பல காலமாக ஹிஜ்ராவினரிடம் அவர்களும் கலண்டரின் பார்முலாவைக் கேட்டுவந்தோம். ஆனால் அவர்கள் தந்தபாடில்லை. எனவே அவர்கள் வெளியிட்டுள்ள சாப்ட்வேரை க்ராக் செய்து அதிலிருந்து அந்த பார்முலாவை தெரிந்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் Microsoft Excel இல் வேலை செய்யும் விதத்தில் வடிவமைத்திருந்த மென்பொருளை க்ராக் செய்தோம்.
மேலே இருப்பதுதான் அந்த மென்பொருள். இதை அவர்களின் இணையதளமான http://mooncalendar.in/index.php/ta/ க்கு சென்று அங்கே “ஹிஜ்ரி காலேண்டர் பதிவிறக்கம் செய்ய” என்றிருக்கும் லிங்கை க்ளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதை கிராக் செய்த பொது அதனுள் இருக்கும் டேட்டா பேஸ் (Data Base) கிடைத்தது.
GD/GM/DY என்பவை Gregorian day, month year ஆகும். HD/HM/HY என்பது Hijiri day, month year ஆகும். இந்த அட்டவணை நாசாவின் அமாவாசை (கஞ்ஜங்க்ஷன்) காலண்டரை அப்படியே மாற்றி அமைக்கப்பட்டதாகும். கிமு 2000 முதல் கிபி 4000 வரையிலான ஆண்டுகளுக்கு கஞ்ஜங்க்ஷன் நாட்களை நாசா வெளியிட்டிருந்தது. அதை எடுத்து ஒவ்வொரு கஞ்ஜங்க்ஷன் நடக்கும் ஒவ்வொரு ஆங்கில தேதியின் அடுத்த தேதியையும் ஹிஜ்ரி மாதத் துவக்கமாக குறித்து வைத்து இந்த அட்டவணையை உருவாக்கியுள்ளனர். GD/GM/DY எனும் நிரைகளில் (rows) இருப்பவை கஞ்ஜங்க்ஷன் நடக்கும் தேதிகள் HD/HM/HY (rows) நிரைகளில் இருப்பவை முத்தைய கஞ்ஜங்க்ஷனுக்கும் அடுத்த கஞ்ஜங்க்ஷனுக்கும் இடைப்பட்ட நாட்களின் எண்ணிக்கை. கஞ்ஜங்க்ஷன் நடக்கும் நாள் இவர்களின் மாதத்தின் கடைசி நாள் என்பதால் அது எத்தனையாவது நாளில் நடக்கிறது என்பதை 29 அல்லது 30 என குறித்து வைத்துள்ளார்கள். இதுதான் இவர்கள் காலண்டர். கிரிகோரியன் நாட்காட்டியில் நாசா வெளியிட்ட கஞ்ஜங்க்ஷன் தேதிகளை இவர்கள் ஹிஜ்ரி தேதிகளாக மாற்றி உள்ளார்கள். நீங்கள் இந்த சாப்ட்வேரை கன்வர்டராக பயன்படுத்தினாலும் கலாண்டர் பிரிண்ட் செய்ய பயன்படுத்தினாலும் அது நேரடியாக இந்த கிரிகோரியன் நாட்காட்டியில் சென்று கஞ்ஜங்க்ஷன் தேதிகளுக்கு இணையாக இவர்கள் குறித்த ஹிஜ்ரி தேதியை எடுத்து வெளியிடும்.
அடுத்ததாக, Android கருவிகளில் இயங்கும் வகையில் ஒரு காலண்டரை வெளியிட்டுள்ளனர். அந்த மென்பொருளில் கிரகோரியன் காலண்டரை பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அதில் சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர காலண்டர் பார்முலா இருக்கும் என்ற ஆசையில் அந்த மென்பொருளையும் உடைத்துப்பார்த்தோம்..
இதுதான் கிடைத்தது. ஆம் இங்கேயும் ஆங்கில காலண்டரின் தேதியில் அமாவாசை நடக்கும் நாளின் மறுநாளை இஸ்லாமிய மாதத்தின் முதல் தேதி என்று குறித்து வைத்துள்ளனர். படத்தில் தெளிவாக தெரியவில்லை என்றால், இங்கே பாருங்கள்
id integer primary key autoincrement,MonthName,MonthId,StartDate,EndDate,IslamicYear,fq,lq,fm,time
1,"Muharram","1","19-04-1901","19-05-1901","1319","25-04-1901","11-05-1901","03-05-1901","21:37"
மேலே படத்தில் சிகப்பாக அடையாளப்படுத்தியதை இங்கே காப்பி பேஸ்ட் செய்துள்ளோம். இது உங்களுக்கு புரிந்துகொள்ள சிரமமாக இருந்தால், இதோ கீழே…
id integer primary
key autoincrement 1
Month Name Muharram
Month Id 1
Start Date 19-04-01
End Date 19-05-01
Islamic Year 1319
fq 25-04-01
lq 11-05-01
fm 03-05-01
time 21:37
ஆங்கில காலண்டரை நேரடியாக பயன்படுத்தியுள்ளனர். இந்த மென்பொருள் நமது தொலைபேசியில் இருக்கும் ஆங்கில தேதியை எடுத்து மேலுள்ள டேட்டா பேசில் தேடும். அதற்கு இணையாக இவர்கள் குறித்து வைத்த தேதியை எடுத்துவரும்.
பிறையின் அடிப்படையிலான இஸ்லாமிய மாதத்திற்கு கிரிகோரியன் காலண்டரின் தேவை என்ன? கிரிகோரியன் காலண்டரை ஒரு தீட்டாக பழிக்கும் இவர்கள் அந்த காலண்டரை பயன்படுத்தி மூன் காலண்டர் தயாரிப்பது ஏன். இவர்கள் உண்மையாளர்கள் எனில் கிரிகோரியன் காலண்டரின் உதவி எள்ளளவும் இல்லாமல் ஒரு ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட முடியுமா? 3000 வருடங்களுக்கு வேண்டாம். கிரிகோரியன் காலண்டர் இல்லாமல் எந்த சூரிய நாட்காட்டியின் உதவியும் இல்லாமல் நேரடியாக சந்திர ஓட்டத்தை மட்டும் வைத்து அடுத்த 50 வருடங்களுக்கு இவர்கள் ஒரு நாட்கட்டியை தயாரித்து இவர்கள் உண்மையாளர்கள் என்று நிரூபிக்கட்டும்.
10:5 & 2:189 அல்லாஹ் சந்திரனின் மன்சில்களையும் பிறைகளையும் மனித குல காலம் காட்டியாக ஏற்படுத்தியுள்ளான் என்று வரிக்கு வரி எழுதும் வார்த்தைக்கு வார்த்தை பேசும் இவர்கள் இந்த மாசுபடுத்தப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையிலான காலண்டரை தூர வீசிவிட்டு, சூரிய நாட்காட்டியின் உதவி இல்லாமல் சந்திரனின் மன்சில்களையும் பிறைகளையும் மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு நாட்காட்டியை கொண்டு வரட்டும்.
Cracked Hijra Calendar to see the their Data base > https://www.dropbox.com/s/9fwn0ol22azyekf/HijriCalendar_Cracked2.xlsm?raw=1
Android App Data Base file in JS > https://www.dropbox.com/s/k338yb7fotj4avk/MainDatabaseScript.js?raw=1
மேலும் வாசிக்க...
நாசா அவர்களின் விண்ணியல் தேவைக்காகத்தான் அமாவாசையை கணக்கிட்டார்களா? 👉 http://www.piraivasi.com/2016/09/29.html