Wednesday, 24 December 2014

ஒரே பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

பிறையை அடிப்படையாக கொண்டுதான் இஸ்லாமிய மாதம் தொடங்கப்படவேண்டும் எனும் அடிப்படையில் யாருக்கும் சந்தேகம் இல்லை அந்த பிறையை எப்படி முடிவு செய்வது என்பதில்தான் சர்ச்சை. இந்த கட்டுரையின் நோக்கம் அந்த பல்வேறு மாறுபட்ட கொள்கைகளை விஞ்ஞானத்தின் பார்வையில் அலசுவதே.

நாள்காட்டி என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டு நாட்களை கணக்கிடும் முறை. நாம் பயன்படுத்தும் சூரிய நாட்காட்டியை குறைந்தது ஒரு நூற்றண்டிற்காவது ஏற்கனவே வரையறுத்துவிட்டோம். 2099க்கான நாள்காட்டியை நமது கணிணியிலிருந்து எளிதில் எடுத்துவிடலாம்.

மேலும் இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ஆங்கில நாட்காட்டியை நாம் அமெரிக்காவிற்கு எடுத்துச்சென்றும் பயன்படுத்தலாம். ஒரு மாதத்தின் நாளும் கிழமையும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒன்றாகத்தான் இருக்கும். இது சர்வதேச நாட்காட்டி எனப்படுகிறது, உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு நாட்காட்டியை பயன் படுத்துதல். இப்படி ஒரு சர்வதேச இஸ்லாமிய நாட்காட்டி சாத்தியமா என்பதையும் ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

இக்கட்டுரையை வாசிப்பவர்கள் வாசித்து முடிக்கும் வரை நினைவில் கொள்ளவேண்டியவை.

§. இது விஞ்ஞானத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு வரையப்பட்ட ஒரு கட்டுரை. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான வாதத்திற்கு இதில் இடமில்லை

§. சர்ச்சைக்குரிய நாளின் ஆரம்பத்தை இங்கே நான் ஒரு விவாத பொருளாக எடுக்கவில்லை. எனவே ஃபஜ்ரை தொடக்கமாக கொண்டு ஒரு ஆய்வும் மக்ரிபை தொடக்கமாக கொண்டு மற்றொன்றும் என இரண்டிலும் ஆய்வு செய்துள்ளேன் இரவு 12மணியை நாளின் ஆரம்பமாக கொள்ள இஸ்லாத்தில் வழி இல்லை என்பதால் அதை கையாளவில்லை.

§. உலகில் 24மணி நேர வித்தியாசம் எனும் பிரச்சனையையும் நான் இங்கே எடுக்கவில்லை. எனவே IDLக்கு (சர்வதேச தேதிக்கோடு) அருகேயுள்ள சர்ச்சைக்குரிய நாடுகளை (உ.தா. டாங்கோ-சமோவா) நான் ஆய்வுக்கு எடுக்கவில்லை.

§. ஒரு கிழமை (திங்கள், செவ்வாய், புதன்,....) முதலில் ஆரம்பமாவதை நானும் IDLஇல் இருந்து தான் தொடங்குகிறேன்.  (இப்போது இருக்கும் IDLதான் நாளை துவங்குவதார்கான சரியான இடமா என்பதை வேறொரு ஆய்வில் விவரித்துள்ளேன்)

§. ஏற்கனவே இருக்கும் கிழமைகளின் சுழற்சியதைதான் (திங்கள், செவ்வாய், புதன்,....) நானும் பயன் படுத்துயுள்ளேன். அதையே இஸ்லாமிய உலகமும் இத்தனை ஆண்டுகளாக பின்பற்றுவதால் அதை மாற்றுவது எளிதல்ல. தேவையும் இல்லை.

விரிவாக தலைபிற்குள் நுழைவதற்கு முன் பிறை குறித்த அடிப்படை விஞ்ஞானத்தை தெரிந்து கொள்வது முக்கியம். அதை இந்த பிறையின் விஞ்ஞானம் பாகம்-1 மற்றும் பிறையின் விஞ்ஞானம் பாகம்-2 எனும் கட்டுரைகளை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். பிறையின் விஞ்ஞானத்தை தெரிந்துகொள்ளாமல் இந்த கட்டுரையை வாசிப்பது பயனளிக்காது.

பிறையை பற்றி முஸ்லிம்களின் மாறுபட்ட கருத்துக்கள்.

மாதத்தை எப்படி தொடங்குவது என்பது பற்றி முஸ்லிம்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன . அவற்றை பின்வரும் நான்கு முக்கிய கொள்கைகளின் கீழ் கொண்டு வரலாம்.

கொள்கை : - 1 விஞ்ஞான சர்வதேச பிறை.
முதல் பிறை பிறக்கும் நேரத்தை விஞ்ஞானத்தை கொண்டு கணக்கிட்டு அதிலிருந்து உலகெங்கும் மாதத்தை தொடங்குவது. இதுவே சர்வதேச இஸ்லாமிய நாட்காட்டிக்கு அடிப்படையாக விளங்கும் தத்துவமாகும்.

கொள்கை : - 2 கண்ணுக்கு தெரியும் கணக்கீடு சர்வதேச பிறை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் முதல் பிறை எப்போது தென்படும் என்பதை விஞ்ஞானத்தை கொண்டு கணக்கிட்டு அதன் அடுத்த நாளிலிருந்து உலகம் முழுவதும் மாதத்தை தொடங்குவது. இது சவுதியை மையமாக கொண்டு உருவாக்கப்படும் சர்வதேச நாட்காட்டியின் தத்துவமாகும். சிலர் சர்வதேச தேதிக்கோட்டை மையமாகவும் கொள்கின்றனர்.

கொள்கை : - 3 கண்ணால் பார்த்த முதல் சர்வதேச பிறை
உலகில் எங்கு முதல் பிறை பார்க்கப்பட்டாலும் அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் மாதத்தை தொடங்குவது. முதலிரண்டு முறைகளும் கணக்கின் அடிப்படையில் செயல்படுபவை. இது கண்ணால் பிறையை பார்ப்பதன் அடிப்படையில் செயல்படுவது. எனவே இதன் அடிப்படயில் முன்கூட்டியே நாட்காட்டியை நிறுவ இயலாது.

கொள்கை : - 4 தத்தம் பகுதிகளில் தெரியும் பிறையின் அடிப்படியில் அந்தந்த பகுதிகளில் மாதத்தை தொடங்குவது. இந்த அடிப்படையில் மாதம் என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு நாட்களில் ஆரம்பித்து வெவ்வேறு நாட்களிலேயே முடியும்.  இதில் சர்வதேச பிறைக்கோ சர்வதேச நாள்காட்டிக்கோ இடமில்லை

கொள்கை : - 1. முதல் பிறை பிறக்கும் நேரத்தை விஞ்ஞானத்தை கொண்டு கணக்கிட்டு அதிலிருந்து உலகெங்கும் மாதத்தை தொடங்குவது:
றமதான் 1436 இன் அமாவாசை (CONJUNCTION) சர்வதேச நேரப்படி ஒரு செவ்வாய் கிழமை 2:05:18 PM மணிக்கு ஏற்படுகிறது. இந்த தருணம் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாடுகளின் நேரப்படி மாறும். அட்டவணை:-1ல். அமாவாசை ஏற்படும்போது உலகின் பல நகரங்களிலும் அந்த நாடுகளின் நேரத்தையும், மேலும் அந்நகரங்களின் சூரிய உதயம், மறைவு, விடியல் அந்தி, சந்திர மறைவு ஆகியவற்றையும் காட்டியுள்ளேன். ஷவ்வால் 1436 இன் முதல்பிறை (CONJUNCTION) சர்வதேச நேரப்படி ஒரு வியாழக் கிழமை 1:24:18 AM மணிக்கு ஏற்படுகிறது. இதன் விபரங்களும் இதே அட்டவணையில் உள்ளன. உதயம் தான் நாளின் தொடக்கம் என்பவர்கள் சாம்பல் நிற நிரையையும் (COLUMN) சூரிய மறைவுதான் நாளின் தொடக்கம் என்பவர்கள் கருஞ்சாம்பல் நிற நிரையையும் (COLUMN) பார்க்கவும். முதல் நிரை (COLUMN) அமாவாசை ஏற்படும் நாளையும் அடுத்து வரும் நிரை (COLUMN) அந்த மாதம் தொடங்கும் நாளையும் காட்டுகிறது. அமாவாசை ஏற்பட்டு அடுத்த வினாடியில் முதல் பிறை பிறந்துவிடும். எனவே அமாவாசை ஏற்படும் நாளில் தான் முதல் பிறையும் பிறக்கிறது. இந்த அட்டவனையை விளங்கிக்கொண்டால் பிறையின் விஞ்ஞானத்தை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.
நாடு/நகரம்
பிறை பிறக்கும் நேரம்
நள்ளிரவை அடிப்படையாக கொண்ட நாள்
ஃபஜ்ரை அடிப்படையாக கொண்ட கடைசி பிறை நாள்.
ஃபஜ்ரை அடிப்படையாக கொண்ட முதல் பிறை நாள்
/ மாத தொடக்கம்
மக்ரிபை அடிப்படையாக கொண்ட கடைசி பிறை நாள்.
மக்ரிபை அடிப்படையாக கொண்ட முதல் பிறை நாள்
/ மாத தொடக்கம்
சூரிய
உதயம்
சூரிய
மறைவு
விடியல்
அந்தி
சந்திர
மறைவு
COUNTRY/CITY
TIME OF CONJUNCTION
CIVIL DAY
ISLAMIC DAY BASED ON DAWN ON WHICH CONJUNCTION HAPPENS
ISLAMIC DAY BASED ON DAWN ON WHICH MONTH STARTS
ISLAMIC DAY BASED ON DUSK ON WHICH CONJUNCTION HAPPENS
ISLAMIC DAY BASED ON DUSK ON WHICH MONTH STARTS
SUNRISE
SUNSET
DAWN
DUSK
MOONSET

றமதான் 1436
சர்வதேச நேரம் (UTC)
2:05:18 PM
செவ்வாய்









வெல்லிங்டன்
2:05:18 AM
புதன்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
7:45 AM
4:58 PM
7:14 AM
5:29 PM
5:48 PM
சிங்கப்பூர்
10:05:18 PM
செவ்வாய்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
6:59 AM
7:11 PM
6:37 AM
7:34 PM
7:00 PM
சென்னை
7:35:18 PM
செவ்வாய்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
5:43 AM
6:36 PM
5:19 AM
7:00 PM
6:25 PM
மக்கா
5:05:18 PM
செவ்வாய்
செவ்வாய்
புதன்
செவ்வாய்
புதன்
5:38 AM
7:04 PM
5:13 AM
7:29 PM
6:56 PM
லண்டன்
3:05:18 PM
செவ்வாய்
செவ்வாய்
புதன்
செவ்வாய்
புதன்
4:43 AM
9:20 PM
3:55 AM
10:07 PM
8:53 PM
வாஷிங்டன்
10:05:18 AM
செவ்வாய்
செவ்வாய்
புதன்
செவ்வாய்
புதன்
5:42 AM
8:35 PM
5:10 AM
9:08 PM
8:34 PM
சிகாகோ
9:05:18 AM
செவ்வாய்
செவ்வாய்
புதன்
செவ்வாய்
புதன்
5:15 AM
8:28 PM
4:40 AM
9:02 PM
8:25 PM
லாஸ் ஏஞ்சல்ஸ்
7:05:18 AM
செவ்வாய்
செவ்வாய்
புதன்
செவ்வாய்
புதன்
5:41 AM
8:06 PM
5:12 AM
8:35 PM
8:14 PM
நியுவே
3:05:18 AM
செவ்வாய்
திங்கள்
செவ்வாய்
செவ்வாய்
புதன்
6:53 AM
5:59 PM
6:29 AM
6:22 PM
6:27 PM

ஷவ்வால் 1436
சர்வதேச நேரம் (UTC)
1:24:18 AM
வியாழன்









வெல்லிங்டன்
1:24:18 PM
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
7:43 AM
5:11 PM
7:13 AM
5:41 PM
5:31 PM
சிங்கப்பூர்
9:24:18 AM
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
7:05 AM
7:16 PM
6:43 AM
7:38 PM
7:28 PM
சென்னை
6:54:18 AM
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:50 AM
6:39 PM
5:27 AM
7:03 PM
6:50 PM
மக்கா
4:24:18 AM
வியாழன்
புதன்
வியாழன்
வியாழன்
வெள்ளி
5:47 AM
7:06 PM
5:23 AM
7:30 PM
7:18 PM
லண்டன்
2:24:18 AM
வியாழன்
புதன்
வியாழன்
வியாழன்
வெள்ளி
5:02 AM
9:11 PM
4:17 AM
9:55 PM
8:59 PM
வாஷிங்டன்
9:24:18 PM
புதன்
புதன்
வியாழன்
வியாழன்
வெள்ளி
5:55 AM
8:33 PM
5:24 AM
9:04 PM
8:04 PM
சிகாகோ
8:24:18 PM
புதன்
புதன்
வியாழன்
வியாழன்
வெள்ளி
5:28 AM
8:24 PM
4:55 AM
8:57 PM
7:54 PM
லாஸ் ஏஞ்சல்ஸ்
6:24:18 PM
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
5:53 AM
8:05 PM
5:24 AM
8:33 PM
7:44 PM
நியுவே
2:24:18 PM
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
6:53 AM
5:58 PM
6:30 AM
6:22 PM
6:06 PM


மாத நாட்களின் எண்ணிக்கை

மாத நாட்களின் எண்ணிக்கை

வெல்லிங்டன்

30

29

சிங்கப்பூர்

30

29

சென்னை

30

29

மக்கா

29

30

லண்டன்

29

30

வாஷிங்டன்

29

30

சிகாகோ

29

30

லாஸ் ஏஞ்சல்ஸ்

29

29

நியுவே

30

29


அட்டவணை-1

சாம்பல் நிரை (GREY COLOR COLUMN): ஃபஜ்ரை அடிப்படையாக கொண்டு நாளை தொடங்கினால். . . . . .

விடியும் முன் முதல் பிறை பிறந்துவிட்டால் அந்த ஃபஜ்ரின் நாளை மாதத்தின் தொடக்க நாளாக கொள்வது.

றமதான் 1436 இன் அமாவாசை ஏற்படும் நேரத்தில் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் (நியுவேயை தவிர) செவ்வாய்க்கிழமை எனும் ஒரே நாளில் உள்ளது. அதாவது உலகில் முழுவதும் புதன் கிழமை விடியும் முன்னரே அமாவாசை ஏற்பட்டுவிடுகிறது. முதல் பிறையும் பிறந்து விடுகிறது. எனவே உலகம் முழுவதும் (நியுவேயை தவிர) புதன் கிழமை றமதான் மாதத்தை தொடங்கலாம்.

ஷவ்வால் மாதத்தின் பிறை பிறக்கும்போது சில ஊர்கள் புதன் கிழமையிலும் சில ஊர்கள் வியழாக்கிழமையிலும் உள்ளன. எனவே ஷவ்வால் முதல் பிறை அந்த ஊர்களுக்கு முறையே வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும். ஒரே நாளில் மாதத்தை தொடங்கியவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் மாதத்தை முடிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் நியுசிலாந்துலிருந்து இந்தியா வரையுள்ள நாடுகளுக்கு றமதான் மாதம் 30 நாட்களாகவும் அதற்கு மேற்கே உள்ள நாடுகளுக்கு றமதான் மாதம் 29 நாட்களாகவும் அமையும். (அட்டவணையில் விபரங்கள் தெளிவாக உள்ளன)

கருஞ்சாம்பல் நிரை (DARK GREY COLOR COLUMN): மக்ரிபை அடிப்படையாக கொண்டு நாளை தொடங்கினால். . . . . .

அந்தி சாயும் முன் முதல் பிறை பிறந்துவிட்டால் அந்த இரவை நாளின் ஆரம்பமாகவும். அந்த இரவிலிருந்து மாதம் தொடங்கி விட்டதாகவும் கொள்ளுதல்.

மேலே உள்ள அதே விளக்கம் தான் இதற்கும். ராமதானை வியாழக்கிழமை ஆரம்பித்த சில நாடுகள் ஷவ்வாலை ஒரு வெள்ளிக்கிழமையும் ஆரம்பிக்கிறார்கள். அதன் ஒரு நாள் முன்பாக புதன் கிழமையில் ராமதானை தொடங்கிய சில நாடுகளும் அதே வெள்ளிக்கிழமையில் ஷவ்வாலை தொடங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. மாதம் சில நாடுகளுக்கு 29 நாட்களாகவும் மற்றும் சில நாடுகளுக்கு 30 நாட்களாகவும் அமைந்து விடுகிறது.

மாத நாட்களின் எண்ணிக்கையும் அட்டவணையின் இரண்டாம் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. ஃபஜ்ரை நாளின் ஆரம்பமாக கொண்டாலும் மக்ரிபை நாளின் ஆரம்பமாக கொண்டாலும் மாதம் என்பது உலகின் ஒரு பகுதியினருக்கு 29நாளாகவும் மறு பகுதியினருக்கு 30நாளாகவும் இருக்குமென்பது தெளிவாகிறது. ஆக “நாளின் ஆரம்பம்” (உதயமா? அந்தியா? ) ஒரே நாளின் உலகம் முழுவதும் ஒரு பிறையை பின்பற்றுவதற்கு தடையல்ல என்பதும் தெளிவாகிறது.

மாத தொடக்கத்தில் ஏற்படும் இந்த பிரச்சனை இந்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமல்ல. எந்த ஆண்டிலும் எந்த இரண்டு மாதங்களை நீங்கள் எடுத்து ஆய்வு செய்தாலும் இதே நிலைமைதான். 1435-1440வரையிலான வருடங்களுக்கான இப்படி ஒரு அட்டவணையை இந்த  http://bit.ly/1EPkGMo excel fileஇல் காணலாம். இதற்கு என்ன காரணம்? ஒரு சூரிய நாள் என்பது ஒரு சூரிய உதயம் முதல் அடுத்த உதயம் வரையுள்ள நேரம் ஆகும். நாம் ஒரு நாளை கணக்கிட சூரிய உதயம் (அல்லது மறைவை) பின்பற்றுகிறோம். ஒரு மாதம் தொடங்குவது ஒரு நாளில் தொடக்கத்தை ஒத்து இருக்க வேண்டும். ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரை உள்ள நாள்கள் ஒரு மாதம் எனப்படும். இந்த மாதத்தின் கணக்கை நாம் அளந்தால் அது ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டிருக்கிறது ஒரு மாதத்தில் 29நாள்கள் 7மணிக்கூறுகள் இருந்தால் அடுத்த மாதத்தில் 29நாள்கள் 10மணிக்கூறுகள் இருக்கும். இப்படி 29நாள்கள் 20மணிக்கூறுகள் வரை மாறுகிறது. மாதத்திற்கு எத்தனை நாள் என்ற கணக்கு ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டிருப்பதால் முதல் பிறை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நேரத்தில் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு இந்த மாதம் பிறை காலை 9 மணிக்கு பிறந்தால் அடுத்த மாதம் மதியம் 1.35 க்கு பிறக்கும் அதற்கு அடுத்த மாதம் இரவு 7.43க்கு பிறக்கு அதன் அடுத்த மாதம் அதிகாலை 4.52க்கு பிறக்கும். இப்படி எப்போதும் மாறிக்கொண்டிருக்கும். பிறை பிறத்தலும் நாளின் ஆரம்பமும் எப்போதும் ஒத்து வருவதில்லை. இதன் காரணமாக மாதம் என்பது உலகின் ஒரு பகுதிக்கு 29 நாளாகவும் மறு பகுதிக்கு 30 நாளாகவும் இருக்கும். இந்த மாதம் 30 நாட்களை அடைந்த ஊர் அடுத்த மாதம் 29 நாள்களை அடையும். எல்லா மாதங்களிலும் அமாவாசை ஒரே (சூரிய) நேரத்தில் ஏற்பட்டால் உலகெங்கிலும் ஒரேநாளில் மாதத்தை தொடங்கவும் முடிக்கவும் இயலும்.
மாதம் (ஹிஜ்ரி 1436)
அமாவாசை ஏற்படும் சர்வதேச நேரம்
1. முஹர்ரம்
9:56 PM
2. சஃபர்
12:32 PM
3. ரபிஉல்அவ்வல்
1:35 AM
4. ரபிஉல்ஆகிர்
1:13 PM
5. ஜமாஅத்துல்அவ்வல்
11:47 PM
6. ஜமாஅத்துல்ஆகிர்
9:36 AM
7. ரஜப்
6:57 PM
8. ஷஃபான்
4:13 AM
9. ரமலான்
2:05 PM
10. ஷவ்வால்
1:24 AM
11. துல்கஃதா
2:53 PM
12. துல்ஹிஜ்ஜா
6:41 AM
அட்டவணை:-2


ஒரே நாளில் மாதத்தை தொடங்க தீர்வு என்ன?

1. அட்டவணை 1ல் சாம்பல் நிரையில் றமதான் மாதம் உலகெங்கும் ஒரு புதன் கிழமை தொடங்குகிறது. ஷவ்வால் மாதம் உலகின் ஒரு பகுதியில் வியாழக்கிழமையிலும் மறு பகுதியில் வெள்ளிகிழமையிலும் தொடங்குகிறது. வெள்ளிக்கிழமையில் மாதம் தொடங்கும் பகுதியில் வெள்ளிகிழமைக்கு வியாழன்-2 என்று பெயரிட்டால் உலகெங்கும் ஒரே வாரநாளில் பெருநாள் கொண்டாடி விடலாம். ஆனால் அப்போதும் றமதான் மாதம் ஒரு பகுதியினருக்கு 29நாட்காளகவும் மறு பகுதியினருக்கு 30 நாட்களாகவும் இருக்கும். ஒரே நாளில் உலகில் பெருநாள் கொண்டாடினாலும் மாதத்தின் நாள்கள் வேறுபடுகின்றன. இப்படி மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாளை புகுத்துவது அறிவுக்கு எட்டுமா என்ற கேள்வியை தவிர்க்க வேண்டும்.

2. அட்டவணை 1ல் சாம்பல் நிரையில் றமதான் மாதம் உலகெங்கும் ஒரு புதன் கிழமை தொடங்குகிறது. ஷவ்வால் மாதம் உலகின் ஒரு பகுதியில் வியாழக்கிழமையிலும் மறு பகுதியில் வெள்ளிகிழமையிலும் தொடங்குகிறது. வெள்ளிகிழமை ஷவ்வால் ஆரம்பமாகும் பகுதியில் வியாழக்கிழமையே ஷவ்வாலை ஆரம்பித்தால் உலகெங்கும் ஒரே சூரிய நாளில் பெருநாளை கொண்டாடி விடலாம். இன்றைய விஞ்ஞானத்தில் முன்னரே அமாவாசையை கணக்கிட்டு விடலாம் என்பதால் இது சாத்தியமே. இதனால் ஒரே சூரிய நாளில் ஒரே கிழமையில் நாளில் மாதங்களை தொடங்க இயலும். உலகின் ஒரு பகுதியில் சந்திரன் 30 வது தேய் பிறையாக இருக்கும் நாளில் அடுத்த மாதத்தை தொடங்க வேண்டிய நிலைமை வரும். அதாவது மாதத்தில் ஒரு நாளை குறைக்க வேண்டி வரும்.. இது விஞ்ஞான அடிப்படையில் தவறாகும். ஒரு மாதம் முடியும் முன் அடுத்த மாதத்தை தொடங்குவது இஸ்லாமிய அடிப்படையில் சரியா தவறா என்பது மார்க்க பிரச்சனை.

3. அல்லது வியாழக்கிழமையில் பிறை பிறந்துவிட்டாலும் மாதத்தை தொடங்க வேண்டிய அந்த பகுதியினர் ஒரு நாள் காத்திருந்து வெள்ளிக்கிழமை மறுபகுதியினரோடு சேர்ந்து ஷவ்வாலை ஆரம்பிக்கலாம். இவர்கள் மாதம் பிறந்தும் அதை தொடங்காமல் ஒரு நாள் தள்ளிபோடுகிறார்கள். மாதத்தில் ஒரு நாளை கூட்டுகிறார்கள். இது விஞ்ஞான அடிப்படையில் தவறாகும். ஷவ்வால் பிறந்தும் பெருநாள் கொண்டாடாமல் றமதானை நீட்டுவதும், நீட்டப்பட்ட அந்த நாளில் நோன்பு பிடிக்க வேண்டுமா இல்லை சும்மா இருக்க வேண்டுமா என்பதும் மார்க்க பிரச்சனை.

இந்த 3 தீர்வுகளும் சாதாரண மக்களால் விளங்கிக்கொள்ள இயலும். எனினும் இவை எங்கும் வரையறுக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை. ஆனால் இதை விஞ்ஞானிகளும் அறிஞர்களும் எப்படி நுட்பமாக அணுகுகிறார்கள் அவர்கள் என்னென்ன தீர்வுகள் கொடுக்கின்றனர் என்று பார்ப்போம்

அறிஞர்கள் இதில் ஒரு பிரச்சனையாக பார்ப்பது ஒரு மாதத்தை எந்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதுதான். பூமியின் சுழற்சியால் சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதுபோல் தோற்றமளிக்கிறது. பூமியில் எப்போதும் சூரிய உதயமும் மறைவும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரு பகுதியில் சூரியம் உதயமாகும்போது மறுபகுதியில் மறைந்து கொண்டிருக்கும். சூரியன் சந்திரனை போல் வளர்வதும் தேய்வதும் இல்லை. ஒரு நாள் என்பது 24 மணி நேரம். இந்த 24மணி நேரத்தில் ஒரு வார நாளே இருக்க வேண்டும். அதாவது ஒரு கிழமை என்பது 24மணி நேரத்திற்குள் முடிந்து விட வேண்டும். இதற்கு ஒரு நாள் என்பது பூமியில் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அந்த குறிப்பிட்ட இடத்தில் சூரியன் உதிக்கும்போது ஒரு நாள் தொடங்கி அடுத்தநாள் அதே இடத்தில் சூரியன் உதிக்கும் வரை அந்த நாள் நீடிக்கும். அந்த இடத்தில் தொடங்கும் நாள் மேற்காக நகர்கிறது. இப்படி ஒரு நாள் ஆரம்பிக்கும் அந்த இடத்தை “தேதிக்கோடு” என்கிறார்கள். இந்த கோட்டின் இரு பகுதிகளும் இரண்டு நாட்களாக இருக்கும். சூரிய சுழற்சியில் வளர்ச்சி தேய்வு என்பது இல்லாததால் உலகின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஒரு நாளை தொடங்கலாம் . ஆனால் இந்த தேதிக்கோடு ஒரு நாட்டின் குறுக்கே இடப்பட்டால் அந்த நாட்டில் இரண்டு கிழமைகள் ஏற்படும். இது நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால். உலகில் நிலப்பரப்பு (நாடுகள்) அதிகம் இல்லாத கடல்பரப்பை தேர்ந்தெடுத்து அதில் இந்த கற்பனைகோட்டை வரைந்துள்ளனர். இதன்படி நியுசிலாந்து நாடு ஒரு நாளின் முதல் சூரிய உதயத்தை பார்க்கிறது. இதுவே சிறந்த தேர்வென்பதில் சந்தேகமே இல்லை.

இது சூரிய தேதிக்கோடாகும் இதே போல் மாதத்தை தொடங்குவதற்கும் ஒரு தேதிக்கோடு தேவைப்படுகிறது. சந்திரனை அடிப்படையாக கொண்டு மாதங்கள் இயங்குவதால் மாதங்களை தொடங்கும் தேதிக்கோடு சந்திர தேதிக்கோடாக இருக்க வேண்டும். சந்திர தேதிக் கோடு என்பது: எல்லா மாதங்களிலும் குறிப்பிட்ட அந்த இடத்தில் நண்பகலில் அமாவாசை எற்பட வேண்டும் . அப்படி ஏற்பட்டால் தொடர்ந்து அதற்கு மேற்கேயுள்ள நகரங்களிலும் முதல் பிறை தொடரும். இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே நாளில் மாதத்தை தொடங்கலாம். ஆனால் அமாவாசை இப்படி ஏற்படுவதில்லை என்பதை நாம் ஏற்கனவே அலசி விட்டோம். அமாவாசை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊரில் ஏற்படுவதால் சந்திரனின் தேதிக்கோடு ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டிருக்கும்.

மேலும் சில அறிஞர்கள் “மாதம் என்பது உலகின் பகுதிக்கு 29 நாளாகவும் மறு பகுதிக்கு 30 நாளாகவும் இருக்கும்” என்பதை விளங்கிக்கொண்டு இருமண்டல நாட்காட்டிகளை பரிந்துரைத்தனர். 29 நாட்களை கொண்ட பகுதிகளை ஒரு மண்டலமாகவும் 30 நாள்களை கொண்ட பகுதிகளை அடுத்த மண்டலமாகவும் பிரித்தனர். இதன்படி உலகில் மொத்தம் இரண்டு நாட்காட்டிகள் இருக்கும். இரண்டுக்கும் இடையே ஓரிரு நாள் வித்தியாசம் இருக்கும். இந்த நாட்காட்டி மிகச்சரியான தீர்வாக இருந்திருக்கும் இந்த மண்டலத்தின் எல்லைகள் நிலையாக இருந்திருப்பின். மண்டலம்-1 இந்த மாதம் இந்தியா முதல் அமெரிக்கா வரை இருந்தால். அடுத்த மாதம் இந்த மண்டலத்தின் எல்லை சிங்கபூர் முதல் லண்டன் வரை இருக்கும். இப்படி மண்டல எல்லைகள் மாறுவதால் இருமண்டல நாள்காட்டிகளும் பிழையாகவே உள்ளன. மும்மண்டல நாட்காடியிலும் இதே பிழைதான்.

உலகம் முழுவதும் ஒரே பிறையை பின்பற்றவும் ஒரே இஸ்லாமிய நாட்காட்டியை உருவாக்கவும் சந்திர தேதிக்கோடு ஒரு இடத்தில் நிலையாக அமையப்பெற வேண்டும். ஒவ்வொரு அறிஞரும் இந்த தேதிக்கோடு ஒரு பகுதியில் நிலையாக இருப்பதாக கற்பனை செய்து  நாட்காட்டியை வடிவமைக்கின்றனர். ஒவ்வொருவரும் அவர்கள் தேர்வுக்கு  ஒரு விளக்கத்தை கொடுக்கின்றனர். இப்படி சந்திர தேதிக்கோட்டை ஒரு இடத்தில் நிலையாக கற்பனை செய்வதும் மேலே நான் கூறியுள்ள 2ம் மற்றும் 3ம் தீர்வுகளும் ஒன்றே. இப்படி நிலையான சந்திர தேதிக்கோட்டை ஏற்படுத்துவதால் 2ம் மற்றும் 3ம் தீர்வுகளில் ஏற்படும் அதே பிழைகள் ஏற்படும். விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு ஒரே (சூரிய) நாளில் உலகெங்கும் (சந்திர) மாதத்தை தொடங்க இயலாது.

கொள்கை : - 2. ஒரு குறிப்பிட்ட இடத்தில் முதல் பிறை எப்போது தென்படும் என்பதை விஞ்ஞானத்தை கொண்டு கணக்கிட்டு அதன் அடுத்த நாளிலிருந்து உலகம் முழுவதும் மாதத்தை தொடங்குவது.

கொள்கை ஒன்றில் விஞ்ஞானம் மட்டுமே பயன்படுத்த படுகிறது. எனவே இதில் இஸ்லாமிய கொள்கைகள் நடை முறைப்படுதப்படவில்லை எனக்கூறுவோர் இந்த இரண்டாவது  கொள்கையை கொண்டுள்ளனர். இதன்படி இவர்கள் கண்ணுக்கு தெரியும் பிறையை கணக்கிட்டு அதனடிப்படையில் மாதத்தை தொடங்கவும் நாட்காட்டியை அமைக்கவும் செய்கின்றனர். முதல் பிறை உலகத்தில் எந்த இடத்தில் முதலில் கண்ணுக்கு தெரியும் என்பதை எளிதில் கணக்கிட்டு விடலாம் (எப்படி கணக்கிட வேண்டும் என்பதை மேலே குறிப்பிட்டுள்ளேன்) . ஆனால் கணக்கிட்ட இடத்தில் பிறை கண்ணுக்கு தெரிந்து விடும் என்று அறுதியிட்டு கூற இயலாது. இப்படி கணக்கிட்ட இடத்தில் நிச்சயம் பிறை இருக்கும் ஆனால் அது கண்ணுக்கு தெரியவேண்டும் எனில் காற்றுமண்டலம் மாசற்றதாக இருக்கவேண்டும், அடிவானம் தெளிவாக இருக்கவேண்டும், மேகங்கள் இருக்க கூடாது. இந்த காரணிகளை விஞ்ஞானத்தால் கணக்கிட இயலாது. எனவே இவர்கள் பிறை கண்ணுக்கு தெரியாவிட்டாலும் முதல் பிறையை கணக்கிடும் எதாவது ஒரு முறையை பின்பற்றியும் ஒரு நிலையான சர்வதேச சந்திர தேதிக்கோட்டை கற்பனை செய்தும் நாட்காட்டியை அமைக்கின்றனர். அமாவாசை ஏற்பட்டபின் நிகழும் சந்திர மறைவு சூரியன் மறைந்த பின் நிகழ வேண்டும் என்ற அளவுகோலையே அதிகமானவர்கள் கொண்டுள்ளனர். சூரியன் மறைந்த பின் தான் சந்திர மறைகிறதா என்பதை மேலே உள்ள அட்டவணை-1 இலிருந்தும் கண்டுபிடித்து விடலாம். சில நாடுகளில் வேறு அளவுகோல்களையும் கொண்டுள்ளனர்.

இதற்கும் ஒரு உதாரணத்தை எடுத்து ஆய்வு செய்யலாம். முன்னர் எடுத்த அதே ரமதான் மற்றும் ஷவ்வால் மாதங்களை எடுப்போம். சகோ. முஹம்மத் ஊதாவின் விதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் முதலில் பிறை கண்ணுக்கு தெரியும் வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பிறை முதலில் எங்கு பார்க்கப்படும் எப்போது பார்க்கப்படும் என்பதும்அவர் உருவாக்கிய மென்பொருளில் இருந்து எடுத்து விடலாம்.
றமதான் 1436 இன் பிறையை உலகில் முதன் முதலில் தென்படும் வரைபடம்.

ஷவ்வால் 1436 இன் பிறையை உலகில் முதன் முதலில் தென்படும் வரைபடம்

இப்படி எடுக்கப்பட்ட தகவல்களில் இருந்து கீழுள்ள அட்டவணையை உருவாக்கியுள்ளேன்,
நாடு/நகரம்
பிறை கண்ணுக்கு தெரியும் நேரம்
நள்ளிரவை அடிப்படையாக கொண்ட நாள் (UTC)
ஃபஜ்ரை அடிப்படையாக கொண்ட மாத கடைசி நாள்
ஃபஜ்ரை அடிப்படையாக கொண்ட மாத தொடக்கம்
மக்ரிபை அடிப்படையாக கொண்ட மாத கடைசி நாள்
மக்ரிபை அடிப்படையாக கொண்ட மாத தொடக்கம்
சூரிய
உதயம்
சூரிய
மறைவு
விடியல்
அந்தி
COUNTRY/CITY
TIME OF EARLIEST VISIBILITY
CIVIL DAY
LAST DAY OF THE MONTH BASED ON DAWN
FIRST DAY OF THE UPCOMING MONTH BASED ON DAWN
LAST DAY OF THE MONTH BASED ON DUSK
FIRST DAY OF THE UPCOMING MONTH BASED ON DUS
SUNRISE
SUNSET
DAWN
DUSK




றமதான் 1436






முதன் முதலில் பிறை தெரியும் இடம் lat/long = -22.7:-171.3 நேரம் 17-06-2015  5:05:00 AM UT
சர்வதேச நேரம் (UTC)
5:05
புதன்








வெல்லிங்டன்
17:05
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
7:45
16:58
7:14
17:29
சிங்கப்பூர்
13:05
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
6:59
19:11
6:37
19:34
சென்னை
10:35
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
5:43
18:36
5:19
19:00
மக்கா
8:05
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
5:38
19:04
5:13
19:29
லண்டன்
6:05
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
4:43
21:20
3:55
22:07
வாஷிங்டன்
1:05
புதன்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
5:42
20:35
5:10
21:08
சிகாகோ
0:05
புதன்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
5:15
20:28
4:40
21:02
லாஸ் ஏஞ்சல்ஸ்
22:05
செவ்வாய்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
5:41
20:06
5:12
20:35
நியுவே
18:05
செவ்வாய்
செவ்வாய்
புதன்
செவ்வாய்
புதன்
6:53
17:59
6:29
18:22
ஷவ்வால் 1436
முதன் முதலில் பிறை தெரியும் இடம் lat/long = -31.8:-5.3  நேரம் 16-07-2015  5:54:00 PM UT
சர்வதேச நேரம் (UTC)
17:54
வியாழன்








வெல்லிங்டன்
5:54
வெள்ளி
வியாழன்
வெள்ளி
வெள்ளி
சனி
7:43
17:11
7:13
17:41
சிங்கப்பூர்
1:54
வெள்ளி
வியாழன்
வெள்ளி
வெள்ளி
சனி
7:05
19:16
6:43
19:38
சென்னை
23:24
வியாழன்
வியாழன்
வெள்ளி
வெள்ளி
சனி
5:50
18:39
5:27
19:03
மக்கா
20:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வெள்ளி
சனி
5:47
19:06
5:23
19:30
லண்டன்
18:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:02
21:11
4:17
21:55
வாஷிங்டன்
13:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:55
20:33
5:24
21:04
சிகாகோ
12:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:28
20:24
4:55
20:57
லாஸ் ஏஞ்சல்ஸ்
10:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:53
20:05
5:24
20:33
நியுவே
6:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
6:53
17:58
6:30
18:22




மாத நாட்களின் எண்ணிக்கை

மாத நாட்களின் எண்ணிக்கை




வெல்லிங்டன்



29

30




சிங்கப்பூர்



29

30




சென்னை



29

30




மக்கா



29

30




லண்டன்



29

29




வாஷிங்டன்



30

29




சிகாகோ



30

29




லாஸ் ஏஞ்சல்ஸ்



30

29




நியுவே



30

30




அட்டவணை-3

இந்த அட்டவணைக்கு விளக்கம் தேவை இல்லை. கண்ணால் பார்க்கப்படும் பிறையை துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினாலும் ஒரே நாளில் மாதத்தை ஆரம்பித்து ஒரே நாளில் முடிக்க இயலாது. மாத நாள்களின் எண்ணிக்கையும் சமமாக அமையாது.

இப்படி நிகழக்காரணம் முதல் பிறை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ஊர்களில் முதன் முதலாக தென்படும். இம்மாதம் நியுசிலாந்தில் முதல் பிறை தெரியும் வாய்ப்புகள் அதிகாமாக இருந்தால் அடுத்த மாதம் நியூ யார்க் நகரத்தில் பிறை தென்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இப்படி மாதா மாதம் முதலில் பிறை தென்படும் பகுதி மாறிக்கொண்டிருக்கும். பிறை பிறக்கும் நேரம் மாத மாதமும் மாறுவதால் பிறை முதலில் கண்ணுக்கு தெரியும் ஊரும் மாத மாதமும் மாறிக்கொண்டிருக்கும். இப்படி இயற்கையாக நிகழும் மாதக்கணக்கை மாற்றி சர்வதேச பிறையை நிலை நாட்ட வேண்டுமெனில்  உலகின் ஒரு பகுதியில் 30வது பிறை நடக்க வேண்டிய நாளிலேயே அப்பகுதியில் அடுத்த மாதத்தின் முதல் நாளை தொடங்க வேண்டி வரும். அதாவது 30 நாட்கள் கடை பிடிக்க வேண்டியவர்கள் ஒரு மாதத்தை 29ஆக குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது உலகின் மறு பகுதியினர் அடுத்த மாதத்தின் முதல் பிறை பிறந்தும் மாதத்தை தொடங்காமல் அந்த மாதத்தை 30நாட்களாக நீட்ட வேண்டிவரும்

கொள்கை : - 3 உலகில் எங்கு முதல் பிறை பார்க்கப்பட்டாலும் அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் மாதத்தை தொடங்குவது.

முதல் பிறை உலகத்தில் எந்த இடத்தில் முதலில் கண்ணுக்கு தெரியும் என்பதை எளிதில் கணக்கிட்டு விடலாம் (எப்படி கணக்கிட வேண்டும் என்பதை மேலே குறிப்பிட்டுள்ளேன்) . ஆனால் கணக்கிட்ட இடத்தில் பிறை கண்ணுக்கு தெரிந்து விடும் என்று அறுதியிட்டு கூற இயலாது. எனவே கொள்கை 2 இஸ்லாமிய அடிப்படை இல்லை என்று கூறுவோர் சர்வதேச பிறைக்காக பின்பற்றும் கொள்கை இது. இதன் அடிப்படையில் உலகில் முதலில் பிறை எங்கு பார்க்கப்பட்டாலும் உலகம் முழுவதும் அடுத்த சூரிய உதயத்தில் மாதத்தை தொடங்கி விட வேண்டும். இதில் விஞ்ஞானம் இல்லை என்றாலும் அறிவுபூர்வமாக இது நடை முறைக்கு சாத்தியம் அல்ல. காரணம் முதல் பிறை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ஊர்களில் முதன் முதலாக தென்படும். இம்மாதம் நியுசிலாந்தில் முதல் பிறை தெரிந்தால் அடுத்த மாதம் நியூ யார்க் நகரத்தில் பிறை தென்படும். இப்படி மாதா மாதம் முதலில் பிறை தென்படும் பகுதி மாறிக்கொண்டிருக்கும்.  மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறை பார்கப்பட்டால் அப்போது நியுசிலாந்து நாட்டில் பகலாக இருக்கும். அவர்கள் அந்த அறிவிப்பின் படி மாதத்தை தொடங்க வேண்டுமெனில் ஒருநாள் பொறுத்திருந்து அடுத்த நாள் தான் துவங்க வேண்டும்.

இந்த கொள்கையின் அடிப்படையில் சர்வேத நாட்காட்டியை அமைக்க வேண்டுமெனில் முதல் பிறை எப்போதும் ஒரே நாட்டில் தென்பட வேண்டும். உதாரணத்திற்கு எல்லா மாதமும் பிறையானது நியுசிலாந்து நாட்டில் முதலில் பார்க்கப்படுமானால் ஒரே தேதியில் ஒரே நாளில் உலகம் முழுவதும் மாதத்தை தொடங்கி விடலாம். ஆனால் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊரில் முதலில் பிறை தெரியும்.

மேலே கொள்கை 2ல் முதல் பிறை எங்கு முதலில் தென்படும் என்று கணக்கிட்டு அட்டவணை இட்டோமோ அதே இடத்தில பிறை பார்க்கப்படுவதாகவே கொள்வோம். பிறை பார்க்கப்பட்ட அடுத்த வினாடியே உலகம் முழுவதும் அந்த தகவல் பரப்பப்படுகிறது. விடியலில் நாளை ஆரம்பிக்கும் கொள்கை உடையவர்கள் விடியலிலும் அந்தியில் நாளை ஆரம்பிக்கும் கொள்கை உடையவர்கள் அந்தியிலும் மாதத்தை ஆரம்பிப்பதாக கொள்வோம். எனில்  இந்த அட்டவணைப்படி மாதங்களின் தொடக்கம் அமையும்.

நாடு/நகரம்
பிறை பார்க்கப்பட்ட நேரம்
நள்ளிரவை அடிப்படையாக கொண்ட நாள் (UTC)
ஃபஜ்ரை அடிப்படையாக கொண்ட மாத கடைசி நாள்
ஃபஜ்ரை அடிப்படையாக கொண்ட மாத தொடக்கம்
மக்ரிபை அடிப்படையாக கொண்ட மாத கடைசி நாள்
மக்ரிபை அடிப்படையாக கொண்ட மாத தொடக்கம்
சூரிய
உதயம்
சூரிய
மறைவு
விடியல்
அந்தி
COUNTRY/CITY
TIME OF EARLIEST VISIBILITY
CIVIL DAY
LAST DAY OF THE MONTH BASED ON DAWN
FIRST DAY OF THE UPCOMING MONTH BASED ON DAWN
LAST DAY OF THE MONTH BASED ON DUSK
FIRST DAY OF THE UPCOMING MONTH BASED ON DUS
SUNRISE
SUNSET
DAWN
DUSK




றமதான் 1436






முதன் முதலில் பிறை பார்க்கப்பட்ட இடம் lat/long = -22.7:-171.3 நேரம் 17-06-2015  5:05:00 AM UT
சர்வதேச நேரம் (UTC)
5:05
புதன்








வெல்லிங்டன்
17:05
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
7:45
16:58
7:14
17:29
சிங்கப்பூர்
13:05
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
6:59
19:11
6:37
19:34
சென்னை
10:35
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
5:43
18:36
5:19
19:00
மக்கா
8:05
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
5:38
19:04
5:13
19:29
லண்டன்
6:05
புதன்
புதன்
வியாழன்
புதன்
வியாழன்
4:43
21:20
3:55
22:07
வாஷிங்டன்
1:05
புதன்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
5:42
20:35
5:10
21:08
சிகாகோ
0:05
புதன்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
5:15
20:28
4:40
21:02
லாஸ் ஏஞ்சல்ஸ்
22:05
செவ்வாய்
செவ்வாய்
புதன்
புதன்
வியாழன்
5:41
20:06
5:12
20:35
நியுவே
18:05
செவ்வாய்
செவ்வாய்
புதன்
செவ்வாய்
புதன்
6:53
17:59
6:29
18:22
ஷவ்வால் 1436
முதன் முதலில் பிறை பார்க்கப்பட்ட இடம் lat/long = -31.8:-5.3  நேரம் 16-07-2015  5:54:00 PM UT
சர்வதேச நேரம் (UTC)
17:54
வியாழன்








வெல்லிங்டன்
5:54
வெள்ளி
வியாழன்
வெள்ளி
வெள்ளி
சனி
7:43
17:11
7:13
17:41
சிங்கப்பூர்
1:54
வெள்ளி
வியாழன்
வெள்ளி
வெள்ளி
சனி
7:05
19:16
6:43
19:38
சென்னை
23:24
வியாழன்
வியாழன்
வெள்ளி
வெள்ளி
சனி
5:50
18:39
5:27
19:03
மக்கா
20:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வெள்ளி
சனி
5:47
19:06
5:23
19:30
லண்டன்
18:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:02
21:11
4:17
21:55
வாஷிங்டன்
13:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:55
20:33
5:24
21:04
சிகாகோ
12:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:28
20:24
4:55
20:57
லாஸ் ஏஞ்சல்ஸ்
10:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
5:53
20:05
5:24
20:33
நியுவே
6:54
வியாழன்
வியாழன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
6:53
17:58
6:30
18:22




மாத நாட்களின் எண்ணிக்கை

மாத நாட்களின் எண்ணிக்கை




வெல்லிங்டன்



29

30




சிங்கப்பூர்



29

30




சென்னை



29

30




மக்கா



29

30




லண்டன்



29

29




வாஷிங்டன்



30

29




சிகாகோ



30

29




லாஸ் ஏஞ்சல்ஸ்



30

29




நியுவே



30

30





அட்டவணை-4

கொள்கை : - 4 தத்தம் பகுதிகளில் தெரியும் பிறையின் அடிப்படியில் அந்தந்த பகுதிகளில் மாதத்தை தொடங்குவது.

மேலுள்ள மூன்று கொள்கைகளும் இஸ்லாத்திற்கு எதிரானது என வாதிடுவோர் பின்பற்றும் கொள்கை இது. இதில் விஞ்ஞானத்திற்கு இடமில்லை. இந்த கொள்கையில் கண்ணால் பிறையை பார்த்தால் மாதத்தை தொடங்குவர். கண்ணால் பார்க்கப்படும் பிறை என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். கண்ணால் பார்க்கும் பிறையை அடிப்படையாக கொண்டு எந்த எல்லை வரை மாதத்தை தொடங்க வேண்டும் என்பது மார்க்க பிரச்சனை. இந்த கொள்கையை உடையவர்கள் சர்வதேச இஸ்லாமிய நாட்காட்டியை பற்றி கவலைப்படுவதில்லை. இவர்கள் வகுக்கும் ஒவ்வொரு எல்லை பகுதிக்கும் ஒவ்வொரு நாட்காட்டிகள் இருக்கும். அதிக பட்சமாக 3 சூரிய நாட்களில் ஒரு மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதாவது உலகில் மூன்று சூரிய நாட்கள் வரை பெருநாள் கொண்டாடப்படும்.

முடிவு

எத்தனை விஞ்ஞானிகள் எத்தனை அறிஞர்கள் கூடி ஒரு சர்வதேச இஸ்லாமிய நாட்காட்டியை உருவாக்கினாலும், அது விஞ்ஞான அடிப்படையில் தவறாகவும் நடைமுறைக்கு இயலாததாகவுமே இருக்கும். இதையும் மீறி ஒரு சர்வதேச நாள்காட்டி அமைக்கப்பட்டால்  "உலகின் ஒரு பகுதியில் 30வது பிறை நடக்க வேண்டிய நாளிலேயே அப்பகுதியில் அடுத்த மாதத்தின் முதல் நாளை தொடங்க வேண்டி வரும். அதாவது 30 நாட்கள் கடை பிடிக்க வேண்டியவர்கள் ஒரு மாதத்தை 29ஆக குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது உலகின் மறு பகுதியினர் அடுத்த மாதத்தின் முதல் பிறை பிறந்தும் மாதத்தை தொடங்காமல் அந்த மாதத்தை 30நாட்களாக நீட்ட வேண்டிவரும்". எல்லாமாதமும் அமாவாசை ஒரே சூரிய நேரத்தில் நிகழாத வரை, இந்த பிழை இல்லாத ஒரு சர்வதேச இஸ்லாமிய நாள்காட்டியை யாராலும் அமைக்கவே இயலாது. ஒரே நாளில், கிழமையில் அல்லது 24மணி நேரத்திற்குள் உலகம் முழுதும் பெருநாள் கொண்டாடவும் இயலாது.

நன்றி:
NATIONAL OCEANIC AND ATMOSPHERIC ADMINISTRATION WEBSITE
HER MAJESTY NAUTICAL ALMANAC OFFICE WEBSITE
THE UNITED STATES NAVAL OBSERVATORY WEBSITE
AUSTRALIAN GOVERNMENT GEOSCIENCE WEBSITE
UTRECHT UNIVERSITY, NETHERLANDS WEBSITE
THIERRY LAGAULT’S WEBSITE
TIME AND DATE WEBSITE
ICO PROJECT, WEBSITE
WIKIPEDIA WEBSITE
NASA WEBSITE