Thursday, 26 March 2015

ஹிஜ்றா காலண்டரின் பிழைகள்!

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
ஹிஜ்றா கமிட்டி என்போர் ஒரு சர்வதேச சந்திர நாட்காட்டியை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். அது விஞ்ஞான அடிப்படையில் துல்லியமானதாகவும் இஸ்லாமிய அடிப்படையில் மிகச்சரியனதாகவும் வாதிட்டு வருகின்றனர். இது விஞ்ஞான அடிப்படையில் துல்லியமானதா சரியானதா என அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
பிறையை பற்றி அதிகமாக விஞ்ஞானம் தெரியாதவர்கள் பின்வரும் இந்த கட்டுரைகளை வாசித்த பின் இக்கட்டுரையை தொடர்வது எளிமையாக இருக்கும்
41) விஞ்ஞானம் - Part-1 >> piraivasi.com/2014/12/astro1.html
1) பிறையின் விஞ்ஞானம்: பாகம்-1 >> piraivasi.com/2015/03/astronomyofnewmoon2.html
2) பிறையின் விஞ்ஞானம்: பாகம்-2 >> piraivasi.com/2015/02/astronomyofnewmoon.html
3) சர்வதேச பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு >> piraivasi.com/2014/12/Universal-Hilail-An-Astronomical-Analysis.html
இவர்களது நாள்காட்டியின் அளவுகோல் பின்வருமாறு:
“புவிமைய சங்கமம் நிகழும் சர்வதேச நாளின் அடுத்த சர்வதேச நாளிலிருந்து மாதத்தை துவங்க வேண்டும்”
“lunar month starts from the next universal day of the day on which conjunction happens”
“இதை விளக்குவதென்றால் புவி மைய சங்கமம் (அமாவாசை நாள், கும்ம-வின் நாள், Astronomical new moon or Geocentric conjunction) சர்வதேச நேரப்படி சர்வதேச நாளின் ஒரு கணத்தில் நிகழும் நிகழ்வு, அது நிகழும் நாளை அந்த மாதத்தின் கடைசி நாளாக கொண்டுவிட்டு அடுத்த சர்வதேச நாளிலிருந்து மாதத்தை துவங்க வேண்டும். சர்வதேச நாள் என்பது சர்வதேச தேதிக்கோட்டில் நள்ளிரவு 12மணியிலிருந்து ஆரம்பிக்கிறது. எனவே சர்வதேச நேரப்படி ஒரு செவ்வாய் 05:23:48 UT யில் புவிமைய சங்கமம் நிகழ்ந்தால் சர்வதேச நேரப்படி அடுத்த 00:00:00 UTயில் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதாவது அடுத்த சர்வதேச புதன் கிழமையிலிருந்து மாதம் துவங்குகிறது”. இது கமிட்டி சகோதரர்கள் கொடுக்கும் விளக்கம்.
என் ஆய்வுக்கு ஹிஜ்றா 1435 மற்றும் 1436 ஆண்டுகளுக்ககா இவர்கள் வெளியிட்ட நாள்காட்டிகளை எடுத்துள்ளேன். மேலும் இவர்களின் அதே அளவுகோலில் 1437க்கான நாட்காட்டியையும் நானே உருவாக்கி ஆய்வுக்காக எடுத்துள்ளேன். உலகிலுள்ள எல்லா நகரங்களை எடுத்து ஆய்வு செய்வது மிக சிரமம் என்பதால் மிகுந்த நேரமாற்றம் கொண்ட சில நகரங்களை எடுத்துள்ளேன். சிவப்பு எழுத்துகளில் இருப்பது சர்வதேச நேரப்படி புவிமைய சந்திப்பு நிகழும் நேரம், பச்சை நிற எழுத்துக்களில் இருப்பது ஹிஜ்றா கமிட்டி வெளியிட்ட நாட்காட்டி.
ஃபஜ்ரில் இருந்து நாளை ஆரம்பிப்பது என்பது ஹிஜிரி கமிட்டியின் கொள்கை. அந்த கொள்கையை அவர்களது காலண்டர் கொள்கையுடன் ஒப்பிட உள்ளோம். அதாவது சங்கமம் நிகழும் “சர்வதேச நாள்” மாதத்தின் கடைசி நாள் என்பதும் அவர்களது கொள்கைதான். இப்போது எல்லா நாடுகளிலும் சங்கமம் நடக்கும் நாள் இவர்களின் காலண்டரிபடி மாதத்தின் கடைசி நாள் தானா? சங்கமத்தின் அடுத்த நாளில்தான் இவர்களது காலண்டரில் மாதம் துவங்குகிறதா? என்று பார்ப்போம். அவர்களது கொள்கைகளை அவர்களது கொள்கைகளுடனே உரசிப்பார்போம்.
கீழே அட்டவணைகளில் முதல் நிரையில் இஸ்லாமிய மாதமும் அடுத்த நிரையில் அம்மாதத்தை துவங்குவதற்கான புவிமைய சந்திப்பு நிகழும் நேரத்தையும், அடுத்த நிரையில் ஹிஜ்றா கமிட்டி காலண்டரில் இருக்கும் மாததுவக்க நாளையும் அடுத்த நிரையில் புவிமைய சந்திப்பு நிகழும் உள்நாட்டு நேரம், உள்நாட்டு நேரப்படி மாதத்தை துவங்கினால் அது எந்த நாளின் துவங்கிகிறது என்பபதை அடுத்த நிறையிலும். இந்த அடிப்படையில் மாத நாட்களின் எண்ணிக்கையை அதன் அடுத்த நிறையிலும் காட்டியுள்ளேன். ஹிஜ்றா கமிட்டி காலண்டர் எல்லா நாட்டிற்கும் பொருந்தி போகிறதா என்பது இந்த அட்டவணையில் தெரியும். இவர்களின் நாட்காட்டியை ஃபஜ்ரில் நாளை ஆரம்பிக்கும் அளவுகோலுடன் ஒப்பிடும் அட்டவணை கீழே பச்சை நிறத்தில் உள்ளது.
இனி கமிட்டியினரின் நாட்காட்டியில் உள்ள பிழைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்
1. ஜமாதில் அவ்வல் 1436ன் முந்தய புவிமைய சந்திப்பு சர்வதேச நேரப்படி புதன், 18-02-15, 23:46:54 க்கு நிகழ்கிறது அப்போது நியூ சிலாந்தில் வியாழன், 19-02-15 பகல் 11:46 ஆக இருக்கும் கமிட்டியினரின் நாட்காட்டிப்படி நியூ சிலாந்தில் உள்ள கமிட்டிக்காரர்கள் வியாழன் அன்று மாதத்தை துவங்கினால் அவர்கள் (அமாவாசை) கும்மா-வின் நாளில் மாதத்தை துவங்குகிறார்கள். அல்லது ரபி உல் ஆகிர்இன் கடைசி நாளில் ஜமாதில் அவ்வலை துவங்குகிறார்கள். இது இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் நிகழ்கிறதா என்றால் இல்லை. றமதான் 1436 க்கும் இதே நிலைமைதான். இந்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமா? இல்லை! நாம் ஆய்வு செய்த 1435, 1436 மற்றும் 1437 இல் பின் வரும் மாதங்களுக்கு இதே நிலைமை (இதை மேலே மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தியுள்ளேன்). முந்தய மாதத்தின் கடைசி நாளன்று அடுத்த மாதத்தை துவங்க வேண்டிவரும். எல்லா வருடங்களிலும் 6 அல்லது 7 மாதங்களில் இந்த பிழை இருக்கும்.
இப்படி மாதத்தை ஒரு நாள் முந்தி துவங்குவது விஞ்ஞானமா? இஸ்லாமா?
2. ஷவ்வால் 1436ன் முந்தய புவிமைய சந்திப்பு சர்வதேச நேரப்படி வியாழன், 16-07-15, 01:24:06க்கு நிகழ்கிறது. அப்போது கலிபோர்னியாவில் புதன்கிழமை 15-07-15, 17:24 மணியாக இருக்கும். அவர்கள் அடுத்த நாளில் மாதத்தை துவங்கி வியாழன், 16-07-15 அன்று பெருநாள் கொண்டாட வேண்டும். ஆனால் கமிட்டியினரின் நாட்காட்டியை பின்பற்றினால் ஷவ்வால் 1ல் பெருநாள் கொண்டாடாமல் வெள்ளி, 17-07-15 அன்று ஷவ்வால் 2ல் பெருநாள் கொண்டாடுவார்கள். அதாவது ஒரு முழு நாளையும் 5½ மணிநேரத்தையும் தள்ளிபோடுகிறார்கள். இது இந்த ஒரு மாதத்திற்கு மட்டுமா? இல்லை நாம் ஆய்வு செய்த 1435, 1436 மற்றும் 1437 ஆண்டுகளில் பின்வரும் மாதங்கள் இதே பிழையில் உள்ளன. மேலே மஞ்சள் நிறத்தில் இதை அடையாளப்படுத்தியுள்ளேன். எல்லா வருடங்களிலும் சில பல மாதங்களில் இந்த பிழை இருக்கும்.
இப்படி மாதத்தை தள்ளிபோடுவது விஞ்ஞானமா இஸ்லாமா? குர்ஆன் நசீஉ என 9:37ல் சொல்வது என்ன?
3. இந்த பிழை இந்த இரண்டு நாட்டிற்கு மட்டும்தானா. இல்லை! இந்தியா சிங்கபூருக்கு பின்வரும் மாதங்களில் இந்த பிரச்சனை உள்ளது. பின்வரும் மாதங்களில் இந்தியா மற்றும் சிங்கபூர் கும்மா-வின் நாளில் மாதத்தை துவங்குவர். அதாவது முந்தய மாதத்தின் கடைசி நாளில் அடுத்த மாதத்தை துவங்குவர். மேலே மஞ்சள் நிறத்தில் இதை அடையாளப்படுத்தியுள்ளேன்
4. நான் எடுத்துக்கொண்ட இந்த இரண்டு ஆண்டுகளுக்கும் இந்த 4 நாடுகளுக்கு மட்டுமே இந்த பிழை இல்லை. கமிட்டி நாட்காட்டியை பின்பற்றினால் சர்வதேச நேரத்தை பின்பற்றும் சில நாடுகளை தவிர எல்லா நாடுகளிலும் சில மாதங்களில் இந்த பிரச்சனை இருக்கும். மக்கா நேரப்படி பார்த்தாலும் இதே பிரச்சனைதான்.
மேலுள்ள அட்டவணை மிகச்சரியாக இவர்களது நாள்காட்டி கொள்கையை பின்பற்றி உருவாக்கப்பட்டது. இவர்களது நாட்காட்டியில் நாட்கள் நள்ளிரவு 12மணிக்குதான் துவங்குகின்றன. ஆனால் நாளின் ஆரம்பம் பஜ்ர் வக்த் என்று சகோதரர்கள் பிரச்சாரம் செய்வார்கள். எனவே நாளை பஜ்ரில் ஆரம்பித்தாலாவது இவர்களது நாள்காட்டி உலகம் முழுமைக்கும் பயன்படுமா என்று நாமே ஆய்வு செய்தோம். அதாவது பஜ்ர் வக்த் முடியும் முன் சங்கமம் நிகழ்ந்தால் அந்த பஜ்ரில் இருந்து மாதத்தை துவங்குதல் எனும் அளவுகோல்.
இந்த அட்டவணையை எளிதில் excel formatஇல். காண bit.ly/1EPkGMo. ஒவ்வொரு ஊருக்கான பஜ்ர் நேரத்தையும் சரிபார்த்து பஜ்ர் நேரத்திலிருந்து நாளை துவங்குவதன் அடிப்படையில் மேலே உள்ள நாட்காட்டியை உருவாக்கியுள்ளேன். ஃபஜ்ரை நாளின் துவக்கமாக கொண்டால் நள்ளிரவை நாளின் ஆரம்பமாக கொள்வதை விட அதிக பிழைகள் காலண்டரில் வரும் என்பதால்தான் இவர்கள் காலண்டரில் நாட்கள் நள்ளிரவில் துவங்குகின்றனவா? மஞ்சள் குறியீடு இல்லைதா எந்த நகரமாவது மேலே உள்ள அட்டவணையில் உள்ளதா என்று பாருங்கள். ஃபஜ்ரை நாளின் ஆரம்பாமாக கொண்டால் இந்தியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் மிக குறைந்த அளவு பிழையும். மக்கா, அமேரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மிக அதிக அளவு பிழையும் காண முடிகிறது.
சர்வதேச நேரம்/நாள் எனப்படுவது க்ரெனிச்சில் உள்ள நேரமும் நாளுமாகும். இதனடிப்படையில் இவர்களது மாதங்கள் துவங்குவதால் லண்டனுக்கு கிழக்கே உள்ள நாடுகளில் வாழும் கமிட்டியினர் வருடத்தின் மிக்க மாதங்களிலும் ஒரு நாளை முந்துவர். உதா. மக்கா (சவுதி), இந்தியா, சிங்கபூர், இலங்கை, மலேசியா, நியூசிலாந்து. லண்டனுக்கு மேற்க்கே உள்ள நாடுகளில் வசிக்கும் கமிட்டியினர் வருடத்தின் மிக்க மாதங்களிலும் ஒரு நாளை பிந்துவர். உதா வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணைத்து நாடுகளும்.
ஃபஜ்ரில் நாளை துவங்கினால் சராசரியாக UT -12 இல் இருந்து UT +6 வரை உள்ள நாடுகள் ஒரு நாளை பிந்துவர். UT+6 முதல் UT+12 வரை உள்ள நாடுகள் ஒரு நாளை முந்துவர். பொதுவாக நாளின் ஆரம்பத்தை எதுவாக நிர்ணயம் செய்தாலும் ஹிஜ்றா கமிட்டி கலண்டரை உலகம் முழுமைக்கும் பின்பற்ற இயலாது.
மாதத்தை முந்துகிறோம் அல்லது பிந்துகிறோம் என்றோ சொல்கிறீர்களே அப்படியானால் மாத நாட்களின் எண்ணிக்கை 28 ஆகவோ 31ஆகவோ அமைந்து விடாதா? எங்கள் நாட்காட்டியில் அப்படி இல்லையே. மாதங்கள் 29 அல்லது 30ஆக தானே உள்ளன? என்றும் கமிட்டி சகோதரர்கள் கேட்கலாம். ஏதாவது ஒரு மாதத்தை முந்தினாலோ பிந்தினாலோ 28 அல்லது 31 பிரச்சனை வரும். எல்லா மாதங்களையும் ஒரே அளவுகோலில் (முந்தி-பிந்தி) துவங்குவதால் மாத நாள்கள் எண்ணிக்கை பிழை சரிகட்டப்படுகிறது.
மேலே நாம் லண்டனுக்கு கிழக்கே மற்றும் மேற்க்கே உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த பிரச்சனை வரும் என்று நிரூபித்துள்ளோம். இதில் நியூ சிலாந்து போன்ற கிழகத்திய நாடுகளின் நேரப்பிரச்சனை மட்டும்தான் ஏற்கனவே இவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டு அதற்கு அவர்கள் பதிலும் அளித்துள்ளனர்.
கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் தவறான வாதமேயாகும். இதைப் புரிந்து கொள்வதற்கு உதாரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ரமழான் 30-வது நோன்பை நோற்று முடித்து விட்டார்கள் என்று கொள்வோம். ரமழான் இறுதி நாளுக்கு அடுத்த நாள் ஷவ்வால் முதல் நாள் நோன்புப் பெருநாள் என்பதும், 31-வது நோன்பு என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை என்பதும் அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் புவிமைய சங்கமம் நடைபெறும் முன்பாகவே விடிந்துவிட்ட அந்த நாளை கணக்கிடாமலும், கண்டு கொள்ளாமலும் விட்டுவிட்டு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்று மேற்படி விமர்சனம் கூறுகிறது. அவ்வாறு வேண்டுமென்றே விட்டுவிட்டுச் சென்ற அந்த நாளை எந்த மாதத்தில் கொண்டு சேர்ப்பது? ரமழானிலா, அல்லது ஷவ்வாலிலா? அப்படி சேர்ப்பதாக இருந்தால் எந்த அடிப்படையில் அந்த நாளைக் குறிப்பிட்ட அந்த மாதத்தில் சேர்ப்பது? இக்கேள்விகளை மேற்படி விமர்சனத்தை தெரிவிப்போர் சற்று சிந்திக் வேண்டுகிறோம்.
இவர்களுக்கு அந்த நாளை என்ன செய்வதென்று நன்றாகவே தெரியும். அப்படி செய்தால் ஒரு தேதிக்கு இரண்டு கிழமைகள் வந்து விடும். அல்லது முந்தய மாதம் 31நாளாக ஆகிவிடும் என்று பயப்படுகிறார்கள். ஆம்! கமிட்டியினரே! ஒரே தேதியில் இரண்டு கிழமைகள் வந்துவிடும். அது சர்வதேச நாள்காட்டியகவும் இல்லாமல் போய்விடும். அதுதான் இறைவனின் ஏற்பாடு. சந்திரனும் சூரியனின் இறைவனின் கணக்கின்படி இயங்குகின்றன. அந்த கணக்கை நாம் படித்தால் அதில் சர்வதேச நாள்காட்டிக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதை விளங்கலாம். சங்கமம் நிகழ்ந்த அடுத்த நாளில் நாம் மாதத்தை துவங்கினால் அது உலகத்தில் ஒரு பகுதிக்கு 29 நாள் கொண்ட மாதத்தையும் மறு பகுதிக்கு 30 நாள் கொண்ட மாதத்தையும் வழங்குகிறது. மேலும் ஒரே மாதம் வெவ்வேறு கிழமைகளில் உலகில் ஆரம்பம் ஆகும். இதுவே துல்லியமான விஞ்ஞானம். இதை நமது சர்வதேச பிறை ஆய்வில் தெளிவாக்கியுள்ளோம். ஆனால் நிச்சயமாக அது முந்தய மாதத்தை 31 நாட்களாக ஆக்கிவிடாது. மேலே உள்ள அட்டவணை இதற்கான அறிவியல் ஆதாரமாகும். அந்த நாட்டின் உள்நாட்டு நேரப்படி சங்கமம் நிகழ்ந்த அடுத்த நாளில் மாதத்தை துவங்கினால் எந்த நாட்டினரும் கும்ம-வின் நாளில் மாதத்தை துவங்கும் பாவச்செயலை செய்ய மாட்டார்கள். அல்லது மாதத்தை வேண்டுமென்றே ஒரு நாள் தள்ளிபோடும் நசீஉ என்ற பாவத்தையும் செய்ய மாட்டார்கள்.
மாதம் 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்ற நபி (ஸல்) அவர்களின் போதனையைத் தவறாக விளங்கி, இந்த புவிமைய சங்கம சம்பவத்தை வைத்துக் கொண்டு உலக முஸ்லிம்களில் ஒரு பகுதியினருக்கு மாதம் 29-ஆகவும், பிறிதொரு பகுதியினருக்கு 30 நாட்களாகவும் அமைக்கலாம் என்ற அடிப்படையில், புதிய முறையற்ற நாட்காட்டியை அமைத்து குழப்பிவிட வேண்டும் என்ற நிலைக்கு நம்மை விமர்சிப்போர் வந்து விட்டார்களா?
இறைவனின் கணக்குப்படி உலக முஸ்லிம்களில் ஒரு பகுதியினருக்கு மாதம் 29-ஆகவும், பிறிதொரு பகுதியினருக்கு 30 நாட்களாகவும் அமையும் படி தான் அவன் சந்திரனை இயக்குகிறான். அதை மாற்றி உலகம் முழுவதும் ஒரே எண்ணிக்கை கொண்ட மாதத்தை அமைக்கலாம் எனும் அடிப்படையில் கும்ம-வின் நாளில் ஒரு பகுதியினரை மாதத்தை துவங்க வைத்தும் பிறிதொரு பகுதியினரை ஒரு நாளை பிந்தசொல்லும் நிச்சையமாக இறைவனின் கணக்கிற்கு மாறு செய்வதாகும்.
ஒரு தேதிக்குள் இருக்கின்ற இருவேறு நாட்டு மக்களுக்கு இரண்டு வெவ்வேறு கிழமைகளைக் கூறுவது சரியானதுதானா? அல்லது (Geocentric Conjunction) புவிமைய சங்கமதினம் என்பது இருவேறு கிழமைகளில், இரண்டு தேதிகளில் நிகழும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கத்தான் முடியுமா?
புவிமைய சங்கமதினம் என்பது இருவேறு கிழமைகளில், இரண்டு தேதிகளில் நிகழும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கத்தான் முடியுமா? உலகில் எப்போதும் இரண்டு நாளும் கிழமையும் இருக்கும் புவிமைய சங்கமம் நிகழும்போதும் இரு நாளும் கிழமையும் இருக்கத்தானே செய்யும். நீங்களே உங்களை ஏன் முரண்படுகிறீர்கள். கூடுதல் விளக்கம் கீழே உள்ளது
புவிமைய சங்கமம் என்ற இந்நிகழ்வு ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளில் ஒரேயொரு கிழமையில் மட்டும்தான் ஏற்படும். எப்போதும் உலகில் இருகிழமைகள் (இருதேதிகள்) இருந்து கொண்டிருந்தாலும், இந்த புவிமைய சங்கமம் ஏற்பட்டு சந்திரனின் ஒளி பூமிக்கு வராத நிலை ஒரு கிழமையில் மட்டும்தான் ஏற்படும் என்பதுதான் சந்திரனின் அறிவியலாக அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலுள்ள விளக்கத்தில் இவர்களே இவர்களை முரண்படுகிறார்கள். எப்போதும் உலகில் இருகிழமைகள் (இருதேதிகள்) இருந்து கொண்டிருக்கும் என கூறுகிறார்கள். சங்கமம் நிகழும் அந்த நொடியிலும் உலகில் இரு கிழமைகள் இருக்குமே. இந்த புவிமைய சங்கமம் ஏற்பட்டு சந்திரனின் ஒளி பூமிக்கு வராத நிலை ஒரு கிழமையில் மட்டும்தான் ஏற்படும் என்பதுதான் சந்திரனின் அறிவியலாக அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அறிவியல் எங்கே உள்ளது. சங்கமம் நடக்கும்போதும் உலகில் இரண்டு கிழமைகள் இருக்கும். சங்கமம் இரண்டு நாள் நடக்கிறது என்று நாம் சொல்லவில்லை. புவிமைய சந்திப்பு ஒரு கண நிகழ்வுதானே அதை ஒரு தனித்த சர்வதேச நாளுடன் எப்படி சேர்கிறீர்கள் சகோதரர்களே? மேலும் சந்திரனின் ஒளி பூமிக்கு வராத நிலை அதாவது குறைந்தபட்சம் 37 ½ மணிக்கூறு முதல் அதிகபட்சம் 51 ¾ மணிக்கூறுகள் வரை பூமியில் பிறை மறைக்கபடும் என்று விஞ்ஞானம் சொல்கிறதே அதை நீங்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லையா. ஆதாரம் இங்கே >>> அமாவாசையன்று பிறை தெரியாதா? >> piraivasi.com/2015/07/18.html
சகோதரர்கள் கூறும் அந்த ஒரே கிழமை என்ன என்பது சர்வதேச நேரத்தின் கிழமைதான். நாம் ஒவ்வொரு நாட்டிலும் சர்வதேச நேரத்தையா பயன்படுத்துகிறோம். சர்வதேச நேரப்படி 12மாணிக்கா ஒவ்வொரு நாட்டிலும் நாட்களை துவங்குகிறோம். நிச்சயமாக இல்லை.
http://www.ottrumai.net/Images/16UT/UT%20Hours.jpg
இது இவர்கள் உருவாக்கிய படம். க்ரெனிச்சை நஸ்ராணிகளின் கிப்லா என்கின்றனர். ஆனால் இவர்களின் தேதிக்கோடு இதே நஸ்ராணிகளின் கிப்லாவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை சகோதரர்கள் மறந்துவிட்டார்கள். இவர்களின் நாட்காடியும் இதே நஸ்ராணி கிப்லாவை மையமாக கொண்ட சர்வதேச நேரப்படி அமைந்துவிட்டது.
மேலும் நாம் இவ்வாறு கூறும்போது வேறு ஒரு வாதத்தையும் இவர்கள் வைக்கிறார்கள்.
(Geocentric Conjunction) புவிமைய சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பு வையுங்கள், சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பை விடுங்கள். உங்களுக்கு சங்கமம் நிகழும் முன் அடுத்த நாள் விடிந்து விட்டால், அந்த நாளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்குக் கட்டளை இட்டிருந்தால் மேற்படி கேள்வியில் ஒரு அர்த்தம் இருக்கும்.
நிச்சயமாக அல்லாஹ்வும் ரசூலும் அப்படி கூறவில்லை. அப்படி கூறுவது நீங்கள் தான். சங்கமத்தை துல்லியமாக கணக்கிட்டு ஒரு துல்லியமான நாள்காட்டி உருவாக்கிவிட்டோம் என பிரச்சாரம் செய்வது கமிட்டியினர்தான். இப்படி ஒரு கேள்வி எழுப்பி இவர்களே இவர்களை முரண்படுகிறார்கள். அதற்கு பின்வருபவை ஆதாரங்கள்.
இவர்கள் நாட்காட்டியின் ஒரு படம் பின்வருமாறு:
இந்த படம் தெளிவாக கூறுகிறது சங்கமம் என்பதுதான் பழைய மாதத்தையும் புதிய மாதத்தையும் பிரிக்கும் நிகழ்வாகும். மேலும் இதை உறுதிப்படுத்தும் விதாமாக இவர்களின் பின்வரும் எழுத்துக்கள் உள்ளன
நபி(ஸல்) அவர்கள் பிறை பிறக்கும் அந்த மறைக்கப்படுகின்ற தினத்தை பழைய மாதத்தில் கூட்டி அடுத்த நாளில் இருந்து புதிய மாதத்தைத் துவங்க நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்ற விரிவான விளக்கங்களை பிறையும் புறக்கண்ணும் என்ற நமது ஆய்வு நூலில் பார்க்கலாம்”
“உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) உடைய தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன்,சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் தினமாகும்.”
“அந்த புவிமைய சங்கம (Geocentric Conjunction Day) தினத்தில் தேய்பிறை மற்றும் வளர்பிறையைப் பொதுவாக பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் கும்மிய, உஃமிய, கபி(F)ய, க(G)ம்மிய,ஹஃபிய கும்ம உடைய அல்லது குபிய உடைய நாள் என்கிறோம்.”
சங்கமம் மாதத்தின் இருதினளில்தான் நிகழ்கிறது என்று விளக்கி விட்டு. அதன் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் என கூறிவிட்டு. சங்கமத்தை துல்லியமாக கணக்கிட்டு அதன் அடிப்படியில் ஒரு நாட்காட்டியையும் உருவாக்கிவிட்டு அப்படிதான் அல்லா, ரசூல் சொன்னார்களா என்று கேட்கலாமா சகோதரர்களே?
இப்படி செய்து கிழக்கில் உள்ள நாடுகளை ஒரு நாள் முந்தசெய்து ஒரு பெரும் பாவத்தை செய்ய சொல்வது எப்படி இஸ்லாமிய செயல் ஆகும்?
மேற்கில் உள்ள நாடுகளை 30 மணி நேரம் வரை பிந்தசொல்வது எப்படி இஸ்லாம் ஆகும்? எப்படி விஞ்ஞானம் ஆகும்? ஒரு முழு நாளும் 6மணிநேரமும் பிந்தசெய்வது நசீஃ குப்ர் ஆகாதா?
சங்கமம்தான் மாதத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது, சங்கமம்தாம் தேய்பிறையிலிருந்து வளர்பிறையாக சந்திரனை மாற்றுகிறது என்று கூறிக்கொண்டே கிழக்கத்திய நாடுகளில் உள்ள கமிட்டியினரை கும்ம-வின் நாளில் மாதத்தை துவங்க சொல்வது எந்த விதத்தில் இஸ்லாமாகும்? ஒரு தேதிக்கு ஒரே கிழைமைதான் இருக்க வேண்டும் எனும் உங்களின் சர்வதேச நாள்காட்டி சித்தாந்தம்தானே இந்த இந்த பிழைக்கு காரணம்.
சங்கமம் என்பது ஒரு சில வினாடிகள் மட்டுமே நிகழும் நிகழ்வு எனினும் அதை நாம் ஒரு முழு நாளாக கொள்ளவேண்டும். அதுவும் சர்வதேச நாளாக கொள்ளவேண்டும் எனும் உங்கள் சித்தாந்தத்திற்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா சகோதரர்களே?
உதாரணமாக ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஒரு ஆணுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமாகி, தம்பதிகளாக வாழ்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். நிறைமாதக் கர்ப்பிணியான அந்தத் தாய் தன் குழந்தையை தான் வசிக்கும் அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை நண்பகலில் பெற்றெடுக்கிறாள். அன்று பிறந்த அந்த குழந்தையின் பிறந்த நாளையும், (Date of Birth) பிறந்த இடத்தையும் (Place of Birth) கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை அந்தக் குழந்தை பிறந்தது என்று தான் உலகம் முழுவதும் சொல்வோம். இதில் உலகிலுள்ள எவருக்கும் எந்த மாற்றுக் கருத்துகளும் இருக்க இயலாது. பிறந்த தேதியையும், பிறந்த இடத்தை குறிப்பிட்டே ஒரு குழந்தையின் பிறப்பு பதியப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவரான அந்த நபர் ''நான் ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவன், பிறந்த அக்குழந்தை எனக்குப் பிறந்த எனது குழந்தையாகும். அந்தக் குழந்தை அமெரிக்காவில் பிறந்தாலும் குழந்தை பிறக்கும் போது எனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு சனிக்கிழமை ஆகிவிட்டது. நான் வசிக்கும் ஆஸ்திரேலியா நாடானது குழந்தை பிறந்த அதே நேரத்தில் சனிக்கிழமையை அடைந்து விட்டதால் குழந்தையின் பிறந்த நாளையும் சனிக்கிழமை என்றே தீர்மானிக்க வேண்டும்' என்று வாதம் எழுப்பினால் அந்த நபரை நாம் என்ன சொல்வோம்?
உங்கள் உதாரணத்தின் உண்மை நிலை உங்களுக்கு விளங்கவில்லையே. குழந்தை பிறக்கும்போது அந்த ஊரின் நாள் மற்றும் கிழமையில்தான் பதியப்படுகிகிறது. அதே போல் பிறை பிறக்கும்போது அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை அடுத்து வரும் திங்கள் கிழமையில் அமெரிக்க கமிட்டியினரை மாதத்தை துவங்க விடாமல் 30 மணிநேரம் தள்ளிப்போட்டு செவ்வாய்கிழமை மாதத்தை துவங்க சொல்வது அமெரிக்க குழந்தைக்கு ஆஸ்திரேலிய BIRTH CERTIFICATE வாங்குவதை போலாகாதா? மேலும் இப்படி பூமியில் பிறக்கும் ஒரு குழந்தையை உதாரணம் கூறுவதற்கு பிறை என்ன பூமியிலா பிறக்கிறது? என்று கேட்டால் அதற்கும் இவர்கள் ஒரு பதிலை கூறக்கூடும். “ஒவ்வொரு மாதமும் அமாவாசை பூமியின் குறிப்பிட்ட ஒரு புள்ளியிலேயே நிகழ்கிறது. பூமியின் குறிப்பிட்ட அந்த பகுதியில் தான் பிறை பிறக்கிறது”. இது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதை அவர்கள் காலண்டரில் படம்போட்டு காட்டியுள்ளனர். படம் மேலே உள்ளது. சங்கமம் நிகழும் அந்த பகுதியின் புவியியல் கூறுகளையும் (geographical coordinates) அதில் குறிப்பிட்டிருப்பர். குழந்தையின் பிறப்பு அது பிறந்த ஊரின் உள்நாட்டு நேரப்படி பதியப்படும்போது இவர்கள் பிறையின் பிறப்பை மட்டும் அந்த உள்நாட்டு நேரப்படி பதியாமல் ஏன் சர்வதேச நேரப்படி பதிகிறார்கள்.
எளிமையாக, புரியும்படியான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:
அமெரிக்க மம்மி! ஆஸ்திரேலிய டாடி! !
அமெரிக்காவில் வியாழன் குழந்தை பிறக்கிறது. உடனே மம்மி குழந்தையை போட்டோ எடுத்து *இன்று, வியாழக்கிழமை குழந்தை பிறந்தது* என்ற குறிப்புடன் ஆஸ்திரேலிய டாடிக்கு வாட்ஸ் ஆப் தகவல் அனுப்புகிறாள். அடுத்த வினாடியே தகவலைப் பார்க்கிறார் ஆஸ்திரேலிய டாடி. ஆனால் அவருக்கு அது வெள்ளிக்கிழமை. அதைப் பார்த்த ஆஸ்திரேலிய டாடி அவரது டாடியிடம் நேத்து குழந்தை பிறந்தது என்பாரா. இன்று குழந்தை பிறந்தது என்பாரா?
அமெரிக்க டாடி! ஆஸ்திரேலிய மம்மி! !
குழந்தை ஆஸ்திரேலியாவில் வியாழக்கிழமை பிறக்கிறது. உடனே மம்மி குழந்தையை போட்டோ எடுத்து *இன்று, வியாழக்கிழமை குழந்தை பிறந்தது* என்ற குறிப்புடன் அமெரிக்க டாடிக்கு வாட்ஸ் ஆப் தகவல் அனுப்புகிறாள். அடுத்த வினாடியே தகவலைப் பார்க்கிறார் அமெரிக்க டாடி. ஆனால் அவருக்கு அது புதன்கிழமை. அதைப் பார்த்த அமெரிக்க டாடி அவரது டாடியிடம் நாளைக் குழந்தை பிறந்தது என்பாரா. இன்று குழந்தை பிறந்தது என்பாரா?
இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள் எனும் கட்டுரையில் பின்வருமாறு எழுதியுள்ளனர்.
புவிமைய சங்கமம் உலகநேரம் (UT) 16 மணிக்குமேல் நடந்தாலும், அல்லது அது 23.59 மணிநேரம் வரை நடந்தாலும் கூட, கிழக்கத்திய நாடுகளில் சில அடுத்த நாளைக்குள் சென்றுவிடும் என்ற நிலையில்கூட நமது கிப்லாவான (Meridian) கஃபாவும், அதைத் தாண்டிய மேற்குப் பகுதியில் அமைந்த எந்த நாடுகளும் அவ்வாறு முற்கூட்டியே அடுத்த நாளைக்குள் விடிந்திடாத வண்ணம் அல்லாஹ் இந்த இஸ்லாமிய ஹிஜ்றா நாட்காட்டியை துல்லியமானதாகவும், தவறுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும் பாதுகாத்துள்ளான் - ஸூப்ஹானல்லாஹ். அந்த அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றான இந்த ஹிஜ்றா நாட்காட்டியை எதிர்க்கும் மாற்றுக் கருத்துடையவர்கள் இவற்றை சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வேண்டுகிறோம்.
அல்லாஹ் இவர்களது வாயிலிருந்தே இவர்களது நாட்காட்டியின் பிழையை வெளிவரச்செய்துவிட்டான். நாம் பஜ்ரை அடிப்படையாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்த 1436 & 1437 ஹிஜ்றா காலண்டரில் பின்வரும் மாதங்களில் சங்கமம் நிகழும்போது மக்காவில் முந்தய நாள் விடிந்திருக்காது. உதா. 1436 ஷவ்வாலின் துவக்கத்தை குறிக்கும் சங்கமம் 16-07-2015 1:24UT க்கு நிகழ்கிறது அப்போது பஜ்ரை அடிப்படையாக கொண்ட நாளில் மக்கா புதன் கிழமையில் இருக்கும். அடுத்த விடியலான வியாழக்கிழமையில் மக்காவின் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடலாம் ஆனால் சவுதியில் இருக்கும் கமிட்டியினர் ஒரு நாளை பிந்தி வெள்ளிகிழமை பெருநாள் கொண்டாடி நசீஉ எனும் பாவத்தை செய்வர்.


1436
3. ரபி உல் அவ்வல்
10. ஷவ்வால்
1437
1. முஹர்ரம்
4. ரபி உல் ஆகிர்
6. ஜமாதில் ஆகிர்


மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் உள்ளூர் நேரப்படி சங்கமம் நிகழும் நாளின் அடுத்த ஃபஜ்ரின் நாளில் மாதத்தை துவங்கினால் பின்வரும் மாதங்களில் சென்னைக்கும் கோழிக்கோட்டிற்கும் ஒரு நாள் வித்தியாசம் வரும். அதாவது சென்னையின் ஃபஜ்ர் நேரத்திற்கும் கொழிகோட்டின் ஃபஜ்ர் நேரத்திற்கும் இடைப்பட்ட வேளையில் சங்கமம் நிகழும். சென்னை சங்கமம் நிகழும் முன்பே அடுத்த நாளில் நுழைந்து விட்டதால் சங்கமம் நிகழும் அந்த நாள் அவர்களுக்கு கும்ம-வின் நாள். சங்கமம் நிகழ்ந்த பின் ஃபஜ்ர் வருவதால் கொழிகோட்டிற்கு அது அடுத்த மாதத்தின் முதல் நாள். 1௦ வருடம் முன்னும் பின்னும் தான் நான் இதை ஆய்வு செய்து பார்த்தேன் மேலும் பல வருடங்களில் இது நிகழும். இதனால் சென்னைக்கும் கோழிக்கோட்டிற்கும் மாதநாட்களின் எண்ணிக்கை மாறும். மாதம் தொடங்கும் கிழமைகளும் மாறும்.
ரஜப் 1434
துல் ஹிஜ்ஜா 1434
ரஜப் 1448
இவர்கள் புதிதாக வைக்கும் ஒரு வாதம் “UT என்பதை லோக்கல் நேரத்திற்கு மாற்றுவது விஞ்ஞானப்படி மிகப்பெரும் தவறாகும். சங்கமம் UT நேரப்படி ஒரு தனித்த நாளில் நிகழ்வது அதை லோக்கல் நேரத்திற்கு மாற்றினால் அமாவசை இரண்டு நாட்கள் மற்றும் இரண்டு கிழமைகளில் வந்துவிடும். எனவே சங்கமத்தை லோக்கல் நேரத்திற்கு மாற்றக்கூடாது UTயிலேயே வைத்து பயன்படுத்த வேண்டும்” என்பதாகும். இதுவும் சகோதரர்களின் அறியாமையை காட்டுகிறது சங்கமம் நிகழும்போது உலகில் இரண்டு கிழமைகள் இருக்கும் என்பதால் சங்கமம் இரண்டு கிழமைகளில் நிகழ்கிறது என்று யாரும் கூறவில்லை. உதா: பிரேசிலில் வியாழக்கிழமை நடந்த கால்பந்து போட்டியை வெள்ளிகிழமை நேரலையில் இந்தியாவில் பார்க்கும் ஒருவர் ஒரே விளையாட்டு இரண்டு நாள் நடந்தது என நம்புவாரா அல்லது நமது ஊரில் அன்று வேறொரு நாள் என நம்புவாரா? மேலும் “சங்கமம் சர்வதேச நேரத்தில் நிகழ்வதால் அதை நாம் சர்வதேச நேரத்திலிருந்து லோக்கல் நேரத்திற்கு மாற்றக்கூடாது” என்பதும் அறியாமையே. சர்வதேச நிகழ்வுகளையும் வானியல் நிகழ்வுகளையும் உலக நேரத்தில் குறிப்பிடிவதையே விஞ்ஞான உலகம் கடை பிடிக்கிறது. அதை உங்கள் நாட்டு நேரத்தில் மாற்றிகொள்ளுங்கள் என்று (சகோதரர்களுக்கு 6000 வருடங்கள் நாட்காட்டிகள் இட்டுகொடுத்த) நாசாவே கூறுகிறது. “இந்த நாளில் சர்வதேச நேரப்படி 06:30:21க்கு சூரிய கிரகணம் தொடங்கும் இது 1மணி நேரம் நீடிக்கும். இதை இந்தியா இலங்கை மலேசியா ஆகிய நாடுகளில் பார்க்கலாம்” என நாசா அறிக்கை விட்டால் சகோதரர்கள் அந்த கிரகணத்தை பார்க்க வேண்டுமெனில் அந்த நேரத்தை இந்திய நேரப்படி மாற்றி பார்பார்களா அல்லது அவர்கள் கடிகாரத்தில் 6:30 ஆகும்போது கிரகணத்தை பார்பார்களா?
UTயை லோக்கல் நேரத்திற்கு மாற்றுவது விஞ்ஞானப்படி மிகப்பெரும் தவறாகும் என இவர்களுக்கு எந்த விஞ்ஞானமும் சொல்லவில்லை எந்த விஞ்ஞானியும் சொல்லவில்லை. சர்வதேச நேரம் என்றால் என்ன என்பதை முதலில் விளங்க வேண்டும். சர்வதேச நேரம் என்பது ஒரு ஸ்டாண்டர்ட் ஆகும். நேரத்தை அளப்பதற்கான ஸ்டாண்டர்ட். மட்டுமே. A standard for time keeping. இதனடிப்படையில்தான் உலகில் நேரம் அளக்கப்படுகிறது. இதனடிப்படையில்தான் உலகநாடுகளில் நேரம் கணக்கிடப்படுகிறது. மாறாக இதுவே ஒரு நேரமோ நேர மண்டலமோ அல்ல. இதை நாம் கூற வில்லை இவர்களுக்கு நாட்காட்டி இட்டுகொடுத்த நாசா சொல்கிறது.
நமது எல்லா இபாதத்துகளும் லோக்கல் நேரத்தில்தான் அமைந்துள்ளன. IDLஇல் விடியும்போது உலகம் முழுவதும் பஜ்ர் தொழுவதில்லை. ஐடிஎல்லில் சூரியன் மறையும்போது உலக மக்கள் நோன்பு திறப்பதில்லை. நமக்கு விடியும்போதுதான் நமது நாள் துவங்குகிறது. அறியாமையில் இருந்தால் திருத்திகொள்ளட்டும்.
ஒரு கிழமைக்கு ஒரு தேதிதான் என்பது சர்வதேச நாட்காட்டி சித்தாந்தம். அதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரம் உள்ளதா?
மாறாக ஒரு தேதிக்கு ஒரு கிழமை இல்லை என்பதை என்னால் குர்-ஆனை கொண்டும் விஞ்ஞானத்தை கொண்டும் நிரூபிக்க இயலும். “சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன” எனும் இறை வசனத்திற்கேற்ப இயங்கும் சந்திரனின் கணக்கை நாம் படித்தால் அது ஒரு ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்துகிறது. மாதத்தின் துவக்கத்தை குறிக்கும் சங்கமத்தை இந்த மாதம் சந்திரன் பூமியின் ஒரு இடத்தில் இருந்து துவக்கினால் அந்த மாத இறுதியில் அதே இடத்தில் சந்திரன் மாதத்தை முடிப்பதில்லை. இதை நீங்களே உங்கள் காலண்டரில் படம் போட்டு காட்டியுள்ளீர்கள். உதா; இந்த மாதம் மொரோக்கோவில் அமாவாசை ஏற்பட்டு, மாதம் மொரோக்கோவிலிருந்து தொடங்கினால் அடுத்த மாதம் மீண்டும் மொரோக்கோவிலிருந்து தொடங்காது. அடுத்த மாதம் ஜப்பானில் தொடங்கும். எனில் மொரோக்கோவிலிருந்து மேற்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் 30 நாட்களாகவும், மொரோக்கோவிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் 29 நாட்களாகவும் இருக்கும். மாதத்தை மொரோக்கோவில் தொடங்கிய சந்திரன் அதை மொரோக்கோவில் முடிக்காமல் இடையில் வைத்து ஜப்பானில் முடித்துவிட்டதால் ஜப்பான் முதல் மொரோக்கோ வரையுள்ள நாடுகளுக்கு மாதம் ஒரு நாள் குறைவாக அமைந்துவிடுகிறது. இப்படித்தான் எல்லா மாதமும் சந்திரன் மாதத்தை தொடங்கிய இடத்தில் முடிக்காமல் வேறொரு இடத்தில் முடிக்கிறது. மேலும் இதனால் மொரோக்கோவிலிருந்து மேற்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் திங்கள் கிழமையிலும் மொரோக்கோவிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடங்கும். இதுதான் இறைவனின் கணக்கு. இதைதான் இன்றைய விஞ்ஞானம் சாட்சி கூறுகிறது. மேலும் விளக்கத்திற்கு எனது சர்வதேச பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு >> piraivasi.com/2014/12/Universal-Hilail-An-Astronomical-Analysis.html எனும் ஆய்வுக்கட்டுரையை வாசிக்கவும்.
இதில் சில கேள்விகள் எழும். ஒரே மாதம் ஒரு பகுதிக்கு 29 நாளாகவும் மறுபகுதிக்கு 30 நாளாகவும் இருந்தால் முஸ்லிம்களுக்கு இடையே எப்படி ஒற்றுமை ஏற்படும். சர்வதேச இஸ்லாமிய நாள்காட்டி சாத்தியம் இல்லாமல் போய்விடுமே? உலகம் முழுவதும் கிலாஃபத் ஏற்பட்டால் இஸ்லாமிய அரசு எப்படி இயங்க இயலும். ஒரே தேதிக்கு இரண்டு கிழமைகள் இருந்தால் முஸ்லிம்கள் எப்படி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவார்கள். எப்படி வாழ்த்துக்களை பரிமாறுவார்கள். கிலாஃபத் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய அரசு இயங்குவதற்கு குழம்பி விடாதா? இஸ்லாமிய அரசு எப்படி பெருநாள் விடுமுறைகளை அறிவிக்கும். மேலும் இறைவன் சந்திரனை ஒட்டு மொத்த உம்மாவிற்கும் காலம் காட்டி என்று கூறுவது பொய்த்துவிடாதா? இறை மறுப்பு ஆகாதா? இரண்டு கிழமைகளும் இரண்டு வித எண்ணிக்கை கொண்ட மாதத்தையும் கொண்ட காலண்டர்களை எப்படி உலக முஸ்லிம்கள் காலம் காட்டியாக பயன்படுத்த முடியும்.
இவைகள் மனோ இச்சையால் ஏற்பட்ட கேள்விகள். உலகம் முழுவதும் ஒரே நாளில் ஒரே கிழமையில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது மனோ இச்சை. ஒரே கலண்டர் இருந்தால்தான் அரசாங்கம் இயங்கும் என்பது அறியாமை. நவீன விஞ்ஞானத்தை எல்லாவற்றிகும் பயன்படுத்தும் நாம் இதிலும் அதை பயன்படுத்தி ஒரு தேர்வு காணலாம். இறைவனின் கணக்கை மாற்றாமலேயே வெவ்வேறு கிழமைகளும் வெவ்வேறு மாத நாட்களையும் கொண்ட காலண்டர்களை உலக முஸ்லிம்கள் குழப்பமில்லாமல் பயன்படுத்தலாம். இந்த தீர்வை நாம் ஏற்கனவே நமது அட்டவணையில் காட்டி விட்டோம். இறைவனின் கணக்குப்படி ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு காலண்டரை உருவாக்கிவிட்டு அவற்றை ஒருங்கிணைக்கும் செயலாக ஒரு CROSS REFERENCE TABLEஐ உருவாகினால் போதுமானது. இதற்கு நடைமுறையில் சிறந்த உதாரணம். அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒருவரிடம் “நாளை மாலை ஐந்து மணிக்கு என்னை அழையுங்கள்” என்று கூறினால், அமெரிக்காவில் நாளை மாலை 5 மணி என்பது ஆஸ்திரேலியாவில் என்ன நாள் என்ன நேரம் என்பதை பரிசோதித்துவிட்டே அழைப்பார். இதே போல் உலகம் முழுவதும் வெவ்வேறு இஸ்லாமிய காலண்டர் பொது (சிவில்) காலண்டராக பயன்படுத்தப்பட்டால் ஒரு பகுதிக்கும் மறு பகுதிக்கும் உள்ள நாட்கள் வித்தியாசத்தை நாம் கூறிய CROSS REFERENCE TABLEஇல் இருந்து எடுத்து குழப்பம் இல்லாமல் பயன் படுத்தலாம். இதனால் இஸ்லாமிய கிலாஃபதிற்கு எந்த பங்கமும் ஏற்படாது.
மேலே நாம் செய்த ஆய்வின் சுருக்கம்:
1. ஹிஜ்றா கமிட்டி காலண்டர் நள்ளிரவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதை பின்பற்றினால் 16UT க்கும் 23.59UT க்கும் இடைப்பட்ட நேரத்தில் சங்கமம் நிகழ்ந்தால் கிழக்குலகம் நசீ எனும் குஃப்ரில் விழும். 00UT க்கும் 7.59க்கும் இடைப்பட்ட நேரத்தில் சங்கமம் நிகழ்ந்தால் மேற்குலகம் நசீ எனும் குப்ரில் விழும். (இதில் 16ut க்குமேல் எனும் கமிட்டியினரின் விளக்கக்கட்டுரை எந்த தெளிவும் இல்லாமலேயே இருக்கிறது)
2. இவர்களுக்காக நாம் ஃபஜ்ர் நேரத்தின் அடிப்படியில் ஒரு நாட்காட்டியை உருவாக்கி பார்த்தோம். அப்படி பார்த்தாலும் UT-12 முதல் UT+6 வரை உள்ள பகுதிகள் ஒரு நாளை பிந்தியும்; UT+6.5 முதல் UT+12 வரை உள்ள பகுதிகள் ஒரு நாளை முந்தியும் நசீ எனும் பாவத்தை செய்வர்.
3. சர்வதேச நேரத்தை லோக்கல் நேரமாக மாற்றக்கூடாது என்று எந்த விஞ்ஞானமும் சொல்லவில்லை. அது சகோதரர்களின் அறியாமை.
4. சங்கமத்தை லோக்கல் நேரத்திற்கு மாற்றினால் இரண்டு நாட்கள் சங்கமம் நிகழ்ந்துவிடும் என்று நினைப்பதும் அறியாமை.
5. லோக்கல் நேரப்படி மாதத்தை துவங்கினால் மாதம் 28 அல்லது 31 நாட்கள் கொண்டதாக மாறிவிடும் என்பதும் அறியாமை.
6. இறைவனின் கணக்குப்படி சந்திர மாதம் உலகின் ஒரு பகுதிக்கு 29 நாள் கொண்டதாகவும் மறுபகுதிக்கு 30 கொண்டதாகவே இருக்கும். இதனால் இரண்டு கிழமைகளில் உலகில் மாதங்கள் துவங்கும். இதுவே இறைவனின் ஏற்பாடு. மேலதிக விளக்கத்திற்கு “சர்வதேச பிறை” மற்றும் “பிறையின் விஞ்ஞானம்” எனும் கட்டுரைகளை வாசிக்கவும்.
7. ஹிஜ்றா கமிட்டி காலண்டர் என்பது நஸ்ராணிகளின் கிப்லாவை அடிப்படையாக கொண்டது. விளக்கத்திற்கு “கமிட்டியினர் முன்னோக்கும் தீர்க்கரேகை” மற்றும் “கமிட்டியினரின் தேதிக்கோடு” எனும் கட்டுரைகளை வாசிக்கவும்.
8. ஹிஜ்றா கமிட்டி காலண்டர் என்பது கிரிகோரியன் காலண்டரில் சங்கம நாள் குறிப்பிடப்பட்ட மற்றொரு நஸ்ராணி நாட்காட்டி. ஆதாரத்திற்கு “கமிட்டியினரின் முரண்பாடுகள்“
9. நஸ்ராணிகளின் கிப்லாவான க்ரெனிச்சை அடிப்படியாக கொண்ட நஸ்ரனிகளின் 180டிகிரி தேதிக்கொடுதான் கமிட்டியினருக்கும் தேதிக்கோடு
10. க்ரெனிச்சில் நண்பகலாக இருக்கும்பொது 180டிகிரி தேதிக்கோட்டிலிருந்து சர்வதேச நாள் துவங்குகிறது. அப்படி துவங்கும் நஸ்ராணிகளின் சர்வதேச நாள்தான் கமிட்டியினரின் சர்வதேச நாள். அதே சர்வதேச நாளில்தான் கமிட்டி கலண்டரின் இஸ்லாமிய மாதம் துவங்குகிறது.
11. தேதிக்கோட்டில் முஸ்லிம்கள் முதுகை காட்டி தொழவேண்டும் என்பது கிப்லாவை பற்றிய சகோதரர்களின் தவறான புரிதலை காட்டுகிறது.
12. மெகல்லன், ஆண்டானியோ, ஜேம்ஸ் கூக் ஆகியோரின் உலகை சுற்றிய கடல்பயணங்களை இப்போது இருக்கும் தேதிக்கோட்டில் நாள் மாற்றம் நிகழ்கிறது என்பதற்கு ஆதாரமாக கூறுவது வரலாற்றை முழுமையாக சகோதரர்கள் படிக்காததன் விளைவு.
13. 55:5ல் இறைவன் கூறும் கணக்குப்படி மாதம் என்பது உலகின் ஒருபகுதியினருக்கு 29 நாட்கள் உடையதாகவும் மறு பகுதியினருக்கு 30 நாட்களுடையதாகவும் இருக்கும். மேலும் மாதம் உலகம் முழுவதும் ஒரே கிழமையில் துவங்காது. ஒருஇஸ்லாமிய தேதிக்கு இரு கிழமைகள் இருக்கும். இதை இறை வாக்கியம் 2:185 உறுதிப்படுத்துகிறது. இது இறைவசனம் 2:189க்கு முரண்படும் என நினைப்பது அறியாமை.
14. உலகத்தில் இரண்டு கிழமைகளும் இரண்டு வித மாத நாட்கள் கொண்ட நாட்காட்டிகள் இருந்தாலும் 2:189ல் அல்லாஹ் கூறும் மனித குல நாட்டிக்கு அது முரண்படுவதில்லை. உலகில் இருக்கும் லோக்கல் கலண்டர்களுக்கு மாஸ்டர் காலண்டராக ஒரு cross reference table உருவாக்குவது 55:5, 2:185, 2:189 ஆகிய எந்த இறை வாக்குகளை மீறாமலும் 9:37ல் அல்லாஹ் கூறும் நசீ எனும் குப்ரில் விழாமலும் நம்மை பாதுகாக்கும்.

1440வரைக்கும் இப்படி ஒரு மாஸ்டர் நாட்காட்டியை இந்த bit.ly/1EPkGMo excel fileஇல் காணலாம்.