமுள்ள மாதத்தின்
தேய்பிறை கடைசியாக தெரியும் நேரம்: 16-01-18 0:41
வளர்பிறை உலகில் முதன்முதாலக தெரியும் நேரம்: 18-01-18 4:28
மறைக்கப்பட்ட நாளின் நீளம்: 51 ¾
ஆக பிறை குறைந்தது 37 ½ மணி நேரமும் அதிகமாக 51 ¾ மணி நேரமும் மறைக்கப்படுகிறது. மறைக்கப்படுவது ஒரு நாளில் அல்ல.
இதன் மூலம் “மறைக்கப்பட்ட நாளில் கணக்கிடுங்கள்” என்று மாநபி சொன்னதாக இவர்கள் ஹதீசுக்கு பொருள் கொடுப்பது தவறானது என்று நிரூபணம் ஆகிறது.
**************************************
இனி இவர்கள் அமாவாசை என்று பிறை தெரியும் என்று யாராவது சொன்னால் அவர்களிடம் கேட்பதற்காக சில கேள்விகளை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். இதில் சில கேள்விகள் குறிப்பிட்ட சில குழுக்களுக்கானவை அவற்றிக்கு நாம் விடையளிக்க தேவை இல்லை. அமாவாசை அன்று பிறை தெரியும் எனும் தலைப்பில் மட்டும் விடையளிப்போம். நாம் விடையளிக்க தேவை இல்லாத கேள்விகளை கோடிட்டு அடித்துள்ளோம்
1. புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லதுவளர்பிறையோ பொதுவாக அனைத்து உலகநாடுகளிலும் ஒவ்வொரு மாதமும்புறக்கண்களுக்குத் தெரிகிறதா?
அறியாமை கேள்வி! ஒவ்வொரு மாதமும் அனைத்து உலகநாடுகளிலும் புறக்கண்களுக்கு பிறை தெரிந்தால்தான் பிறையில் இதனை குழப்பங்கள் வராதே.
ஒரு மாதம் விடுத்து ஒரு மாதம் உலகில் எங்காவது ஓரிடத்தில் அமாவாசை அன்று பிறை தெரியத்தான் செய்கிறது.
2. புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோஅல்லது வளர்பிறையோ உங்களின்அபிமானத்திற்குரிய ஆஸ்திரேலியாவுக்குகிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப்பகுதியிலோ ஒவ்வொரு மாதமும்புறக்கண்களுக்குத் தெரிகிறதா?
இது ஒரு சிறந்த கேள்வி. புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப்பகுதியிலோ அதிகமாக தென்படுவதற்கு காரணம் நீங்கள் தொழுகையில் முன்னோக்கும் திசைதான். நீங்கள் கிப்லாவாக ஏற்றுக்கொண்டுள்ள (Greenwich) க்ரெனிச் தீர்க்க ரேகையும் நீங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சி என்று கூறும் தேதிக்கொடும்தான் இதற்கு காரணம். அமெரிக்காவிற்கு மேற்கிலும் ஆஸ்திரேலியாவிற்கு கிழக்கிலும் இந்த தேதிக்கோடு இருப்பதால் அந்த இடத்தில் ஒரு நாளின் துவக்கும் முடிவும் அமைந்து விடுகிறது. ஒரு நாளை முதலில் துவங்கும் கிழகத்திய நாடுகளுக்கு (ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே) கடைசி பிறையை பார்க்கும் வாய்ப்பு அதிகம் அப்போது விலகல் கோணம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். அதே போல் ஒரு நாளை கடைசியாக முடிக்கும் அமெரிக்காவிற்கு மேற்கே இருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு முதல் பிறையை பார்க்கும் வாய்ப்பு அதிகம். அவர்களை பிறை சென்று அடையும்போது அதிக விலகல் கோணத்தில் சென்றடையும். ஒரு நாளை யார் முதிலில் தொடங்குவார் யார் இறுதியில் முடிப்பார் என்பதை முடிவு செய்வது தேதிக்கொடுதான். அதை மாற்றிப்பாருங்கள் உங்கள் கேள்விக்கு தக்க விடை கிடைக்கும். [13) கமிட்டியினரின் தேதிக்கோடு >> www.piraivasi.com/2015/03/committeedateline.html 14) கமிட்டியினர் முன்னோக்கும் தீர்க்க ரேகை >> www.piraivasi.com/2015/03/committeeQibla.html ] எனும் ஆக்கங்களில் நாம் கூறும் மாற்று தேதிக்கொடுகளில் ஒன்றை எடுத்து ஆய்வு செய்து பாருங்கள் உண்மை விளங்கும்.
3. மேற்படி புவிமைய சங்கம நாளில், அரிதாகசில மாதங்களில் மட்டும் தெரியும்வாய்ப்புள்ளது என்று நீங்கள் கூறும்அப்பிறையை முஸ்லிம்கள் புறக்கண்களால்பார்த்ததாக சாட்சிகள் உள்ளதா?
அந்த சாட்சிகளைதான் உங்கள் தடயவியல் துறை நிராகரித்துவிடுகிறதே
4. அப்படி அரிதான மாதங்களில், அவ்வாறுஅரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறைசாதாரணமாக புறக்கண்களால்பார்க்கப்படுகிறதா அல்லது (Telescope, Charge-Coupled Devices (CCDs) image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம்எடுக்கப்படுகின்றதா?
புறக்கண்ணால் பார்த்து எடுத்த புகைப்படங்களையும், சாட்சிகளையும் உங்கள் தடயவியல் துறை நிராகரித்துவிடுகிறதே !
5. Telescope போன்ற தொலைநோக்கி மூலம் பார்க்கப்பட்டபிறைதான் இது, Telescope உதவி கொண்டுதான் இந்த போட்டோவைஎடுக்கப்பட்டது என்றால்Hubble Telescope போன்ற நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு நாளும்பிறையை நேரடி ஒளிபரப்பு செய்தால் அதைஏற்று செயல்படத் தயாரா?
6. தொலைநோக்கி (Telescope) மூலம் பிறை பார்க்கப்படுவதும், புறக்கண்களால் பார்க்கப்படுவதும்ஒன்றுதான் என்று உங்கள் நிலைப்பாடாகஅறிவிக்கத் தயாரா?
7. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டுஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் அதன்அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும்என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்குமார்க்கம் அனுமதிக்கின்றதா? இதற்கு ஆதாரம்என்ன?
அரிதாக நடக்குமென்று ஒப்புக்கொள்கிறீர்கள். மாஷா அல்லாஹ். அரிதாக அல்ல. ஒரு மாதம் விடுத்து ஒரு மாதம் உலகில் எங்காவது ஓரிடத்தில் அமாவாசை அன்று பிறை தெரியத்தான் செய்கிறது. (அதை வைத்து அமல் செய்யவேண்டும் என்று வேறு யாராவது சொல்லி இருப்பார்கள் அதற்கு அவர்கள் ஆதாரம் தருவார்கள்.)
8. 'ஃபஇன் கும்மஅலைக்கும் - ஃபக்திரூலஹூ' – அதாவது மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளிபூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளதை வைத்து, முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லது சவுதி அரேபிய தீபகர்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கம நாளில்தேய்பிறையோ அல்லது வளர்பிறையோபுறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா? அவ்வாறுதெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாகநிரூபிக்க முடியுமா?
என்ன ஒரு குழப்பம். நீங்கள் சவுதி பிறையை பின்பற்றும் இந்தியா வாழ்சவுதி குடிமக்களா. சவுதியில் அமாவாசை அன்று பிறை தெரிந்தால் உங்கள் காலண்டரை கிழித்து போட்டு விடுவீர்களா. உங்கள் நிலைப்பாடுதான் என்ன? இந்த கேள்விக்கு பொருள் என்ன?
“மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளிபூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படும்” இப்படி ஒரு வாக்கியம் ஹதீஸில் உள்ளதா? மறைக்கப்படும் நாளின் நீளம் என்னவென்பது உங்களுக்கு தெரியுமா. குறைந்தபட்சம் 37 ½ மணிக்கூறு முதல் அதிகபட்சம் 51 ¾ மணிக்கூறுகள் வரை பிறை மறைக்கபடும் என்ற விஞ்ஞானம் தெரியாதா? சராசரியாக 45 மணிநேரம் எல்லா ஊர்களிலும் எல்லா நாடுகளிலும் பிறை மறைக்கப்பட்டிருக்குமே. 2 நாட்கள் மறைக்கப்பட்டிருக்கும் பிறையை “ஒரே ஒரு நாள் தான் மறைக்கப்பட்டிருக்கும்” என்று இஸ்லாத்திற்கு புறம்பாகவும் விஞ்ஞானத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யாதீர்கள். அறியாமையெனில் திருத்திக்கொள்ளுங்கள்.
9. அல்லது இனிவரும் காலங்களிலாவதுமுஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா?
என்ன ஒரு குழப்பம். நீங்கள் சவுதி பிறையை பின்பற்றுபவர்களா? சவுதியில் அமாவாசை அன்று பிறை தெரிந்தால் உங்கள் காலண்டரை கிழித்து போட்டு விடுவீர்களா. உங்கள் நிலைப்பாடு என்ன? இந்த கேள்விக்கு பொருள் என்ன? கிப்லாவுக்கும் பிறைக்கும் என்ன தொடர்பு?
10. சந்திரனின் 100 சதவிகித ஒளிரும்தன்மையிலிருந்து சுமார்0.5%, 1% அல்லது1.5% அளவுஒளி மட்டும் பூமிக்குத் தெரியவாய்ப்புள்ளதாக விண்ணியல் கணக்கீடுசொல்லும் அந்தப் பிறையின் படித்தரத்தை ஒருமனிதன் தனது புறக்கண்களால் சர்வ சாதாரணமாகபார்க்க இயலுமா? அது சாத்தியம்தானா?
இதற்கான விளக்கமும் கணக்கீடுகளும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
11. சூரியன் உதிக்கும் மற்றும் மறையும்நேரத்தில் அந்திக் கருக்கலினால் (Twilight) ஏற்படும் ஒளிச் சிதறல்களுக்கு மத்தியில்வெரும் ஒரு சதவிகிதம்கூட இல்லாதஅப்பிறையைத் தொலைநோக்கி (Telescope) மூலமாகக்கூட தேடிப் பார்ப்பதற்கு மிகவும்சிரமப்பட வேண்டியதிருக்கும். இந்நிலையில்அதை சர்வ சாதாரணமாக ஒருவர் புறக்கண்ணால்பார்த்து கேமராவால் போட்டோவும் எடுக்கமுடிந்தது என்பதை எப்படி நம்பச்சொல்கிறீர்கள்?
மேலே இருக்கும் கணக்கீடுகள் நீங்களும் ஒப்புக்கொள்பவை. 1%க்கு மேல் ஒளியூட்டப்பட்ட சந்திரன். சூரியன் மறைந்து தேவையான அளவு அதன் ஒளிசிதறல் குறைந்த பின்பும் சந்திரன் தெரிய வாய்ப்புள்ளதா என்று நிரூபணம் செய்யப்பட்ட கணக்கீடு.
12. மேற்படி பிறையைக் கண்டதாகத் தகவல்வெளியிட்டது யார்? முஸ்லிம்களா? முஸ்லிம்களே பிறை சாட்சி சொன்னாலும் அதன்சாதக பாதகங்களை விஞ்ஞான உண்மைகளோடுசரிபார்த்து (!) அதன் பிறகேஏற்றுக்கொள்ளும் மனநிலையிலுள்ளவர்கள், படம்பிடித்தவர் யார் என்று அறியாதநிலையிலும் அவர் எடுத்ததாக வெளியாகும்செய்திகளைக்கூட நம்பி எந்த அடிப்படையில்இணையதளங்களிலே பரப்புகின்றீர்கள்?
13. அமாவாசை (சங்கம)யில் பிறை தெரிந்ததாகவெளியிடப்படும் தகவல்களில் பிறை பார்த்துபோட்டோ எடுத்தவர்கள் முஸ்லிம்அல்லாதவர்களாகவே உள்ளனர். இப்படிகாஃபிர்கள் ஒரு படத்தை வெளியிட்டு பிறைசாட்சி சொன்னாலும் அந்த சாட்சியத்தை ஏற்றுமுஸ்லிம்கள் அமல் செய்யலாமா?
14. அமாவாசை (சங்கம) நிகழ்வை அறிவியில்ஆய்வாளர்கள் உலக நேரத்தில்குறிப்பிடுகையில் அதை அவரவர்களின் லோக்கல்நேரத்திற்கு (Local Time) மாற்றி அமைத்து நீங்களும் குழம்பிமற்றவர்களையும் குழப்புவது ஏன்?
அமாவாசை நிகழ்வை லோக்கல்நேரத்திற்கு மாற்ற கூடாதென்று எந்த விஞ்ஞானி சொன்னார். அப்படி மாற்றினால் உங்கள் நாட்காட்டி பொய்யகிவிடுமல்லவா!! இதை ஏற்கனவே 11) ஹிஜ்ரி கமிட்டி காலண்டரின் பிழைகள்! - 1 >> www.piraivasi.com/2015/03/1.html & 12) ஹிஜ்ரி கமிட்டி காலண்டரின் பிழைகள்! - 2 >> www.piraivasi.com/2015/03/2.html ஆகிய கட்டுரைகளில் நிரூபித்துள்ளோம். உலக நேரத்தில் குறிப்பிடப்படும் விண்வெளி நிகழ்வுகளை உங்கள் உள்ளூர் நேரத்திற்கு மாற்றி பயன்படுத்தி கொள்ளுங்கள் என உலகத்தின் தலைசிறந்த உங்களுக்கு நாட்காட்டி வடிவமைதுதந்த நாசா சொல்லக்காரணம் என்னவோ? இதையும் மேலுள்ள கட்டுரைகளில் நிரூபித்துள்ளோம்.
மேலும் மேலே உள்ள ஆய்வுகள் அமாவாசை ஏற்படும் நேரத்தை உள்ளூர் நேரத்திற்கு மாற்றாமல் உலக நேரத்திலேயே வைத்து செய்யப்பட்டவை. நீங்கள் சொல்லும் அமாவாசை ஏற்படும் சர்வதேச நாளில் தான் பிறை தெரிகிறது என்று நிரூபித்துள்ளோம்..
15. ஜூம்ஆ தொழுகையை அமெரிக்க மக்கள் வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் ஜூம்ஆ வக்தில் தொழும் போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகள் சனிக்கிழமையாக விடிந்து விடும். அதனால் சனிக்கிழமைதான் அமெரிக்க மக்கள் ஜூம்ஆ தொழுகிறார்கள் என்று சொல்வீர்களா?
சேம் சைடு கோள் போடும் அடுத்த குழப்பம். நீங்கள் கேட்ட கேள்வி உங்களுக்கு எதிரானது. எப்படி அவரவருக்கு ஜுமுஆ வரும்போது அவரவர் தொழுகிரரோ அதே போல் அவரவர் உள்நாட்டு நேரப்படி எப்போது அமாவாசை நடக்கிறதோ அதற்கு அடுத்த நாளில் அவர்களை மாதத்தை தொடங்க நீங்கள் ஏன் அனுமதிப்பதில்லை. 36மணி நேரம் வரை ஏன் அமெரிக்க கமிட்டிக்காரக்களை தாமதிக்க சொல்கிறீர்கள். இந்த கேள்வியின் விளக்கம் 11) ஹிஜ்ரி கமிட்டி காலண்டரின் பிழைகள்! - 1 >> www.piraivasi.com/2015/03/1.html & 12) ஹிஜ்ரி கமிட்டி காலண்டரின் பிழைகள்! - 2 >> www.piraivasi.com/2015/03/2.html ஆகிய கட்டுரைகளில் உள்ளது.
இக்கட்டுரையிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டது:
1. அமாவாசை நடக்கும் (கமிட்டியின்) சர்வதேச நாளில் உலகில் பிறை தெரியத்தான் செய்கிறது. எல்லா மாதமும் தெரியாவிட்டாலும் ஒரு மாதம் விடுத்தது அடுத்த மாதம் நிச்சயம் தெரிகிறது
2. அமாவாசை என்பது ஒரு நாளல்ல என்பது மீண்டும் நிரூபணம் ஆனது.
3. மறைக்கபட்ட நாளில் நீளம் ஒரு நாளை விட அதிகமானது (இரண்டு நாள்) சில மாதங்களில் இரண்டு நாட்களை விட அதிகமானது.
4. “மறைக்கப்பட்ட நாளில் கணக்கிடுங்கள்” என்று மாநபி சொன்னதாக இவர்கள் ஹதீசுக்கு பொருள் கொடுப்பது தவறானது
மேலே நாம் இட்டுள்ள கணக்குகளின் SCREEN SHOT இங்கே https://drive.google.com/open?id=0B8NZiScSmUihc2R0VlBQa1VnbkE