بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
https://youtu.be/VYKeRxRjis8 இந்த வீடியோவில் கமிட்டியினர் தற்போது இருக்கும் தேதிக்கோடு இறைவனின் அத்தாட்சி. அது இறைவனின் அத்தாட்சி என்பதை நாங்கள் சும்மா சொல்லிவிடவில்லை 6 காரணங்கள் உள்ளன என வாதிடுகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையா? இப்போது இருக்கும் தேதிக்கோடு உண்மையாகவே சரியான தேர்வா? அது இறைவனின் அத்தாட்சிதான என்பதை இங்கே அலசுவோம். அதற்கு முன்பு சர்வதேச தேதிக்கொடின் வரலாற்றை படிக்க வேண்டும்.
தேதிக்கோடு:
ஒவ்வொரு நிமிடமும் சூரியன் உலகின் ஏதோ ஒரு பகுதியில் உதித்துக்கொண்டுதான் இருக்கிறது. பூமி உருண்டையாக் இருப்பதாலும் தானே சுழலுவதாலும் இது நிகழ்கிறது. நமக்கு சூரியன் உதிக்கும்போது நாம் திங்கள் கிழமையை தொடங்குகிறோம் என வைத்துக்கொள்வோம். நமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு நாட்டில் சூரியன் உதிக்கும்போது அதை அவர்கள் புதன் கிழமை தொடக்கமாக கொண்டால் என்ன சிக்கல் உருவாகும் என்று விளக்க தேவை இல்லை. எனவே சர்வதேச அளவில் ஒரு நாளை சீராக தொடங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சூரியன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உதிக்கும்போது ஒரு நாள் தொடங்க வேண்டும். மீண்டும் மறுநாள் சூரியன் அதே இடத்தில் உதிக்கும் வரை அந்த நாள் உலகம் முழுவதும் நீடிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட இடம் எது?
இந்தியாவின் கிழக்கு எல்லையின் சூரியன் உதித்து 2 மணி நேரத்திற்குப்பின்தான் இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள பகுதியில் சூரியன் உதிக்கும். இது நமக்கு நன்றாகவே தெரியும். இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ளவர் எங்கள் பகுதியில்தான் இன்று சூரியன் முதல் முதலாக உதித்தது என்று வாதிடமாட்டார். அவருக்கு தெரியும் கிழக்கு பகுதியில் இருப்பவர்தான் முதலில் சூரிய உதயத்தை பார்ப்பார் என்று. இந்தியா எனும் ஒரு சிறிய நிலப்பரப்பில் இப்படி ஒரு தீர்வை நாம் அடையலாம். ஆனால் உலகம் என்பது உருண்டை. அதில் இந்த இடத்தில்தான் சூரியன் முதலாக உதிக்கிறது என்று கூறவே இயலாது. மேலும் அப்படி கூறுவதற்கு சூரியனில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. உதாரணத்திற்கு எங்கள் ஊரில் சூரியன் உதிக்கும்போது அது சிறியதாக இருக்கிறது. உங்கள் ஊரில் உதிக்கும்போது அது வளர்ந்து விடுகிறது. எனவே எங்கள் ஊரில் தான் சூரியன் முதலில் உதிக்கிறது என யாரும் சொல்ல மாட்டார்கள். எங்கள் ஊரில் சூரியன் உதிக்கும்போது அது ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. உங்கள் ஊரில் உதிக்கும்போது வெள்ளை நிறமாகி விடுகிறது. எனவே எங்கள் ஊரில் தான் சூரியன் முதலில் உதிக்கிறது என்றும் யாராலும் சொல்ல முடியாது. இப்படி எல்லா நிமிடமும் சூரியன் எதாவது ஒரு பகுதியில் எந்த பாகுபாடும் எந்த வித்தியாசமும் இல்லாமல் உதித்துக்கொண்டே இருப்பதால். இங்குதான் சூரியன் முதலில் உதிக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது.
ஆனால் இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த இடத்தில்தான் முதலில் சூரியன் உதிக்கிறது என்று யாராவது கூறினாலும் அது தவறில்லை. அந்த நாள் மேற்காக நகர்ந்து மீண்டும் அதே இடத்தில் சூரியன் உதிக்கும்போது முடிவடைகிறது. உலக மக்கள் ஒரு மனதாக இந்த இடத்தில்தான் முதலில் சூரியன் உதிக்கிறது எனவே இந்த இடத்தை நாளின் ஆரம்ப இடமாக கொள்ளலாம் என முடிவு செய்தால் அதில் எந்த தவறும் இல்லை. அந்த இடம் ஒரு நாட்டிற்கு இடையே வந்தாலோ இரண்டு நாடுகளுக்கு இடையே வந்தாலோ நிர்வாக சிக்கலை ஏற்படுத்தும். எனவே நிலப்பரப்பு அதிகம் இல்லாத முற்றிலும் கடல்பரப்பு என்று சொல்லும் அளவுக்கு ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
Time zone நேர மண்டலம்:
பூமி ஒரு முறை சுழலுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. பூமியில் மொத டிகிரி 36௦. அதாவது பூமி 36௦ டிகிரி சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. அப்படியானால் ஒரு டிகிரி சுற்ற (24 × 60 ÷ 360 = 4min) 4 நிமிடங்கள் ஆகின்றன. 8 டிகிரி நெடுக்கையிலிருக்கும் ஒரு ஊருக்கும் 7டிகிரி நெடுக்கையிலிருக்கும் ஒரு ஊருக்கும் சூரிய உதயத்தில் 4 நிமிட வித்தியாசம் இருக்கும்.
எந்திர கடிகாரங்கள் கண்டு பிடிக்கும் முன் நிழல் கடிகாரத்தை மனிதர்கள் பயன் படுத்தி வந்தனர். நிழ கடிகாரம் கட்டுவது சூரிய நேரம் ஆகும். இவை ஊருக்கு ஊர் வெவ்வேறு நேரத்தை காட்டிகொண்டிருக்கும். ஊட்டிக்கும் சென்னைக்கும் சூரிய உதயத்தில் 16 நிமிட வித்தியாசம் உள்ளது. எனவே ஊட்டியில் சூரிய கடிகாரம் 1மணியை காட்டினால் சென்னையில் சூரிய கடிகாரம் 1:16 மணியை காட்டும். ஒரே நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் இரு ஊர்களில் வெவ்வேறு நேரம் இருந்தால் அது நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்காது. இது தகவல் தொடர்பிலும் போக்குவரத்திலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஒரே நிர்வாக கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் ஒரே கடிகார நேரம் இருக்கவேண்டும்.
1840 களிலேயே ஆங்கிலேயர்கள் பிரிட்டனின் சீரான நேரத்தை (standard time) வரையறுத்து விட்டனர். இதை அவர்கள் கடல் பயணத்திற்கும் புகை வண்டி கால அட்டவணைக்கும் பயன்படுவதற்காக செய்தனர். மேலும் (Greenwich) க்ரெனிச் வழியாக செல்லும் நெடுக்கையை மையமாக வைத்து அவர்கள் ஜியோக்ரபிக் கோஆர்டினேட் சிஸ்டத்தையும், வரைபடத்தையும் உருவாக்கிவிட்டனர். உலகின் பெரிய வல்லரசாகவும், சூரியன் மறையாத நாடு என்று சொல்லும் அளவுக்கு உலகெங்கும் காலணி நாடுகளை கொண்டிருந்த கிரேட் பிரிட்டன்தான் அன்று கடல் வாணிபத்தில் கோலோச்சி நின்றது. உலகில் ஓடிக்கொண்டிருந்த கப்பல்களில் மூன்றில் இரண்டு பகுதி இவர்கள் க்ரெனிச்சை மையமாக வைத்து உருவாகியிருந்த வரைபடத்தை பயன்படுத்திதான் இயங்கிகொண்டிருந்தன.
ஆனால் அமெரிக்காவில் 1884 வரை சீரான நேரம் செயல் படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் நேர மாற்றம் பெரும் பிரச்சனையாக இருக்கவே அமெரிக்க பிரதமர் ஆர்தரின் விருப்பத்தில் உலகம் முழுமைக்கும் நேர மண்டலம் சீர் செய்யப்பட வேண்டும் என 1884 அக்டோபரில் 26 நாடுகளிலிருந்து 41 பிரதிநிதிகளை அழைத்து ஒரு சர்வதேச கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் க்ரெனிச் 0° தீர்க்க ரேகையை முதன்மை நெடுக்கையாக (prime meridian) வைத்து 180 டிகிரி நெடுக்கையை (எதிர் நெடுக்கை antemeridian) சர்வதேச தேதிக்கோடாக முடிவு செய்தனர். ஆனால் இது உலகம் முழுவதும் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் எடுத்தது. இப்படி முடிவு செய்யும் முன் இவர்கள் பிஜிக்கும் அமெரிக்கன் சமொவாவிற்கும் சென்று அங்கே நாள் மாறுகிறதா என்று சோதிக்கவில்லை. அல்லது ஆண்டோனியோவின் குறிப்புகளையும் வாசிக்கவில்லை. ஏற்கனவே க்ரெனிச்சை மையமாக கொண்ட வரைபடம் பிரபலாமாக இருந்தது. உலகத்தில் ஓடும் மொத்த கப்பல்களைவிட பிரிட்டனின் கப்பல்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தன. அவை க்ரெனிச்சை மையமாக வைத்துதான் இயங்கின. மேலும் க்ரெனிச்சை 0டிகிரியாக கொண்டால் 180டிகிரியாக வரும் பகுதி ஓரளவுக்கு நிலப்பரப்பு இல்லாமல் இருந்தது. எனவேதான் க்ரெனிச்சை தேர்ந்தெடுத்தனர். க்ரெனிச்சிற்கு போட்டியாக பிரான்சின் பாரிஸ் மெரிடியன், பெல்ஜியத்தின் அன்ட்வேர்ப் மெரிடியன் மற்றும் ஹெயரோ தீவின் பெர்ரோ மெரிடியன் ஆகியவையும் இருந்தன. மேலும் அமெரிக்காவின் மேரிடியனும் போட்டியில் இருந்தது. முதன்மை நெடுக்கையாக க்ரெனிச் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன்எதிர் நெடுக்கையான 180டிகிரி நெடுக்கை சர்வதேச தேதிக்கோடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எந்த ஆய்வோ அல்லது வரலாற்றுக்குறிப்புகளின் அடிப்படையிலோ செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க க்ரெனிச்சின் பிரபலமும் ஏற்கனவே அது அதிகப்படியாக பயன்பாட்டில் இருந்ததுமே காரணம்.
மேலும் உலகத்தை சுற்றி வருபவர்கள் ஒரு நாளை இழப்பதோ அல்லது ஒரு நாளை கூடுதலாக அடைவதோ அவர்கள் தேதிக்கோட்டை தாண்டுவதால் நிகழ்வதல்ல. இதன் அறிவியலை சற்று நிதானமாக சிந்தித்தால் விளங்கலாம். 1400 – 1500 களில் தேதிக்கோடோ துல்லியமான கடிகாரங்களோ இருக்கவில்லை. மனிதன் சூரிய உதயத்தை நாட்களை எண்ணுவதற்காக பயன்படுத்தினான். நாட்காட்டிகளும் இருந்தன. கடல் பயணத்தை துவங்குவோர் துவங்கும் நாளை குறித்துக்கொள்வர். பின்னர் அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு விடியலையும் ஒரு நாளாக குறித்துக்கொள்வர். உலகத்தை கப்பலில் சுற்றி வந்தவர்களும் இதைதான் செய்தனர். அவர்களை புறப்பட்ட நாளை குறித்துக்கொண்டு பயணத்தின்போது ஒவ்வொரு விடியலையும் அவர்களது நாள்காட்டியில் குறித்து வந்தனர். பின்னர் புறப்பட்ட இடத்தில் திரும்பி வந்ததும் அங்கே உள்ள நாள்காட்டியின் நாளுடன் ஒப்பிட்டு பார்ப்பர். மேற்கு நோக்கி பயணப்பட்டவருக்கு ஒரு நாள் குறைவாகவும் கிழக்கு நோக்கி பயணப்பட்டவருக்கு ஒரு நாள் அதிகமாகவும் இருக்கும். அதாவது திரும்பி வரும்போது புறப்பட இடத்தில் செவ்வாய் கிழமையில் மேற்கு நோக்கி பயணப்பட்டவருக்கு அது திங்களாகவும் கிழக்கு நோக்கி பயணப்பட்டவருக்கு அது புதன் கிழமையாகவும் இருக்கும்.
இதற்கு காரணம் அவர்கள் பசிபிக்கில் இருக்கும் தேதிக்கோட்டை கடந்தது அல்ல. மேற்கு நோக்கி பயணிப்பவர் சூரியன் வானில் நகரும் அதே திசையில் பயணிக்கிறார். எனவே ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் வரை உள்ள நேரம் பயணிக்காமல் நிலையாக இருக்கும் ஒருவருக்கு இருப்பதைவிட அதிகமாக இருக்கும். அதாவது நிலையாக இருப்பவருக்கு ஒரு நாள் 24மணி நேரம். இதுவே பூமத்திய ரேகையில் 67km/hr வேகத்தில் மேற்கு நோக்கி பயணிப்பவருக்கு ஒரு நாள் 25 மணி நேரமாக இருக்கும். இப்படி பயணிப்பவர் 24 நாள்கள் கழிந்த பின் பார்த்தால் புறப்பட்ட இடத்தில் இருக்கும் நாள்காட்டியை விட இவரது நாள்காட்டி ஒரு நாள் பின்தங்கி இருக்கும். இவரது நாட்கள் மெதுவாக ஓடுவதே இதற்கு காரணம்.
அதே வேளையில் கிழக்காக பயணித்த ஒருவரின் நாள் வேகமாக ஓடும். 23மணி நேரத்தில் அவர் அடுத்த சூரிய உதயத்தை பார்த்தால் 24நாட்கள் முடிவில் அவர் புறப்பட இடத்தின் தேதியை விட ஒரு நாள் முன்னேறி இருப்பார்.
இன்றைய தேதியில் ஒரு உதாரணத்தை கூற வேண்டுமென்றால் மணிக்கு 1600கிமீ வேகத்தில் பயணிக்க இயலும் ஒரு விமானத்தில் நீங்கள் இன்று நண்பகலில் மேற்கு நோக்கி பயணிக்க துவங்குங்கள். 1600km/hr என்பது பூமத்திய ரேகை பகுதியில் பூமியின் நேரியல் திசைவேகம். நண்பகலில் நீங்கள் பயணத்தை துவங்குவதால் சூரியன் உங்கள் தலைக்கு மேலிருக்கும். ஒரு மணிநேரம் பயணித்த பிறகும் சூரியன் உங்கள் தலைக்கு மேல்தான் இருக்கும். ஆனால் இப்போது நீங்கள் உங்களை விட ஒருமணி நேரம் பின்தங்கிய ஒரு நேரமண்டலதின்மேல் பறந்து கொண்டிருபீர்கள். எனவே 12மணிக்கு புறப்பட்ட நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் உங்கள் கை கடிகாரத்தை 12 மணிக்கு மாற்றுவீர்கள். இப்படியே செய்து வந்தால் 24மணி நேரத்தில் நீங்கள் புறப்பட்ட இடத்தை அடைவீர்கள். அங்கேயும் அப்போது நண்பகல் 12மணியாகவே இருக்கும். உங்களுக்கு சூரிய உதயம் மறைவு எதுவும் நிகழவில்லை. எனவே நீங்கள் புறப்பட்ட அதே நாளின் நண்பகலில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் புறப்பட்ட இடத்தில் உள்ளவர்கள் அடுத்த நாளை அடைந்திருப்பார்கள். இதுதான் ஆண்டோனியோ ஒருநாள் பின் தங்கி இருந்ததற்கான அறிவியல் காரணம். அவர் பசிபிக் கடலை கடந்ததால் ஒரு நாளை அதிகமாக அடைந்துவிட்டார் என்பது அறியாமை.
சர்வதேச சீரான நேரத்திற்கும் சர்வதேச கடல் பயணத்திற்கும் ஒரு முதன்மை நெடுக்கை வேண்டும். இந்த நெடுக்கையை மையமாக வைத்துதான் பூமியின் மற்ற நெடுக்கைகளை அளக்க வேண்டும். பூமியின் முதன்மை குறுக்கையை முடிவு செய்வது எளிது. பூமியின் அச்சான இரண்டு துருவங்களையும் குறுக்கையின் எல்லைகளாக வைத்து பூமியின் மத்திய ரேகையை முதன்மை குறுக்கையாக எளிதில் முடிவு செய்து விடலாம். ஆனால் நெடுக்கையை முடிவு செய்ய இப்படி இயற்கையாக எந்த அடிப்படையும் இல்லை. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் நாட்டில் முதன்மை நெடுக்கை வருவதையே விரும்புவர். அப்படிதான் பிரான்ஸ்ம் விரும்பியது. ஆனால் பிரிட்டன் வெற்றிபெற காரணம் அவர்களின் அதிகாரமும் அவர்களின் முதன்மை நெடுக்கையின் பிரசித்தியும்தான். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட க்ரெனிச்தான் தேதிகோட்டிற்கு மிகச்சரியான தீர்வா என்று இப்போது அலசுவோம்.
மேலே இருப்பது தற்போது -25Wஆக இருக்கும் அட்லாண்டிக் வழியாக செல்லும் ஒரு தீர்க்கரேகை. இப்போதைய IDLஆக இருக்கும் 180W ஐ விட தேதிக்கொட்டிற்கான சிறந்த தேர்வு இது என்பதில் சந்தேகம் இல்லை. இது எந்த நாடுகளையும் துண்டாட வில்லை. கிரீன்லாந்து வழியாக செல்வது உண்மைதான். அந்த இடத்தில் அதை வளைத்து விடலாம். இது IDLஆக போட்டிக்கு வராததும் தேர்வு செய்யப்படாததர்க்கும் ஒரே காரணம் இதன் PRIME MERIDIAN முதன்மை நெடுக்கையாக இருக்கும் பாப்புஆ நியூ கினி அன்று அன்றும் இன்றும் வல்லரசாக இல்லாததால்தான்.
மேலும் ஒரு மிகச்சிறந்த தேதிக்கொட்டிற்கான தேர்வை நான் இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.
மேலே இருப்பது பூமியில் கஅபாவை PRIME MERIDIAN முதன்மை நெடுக்கையாக கொண்டு அதன் எதிர் முனையில் இருக்கும் நெடுக்கையை தேதிக்கோடாக கொண்டால் எப்படி இருக்கும் என்ற வரைபடம். உலகில் ஒவ்வொரு முஸ்லிமும் கஅபாவைத்தான் prime meridian முதன்மை நெடுக்கையாக இருக்க ஆசைப்படுவான். மேலும் அதன் எதிர் முனையில் நாள் தொடங்குவதைதான் ஆசைப்படுவான். இது வெறும் ஆசை மாட்டுமா? அதற்கு புவியியல் காரணங்கள் எதாவது உள்ளதா?
உலக உருண்டையை உருட்டி அதில் கஅபாவின் எதிர்முனை மிகச்சரியாக நடுவில் இருக்கும்படி எடுத்த புகைப்படம் இது. சுபுஹானல்லாஹ்! இதுதான் பூமியின் அதிக கடல்பரப்பு உள்ள பகுதி. வேறு எதை மையமாக வைத்துப்பார்த்தாலும் இவ்வளவு அதிகாமாக கடல்பரப்புடன் தேதிக்கோட்டிற்கு ஏற்ற ஒரு பகுதியை பார்க்க முடியாது. நிலப்பரப்புகள் இதன் ஓரத்தில் இருப்பதையும் காணலாம். Marquesas Islands எனும் சிறிய தீவுகளை இந்த கோடு பிரிக்கிறது மேலும் அலாஸ்காவையும் பிரிக்கிறது. இந்த இடங்களில் வளைத்துக்கொண்டால் இது உலகில் மிகச்சரியான தேதிக்கொட்டின் இடமாக இருக்க முடியும் என்பதை ஒரு மனதாக ஒப்புக்கொள்ளலாம்.
இப்போது தேதிக்கோடு என்றால் என்ன என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். அதன் வரலாற்றையும் விளங்கிகொண்டிருப்பீர்கள். க்ரெனிச் முதன்மை நெடுக்கையாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பிரிட்டனின் கடல் ஆதிக்கமே காரணம். இதில் முஸ்லிம்களுடைய வணக்க வழிபாடுகள் எதுவும் கணக்கில் கொள்ளப்படவில்லை. இப்போது இருக்கும் தேதிக்கோட்டில்தான் உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து கிழமை மாறுகிறது. அதில்தான் இத்தனை காலமாக கிழமை மாறியது என்பதும் வரலாற்று முரண் ஆகும். வரலாற்றை புரட்டினால் உலகில் பல தேதிக்கோடுகள் பல பகுதிகளிலும் இருந்ததை அறியலாம். உலகில் (இப்போது இருக்கும்) ஒரே நாளில் பல கிழமைகள் இருந்ததையும் அறியலாம். மேலும் உலகை மேற்காக சுற்றி வந்தவர்கள் ஒரு நாளை அதிகம் அடைந்ததையும் காரணத்தையும் கிழக்காக சுற்றி வந்தவர் ஒரு நாளை இழந்ததன் அறிவியல் காரணத்தையும் விளங்கி இருப்பீர்கள். அவர்கள் பசிபிக் கடலை கடந்ததோ பிஜிக்கும் சமோவாவிற்கும் இடையில் இப்போது இருக்கும் தேதிகோட்டை கடந்ததோ காரணம் அல்ல. அப்படி கூறுவது அறிவின்மையாகும்.
இனி கமிட்டியினர் க்ரெனிச்சை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தேதிக்கோட்டை இறைவனுடைய அத்தாட்சி என்று கூறுவதற்கான 6 ஆதாரங்களின் உண்மை நிலையை பார்ப்போம்
3:190 இந்த வசனத்தில் ஐடிஎல் இறைவனின் அத்தாட்சி என்று எங்கிருக்கிறது. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பில் பெருவெடிப்பு போன்ற அறிவுள்ளோருக்கு விளங்கும் பல அத்தாட்சிகள் உள்ளன. இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் பூமி உருண்டை அது தானே சுழல்வதால் இரவு பகல் ஏற்படுகிறது எனும் அறிவுடையோருக்கு விளங்கும் அத்தாட்சிகள் பல இருக்கின்றன. ஐடிஎல் பிஜிக்கும் சமோவாவிற்கும் இடையில் இருப்பதால்தான் இரவு பகல் ஏற்படுகிறது என்று இதற்கு அர்த்தம் சொல்வார் போலும். 45:3 முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. நாம் மறுக்கவில்லை. ஆனால் அது பிஜிக்கும் சமோவாவிற்கும் இடையில் இருக்கும் ஐடிஎல்லா? ஒரு விதை முளைப்பதிலும், மேகம் பொழிவதிலும் இன்னும் கொசுவிலும் ஈயிலும் இறைவனின் அத்தாட்சிகள் உள்ளன. அத்தாட்சி எனும் வார்த்தையை எடுத்துவிட்டு அது ஐடிஎல் தான் என்பதில் என்ன அறிவுடைமை. ஐடிஎல் ஜூபிடரிலா இருக்கிறது பூமியில்தானே இருக்கிறது எனவே பூமியில் இருக்கும் IDLஐயும் சேர்த்துதான் இறைவன் தனது அத்தாட்சி என்கிறார்.
இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அந்த இடத்தில்தான் தான் உலக தேதிக்கோடு உள்ளது. ஆனால் அது க்ரெனிச்சை மையமாக கொண்ட 180w தான் என்பதற்கு தான் ஆதாரத்தை கேட்கிறோம்.
தேதிக்கோட்டை தவறாக தேர்ந்தெடுத்தால் ஒரே நேரத்தில் ஒரு நாட்டினர் வியாழக்கிமைக்கான லுஹ்ர் தொழுகையையும் அதற்கு மிக அருகாமையில் இருக்கும் மற்ற நாட்டினர் வெள்ளிகிழமைக்கான ஜுமுஆ தொழுகையும் தொழவேண்டிய அவல நிலை நிலவுகிறது. இதை உணர்ந்து இங்கே வாழும் முஸ்லிம்கள் அவர்களது வணக்கங்களை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். தற்போது 180°W முதல் 145°E எழுத்துப்பிழை திருத்தம் 140.1738°Eக்குள் இருக்கும் முஸ்லிம்கள் ஒரு கிழமையையே பின்பற்ற வேண்டும். 145°E எழுத்துப்பிழை திருத்தம் 140.1738°E ஐ தேதிக்கொடாக கொண்டால் அருகாமையில் இருக்கும் இரண்டு நாடுகளில் இரு வேறு தொழுகைகள் தொழவேண்டிய அவல நிலை வாரது. இதை நம்மால் மாற்ற இயலாவிட்டாலும் இந்த பகுதியில் (180°W முதல் 145°E எழுத்துப்பிழை திருத்தம் 140.1738°E) உள்ள முஸ்லிம்கள் தங்கள் தொழுகைகளை சரியாக அமைத்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு தனியாக இரண்டு உதயங்கள்!! இரண்டு மறைவுகள்!! எனும் ஒரு கட்டுரை எழுதியுள்ளோம் வாசிக்க..... இந்த வசனத்திற்கு சகோ கூறுவது போல் எந்த பொருளும் இல்லை. அதை சகோ மேற்கோள் காட்டும் தப்சீர் விளக்குகிறது
இதை ஏற்கனவே விளக்கிவிட்டோம். இப்போது இருக்கும் தேதிக்கோட்டைவிட சிறந்த தேர்வாக கஅபாவின் மறுமுனை இருப்பதை ஆதாரத்துடன் நிரூபிதுவிட்டோம். இப்போது இருக்கும் கோட்டைவிட கஅபாவின் மறுமுனையே அதிக கடல்பரப்புடையது மக்கள் அதிகம் வசிக்காத பகுதி..
உலக முஸ்லிம்கள் நபிக்கு சாட்சியாக இருக்கத்தான் கஅபா எனக்கூறிக்கொண்டே நஸ்ரானிகளின் கிப்லாவான க்ரெனிச்சை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட IDLஐ இறைவனின் அத்தாட்சி எனக்கூறுவதும் அதற்கு எதிரான ஆதாரத்தை அதற்கு சாதகமாக கூறுவதும் ஏன்? “கிப்லாவை நிர்ணயம் செய்யும் இடம், கிப்லாவின் டைரக்சனை நேர்த்தியாக வரையறுக்கும் இடம்தான் IDL” என்று கூறுவது சகோ கிப்லாவை தவறாக விளங்கி வைத்துள்ளார் என்று காட்டுகிறது
இதற்காக கமிட்டியினரின் முன்னோக்கும் தீர்க்கரேகை என ஒரு தனி ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளோம். வாசிக்க....... கிப்லா என்றால் என்ன? கிப்லாவின் திசை மாறும் இடம் எது? என்பதை விளக்கியுள்ளோம்
கீழுள்ளவைகள் சகோ விக்கிபீடியாவிலிருந்து எடுத்தவை.
விக்கிபீடியாவையோ இவர் அதலிருந்து எடுத்ததையோ நாம் குறை கூறவில்லை. ஆண்டானியோ கிழமைமாறுவதை குறித்தார் என்பது உண்மை ஆனால் அந்த பிழையை ஜேம்ஸ் குக் தான் கண்டு பிடித்தார். அதுவும் மிகச்சரியாக பிஜிக்கும் சமொவாவிற்கும் இடையில் நிகழ்கிறது என்பது வரலாற்றை முழுமையாக வாசிக்காததன் விளைவு. எந்த விஞ்ஞானியும் எந்த கடல் மாலுமியும் கிழமை மாற்றம் பிஜிக்கும் சமொவாவிற்கும் இடையில் நிகழ்கிறது என்று சொல்லவில்லை. அது இவரது அறியாமை. மேலும் கடல் மாலுமிகள் உலகை சுற்றியபோது கிழமைகள் ஏன் மாறியது என்பதற்கான அறிவியல் விளக்கத்தையும் நான் கொடுத்துவிட்டேன்.
[Added on 2-Sep-15] இந்த விளக்கம் விக்கிபீடியாவில் இருப்பதை தற்போது பார்த்தோம். சகோதரர் இதையும் சேர்த்து வாசிக்க வேண்டும்
“A person who goes around the world from east to west (the same direction as Magellan's voyage) would lose one hour for every 15° of longitude crossed, and would lose 24 hours for one circuit of the globe from east to west if they did not compensate by adding 24 hours when they crossed the IDL. In contrast, a west-to-east circumnavigation of the globe gains an hour for every 15° of longitude crossed and requires subtracting 24 hours when crossing the IDL. The IDL must therefore be observed in conjunction with the Earth's time zones: on crossing it in either direction, the calendar date is adjusted by one day.”
– wikipedia
மேலும் இவர் ஒரு சவாலை விடுகிறார். ஹிஜ்ரி கமிட்டி பிஜிக்கும் சமொவாவிற்கும் சென்று அங்கேதான் கிழமை மாறுகிறது என்று நிரூபிக்க தயார். நீங்கள் எங்களுடன் அங்கு வர தாயாரா? தற்போது அங்குதான் கிழமை மாறுகிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. அது மனிதன் தேர்ந்தெடுத்தது. உலகில் எந்த இடத்திலும் தேதிகோட்டை இட்டுக்கொள்ளலாம் என்பது அல்லாவின் ஏற்பாடு. மனிதன் தேர்ந்தெடுத்தபின் இப்போது அங்கே கிழமை மாறுவதால் அதை இறைவனின் அத்தாட்சி என்று எப்படி சொல்ல முடியும். அங்கே கிழமையை மாற்றியது மனிதன். மாற்றியபிறகு அங்கு சென்று சோதிப்பதில் என்ன பயன்.
IDLக்கு கிழக்கே (அதாவது 180W முதல் 140.1738W வரை) உள்ள மக்கள் கிப்லாவை தவறாக கிழக்கு நோக்கி தொழுதால் அதுவும் மிகப்பெரிய தவறு அதை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். அந்த பிழையை இறைவனின் அத்தாட்சி என்று கூறுவது மடைமை. விளக்கத்திற்கு கிப்லா ஒரு அறிவியல் பார்வை மற்றும் கமிட்டியினர் முன்னோக்கும் தீர்க்க ரேகை ஆகிய நமது கட்டுரைகளை வாசிக்கவும்.
ஒரே நேரத்தில் சூரியன் உதிக்கும் இரு பகுதிகளில் ஓன்று வெள்ளிகிழமை மற்றொன்று வியாழக்கிழமை என்பது மிகப்பெரிய பித்னா ஆகும். இதற்கு ஒரே தீர்வு கஅபாவை முதன்மை நெடுக்கையாக ஆக்குவது. இன்று நமக்கு இதை செய்யும் அதிகாரம் இல்லை என்றால் அங்கே (அதாவது 180W முதல் 140.1738W வரை) வசிக்கும் முஸ்லிம்களை கிரிகோரியன் நாள்காட்டியில் (அல்லது ஹிஜ்ரி கமிட்டி நாள்காட்டியில்) வியாழக்கிழமை என்று காட்டும்போது அதுவே அவர்களுக்கு சரியான வெள்ளிகிழமை என்று பிரசாரம் செய்து அவர்களை அன்று ஜுமுஆ தொழசெய்ய வேண்டும். மேலும் அவர்களது கிப்லாவை சரியான முறைப்படி அமைக்க வேண்டும்.
இப்போது உள்ள IDL அதிகாரபூர்வமாக எந்த அரசாங்கத்தாலோ அமைப்பலோ தொண்டு நிறுவனங்களாலோ பதிவு செய்யப்படவில்லை. மேலும் நாடுகளுக்கான நேரமண்டலங்களை மாற்றும் உரிமையும் அந்தந்த நாடுகளுக்கே உரியவை. இலங்கை நேரமண்டலத்தை மாற்றியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கிரிபாட்டி நேரமண்டலத்தை மாற்றியதில் எந்த பிழையும் இல்லை. அது இஸ்லாத்திற்கு எதிராக நஸ்ராணிகள் செய்தது என்பது அறியாமை.
இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள் எனும் கட்டுரையில் பின்வருமாறு எழுதியுள்ளனர்.
எனவே அல்லாஹ் வலியுறுத்திய சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுபவர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் சூரியன் 90 டிகிரியில் இருக்கும் போது முஸ்லிம்களுக்கு கிப்லாவாக ஆக்கித் தந்த கஃபா எந்த நேரத்தில் இருக்கின்றதோ அந்த நேரத்தில் அவர்களுடைய தேதியையும் கிழமையும் மாற்றி புதிய நாளுக்குள் நுழைந்து அல்குர்ஆன் (2:143) வசனம் கூறுவது போல் நபியைப் பின்பற்ற வேண்டும்.
இப்படி செய்ய வேண்டுமெனில் தேதிக்கோடு நாம் கூறும் 140.1738W இல் அமையப்பெறவேண்டும்.
கஅபாதான் நாம் நபி (ஸல்) அவர்களுக்கு சாட்சியாக இருப்பதற்கு அடையாளம் எனக்கூறிகொண்டே அதை முதன்மை நெடுக்கையாகவும் அதன் எதிர் நெடுக்கையை தேதிக்கோடாகவும் கொள்ளமால், நஸ்ராணியின் கிப்லா எனக்கூறிகொண்டே அந்த கிப்லாவை மையமாக வைத்து அதன் எதிர் நெடுக்கையை தேதிகோடாக அமைத்து அதை அல்லாஹ்வின் அத்தாட்சி என்பது சரியல்ல. அறியாமை எனில் திருந்திக்கொள்ளட்டும். மேலும் இது அல்லாஹ்வின் அத்தாட்சி இல்லையெனில் யாருடைய அத்தாட்சி அப்துல் காதர் ஜீலானி உடையதா? அல்லது ஏர்வாடி அவுலியாவின் அத்தாட்சியா? என்று கேட்கிறார். க்ரெனிச் நஸ்ராணிகளின் கிப்லா என்று இவர்கள் ஏற்கனவே பல முறை பிரசாரம் செய்து விட்டனர். க்ரெனிச்சை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தேதிக்கோடு மட்டும் எப்படி அல்லாஹ்வின் அத்தாட்சியாக முடியும். அதுவும் நஸ்ரானிகளின் அத்தாட்சிதான் என்பதே நமது பதில்.
மேலும் ummal-qura.net எனும் இணையதளத்தில் ஒருவர் சாக்கடலை ஆதாரமாக காட்டுவதும் அறிவுக்கு ஏற்புடையதல்ல.
இந்த ஆய்வில் நாம் விளங்கிக்கொண்டது.
1. IDL இறைவனின் அத்தாட்சி என்று கூறுவதற்கான 6 காரணங்களில் முதல் இரண்டு எண்ணிக்கைக்காக சேர்க்கப்பட்டவை. மீதமுள்ள 4 காரணங்களும் இஸ்லாமிய அடிப்படையிலோ விஞ்ஞான அடிப்படையிலும் தவறானவை.
2. உலகை சுற்றி வருபவர்கள் ஒரு நாளை இழப்பதோ அல்லது ஒரு நாளை கூடுதலாக அடைவதோ அவர்கள் தேதிக்கோட்டை தாண்டுவதால் நிகழ்வதல்ல. பூமி சுழலும் திசையில் பயணிப்பவர் ஒரு நாளை இழப்பார் அதன் எதிர் திசையில் பயணிப்பவர் ஒரு நாளை கூடுதல் அடைவர். பயணத்தில் இருப்பவருக்கு நாளின் நீளம் மாறுவதால் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு.
3 ஆண்டோனியோவின் குறிப்பில் விடுபட்ட நாளிற்கான விடையை ஜேம்ஸ் கூக் கண்டுபிடித்தார். அது சரியாக பிஜிக்கும் சமோவாவிற்கும் இடையில் நடக்கிறது என்பது அறியாமை.
4. றப்புல் மஷ்ரிகைன் வ றப்புல் மக்ரிபைன் எனும் வசனத்திற்கு சகோ கொடுப்பது தவறான விளக்கம்.
5. இப்போதும் இருக்கும் 180W IDLஐ விட அதிக கடல்பரப்புடன் கஅபாவின் எதிர் முனையில் இக்கும் 140.1738W சிறந்த தேர்வாக இருக்கிறது. இதை IDLஆக கொள்வதன் மூலம் கஅபா PRIME MERIDIAN எனும் முதன்மை நெடுக்கையாக மாறுகிறது. இதன் மூலம் நாமும் நமது நாட்களின் துவக்கமும் நபிக்கு சாட்சியாக இருக்கலாம். இப்போது இருக்கும் IDL நஸ்ரானிகளின் கிப்லாவான க்ரெனிச்சை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
6. IDLஇலில் முஸ்லிம்கள் முதுகை காட்டி தொழுகிறார்கள் என்று கூறி, IDL தான் கிப்லாவின் எதிர் முனை எனக்கூறுவது அடிப்படி கணிதம் மற்றும் புவியியல் தெரியாததன் வெளிப்பாடு.
இதன் மூலம் கமிட்டியினருக்கு வைக்கும் வேண்டுகோள்கள்:
1. ஐடிஎல் இறைவனின் அத்தாட்சி எனக்கூறுவதை நிறுத்திவிட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள்.
2. உங்கள் பிரச்சாரத்தை கேட்டு தவறாக விளங்கி வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு உண்மையை விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும்
3. நீங்கள் வைத்த 6 காரணங்களின் உண்மை நிலையை விளங்கி உண்மையை பிரச்சாரம் செய்யுங்கள். தவறை சுட்டிக்காட்டினால் ஏற்றுகொள்வோம் எனும் உங்கள் BY LAWவின் அடிப்படியில் செயலாற்றுங்கள்.