Friday, 16 October 2015

ஹிஜ்ராவின் விமர்சனங்களும் பதில்களும்-1: Conjunction நடைபெறும் போது பூமியில் இரண்டு கிழமைகள் இருக்குமா?

ஹிஜ்ராவின் விமர்சனங்களும் பதில்களும்-1
ஹிஜ்ராவின் விமர்சனங்கள் சிகப்பு நிறத்திலும் நமது விடைகள் ஊதா நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது
//கேள்வி : புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டு கிழமைகள் இருக்கும் அதனால் 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாளுக்குள் நோன்பைத் துவங்கவோ, பெருநாளை கொண்டாடவோ முடியாது என்கிறார்களே இதன் விளக்கம் என்ன?//
நம் கேள்வி இவர்களுக்கு புரிவதில்லை. புரிய வைக்க நினைத்தாலும் இவர்கள் செவி சாய்ப்பதில்லை. இவர்களின் விஞ்ஞானிக்காவது விளங்கும் என்று நினைத்தோம். பாவம் அவரும் அறியாமையில்தான் உள்ளார் என்று இப்பொதுதான் விளங்குகிறது. அவரையும் குறை சொல்ல முடியாது. இன் ஷா அல்லாஹ் அனைவரும் கற்றுகொள்வோம்.
//பதில் : ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய முக்கோள்களும் ஒரு கோட்டில் தவறாமல் சங்கமிக்கும். அவ்வாறு சங்கமிக்கும் நிகழ்வைத்தான் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) என்கிறோம். சங்கமம் என்ற இந்த நிகழ்வு பூமியின் ஒரேயொரு மையப்புள்ளியில் (Only One Geocentric Position) தான் நடைபெறும். ஒருமாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மையப்புள்ளிகளில் சங்கமம் நடைபெறாது. சங்கமம் நடைபெறும் மையப்புள்ளியின் பகுதிக்கு ஒரேயொரு தேதியும், ஒரேயொரு கிழமையும்தான் (நாள்) இருக்கும். சங்கமம் நடைபெறும் அந்த சர்வதேச நாளைத்தான் புவிமைய சங்கம நாள் என்கிறோம். பூமியின் ஒரு மையப்புள்ளியில் நடைபெறும் நிகழ்வான இப்புவிமைய சங்கமம் என்ற அந்த சொல்லிலேயே இக்கேள்விக்குரிய விடை உள்ளது. சங்கமம் நடைபெறும் அந்த சர்வதேச நாளுக்கு, இரண்டு தேதிகள் கிடையாது என்பதை அறிந்து கொள்க.//
சகோதரர்கள் புவிமைய சந்திப்பு எனும் கஞ்ஜங்கஷனை தவறாகவே விளங்கி வைத்துள்ளனர் என்பது //“சங்கமம் நடைபெறும் மையப்புள்ளியின் பகுதி”// என்ற விளக்கத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இது இவர்கள் காலண்டரில் வரைபடம் போட்டு காட்டி இருக்கும் அதே இடத்தை சொல்கிறார் என்று விளங்குகிறது. சரி. கஞ்சங்க்ஷன் என்னால் என்னெவென்று பாப்போம். பூமியின் மையப்புள்ளி சந்திரனின் மையப்புள்ளி சூரியனின் மையப்புள்ளி ஆகிய மூன்றும் போலாரிஸ் எனும் நட்சத்திரத்திலிருந்து பார்க்கப்படும்போது ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வுதான் புவிமைய சந்திப்பு. அதன் பெயரே அதை தெளிவாக விளக்குகிறது.
மையம் என்றால் என்னவென்று சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். பூமியின் மையம் என்பது பூமியின் மேற்பரப்பில் இருக்காது. அதன் உள்ளே இருக்கம் நெருப்புக்குழம்புக்கு நடுவில் இருக்கும் புள்ளியாகும். முட்டையின் மஞ்சள் கருவை சரி பாதியாக வெட்டினால் அதன் மையத்தில் வெள்ளையாக ஒரு புள்ளி  இருக்குமல்லவா அதை எடுத்துக்காட்டாக சொல்லலாம். படத்தில் பூமி சந்திரன் சூரியன் ஆகிய மூன்றின்  மையப்புள்ளிகளும் எப்படி ஒரே நேர்கோட்டில் வருகிறது என்று காட்டியுள்ளோம். //சங்கமம் நடைபெறும் மையப்புள்ளியின் பகுதிக்கு ஒரேயொரு தேதியும், ஒரேயொரு கிழமையும்தான் (நாள்) இருக்கும்// என்று இவர் சொல்வது இவர் என்ன சொல்லவருகிறார் என்பதை விளக்குகிறது. பூமி, சந்திரன் & சூரியன் ஆகியவற்றின் மையப்புள்ளிகளை இணைக்கும் கற்பனைக்கோடு அதன் மேற்பரப்பையும் கடந்து செல்கிறது. அந்த கோடு பூமியின் மேற்பரப்பை கடந்து செல்லும் பகுதியில் ஒரு ஊர் இருக்கும் (கடலாகவும் இருக்கலாம்) அந்த பகுதியை பற்றிதான் மையப்புள்ளி என்கிறார். குறைந்த பட்சம் கஞ்சங்க்ஷன் பற்றியாவது இவர்களுக்கு தெரியும் என்று எண்ணியிருந்தோம். அதுவும் தெரியாது. மேலே நாம் காட்டியிருப்பதுதான் கஞ்ஜங்க்ஷன். பூமியின் மையப்புள்ளி சந்திரனின் மையப்புள்ளி சூரியனின் மையப்புள்ளி ஆகிய மூன்றும் போலாரிஸ் எனும் நட்சத்திரத்திலிருந்து பார்க்கப்படும்போது ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வுதான் புவிமைய சந்திப்பு. இவர் சொல்வது போல் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் பகுதியுடம் ஏற்படும் கஞ்ஜன்க்ஷனுக்கு பெயர் புவிப்பரப்பு சந்திப்பு. புவிமைய சந்திப்பு இவர் சொல்வதுபோல் ஒரு மாதத்தில் ஒரு முறைதான் நிகழும். ஆனால் புவிப்பரப்பு சந்திப்பு புவிமைய சந்திப்பு நிகழும் அந்த நாளிலியே பலமுறை பூமியின் புறப்பரப்பில் பல இடங்களில் நடைபெறும். பூமியில் புவிப்பரப்பு சந்திப்பு (topocentric conjunction) நடைபெறத்துவங்கி அது முடிய 3.5மணி நேரம் வரை ஆகும். புவிப்பரப்பு சந்திப்பு இவர் சொல்வது போல் பூமியில் ஒரே ஒரு புள்ளியில் நடப்பதல்ல. பூமியின் ஒரு இடத்தில தொடங்கி பல இடங்களில் அது நடக்கிறது.
பூமி-சந்திரன்-சூரியன் ஆகியவை அவற்றின் மையப்புள்ளிகளில் நேர்கோட்டில் இருக்கும் காட்சி. கவனம்! இது பூமியின் வடதுருவத்திற்கு மேலாக வான் வெளியில் இருந்து பார்க்கப்படும் காட்சி. தென்துருவத்திற்கு மேலிருந்து பார்த்தலும் இப்படி தெரியும். துருவத்திற்கு மேல் அல்லாமல் பூமியின் மையப்பகுதிக்கு மேலிருக்கும் வான் வெளியில் இருந்து பார்த்தல் இவை நேர்கோட்டில் இருப்பதில்லை.
பூமியின் வட்டபாதைக்கு மேல் இருந்து பார்த்தால் இப்படி இருக்கும். சந்திரனும் சூரியனும் நேர்கோட்டில் இருப்பதில்லை. சந்திரனும் சூரியனும் எங்கிருந்து பார்த்தாலும் ஒரு நேர்கோட்டில் இருக்கும் நிலைமை வரும்போது சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும் சூரிய கிரகணம் ஏற்படும்.  இதை “பிறையின் விஞ்ஞானம் பாகம் ஒன்றில்” தெளிவுபடுத்தி இருப்போம்.
இப்போது கமிட்டி சொல்வது போல் புவிமைய சந்திப்பு என்பது ஒரு வினாடி மட்டும் நிகழுமா? அது பூமியின் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நிகழுமா என்று பாப்போம்
இந்த படத்தை தெளிவாக பாருங்கள். பூமி –சந்திர-சூரிய மைய சங்கமத்தின் போது பூமியின் ஒரே ஒரு புள்ளி மட்டும் அதே நேர்கோட்டில் இருக்கிறது. அதற்கு மேற்கு பகுதி ஏற்கனவே புதிய பிறையை பார்த்து கொண்டுதான் இருக்கிறது மேலும் அதற்கு கிழக்கே உள்ள பகுதிகள் பழைய பிறையையும் பார்க்கிறது. இதை இந்த படத்தை சற்று சிந்தித்து பார்த்தாலே விளங்கும். விளங்கவில்லையா? கீழுள்ள படத்தை பாருங்கள்.
புவிமைய சந்திப்பு நடப்பதற்கு முன்னால் சந்திரனும் சூரியனும் b எனும் புள்ளியுடன் சங்கமத்தை நடத்திவிட்டன. அதாவது புவிமைய சந்திப்பு நடப்பதற்கு முன்னாலேயே சந்திர-சூரிய சந்திப்பு பூமியின் ஒரு பகுதியில் நடந்து விட்டது. சந்திரன் bஇலிருந்து cவரை நகரும் பாதையில் இவற்றிக்கு இடைப்பட்ட எல்லா பகுதிகளிலும் சங்கமத்தை நிகழ்திவிட்டுதான் புவிமைய சந்திப்பு நிகழும் c எனும் புள்ளிக்கு செல்கிறது.
c எனும் புள்ளியில் சங்கமத்தை நடத்திவிட்டு சந்திரன் நிறுத்தி விடுகிறதா. இல்லை. அது நகரும் பாதையில் a எனும் புள்ளி வரையுள்ள எல்லா இடங்களிலும் சங்கமத்தை நிகழ்திவிட்டுதான் செல்கிறது.
இப்போது நன்றாக விளங்கி இருப்பீர்கள். புவிமைய சந்திப்பு நிகழ்வதற்கு முன்னாலேயே சில பூமியின் இடங்களில் சந்திரன்  சூரியனுடன்  சங்கமித்து விட்டுதான் பூயின் மையத்துடன் சங்கமிக்கிறது. அதேபோல் பூமியின் மையத்துடன் சங்கமித்த பின்னும் பூமியின் பல இடங்களில் சூரியனுடன் சங்கமிக்கிறது.
ஒன்றை அதிகமாக தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது. மேலே படங்களில் a,b,c எனும் புள்ளிகளை நிலையாக இருப்பது போன்றும் சந்திரன் தன வட்டப்பாதையில் சுற்றுவது போன்றும் காட்டியுள்ளோம். ஆனால் சந்திரன் தன வட்டப்பாதையில் சுற்றுவதை விட வேகமாக பூமி தன அச்சில் சுழல்கிறது. எனவே a,b,c புள்ளிகள் நகர்ந்த வண்ணமே உள்ளன. இப்படி நகர்வதால் பூமியின் அதிகப்படியான பகுதியில் சந்திரன் சூரியனுடன் சங்கமிக்கின்றன.
மேலே இருக்கும் உலக வரைபடத்தில் அடர்ந்த சிவப்பு நிறத்தில் செல்லும் வளைந்த கோடு மார்ச் 1 2016 அன்று அமாவாசை (அ) புவிப்பரப்பு சந்திப்பு  ஏற்படும் இடங்களாகும். இது UTC 9 Mar, 00:15 க்கு தொடங்கி 03:38 வரை நீடிக்கிறது. 3மணி நேரம் 33 நிமிடங்கள் நீடிக்கிறது. உலகின் பாதி பகுதிக்கு ஏற்படுவதாகவும் உள்ளது. இந்த புவிப்பரப்பு சங்கமத்தை புறக்கண்ணால் பார்க்க இயலும். ஆம்! அன்று முழு சூரிய கிரகணம்.
செப்டம்பர் 1 - 2016 அன்று ஏற்படும் அமாவாசை. இது UTC 1 Sep, 07:17 க்கு தொடங்கி 10:55 வரை நீடிக்கிறது. 3மணி நேரம் 38 நிமிடங்கள் நீடிக்கிறது. உலகின் பாதி பகுதிக்கு ஏற்படுவதாகவும் உள்ளது. இந்த புவிப்பரப்பு சங்கமத்தையும் புறக்கண்ணால் பார்க்க இயலும். ஆம்! அன்றும் முழு சூரிய கிரகணம்.
இந்த புவிப்பரப்பு சந்திப்பு ஆஸ்திரேலியாவில் துவங்கும்போது அதன் கிழக்கே உள்ள நாடுகளுக்கு அப்போது பழைய பிறை. அது மடகாஸ்கரை அடையும்போது ஆஸ்திரேலியாவுக்கு புதுப்பிறை பிறந்து ஒன்றரை மணி நேரம் கடந்திருக்கும். ஆனால் ஆபிரிக்காவில் இன்னும் பழைய பிறைதான் இருக்கிறது. அது ஆப்பிரிக்காவை அடையும்போது ஆப்ரிக்காவுக்கும் பிறை பிறக்கிறது அனால் அமேரிக்கா இன்னும் பழைய பிறையிலேயே இருக்கிறது. இதுவே தெளிவான சான்று. புவிமைய சந்திப்பு நிகழும் அந்த வேளையில் பூமியின் ஒரு பகுதிக்கு ஏற்கனவே பிறை பிறந்திருக்கும். அவர்கள் அதை அறிந்து கொள்ளலாம். புவிமைய சந்திப்பு நிகழும் அந்த வேளையில் பூமியின் மற்றொரு ஒரு பழைய பிறையை நோக்கிக்கொண்டிருக்கும். அவர்களும் அதை அறிந்து கொள்ளலாம்.
மேலே இருக்கும் இரண்டு படங்களின் வீடியோ காட்சி கீழே. கஞ்சங்க்ஷன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று பாருங்கள். அது பூமியில் ஓரிடத்தில் மட்டும்தான் நடக்கிறதா என்று பாருங்கள். அது ஒரு வினாடி நிகழ்ச்சியா என்று பாருங்கள். அது தொடங்கி முடிய எத்தனை மணி நேரமாகிறது என்று பாருங்கள். கஞ்சங்க்ஷன் கஞ்சங்க்ஷன் என்று சொல்லி உங்களை இத்தனை நாள் முட்டாளாக்கியுள்ளனர்.
மார்ச் 8 2016 அன்று ஏற்படும் அமாவாசை
செப்டம்பர் 1 - 2016 அன்று ஏற்படும் அமாவாசை
சரி இப்படி படங்கள் போட்டு காட்டினால் போதுமா. இன்றுவரை நாங்கள் புவிமைய சங்கமத்தை பற்றிதானே கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன புதுக்கதை. இப்படி உண்மையாகவே விஞ்ஞானத்தில் இருக்கிறதா. இதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளர்களா? என்று வினவினால்
ஆம், இதற்கு பெயர் டோப்போ சென்ட்ரிக் கண்ஜங்ஷன் - புவிபரப்பு சந்திப்பு. இதுதான் உண்மையான சந்திப்பு உண்மையான அமாவசை. புவிமைய சந்திப்பு - ஜியோ சென்ட்ரிக் கண்ஜங்ஷன் எனப்படுவது விஞ்ஞானிகள் தங்களது கணக்கிடுதலில் பயன் படுத்துவதாகும். அதுவும் அது போலரிசிரில் இருந்து பார்க்கப்படுவதாகும். பூமியில் நடப்பதும் பூமியில் இருந்து பார்க்கப்படுவதும் டோப்போ சென்ட்ரிக் கண்ஜங்ஷன் எனும் புவிபரப்பு சந்திப்பு தான். இதைதான் கணக்கில் எடுக்கவேண்டும். மேலே கிரகண காட்சிகளை காட்டியுள்ளோம். இவற்றை புவிமைய சந்திப்பு கணக்குகளை வைத்து செய்ய முடியாது. புவிபரப்பு சங்கம கணக்கை வைத்துதான் செய்ய முடியும். புவிமைய சந்திப்பு கணக்கு பழைமையான விஞ்ஞான முறை.  புவிமைய சந்திப்பு ஜியோ சென்ட்ரிக் கண்ஜங்ஷன் ஏட்டு சுரைக்காய் என்பது திண்ணம்.
புமிமைய சந்திப்பு என்பது ஒரு விண்ணியல் நிகழ்ச்சி. அதை விஞ்ஞான மொழியில்: பூமியின் மையத்திலிருந்து பார்க்கும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையின் தீர்க்க ரேகைகள் ஒன்றாக வருவதாகும். The moment when the sun & moon’s ecliptic longitude are same when seen from the core of the earth.
புவிபரப்பு சந்திப்பு என்பது: பூமியின் பரப்பரப்பிலிருந்து பார்க்கும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையின் தீர்க்க ரேகைகள் ஒன்றாக வருவதாகும். The moment when the sun & moon’s ecliptic longitude are same when seen from the surface of the earth.
புவிமைய சந்திப்பு மாதத்தில் ஒரு முறைதான் நிகழும். அது பூமியிக்கு அடியே அதன் மையத்தில் இருக்கும் இரும்புக்குழம்புகளினாலான அதன் கருவில் இருப்பவருக்கு பொருந்தும் அல்லது போலாரிஸ் நட்சத்திரத்திலிருந்து பார்ப்பவருக்கு பொருந்தும். புவிப்பரப்பு சந்திப்பு பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நமக்கு பொருந்தும். புவிமைய சந்திப்பை எடுத்து காலண்டர் போடுவது எட்டுசுரைக்கையை வெட்டி குழம்பில் போடுவதாகும்.
//இப்போது கேள்வியை மீண்டும் படியுங்கள். புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டு கிழமைகள் (நாட்கள்) இருக்கும் என்பது வாதம். சங்கமம் நடைபெறாத மாதத்தின் மற்ற நாட்களிலும் பூமியில் இரண்டு கிழமைகள் இருக்கத்தான் செய்யும். எனவே ஒவ்வொரு தேதிக்கும் இரண்டிரண்டு கிழமைகள் கொடுக்கலாமா என்ன? ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட ஒரு தேதி மட்டும்தான் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
உதாரணமாக ஒரு சந்திரமாதத்தின் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூமியின் ஒரு மையப்புள்ளியில் சங்கமம் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது வியாழக்கிழமையில் இருக்கும் நாடுகள் அனைத்திற்கும் 29-வது தேதியாகத்தான் இருக்கும். அன்றி அந்த வியாழக்கிழமைக்கு 30-வது தேதியோ, 28-வது தேதியோ இருக்காது. அதுபோல சங்கமம் நடைபெறும் வெள்ளிக் கிழமைக்கு 30-வது தேதியைத் தவிர மற்றொரு தேதி இருக்காது. அந்த வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த நாளில் மட்டும்தான் ஜூம்ஆ எனும் 2 ரக்அத்துகள் கொண்ட தொழுகையைத் தொழுவோம். வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் ஜூம்ஆத் தொழுகையை நாம் தொழ மாட்டோம். ஆக சங்கமம் நடைபெறும் போது இரண்டு கிழமைகள் (நாட்கள்) இருக்கும் என்றால், குறிப்பிட்ட அந்தந்த நாட்கள் குறிப்பிட்ட ஒருவ்வெரு தேதிக்கும் உரியது. எனவே 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாளுக்குள் நோன்பைத் துவங்கவோ, பெருநாளை கொண்டாடவோ முடியாது என்பது தவறான வாதமாகும்.
ஒரு நாளுக்கு ஒரேயொரு தேதிதான் அமைய வேண்டும் என்பது ஒரு காலண்டரின் அடிப்படையான விஷயம். இந்த அடிப்படையைத் தகர்த்து விட்டால், அவரவர்கள் பகுதிகளில் அவரவர்கள் விருப்பப்படி இரண்டு மூன்று நாட்கள் வேறுபட்டு நோன்பைத் துவங்கலாம், அல்லது பெருநாளைக் கொண்டாடலாம் என்ற தத்தமது பகுதிபிறை நிலைப்பாட்டின் திட்டத்தில் எழுப்பப்பட்ட விமர்சனமே இது. நாட்காட்டியின் சாதாரண அடிப்படையைக் கூட புரியாதவர்களுக்கு நமது எத்தகைய விளக்கங்களும் புரியப் போவதில்லை.//
நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று இந்த ஹிஜ்ராக்களுக்கு என்றுதான் விளங்குமோ?
ஒரு குழந்தை Sydney(Australia)வில் (Local time 12:00pm) இன்று (14-10-2015) பிறக்கிறது. அதே நேரத்தில் New York ல் வேறொரு குழந்தை பிறக்கிறது அங்கே அப்போது 13-10-2015 இரவு 8:00 ஆக. இருக்கும். ஒரே நேரத்தில் பிறந்த ஒரு குழந்தையின் DOB 14-10-2015 மற்றொரு குழந்தையின் DOB 13-10-2015. அந்தந்த ஊரின் லோக்கல் நாளில் தான் நமது நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்பதற்கு இது எடுத்துக்காட்டு. அதே போல் கஞ்சங்க்ஷன் நடக்கும்போது ஒரு ஊர் வியாழக்கிழமையாக உள்ளது (கணக்கீடு கொள்கைப்படி) வெள்ளி ஃபஜ்ரை அடையவில்லை. வேறொரு ஊர் வெள்ளிக்கிழமையின் மக்ரிப் நேரத்தில் உள்ளது. அவர்கள் வெள்ளிகிழமையை பாதி கடந்து விட்டார்கள். வியாழக்கிழமையாக இருக்கும் ஊர் விடியும் வெள்ளிகிழமை ஃபஜ்ரிலிருந்து ஏன் மாதத்தை துவங்க கூடாது. வெள்ளிகிழையாக இருக்கும் ஊர் அடுத்தநாள் ஃபஜ்ர் சனிக்கிழமையிலிருந்து மாதத்தை ஏன் துவங்க கூடாது. இது உதாரணம் இனி இந்த வருட உண்மையான தகவல்களை வைத்து பார்ப்போம். இவர்கள் கணக்கு இவர்கள் கொள்கையை சரி காண்கிறதா என்று பார்ப்போம். “கஞ்சங்க்ஷனின் அடுத்த நாள் மாதத்தை துவங்க வேண்டும். நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்” ஆகியவை இவர்களின் கொள்கைகள்.
ரபி உல் அவ்வல் 1437 கஞ்சங்க்ஷன்  சான் பிரான்சிஸ்கோ நேரப்படி 11-12-15, 02:30. அங்கு வெள்ளிகிழமையின் ஃபஜ்ர் வேளையை இன்னும் தாண்டவில்லை. அவர்கள் வெள்ளிகிழமையில் மாதத்தை துவங்கலாமா கூடாதா? இவர்கள் காலண்டரில் சனிக்கிழமை மாதம் துவங்கும்.
ரபி உல் அவ்வல் 1437 கஞ்சங்க்ஷன்  நியு யார்க் நேரப்படி 11-12-15, 06:30. அங்கு வெள்ளிகிழமையின் ஃபஜ்ர் வேளை இன்னும் தாண்டவில்லை. அவர்கள் வெள்ளிகிழமையில் மாதத்தை துவங்கலாமா கூடாதா? இவர்கள் காலண்டரில் சனிக்கிழமை மாதம் துவங்கும்.
ரபி உல் ஆகிர் 1437 கஞ்சங்க்ஷன்  சான் பிரான்சிஸ்கோ நேரப்படி 09-01-16, 17:31. அங்கு ஞாயிற்றுகிழமையின் ஃபஜ்ர் வேளையை இன்னும் தாண்டவில்லை. அவர்கள் ஞாயிற்றுகிழமையில் மாதத்தை துவங்கலாமா கூடாதா? இவர்கள் காலண்டரில் திங்கள்கிழமை மாதம் துவங்கும்.
ரபி உல் ஆகிர் 1437 கஞ்சங்க்ஷன்  நியு யார்க் நேரப்படி 11-12-15, 21:31. அங்கு ஞாயிற்றுகிழமையின் ஃபஜ்ர் வேளை இன்னும் தாண்டவில்லை. அவர்கள் ஞாயிற்றுகிழமையில் மாதத்தை துவங்கலாமா கூடாதா? இவர்கள் காலண்டரில் சனிக்கிழமை மாதம் துவங்கும்.
ரபி உல் ஆகிர் 1437 கஞ்சங்க்ஷன்  மக்கா நேரப்படி 11-12-15, 4:31. அங்கு ஞாயிற்றுகிழமையின் ஃபஜ்ர் வேளை இன்னும் தாண்டவில்லை. அவர்கள் ஞாயிற்றுகிழமையில் மாதத்தை துவங்கலாமா கூடாதா? இவர்கள் காலண்டரில் சனிக்கிழமை மாதம் துவங்கும்.
இவை ஒன்றிரண்டு உதாரங்கள் மட்டுமே 1437 ஆம் வரு த நாட்க்காட்டியின் மொத்த பிழைகள் கீழே அட்டவணையில் உள்ளன. மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுதப்பட்டவை பிழைகள்.





சான் பிரான்சிஸ்கோ

நியு யார்க்

ஹிஜ்ரி 1437
புவிமைய சந்திப்பு நிகழும் சர்வதேச நேரம் UT
ஹிஜ்ரி கமிட்டி காலண்டர் மாத துவக்கம்
புவி-மைய சந்திப்பு நிகழும் நேரம்
சரியான மாத துவக்கம்
புவி-மைய சந்திப்பு நிகழும் நேரம்
சரியான மாத துவக்கம்
1. முஹர்ரம்
செவ், 13-10-15, 00:06
புத, 14-10-15
திங், 12-10-15, 16:06
செவ்
திங், 12-10-15, 20:06
செவ்
2. சஃபர்
புத, 11-11-15, 17:48
வியா, 12-11-15
புத, 11-11-15, 09:48
வியா
புத, 11-11-15, 13:48
வியா
3. ரபி உல் அவ்வல்
வெள், 11-12-15, 10:30
சனி, 12-12-15
வெள், 11-12-15, 02:30
வெள்
வெள், 11-12-15, 06:30
வெள்
4. ரபி உல் ஆகிர்
ஞாயி, 10-01-16, 01:31
திங், 11-01-16
சனி, 09-01-16, 17:31
ஞாயி
சனி, 09-01-16, 21:31
ஞாயி
5. ஜமாதில் அவ்வல்
திங், 08-02-16, 14:39
செவ், 09-02-16
திங், 08-02-16, 06:39
திங்
திங், 08-02-16, 10:39
செவ்
6. ஜமாதில் ஆகிர்
புத, 09-03-16, 01:55
வியா, 10-03-16
செவ், 08-03-16, 17:55
புத
செவ், 08-03-16, 21:55
புத
7. றஜப்
வியா, 07-04-16, 11:24
வெள், 08-04-16
வியா, 07-04-16, 03:24
வியா
வியா, 07-04-16, 07:24
வெள்
8. ஷஅஂபான்
வெள், 06-05-16, 19:30
சனி, 07-05-16
வெள், 06-05-16, 11:30
சனி
வெள், 06-05-16, 15:30
சனி
9. றமதான்
ஞாயி, 05-06-16, 03:00
திங், 06-06-16
சனி, 04-06-16, 19:00
ஞாயி
சனி, 04-06-16, 23:00
ஞாயி
10. ஷவ்வால்
திங், 04-07-16, 11:01
செவ், 05-07-16
திங், 04-07-16, 03:01
திங்
திங், 04-07-16, 07:01
செவ்
11. தில் கஅதா
செவ், 02-08-16, 20:45
புத, 03-08-16
செவ், 02-08-16, 12:45
புத
செவ், 02-08-16, 16:45
புத
12. தில் ஹிஜ்ஜா
வியா, 01-09-16, 09:04
வெள், 02-09-16
வியா, 01-09-16, 01:04
வியா
வியா, 01-09-16, 05:04
வியா



நியூசிலாந்து

மக்கா

ஹிஜ்ரி 1437
புவிமைய சந்திப்பு நிகழும் சர்வதேச நேரம் UT
ஹிஜ்ரி கமிட்டி காலண்டர்.
புவி-மைய சந்திப்பு நிகழும் நேரம்
சரியான மாத துவக்கம்
புவி-மைய சந்திப்பு நிகழும் நேரம்
சரியான மாத துவக்கம்
1. முஹர்ரம்
செவ், 13-10-15, 00:06
புத, 14-10-15
செவ், 13-10-15, 12:06
புத
செவ், 13-10-15, 03:06
செவ்
2. சஃபர்
புத, 11-11-15, 17:48
வியா, 12-11-15
வியா, 12-11-15, 05:48
வெள்
புத, 11-11-15, 20:48
வியா
3. ரபி உல் அவ்வல்
வெள், 11-12-15, 10:30
சனி, 12-12-15
வெள், 11-12-15, 22:30
சனி
வெள், 11-12-15, 13:30
சனி
4. ரபி உல் ஆகிர்
ஞாயி, 10-01-16, 01:31
திங், 11-01-16
ஞாயி, 10-01-16, 13:31
திங்
ஞாயி, 10-01-16, 04:31
ஞாயி
5. ஜமாதில் அவ்வல்
திங், 08-02-16, 14:39
செவ், 09-02-16
செவ், 09-02-16, 02:39
செவ்
திங், 08-02-16, 17:39
செவ்
6. ஜமாதில் ஆகிர்
புத, 09-03-16, 01:55
வியா, 10-03-16
புத, 09-03-16, 13:55
வியா
புத, 09-03-16, 04:55
புத
7. றஜப்
வியா, 07-04-16, 11:24
வெள், 08-04-16
வியா, 07-04-16, 23:24
வெள்
வியா, 07-04-16, 14:24
வெள்
8. ஷஅஂபான்
வெள், 06-05-16, 19:30
சனி, 07-05-16
சனி, 07-05-16, 07:30
ஞாயி
வெள், 06-05-16, 22:30
சனி
9. றமதான்
ஞாயி, 05-06-16, 03:00
திங், 06-06-16
ஞாயி, 05-06-16, 15:00
திங்
ஞாயி, 05-06-16, 06:00
திங்
10. ஷவ்வால்
திங், 04-07-16, 11:01
செவ், 05-07-16
திங், 04-07-16, 23:01
செவ்
திங், 04-07-16, 14:01
செவ்
11. தில் கஅதா
செவ், 02-08-16, 20:45
புத, 03-08-16
புத, 03-08-16, 08:45
வியா
செவ், 02-08-16, 23:45
புத
12. தில் ஹிஜ்ஜா
வியா, 01-09-16, 09:04
வெள், 02-09-16
வியா, 01-09-16, 21:04
வெள்
வியா, 01-09-16, 12:04
வெள்


இந்த அட்டவணையும் சிறிய எடுத்துக்காட்டுகள் மட்டுமே. 1435 முதல் 1440 வரையிலான ஆண்டுகளில் இவர்களின் காலண்டரில் பல்வேறு நாடுகளுக்கான மொத்த பிழைகளையும் இங்கே காணலாம். பார்க்க hafsa13.blogspot.com/2015/03/1.html
இவர்கள் காலண்டர் மக்காவுக்கு பொருந்தி போகிறது என்று ஒரு பொய்யையும் துணிந்து சொல்வார்கள். அதுவும் பொய் என்று மேலே நிரூபணம் ஆகிவிட்டது.
இந்த கேள்விக்கு இவர் கொடுக்கும் ஒரே விடை. “புவி மைய சங்கமத்தை லோக்கல் நேரத்திற்கு மாற்றக்கூடாது”. இப்படி உங்களுக்கு யார் சொன்னார்.
புவிமைய சந்திப்பை நிகழ்த்துவது அல்லாஹ். அதை உங்கள் மூதாதையர்கள் நீங்கள் முன்னோக்கும் கிப்லாவான (Greenwich) க்ரெனிச்சை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் சொல்வது மனிதர்கள். அந்த சர்வதேச நேரத்தை லோக்கல் நேரமாக மாற்றவே கூடாது என்று இன்று வரை யாரும் சொன்னதே இல்லை. சொல்லப்போனால் அதை லோக்கல் நேரமாக மாற்றிகொள்ளுங்கள் என்று நாசாவே அறிவுறுத்துகிறது. eclipse.gsfc.nasa.gov/SEhelp/TimeZone.html. அடுத்தது சர்வதேச நாள். சர்வதேச நாள் என்றால் என்னெவென்று கமிட்டியின் காலண்டரை பயன்படுத்தும், கமிட்டியில் உறுப்பினர் அல்லாத, விஞ்ஞானம் தெரிந்தவர்களிடம் கேட்டால் அவர்கள் விழி பிதுங்குகின்றனர். சர்வதேச நாள் என்று ஒன்றை இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை. மேலும் சர்வதேச நேரத்தை லோக்கல் நேரமாக மாற்ற கூடாது என்பதையும் அவர்கள் என்றுகொள்ளவில்லை. சிறிதளவு விஞ்ஞானம் தெரிந்தவருக்கு கூட இது விளங்கும். “சர்வதேச நாளும்” “சர்வதேச நேரத்தை லோக்கல் நேரமாக மாற்றகூடாது” என்ற கொள்கையும் ஹிஜ்ராக்கள் கண்டுபிடித்தது.
சர்வதேச நேரம் மற்றும் சர்வதேச நாள் பற்றி மேலும் அதிகமாக தெரிந்துகொள்ள. பார்க்க hafsa13.blogspot.com/2015/09/blog-post.html
அமாவாசை நடக்கும்போது பூமியில் இரண்டு கிழமைகள் இருக்கும். நாம் இப்படி சொல்லும்போது அமாவாசை இரண்டு கிழமைகளில் நடக்கும் என்று நாம் சொன்னதாக இவர்கள் விளங்கினால் நாம் பொறுப்பல்ல. அந்தந்த கிழமைகளில் இருப்பவர்கள் அதன் அடுத்த கிழமையில் மாதத்தை துவங்க இவர்கள் ஏன் அனுமதிப்பதில்லை.

மேலே அட்டவணை தெளிவாக ஒன்றை பறைசாற்றுகிறது கஞ்சங்க்ஷனுக்கு அடுத்தநாள் மாதத்தை துவங்கினால், ஃபஜ்ரை நாளின் ஆரம்பமாக கொண்டால், ஒரு கிழைமையில் இரண்டு பிறைதேதிகள் வரும்.