Tuesday, 3 March 2015

பிறையின் விஞ்ஞானம்: பாகம்-1

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

ஒவ்வொரு நிமிடமும் சூரியன் உலகின் ஏதோ ஒரு பகுதியில் உதித்துக்கொண்டுதான் இருக்கிறது. பூமி உருண்டையாக் இருப்பதாலும் தானே சுழலுவதாலும் இது நிகழ்கிறது. நமக்கு சூரியன் உதிக்கும்போது நாம் திங்கள் கிழமையை தொடங்குகிறோம் என வைத்துக்கொள்வோம். நமக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு நாட்டில் சூரியன் உதிக்கும்போது அதை அவர்கள் புதன் கிழமை தொடக்கமாக கொண்டால் என்ன சிக்கல் உருவாகும் என்று விளக்க தேவை இல்லை. எனவே சர்வதேச அளவில் ஒரு நாளை சீராக தொடங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சூரியன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உதிக்கும்போது ஒரு நாள் தொடங்க வேண்டும். மீண்டும் மறுநாள் சூரியன் அதே இடத்தில் உதிக்கும் வரை அந்த நாள் உலகம் முழுவதும் நீடிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட இடம் எது?

இந்தியாவின் கிழக்கு எல்லையின் சூரியன் உதித்து 2 மணி நேரத்திற்குப்பின்தான் இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள பகுதியில் சூரியன் உதிக்கும். இது நமக்கு நன்றாகவே தெரியும். இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ளவர் எங்கள் பகுதியில்தான் இன்று சூரியன் முதல் முதலாக உதித்தது என்று வாதிடமாட்டார். அவருக்கு தெரியும் கிழக்கு பகுதியில் இருப்பவர்தான் முதலில் சூரிய உதயத்தை பார்ப்பார் என்று. இந்தியா எனும் ஒரு சிறிய நிலப்பரப்பில் இப்படி ஒரு தீர்வை நாம் அடையலாம். அனால் உலகம் என்பது உருண்டை. அதில் இந்த இடத்தில்தான் சூரியன் முதலாக உதிக்கிறது என்று கூறவே இயலாது. மேலும் அப்படி கூறுவதற்கு சூரியனில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. உதாரணத்திற்கு எங்கள் ஊரில் சூரியன் உதிக்கும்போது அது சிறியதாக இருக்கிறது. உங்கள் ஊரில் உதிக்கும்போது அது வளர்ந்து விடுகிறது. எனவே எங்கள் ஊரில் தான் சூரியன் முதலில் உதிக்கிறது என யாரும் சொல்ல மாட்டார்கள். எங்கள் ஊரில் சூரியன் உதிக்கும்போது அது ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. உங்கள் ஊரில் உதிக்கும்போது வெள்ளை நிறமாகி விடுகிறது. எனவே எங்கள் ஊரில் தான் சூரியன் முதலில் உதிக்கிறது என்றும் யாராலும் சொல்ல முடியாது. இப்படி எல்லா நிமிடமும் சூரியன் எதாவது ஒரு பகுதியில் எந்த பாகுபாடும் எந்த வித்தியாசமும் இல்லாமல் உதித்துக்கொண்டே இருப்பதால். இங்குதான் சூரியன் முதலில் உதிக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது.

ஆனால் இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த இடத்தில்தான் முதலில் சூரியன் உதிக்கிறது என்று யாராவது கூறினாலும் அது தவறில்லை. அந்த நாள் மேற்காக நகர்ந்து மீண்டும் அதே இடத்தில் சூரியன் உதிக்கும்போது முடிவடைகிறது. உலக மக்கள் ஒரு மனதாக இந்த இடத்தில்தான் முதலில் சூரியன் உதிக்கிறது எனவே இந்த இடத்தை நாளின் ஆரம்ப இடமாக கொள்ளலாம் என முடிவு செய்தால் அதில் எந்த தவறும் இல்லை. அந்த இடம் ஒரு நாட்டிற்கு இடையே வந்தாலோ இரண்டு நாடுகளுக்கு இடையே வந்தாலோ நிர்வாக சிக்கலை ஏற்படுத்தும். எனவே நிலப்பரப்பு அதிகம் இல்லாத முற்றிலும் கடல்பரப்பு என்று சொல்லும் அளவுக்கு ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்பட்ட இடம்தான் “சர்வதேச தேதிக்கோடு”. இது பசிபிக் பெருங்கடலில் உள்ளது. (இப்போது இருக்கும் IDLதான் நாளை துவங்குவதார்கான சரியான இடமா என்பதை வேறொரு ஆய்வில் விவரித்துள்ளேன்) இந்த கோடிற்கு கிழக்கே உள்ள நாடுகள் திங்கள் கிழமையில் இருந்தால் மேற்கே உள்ள நாடுகள் செவ்வாய்க்கிழமையில் இருக்கும்.

ஒரு மாதம் என்பது ஒரு அமாவாசை (புவி-மைய சந்திப்பு)  முடிந்து முதல் பிறை பிறந்ததிலிருந்து அடுத்த அமாவாசை வரை நீடிக்கிறது. இது பூமியை சந்திரன் சுற்றுவதால் நடக்கிறது. அமாவாசை என்பது ஒரு நாள் என்றும் அது உலகம் முழுமைக்கும்  பொதுவானதாகவும் மக்கள் கருதுகின்றனர். ஆனால் அது ஒரு கணம் நிகழும் நிகழ்வு. அதன் அடுத்த வினாடியே பிறை பிறக்கிறது. மேலும் அது குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டுமே நிகழ்கிறது. அமாவாசை முடிந்து முதல் பிறை பிறந்த இடத்தில்  இருந்து மாதம் தொடங்குகிறது. மீண்டும் அமாவாசை நிகழும் இடம் வரை அந்த மாதம் நீடிக்கிறது. அமாவசை முடிந்து மாதம் பிறக்கும் இடமே சந்திரதேதிக்கோடு.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாதம் அமாவாசை (புவி-மைய சந்திப்பு)  நிகழ்ந்த இடத்தில் அடுத்த மாதம் அமாவாசை நிகழ்வதில்லை. அதாவது இந்த மாதம் தொடங்கிய இடத்தில் அடுத்த மாதம் தொடங்குவதில்லை. உதா; இந்த மாதம் மொரோக்கோவில் அமாவாசை ஏற்பட்டு, மாதம் மொரோக்கோவிலிருந்து தொடங்கினால் அடுத்த மாதம் மீண்டும் மொரோக்கோவிலிருந்து தொடங்காது. அடுத்த மாதம் ஜப்பானில் தொடங்கும். எனில் மொரோக்கோவிலிருந்து மேற்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் 30 நாட்களாகவும், மொரோக்கோவிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் 29 நாட்களாகவும் இருக்கும். மாதத்தை மொரோக்கோவில் தொடங்கிய சந்திரன் அதை மொரோக்கோவில் முடிக்காமல் இடையில் வைத்து ஜப்பானில் முடித்துவிட்டதால் ஜப்பான் முதல் மொரோக்கோ வரையுள்ள நாடுகளுக்கு மாதம் ஒரு நாள் குறைவாக அமைந்துவிடுகிறது. இப்படித்தான் எல்லா மாதமும் சந்திரன் மாதத்தை தொடங்கிய இடத்தில் முடிக்காமல் அதற்கு முன்னரே வேறொரு இடத்தில் முடித்து விடுகிறது. மேலும் இதனால் மொரோக்கோவிலிருந்து மேற்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் திங்கள் கிழமையிலும் மொரோக்கோவிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடங்கும். இதுதான் இறைவனின் கணக்கு. இதைதான் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.

இதில் இரண்டு கேள்விகள் எழும். ஒரே மாதம் ஒரு பகுதிக்கு 29 நாளாகவும் மறுபகுதிக்கு 30 நாளாகவும் இருந்தால் முஸ்லிம்களுக்கு இடையே எப்படி ஒற்றுமை ஏற்படும். சர்வதேச இஸ்லாமிய நாள்காட்டி சாத்தியம் இல்லாமல் போய்விடுமே? உலகம் முழுவதும் கிலாபத் ஏற்பட்டால் இஸ்லாமிய அரசு எப்படி இயங்க இயலும். ஒரே தேதிக்கு இரண்டு கிழமைகள் இருந்தால் முஸ்லிம்கள் எப்படி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவார்கள்.  எப்படி வாழ்த்துக்களை பரிமாறுவார்கள். கிலாபத் ஏற்பட்டு இஸ்லாமிய அரசு இயங்குவதற்கு குழம்பி விடாதா? இஸ்லாமிய அரசு அப்படி பெருநாள் விடுமுறைகளை அறிவிக்கும்.

சூரியன் எந்த வேறுபாடும் இல்லாமல் உதித்து சூரிய தேதிக்கோட்டை நிர்ணயிக்கும் உரிமையை மனிதனுக்கு வழங்கிவிட்டது. ஆனால் சந்திர தேதிக்கோட்டை சந்திரனே நிர்ணயிக்கிறது. ஒவ்வொருமாதமும் ஒவ்வொரு இடத்தில் அமாவாசையை ஏற்படுத்தி சந்திர தேதிக்கோட்டை அது மாதா மாதமும் மாற்றிக்கொண்டிருக்கிறது. எப்படி ஒரு நாளை எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தொடங்கினால்தான் அது சர்வதேச நாள் ஆகுமோ அதே போன்று ஒரு மாதத்தையும் எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில இருந்தே துவங்க வேண்டும். அபோதுதான் அது உலகம் முழுமைக்கும் பொதுவாக, சர்வதேச மாதமாக அமையும். சந்திர தேதிக்கோட்டை நிலையாக ஒரு இடத்தில் அமைக்க வழி இல்லாததால் உலகம் முழுமைக்கும் பொதுவான ஒரு சந்திர நாட்காட்டியை நிறுவ இயலாமல் போகிறது. மேலும் சந்திரன் இடையில் வைத்து ஒரு மாதத்தை முடிப்பதால் உலகத்தை இரு மண்டலங்களாக பிரிக்கிறது. ஒரு மண்டலத்திற்கு 30 நாட்களையும் மறு மண்டலத்திற்கு 29 நாட்களையும் அது வழங்குகிறது. சரி அப்படியானால் இரு மண்டல நாட்காட்டிகளை நிறுவலாமே! என்று வினவினால் அந்த அதிகாரத்தையும் சந்திரன் நமக்கு வழங்கவில்லை. இந்த இரு மண்டல எல்லைகளையும் சந்திரன் மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியா இம்மாதம் முதல் மண்டலத்தில் இருந்தால் அடுத்த மாதம் சந்திரன் இந்தியாவை இரண்டாவது மண்டலத்திற்கு மாற்றிவிடும்.

ஒரு மாதத்தை ஒரு நாளிலிருந்து துவங்க வேண்டும். ஒரு நாளின் நடுப்பகுதியிலிருந்து ஒரு மாதத்தை துவங்க இயலாது. உதா: ஆங்கில நாட்காட்டியில் நள்ளிரவு 12மணிக்கு 1ம் தேதி துவங்குகிறது. அந்த 1ம் தேதிக்குரிய மாதம் காலையில் 11மணிக்குதான் துவங்குகிறது என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனவே மாதம் நாளுடன் ஒத்து துவங்க வேண்டும். அப்படி துவங்க வேண்டுமெனில் மாதத்தை துவங்கும் சந்திர தேதிக்கொடும் நாளைதுவங்கும் சூரிய தேதிக்கோடும் ஒரே இடத்தில் ஒன்றாக அமையப்பெற வேண்டும். இது நிகழ்வதில்லை என்று ஏற்கனவே விளங்கி இருப்பீர்கள். இதன் காரணமாக மாத எண்ணிக்கை மட்டும் உலகில் இரண்டாக இருப்பதில்லை. மாத துவக்கமும் உலகில் இரண்டு கிழமைகளில் இருக்கும். உதா: ஒரு மாதம் உலகின் ஒரு பகுதிக்கு திங்கள் கிழமையில் துவங்கினால் மறு பகுதிக்கு செய்வாய் கிழமையில் துவங்கும்.

வரும் மாதங்களில் புவி-மைய சந்திப்பு (அமாவாசை) நிகழும் இடங்கள் உலக வரைபடத்தில் காணலாம். மாதம் தொடங்கியஇடத்தில் முடிவதில்லை என்பது தெளிவாக விளங்கும்.
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-03-20.jpg
6. ஜமா அத்துல் ஆகிர் 1436 – தான்சானியா
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-04-18.jpg
7. ரஜப் – மெக்சிகோ கடல் பகுதி
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-05-18.jpg
8. ஷஃபான் – பிலிப்பைன்ஸ் கடல் பகுதி
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-06-16-2.jpg
9. ரமலான் – வடக்கு அட்லாண்டிக் கடல்
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-07-16.jpg
10. ஷவ்வால் – வடக்கு பசிபிக்
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-08-14.jpg
11. துல் கஃதா – வடக்கு அட்லாண்டிக்
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-09-13.jpg
12. துல் ஹிஜ்ஜா – இந்தியப்பெருங்கடல்
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-10-13.jpg
1. முஃகர்ரம் 1437 - பிஜி
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-11-11.jpg
2. சஃபர் – தெற்கு பசிபிக் பெருவுக்குக்கு அருகே
D:\Articles\final\daylight map on new moon 1436\2015-12-11.jpg
3. ரபி உல் அவ்வல்  - அங்கோலா

ஹிஜ்ரி ஆண்டு
மாதம்
ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரையுள்ள நேரம்
1436
1. முஹர்ரம்
29d 14h 35m
2. சஃபர்
29d 13h 04m
3. ரபிஉல்அவ்வல்
29d 11h 38m
4. ரபிஉல்ஆகிர்
29d 10h 33m
5. ஜமாஅத்துல்அவ்வல்
29d 9h 49m
6. ஜமாஅத்துல்ஆகிர்
29d 9h 21m
7. ரஜப்
29d 9h 16m
8. ஷஃபான்
29d 9h 52m
9. ரமலான்
29d 11h 19m
10. ஷவ்வால்
29d 13h 29m
11. துல்கஃதா
29d 15h 48m
12. துல்ஹிஜ்ஜா
29d 17h 25m
1437
1. முஹர்ரம்
29d 17h 41m
2. சஃபர்
29d 16h 42m
3. ரபிஉல்அவ்வல்
29d 15h 01m
4. ரபிஉல்ஆகிர்
29d 13h 08m
5. ஜமாஅத்துல்அவ்வல்
29d 11h 16m
6. ஜமாஅத்துல்ஆகிர்
29d 9h 29m
7. ரஜப்
29d 8h 06m
8. ஷஃபான்
29d 7h 30m
9. ரமலான்
29d 8h 02m
10. ஷவ்வால்
29d 9h 44m
11. துல்கஃதா
29d 12h 19m
12. துல்ஹிஜ்ஜா
29d 15h 08m
1438
1. முஹர்ரம்
29d 17h 27m
2. சஃபர்
29d 18h 40m
3. ரபிஉல்அவ்வல்
29d 18h 35m
4. ரபிஉல்ஆகிர்
29d 17h 14m
5. ஜமாஅத்துல்அவ்வல்
29d 14h 51m
6. ஜமாஅத்துல்ஆகிர்
29d 11h 59m
7. ரஜப்
29d 9h 19m
8. ஷஃபான்
29d 7h 28m
9. ரமலான்
29d 6h 46m
10. ஷவ்வால்
29d 7h 15m
11. துல்கஃதா
29d 8h 45m
12. துல்ஹிஜ்ஜா
29d 11h 00m
1439
1. முஹர்ரம்
29d 13h 42m
2. சஃபர்
29d 16h 30m
3. ரபிஉல்அவ்வல்
29d 18h 48m
4. ரபிஉல்ஆகிர்
29d 19h 47m
5. ஜமாஅத்துல்அவ்வல்
29d 18h 48m
6. ஜமாஅத்துல்ஆகிர்
29d 16h 06m
7. ரஜப்
29d 12h 45m
8. ஷஃபான்
29d 9h 51m
9. ரமலான்
29d 7h 55m
10. ஷவ்வால்
29d 7h 04m
11. துல்கஃதா
29d 7h 10m
12. துல்ஹிஜ்ஜா
29d 8h 04m
1440
1. முஹர்ரம்
29d 9h 46m
2. சஃபர்
29d 12h 15m
3. ரபிஉல்அவ்வல்
29d 15h 18m
4. ரபிஉல்ஆகிர்
29d 18h 08m
5. ஜமாஅத்துல்அவ்வல்
29d 19h 36m
6. ஜமாஅத்துல்ஆகிர்
29d 19h 00m
7. ரஜப்
29d 16h 46m
8. ஷஃபான்
29d 13h 55m
9. ரமலான்
29d 11h 16m
10. ஷவ்வால்
29d 9h 14m
11. துல்கஃதா
29d 7h 56m
12. துல்ஹிஜ்ஜா
29d 7h 25m