ஜூன் 2ம் தேதி 2016ம் வருடம் நாம் சமூகவலைதலங்களில் வெளியிட்ட ஒரு பிரசுரத்தை தேவை கருதி வெளியிடுகிறோம்...
துருக்கிய கான்ஃபரன்ஸும்...! துருத்திய கிலாஃபத்தும்...!
இணையதள வதந்தியும்...! உண்மை சம்பவமும்....!
இந்த லிங்கில் http://sabahdai.ly/UHCfZC இருக்கும் பத்திரிக்கை செய்தியை மேற்கோள்காட்டி சமூக வலைதளங்களில்
*துருக்கி மாநாட்டில் பிரகடனம்..!*
உலக முஸ்லிம்கள் அனைவரும் சர்வதேச ஹிஜ்ரிநாட்காட்டியை பின்பற்ற வேண்டும்..!!
உலக முஸ்லிம்கள் அனைவரும் சர்வதேச ஹிஜ்ரிநாட்காட்டியை பின்பற்ற வேண்டும்..!!
கடந்த 1924-ஆம் ஆண்டு துருக்கியை தலைமையாகக் கொண்ட இஸ்லாமிய கிலாஃபத் வீழ்த்தப்பட்டபோது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
இஸ்லாமிய விரோத சக்திகளால் ஒழிக்கப்பட்ட இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை மீண்டும் நிலைபெறச் செய்யவும், துருக்கி மண்ணில் வீழ்த்தப்பட்டதை அம்மண்ணிலிருந்து கட்டி எழுப்பவும் வல்ல அல்லாஹ்விடமே நாம் பிராத்திக்கிறோம்.
சுமார் 50 நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆலிம்கள், அறிவியல் விற்பன்னர்களை ஒன்றுகூட்டி, கடந்த 3-நாட்கள் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, *"உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சர்வதேச ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்ற வேண்டும்"* என பிரகடனம் செய்த
துருக்கி அரசாங்கத்திற்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்.
துருக்கி அரசாங்கத்திற்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்.
மேற்படி மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து *ஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வாளர்களும் அரசால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டனர்.* அல்லாஹ்வின் உதவியால் எமது ஆய்வுகளையும், ஹிஜ்ரிநாட்காட்டியின் துல்லியமான நிலையையும் மாநாட்டில் அழுத்தமாக அவர்கள் பதிவு செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த சர்வதேச மாநாட்டில்,
*"உலக முஸ்லிம்கள் அனைவரும் சர்வதேச ஹிஜ்ரிநாட்காட்டியை பின்பற்ற வேண்டும்"* என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
*"உலக முஸ்லிம்கள் அனைவரும் சர்வதேச ஹிஜ்ரிநாட்காட்டியை பின்பற்ற வேண்டும்"* என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
ஷேக் யூசுப் கர்ளாவி உட்பட சர்வதேச உலமாக்கள் இம்முடிவை அங்கீகரித்துள்ளனர். சவுதி அரேபியா, எகிப்து, மொராக்கோ, பாகிஸ்தான், ஜோர்டான், யூஏஇ, கத்தார் மற்றும் USA என 50 க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டு முடிவின் மூலம், மறையும் பிறையை புறக்கண்களால் பார்த்த பின்னரே அமல் செய்ய வேண்டும், புதிய மாதத்தைத் தொடங்க வேண்டும் என்ற அசாதாரண நிலை முடிவுக்கு வந்துள்ளது. மேலும் தொழுகைகால அட்டவணையின் துல்லியமான கணக்கீட்டை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டதைப் போல, ஹிஜ்ரி நாட்காட்டியும் நடைமுறை படுத்தப்படும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பதும் பறைசாற்றப் பட்டுள்ளது.
மேலே கருப்பு வெள்ளையில் இருப்பது ஹிஜ்ரா அறிஞர் ஒருவரால் எழுதப்பட்டு முகவரியில்லாமல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வதந்தி
கடந்த மே 30 அன்று துருக்கியின் வணிக தலைநகரான இஸ்தான்புளில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல நாட்டு அறிஞர்களுக்கும் வானியல் ஆய்வாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு சந்திர நாட்காட்டி தேவை எனும் அடிப்படையிலும் அதற்கான தீர்வைக் கண்டெத்துவதற்காகவும் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முகவரியில்லாத இந்த வதந்தியில் அந்த மாநாட்டைக் குறித்து தவறான செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. உண்மை நிலையைக் குறித்து அறிய இறுதிவரை வாசிக்கவும்.
நடந்ததது என்ன?
மாநாட்டில் இரு மண்டல காலண்டரும் (உலகத்தை இரண்டாக பிரித்து கிழக்கு அரைக்கோளத்திற்கு ஒரு காலண்டரும் மேற்கு அரைக்கோளத்திற்கு ஒரு காலண்டரும் உருவாக்கும் முறை) உலக சந்திர காலண்டரும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு உலக காலண்டரைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது எந்த காலண்டர் என்று முடிவு செய்யப்படவில்லை. துருக்கி ஏற்கனவே ஒரு சந்திர காலண்டரை பயன்படுத்தி வருகிறது. அந்த காலண்டர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மலேசியாவில் ஒரு காலண்டர், எகிப்தில் ஒரு காலண்டர், அமெரிக்காவில் ஒரு கலண்டர் ஐரோப்பாவில் ஒரு கலண்டர் லிபியாவில் ஒரு காலண்டர், சவுதியில் ஒரு காலண்டர் என பல காலண்டர்கள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் எந்த காலண்டரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக துருக்கியில் கூடிய காங்கிரஸ் ஒரு புது கமிட்டியை உருவாக்கி, அந்த கமிட்டி புது காலண்டரை முடிவு செய்யும் என்று அறிவித்துவிட்டு மாநாடு முடிவுற்றது. மாநாட்டை நடத்திய முதல்வர் 60 ஆண்டுகாலமாக முஸ்லிகளுக்கு மத்தியில் பெரும் விவாதப் பொருளாக இருந்த காலண்டர் பிரச்சனை அந்த ஒரே நாளில் முடிவுக்கு வந்ததாக பேட்டியும் கொடுத்தார்.
33:36. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.
அல்லாஹ்வும் தூதரும் தலைப் பிறைகள் தேதியைக் காட்டும் என்று திட்டவட்டமாக சொல்லியிருக்க இவர்கள் அனைவரும் சந்திரனைக் கணக்கிட்டு காலண்டர் போடுகின்றனர். கலாண்டர்காரர்கள் அனைவரும் துல்லியமான சந்திர ஓட்டத்தை வைத்துதான் காலண்டர் போடுகின்றனர். எனினும் எது சரியான காலண்டர் என்று அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அவன் காலண்டர் தவறு என்கிறான் இவன் ; இவன் காலண்டர் தவறு என்கிறான் அவன். சூரியனையும் சந்திரனையும் துல்லியமாக கணக்கிடலாம். உலகம் முழுவதும் ஒற்றுமையாக ஒரே தொழுகை நேரக் கணக்கைப் பயன்படுத்தும்போது ஒரே கிப்லா கணக்கை பயன்படுத்தும் பொது பிறைக் கணக்கில் ஏன் ஒற்றுமை வரவில்லை? ஏனென்றால் பிறையைக் கணக்கிட இயலாது, கலாண்டர்காரர்கள் அனைவரும் சந்திரனை வைத்தே காலண்டர் போடுகின்றனர். பிறையை வைத்துள்ள காலண்டர் எதுவுமில்லை. இவர்கள் சொல்வது இஸ்லாமிய காலண்டர் எனில் அதில் 1 ஆம் இரவு என்று குறிப்பிட்ட இரவில் தலைப் பிறை தெரிந்தால் இந்த உலகம் முழுதும் அதை ஏற்றுக்கொள்ளும். அப்படி ஒரு காலண்டரை சந்திரன் உள்ள நாள் வரை எந்த கொம்பனாலும் உருவாக்க முடியாது. அதுவே அல்லாவின் படைப்பு.
யார் யார் கலந்து கொண்டனர்?
பதில்: அந்த மாநாட்டில் காலண்டர் வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸை தூக்கி எறிந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இணைய தளங்களில் பரப்பப்படும் வதந்தியில் இருப்பது போல் உலக அறிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளவில்லை. அதில் கலந்து கொண்ட அனைவருமே காலண்டர் பித்து பிடித்தவர்கள்.
யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டது?
பதில்: அதில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பு எதுவும் தேவையில்லை. முன்னரே அறிவிப்பு செய்யப்பட்டு வானியலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நீங்கள் கலந்துகொள்ளவேண்டுமெனில் நீங்கள் ஒரு காலண்டரை பரிந்துரைக்க வேண்டும். உங்களிடம் காலண்டர் இல்லை என்றால் அனுமதி கிடைக்காது. காலண்டர் கொள்கையை எதிர்க்கும் பல அறிவியலாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு காதியானியாவது இருப்பான். அந்த காதியானிகள் அனைவரும் ஒன்று கூடி இனிமேல் அஹ்மதியா மட்டுமே இஸ்லாம் என்று அழைக்கப்பட வேண்டும் மற்றவை இஸ்லாம் அல்ல என்றொரு முடிவை எடுத்தால் எப்படி இருக்குமோ அதேபோல ஒன்றுதான் இதுவும். உலகில் இருக்கும் காலண்டர் பித்துபிடித்தவர்கள் மட்டுமே ஒன்று கூடி சர்வதேச காலண்டர்தான் சரி என்று முடிவெடுத்துள்ளனர்.
பதில்: அதில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பு எதுவும் தேவையில்லை. முன்னரே அறிவிப்பு செய்யப்பட்டு வானியலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நீங்கள் கலந்துகொள்ளவேண்டுமெனில் நீங்கள் ஒரு காலண்டரை பரிந்துரைக்க வேண்டும். உங்களிடம் காலண்டர் இல்லை என்றால் அனுமதி கிடைக்காது. காலண்டர் கொள்கையை எதிர்க்கும் பல அறிவியலாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு காதியானியாவது இருப்பான். அந்த காதியானிகள் அனைவரும் ஒன்று கூடி இனிமேல் அஹ்மதியா மட்டுமே இஸ்லாம் என்று அழைக்கப்பட வேண்டும் மற்றவை இஸ்லாம் அல்ல என்றொரு முடிவை எடுத்தால் எப்படி இருக்குமோ அதேபோல ஒன்றுதான் இதுவும். உலகில் இருக்கும் காலண்டர் பித்துபிடித்தவர்கள் மட்டுமே ஒன்று கூடி சர்வதேச காலண்டர்தான் சரி என்று முடிவெடுத்துள்ளனர்.
“துருக்கி மாநாட்டில் பிரகடனம்..! உலக முஸ்லிம்கள் அனைவரும் சர்வதேச ஹிஜ்ரிநாட்காட்டியை பின்பற்ற வேண்டும்” என்று அந்த இணையதள வதந்தியில் இருக்கிறதே.?
பதில்: சந்திர காலண்டர் இடும் அனைவருமே அதற்கு ஹிஜ்ரி கலண்டர் என்றே பெயர் வைக்கின்றனர். குறிப்பிட்ட அந்த மாநாடு கூட ஹிஜ்ரி காலண்டர் மாநாடு என்ற பெயரிலேயே நடத்தப்பட்டது. நீங்கள் இணைய தளத்தில் “ஹிஜ்ரி காலண்டர்” என்று தேடினால் பல ஹிஜ்ரி காலண்டர்கள் வரும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேதியைக் காட்டிக்கொண்டிருக்கும். உங்கள் போனுக்கு ஹிஜ்ரி காலண்டரை தேடினால் அதிலும் ஒரு பட்டியல் நீளும். எல்லாமே ஹிஜ்ரி காலண்டர் என்றே பெயரிடப்பட்டவை.
ஆனால் இந்த சந்தர்ப்பவாதிகள் “ஹிஜ்ரி காலண்டர்” என்ற பெயரை தாங்கள் அதே பெயரில் வெளியிட்ட அமாவாசைக் காலண்டருக்கு சாதகமாக பயன்படுத்தி தங்களது காலண்டரை உலகமே பின்பற்றப் போவதைப் போல வதந்தியைப் பரப்பி ஒரு மாயையை ஏற்படுத்த முயலுகின்றனர். இவர்களில் சிலர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டதாலும் இந்த வதந்தியை மக்கள் எளிதில் நம்பிவிடுவர் என்ற நப்பாசையில் இதை செய்கின்றனர். இவர்கள் வைத்திருக்கும் இந்த அமாவாசைக் காலண்டர் தவறென உணர்ந்து உலகமே சேர்ந்து குப்பையில் வீசி எறிந்துவிட்டது. 1998 வரை இந்த கலாண்டர் சவுதியில் பயன்படுத்தப்பட்டது. அது தவறென உலகமே சுட்டிக்காட்டியபோது சவூதி அதை சாக்கடையில் வீசி எறிந்தது. அதை யாராவது மீண்டும் எடுத்து வந்து மகுடம் சூட்டுவார்களா?
துருக்கி கிலாஃபத்:
கிலாஃபத் என்பது இஸ்லாமிய ஆட்சியை குறிக்கும் வார்த்தையாகும். ஒரு கலீஃபாவின் கீழ் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான ஆட்சி நடப்பதே கிலாஃபத். இது துருக்கியில் நடப்பது இஸ்லாமிய ஆட்சியல்ல. அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட 1924 க்கு முன்னரும் இஸ்லாமிய ஆட்சி அங்கே நடக்கவில்லை. மது மாது தங்கம் நிலம் என்று மயங்கி கிடந்தவர்கள் நடத்திய ஆட்சி அது. இந்தியாவை ஆண்டவர்களில் ஒருவர் தீனே இலாஹி என்ற புது மாதத்தை உருவாக்கினார். ஒருவர் தன் மனைவிக்கு உலகிலேயே அழகிய கப்ரை கட்டினார். இவர்கள்தாம் துருக்கியர்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது.
அறிவித்தவர்: அபூ ஹுரைரா(ரலி)
புகாரி 2928. 3587, முஸ்லிம் 5584
இந்த துருக்கியர்கள்தாம் உலக முஸ்லிம்கள் ஒற்றுமையாக ஓன்று கூடும் கஅபாவை சுற்றி நான்கு பள்ளிவாசல்களை கட்டி அங்கே பிரிவினையை ஏற்படுத்தினர். இவர்கள்தாம் ஒற்றுமையை உண்டாக்கிய கிலாஃபத் ஆட்சியாளர்களா? அரபுலகத்திலேயே கப்ர் வணக்கம் கொடிகட்டிப் பறந்ததற்கு இவர்கள் சொல்லும் துருக்கி கிலாபத் தான் காரணம். அதை ஒழித்துக்கட்டிய அப்துல் வஹாபை இவர்கள் பாராட்டுவதில்லை. இன்று இஸ்லாமிய ஆட்சி நடக்கும் சவுதியைமையமாக வைத்து கிலாபத் வரவேண்டும் என்று இவர்கள் சொல்வதில்லை. காரணம் என்ன தெரியுமா? இவர்கள் வைத்திருக்கும் இந்த காலண்டரை சவூதி காலால் மிதித்து குப்பையில் வீசியது மட்டுமே. இந்த வதந்தியைப் பரப்புபவர்கள் காலண்டருக்காக என்ன வேண்டுமெனிலும் செய்வர். இவர்கள் இதற்காக நபி செய்த ஹஜ்ஜின் தேதியை மாற்றினர். http://bit.ly/1XRogT2 கிப்லாவை மாற்றினர். http://bit.ly/1SOSi70. இப்போது கேடுகெட்ட துருக்கியர்களை இஸ்லாமிய கலீபாக்கள் என்கின்றனர். இணையதள வதந்திகளையும் முகவரியில்லாத பரப்புரைகளையும் நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கை செய்கிறோம்.
வெளியீடு: www.piraivasi.com
காலண்டர் என்ற பெயரில் பரவும் யூத சிந்தனைகளை தோலுரிக்கும் தளம்.
பத்திரிக்கை செய்தி
ஹிஜ்ரா ஒன்றால் எழுதப்பட்டு முகவரியில்லாமல் பரப்பப்பட்ட விமர்சனம்
நாம் வெளியிட்ட மறுப்பு